Home » Category >விளையாட்டு (Page 5)

இங்கிலாந்து கேப்டனை பாராட்டிய ரோஹித்

பல்லகலே, நவ.19: இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் கேப்டன் ஜோ ரூட்டின் பெருந்தன்மையான செயலைப் பாராட்டி, இந்திய வீரர் ரோஹித் சர்மா ட்விட்டரில் பாராட்டு தெரிவித்துள்ளார். இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு, இங்கிலாந்து கிரிக்கெட் அணி விளையாடி வருகிறது. இந்த நிலையில், இரு அணிகளிடையே நடந்துவரும் டெஸ்ட் போட்டிகளை நேரில் காண்பதற்காக நூற்றுக்கும் மேற்பட்ட இங்கிலாந்து ரசிகர்கள், பல மாதங்களுக்கு முன்பே மைதானத்துக்கு அருகே இருக்கும் இயர்ல்ஸ் ரெஜென்சி ஹோட்டலில் அறைகளை...
மேலும்

3 இந்திய வீராங்கனைகள் அபார வெற்றி

புதுடெல்லி, நவ.18:உலக மகளிர் குத்துச்சண்டை சாம்பியன் போட்டி காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு இந்திய வீராங்கனைகள் சோனியா லேதர், பிங்கி ஜாங்ரா சிம்ரஞ்சித் கௌர் ஆகியோர் தகுதி பெற்றுள்ளனர். புதுடெல்லியில் நடைபெற்று வரும் இப்போட்டியில் 72 நாடுகளைச் சேர்ந்த 300 வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். வரும் 24-ம் தேதி வரை போட்டிகள் நடைபெறும் நிலையில் மூத்த வீராங்கனை மேரி கோம் தலைமையில் 10 பேர் கொண்ட இந்திய அணி பங்கேற்றுள்ளது....
மேலும்

மகளிர் டி20:ஆஸியை வீழ்த்தி முதலிடம் பிடித்தது இந்தியா

கயானா, நவ.18:மகளிர் டி20 உலகக் கோப்பையில் நேற்று நடைபெற்ற இந்தியாவுக்கான கடைசி லீக் போட்டியில் வலுவான ஆஸ்திரேலியா அணியை 48 ரன் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது. முதலில் டாஸ் வென்ற இந்தியா பேட்டிங்கை தேர்வு செய்தது, தனியா பாட்டியா. ஸ்மிருதி மந்தானா தொடக்க வீராங்கனைகளாக களமிறங்கினர். பின்னர் மந்தானா-ஜெமிமா இணை சேர்ந்து ரன்களை சேர்த்தது. ஆனால் ஜெமிமா 6 ரன்களோடு ஆட்டமிழந்தார். கேப்டன் ஹர்மன்ப்ரீத் கௌர்...
மேலும்

பெண்கள் உலக குத்துச்சண்டை: சாதிப்பாரா மேரிகோம்?

புதுடெல்லி, நவ.15: 10-வது பெண்கள் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி தலைநகர் டெல்லியில் இன்று தொடங்கி 24-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதனின் தொடக்கவிழா, நேற்றிரவு கோலாகலமாக நடைபெற்றது. நட்சத்திர வீராங்கனை மேரிகோம் இந்தியா சார்பில் தேசிய கொடியை ஏந்தி சென்றார். இப்போட்டியில்,  72 நாடுகளை சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள். 2006-ம் ஆண்டுக்குபின்னர் தற்போது தான் இந்த போட்டி இந்தியாவில் நடத்தப்படுகிறது. இந்தியாவின் நட்சத்திர...
மேலும்

பெண்கள் டி20: அயர்லாந்துடன் இன்று இந்தியா மோதுகிறது

  கயானா, நவ.15: இன்று நடக்கும் போட்டியில் அயர்லாந்தை வெல்லும் பட்சத்தில், 8 ஆண்டுகளுக்கு பின்னர், இந்தியா அரையிறுதிக்கு முன்னேறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வெஸ்ட் இண்டீசில் நடந்துவரும் பெண்கள் டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின், இன்று நடக்கும் லீக் ஆட்டத்தில் பி பிரிவில் இடம்பெற்றுள்ள இந்தியா-அயர்லாந்து அணிகள் மோதுகின்றன. கயானாவிலுள்ள புரோவிடன்ஸ் ஸ்டேடியத்தில் இன்று இரவு 8.30 மணிக்கு ஆட்டம் தொடங்குகிறது. இது, இந்தியாவிற்கு முக்கியமான ஆட்டமாக...
மேலும்

2-வது டெஸ்ட்: 3 விக்கெட்டுகளை இழந்து இங்கி., தடுமாற்றம்

பல்லகெலே, நவ.14:இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் காலேயில் நடந்த முதல் டெஸ்டில் இங்கிலாந்து அணி 211 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி பல்லகெலேயில் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. இதில், டாஸ் வென்ற...
மேலும்

அசராது ஆடும் இந்திய கால்பந்து அணி

டெல்லி, நவ. 13:  தற்போது நடைபெற்றுவரும் ஐஎஸ்எல் கால்பந்து போட்டியின் 5-வது சீசனில் 2-வது முறையாக மீண்டும் இடைவெளி விடப்பட்டுள்ளது. இந்த இடைவெளி நாட்களில், இந்திய கால்பந்து அணி சர்வதேச போட்டிகளில் விளையாட உள்ளது. நவ. 17-ல் இந்தியா-ஜோர்டான் அணிகள் நட்பு ரீதியிலான போட்டியில் மோதுகின்றன. இதனையடுத்து, எதிர்வரும் ஆண்டில் தொடங்கும் (ஜன 5- பிப்.1) ஆசிய கோப்பை தொடரில், இந்திய அணி ஜன. 6-ம் தேதி...
மேலும்

பெண்கள் டி20: இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா வெற்றி

செயின்ட் லூசியா, நவ. 13:  பெண்கள் உலக கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா அணிகள் தலா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி கண்டுள்ளன. வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்று வரும் பெண்கள் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடந்த லீக் ஆட்டம் ஒன்றில் ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள இங்கிலாந்து – வங்கதேச அணிகள் மோதின. நள்ளிரவு 1.30 மணிக்கு நடந்த இந்த ஆட்டத்தில், இங்கிலாந்து...
மேலும்

உலகக்கோப்பையால் களையிழக்குமா ஐபிஎல்?

துபாய், நவ. 13:  எதிர்வரும் ஆண்டில் குறுகிய கால இடைவெளியில் ஐபிஎல் மற்றும் உலகக்கோப்பை போட்டிகள் நடைபெற இருப்பதால், உலகக்கோப்பைக்கு முக்கியத்துவம் அளித்து, ஐபிஎல் போட்டிகளைப் புறக்கணிக்கும் சூழலுக்கு சில நாட்டு வீரர்கள் தள்ளப்பட்டுள்ளனர். கடந்த 2008-ம் ஆண்டு தொடங்கப்பட்ட ஐபிஎல் (இந்தியன் பிரிமியர் லீக்) 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகள் வீரர்கள் மற்றும் ரசிகர்கள் இடையே பெரும் வரவேற்பை பெற்றது. தங்கள் நாட்டுக்காக ஓராண்டு முழுவதும்...
மேலும்

கடைசி பந்தில் இந்தியா த்ரில் வெற்றி

சென்னை, நவ. 12: இந்தியா-வெ.இண்டீஸ் இடையேயான கடைசி டி-20 கிரிக்கெட் போட்டி சென்னை, சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடந்தது. இப்போட்டியில் இந்திய அணி அசால்ட்டாக வெற்றி பெறும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தநிலையில், வெ.இண்டீஸ் அணியினர் அபாரமாக பேட்டிங் செய்து, 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 181 குவித்தனர். பின்னர், களமிறங்கிய இந்திய அணியின் கேப்டன் ரோஹித், கே.எல்.ராகுல் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, இந்திய...
மேலும்

பாகிஸ்தானை பந்தாடிய இந்திய பெண்கள் அணி

கயானா, நவ. 12:இந்தாண்டுக்கான பெண்கள் டி-20 உலக கோப்பை போட்டி வெஸ்ட் இண்டீஸில் நடந்துவருகிறது. கயானா பகுதியில் உள்ள புரோவிடன்ஸ் மைதானத்தில் நேற்று நடந்த ஆட்டத்தில் இந்திய பெண்கள் அணி, பாகிஸ்தானை எதிர்கொண்டது. டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்ய, பேட்டிங்கை தொடங்கிய பாகிஸ்தான், 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 133 ரன்கள் எடுத்தது. இந்திய தரப்பில் ஹேமலதா மற்றும் பூனம் யாதவ்...
மேலும்