Home » Category >விளையாட்டு (Page 4)

தமிழக வீரருக்கு ரூ.30 லட்சம்: முதலமைச்சர் அறிவிப்பு

சென்னை, ஆக. 29: ஆசிய விளையாட்டு போட்டி கலப்பு குழு தொடர் ஓட்டப் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற தமிழகத்தை சேர்ந்த வீரர் ஆரோக்கிய ராஜிவ்-க்கு தமிழக அரசு சார்பில் ரூ.30 லட்சம் ஊக்கத் தொகையை அறிவித்து, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்துக்கடிதம் அனுப்பியுள்ளார். இது குறித்து முதல்வரின் வாழ்த்துக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளவை: இந்தோனேஷியாவின் தலைநகர் ஜகர்தா மற்றும் பலேம்பங்கில் நடந்துவரும் ஆசிய விளையாட்டு போட்டியின் கலப்பு தொடர்...
மேலும்

இறுதிப் போட்டிக்கு முன்னேறினார் சிந்து

ஜகர்தா, ஆக. 27: இன்று நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டின் பேட்மிண்டன் அரையிறுதி சுற்றில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து வெற்றி பெற்று இறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளார். இந்தோனேசியாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் இன்று பெண்களுக்கான ஒற்றையர் பேட்மிண்டன் அரையிறுதிப் போட்டிகள் நடைபெற்றன. இதில், இந்தியாவின் நட்சத்திர வீராங்கனையான பி.வி.சிந்து, ஜப்பான் வீராங்கனை அகானே யமகுச்சியை எதிர்கொண்டார். விறுவிறுப்பாக நடந்த இந்த போட்டியில், இந்தியாவின்...
மேலும்

ஷாட் புட்டில் தங்கம் வென்றார் தாஜிந்தர்பால் சிங்

ஜகார்த்தா, ஆக.26: ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் சற்று முன் நடந்த ஷாட் புட் இறுதியில் தங்கம் வென்றார் தாஜிந்தர்பால் சிங். இந்த போட்டியில் அவர் ஆசிய போட்டிகளில் ஷாட் புட் எறிதலில் புதிய சாதனை படைத்தார். ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இன்று முதல் தடகளப் போட்டிகள் தொடங்கியுள்ளன. அதில் முதல் பதக்கமாக தாஜிந்தர்பால் சிங்கின் ஷாட் புட் தங்கம் அமைந்துள்ளது. இந்த போட்டியில் அவர் 20.75 மீட்டர் தூரம்...
மேலும்

தமிழக டென்னிஸ் வீரர் பிரஜ்னேஷ் வெண்கலம் வென்றார்

சென்னை, ஆக.26: ஆசிய விளையாட்டு போட்டியில் வெண்கல பதக்கம் வென்ற தமிழக டென்னிஸ் வீரர் பிரஜ்னேஷ் குணேஸ்வரனுக்கு 20 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தாவில் ஆசிய விளையாட்டு போட்டி நடைபெற்று வருகிறது. இதில் டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் தமிழக வீரர் பிரஜ்னேஷ் குணேஸ்வரன் வெண்கல பதக்கம் வென்றார். இந்நிலையில், ஆசிய விளையாட்டு போட்டியில் வெண்கலம் வென்ற...
மேலும்

இந்தியாவுக்கு மேலும் இரு வெள்ளி பதக்கங்கள்

ஜகார்த்தா, ஆக.26: ஆசிய விளையாட்டு போட்டியில் இன்று நடைபெற்ற குதிரை தடை தாண்டும் போட்டியில் ஒற்றையர் பிரிவில் பௌத் மிர்சாவும், குழுவிற்கான போட்டியில் இந்தியாவின் ராகேஷ் குமார், ஆசிஷ் மாலிக், ஜிதேந்தர் சிங் ஆகியோரை கொண்ட இந்திய அணியும் வெள்ளிப்பதக்கங்களை பெற்றுள்ளன. குதிரை தடை தாண்டும் போட்டியின் ஒற்றையர் பிரிவில் ஜப்பான் வீரர் ஓய்வாயேசியாக்கி தங்கம் வென்றார். இந்தியாவை சேர்ந்த பௌத் மிர்சா வெள்ளி வென்றார். இதில் சீனாவுக்கு...
மேலும்

படகு போட்டியில் இந்தியாவுக்கு தங்கம்

ஜகர்தா, ஆக.24:இந்தோனேசியாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஆண்களுக்கான இலகுரக துடுப்பு படகு ஒற்றையர் பிரிவில் இந்தியா சார்பில் துஷ்யந்த், இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ரோகித் குமார், பகவான் தாஸ் வெண்கலம் பதக்கங்களை வென்றனர். மேலும், 4 வீரர்கள் பங்கேற்கும் துடுப்பு படகு போட்டியில் இந்திய அணியில் சவார்ன் சிங், போகனால், ஓம் பிரகாஷ், சுக்மீத் சிங் ஆகியோர் பங்கேற்றனர். இவர்கள் இணைந்து துடிப்புடன் துடுப்பு...
மேலும்

கனவு நனவானது: விஹாரி ஹேப்பி

மும்பை, ஆக.23:  ஒவ்வொரு கிரிக்கெட் வீரருக்கும் இங்கிலாந்தில் டெஸ்ட் கிரிக்கெட் விளையாடுவது கனவு. அது எனக்கு நனவாகி இருக்கிறது என்று இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணிக்கு தேர்வாகியுள்ள ஹனுமா விஹாரி கூறியுள்ளார். இந்தியா-இங்கிலாந்து இடையிலான 3-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 203 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த நிலையில், நான்காவது மற்றும் ஐந்தாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய வீரர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இதில், முரளி...
மேலும்

சிந்து, சாய்னாவுக்கு பதக்க வாய்ப்பு

ஜகார்த்தா, ஆக.23:  ஆசிய விளையாட்டுப் போட்டியின் இன்றைய காலை நிலவரப்படி, 4 தங்கம், 3 வெள்ளி, 8 வெண்கலம் என மொத்தம் 15 பதக்கங்கள் வென்று பதக்கப் பட்டியலில் இந்தியா 8-வது இடத்தில் உள்ளது. இந்த நிலையில், இந்திய வீரர்கள் இன்றும் பல போட்டிகளில் விளையாட உள்ளதால், மேலும் பதக்கங்கள் வெல்ல வாய்ப்புள்ளது. குறிப்பாக, பி.வி.சிந்து, சாய்னா நேவால் ஆகியோர் பேட்மிண்டன் பெண்கள் ஒற்றையர் பிரிவில் பங்கேற்க...
மேலும்

கோலியை புகழ்ந்து தள்ளும் ரவிசாஸ்திரி

நாட்டிங்காம், ஆக. 23:  இந்திய அணியின் கேப்டன் விராத் கோலியை, கிரிக்கெட் ஜாம்பவான் சச்சினுடன் மட்டுமே ஒப்பிடமுடியும் என இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி புகழ்ந்துள்ளார். அவர் மேலும் கூறுகையில், கிரிக்கெட்டில் விராத் கோலியின் ஆர்வம் என்பது எப்படிப்பட்டது என அனைவருக்கும் தெரியும். இவ்வளவு தொழில் தர்மத்துடன் வேறு ஒரு கிரிக்கெட் வீரரை நான் இதுவரை பார்த்ததே இல்லை. வெற்றிக்காக தயாராவதில் கோலியை, கிரிக்கெட்...
மேலும்

‘அடுத்த டெஸ்ட்டையும் கைப்பற்றுவோம்’

நாட்டிங்காம், ஆக. 23:  இங்கிலாந்திற்கு எதிரான 3-வது டெஸ்ட்டில் வென்றுவிட்டோம். அடுத்த போட்டியிலும் வெல்வோம் என்று இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் பும்ரா நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், போட்டியில் எப்போதும் அழுத்தம் இருந்து கொண்டுதான் இருக்கும். சில நேரம் விக்கெட் கிடைக்கலாம். சில நேரம் மற்ற பந்துவீச்சாளருக்கு கிடைக்கலாம். ஆனால், தொடர்ந்து சிறப்பாக பந்துவீச வேண்டும் என்பதுதான் எங்கள் எண்ணம். நாங்கள் சிறப்பாக பந்துவீசி...
மேலும்

3-வது டெஸ்ட்: இந்தியா அபார வெற்றி

நாட்டிங்காம், ஆக. 22: இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 203 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இங்கிலாந்து – இந்தியா இடையிலான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாட்டிங்காம் உள்ள டிரென்ட் பிரிட்ஜ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இரண்டாவது இன்னிங்சில் கோலியின் சிறப்பான சதத்தால் இந்தியா 7 விக்கெட் இழப்புக்கு 352 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இதனைத் தொடர்ந்து, 521 ரன்கள்...
மேலும்