Home » Category >விளையாட்டு (Page 3)

சிறப்பான பந்துவீச்சால் பெங்களூருவை வென்ற சென்னை

புனே, மே 6: புனேயில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் சென்னை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஐபிஎல் தொடரின் 35-வது ஆட்டம் புனேயில் நேற்று மாலை 4 மணிக்கு நடைபெற்றது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருக்கு எதிராக சென்னை சூப்பர் கிங்ஸ் டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்தது. முதலில் பேட்டி“ங் செய்த பெங்களூர் அணி சிஎஸ்கேயின் அபார பந்து வீச்சால் (ஜடேஜா...
மேலும்

தமிழக மாணவிக்கு ரூ.30 லட்சம் பரிசு

சென்னை, மே 5: 21-வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் ஸ்குவாஷ் மகளிர் இரட்டையர் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த செல்வி ஜோஸ்னா சின்னப்பாவுக்கு ரூ.30 லட்சத்துக்கான காசோலையை முதலøமைச்சர் தலைமை செயலகத்தில் நேற்று வழங்கினார். இதுகுறித்து அரசு செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- ஆஸ்திரேலியா நாட்டின் கோல்ட் கோஸ்ட் நகரில் ஏப்ரல் 4 முதல் 15 வரை நடைபெற்ற 21-வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில், பதக்கங்கள்...
மேலும்

தோனியின் படையை பழிதீர்க்குமா கோலி வாரியர்ஸ்?

புனே, மே 5: புனேவில் இன்று மாலை 4 மணிக்கு நடக்கும் ஐபிஎல் போட்டியின் 35-வது லீக் ஆட்டத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் – பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் சந்திக்கின்றன. சென்னை அணியை பொறுத்தவரை பேட்டிங் வலுவாக இருந்தாலும், பந்துவீச்சு சொல்லிக்கொள்ளும்படி இல்லை. சமீபத்தில் நடந்த போட்டியில் பேட்டிங், பவுலிங் என இரண்டிலுமே கோட்டைவிட்டதாக அந்த அணியின் கேப்டன் தோனி ஒப்புக்கொண்டார். பேட்டிங்கில் அம்பதி ராயுடு,...
மேலும்

ஐபிஎல் தொடரில் மாற்றம்

மும்பை, மே 5:  புனேவில் நடைபெற இருந்த எலிமினேட்டர் மற்றும் 2-வது தகுதி சுற்று போட்டிகள் கொல்கத்தாவிற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளன.  ஐபிஎல் 11-வது சீசன் கடந்த ஏப்ரல் 7-ம் தேதி தொடங்கி நடைபெற்றுவருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகளுக்கிடையே தற்போது லீக் சுற்று போட்டிகள் நடந்துவருகின்றன. இந்த மாதம் 27-ம் தேதியுடன் இந்தாண்டிற்கான ஐபிஎல் தொடர் நிறைவடைகிறது. இந்த நிலையில், எலிமினேட்டர் மற்றும் 2-வது தகுதி சுற்று...
மேலும்

டெல்லி அணிக்கு கைக்கொடுத்த மழை

டெல்லி, மே 3: ராஜஸ்தான் – டெல்லி அணிகளுக்கு இடையேயான நேற்றைய ஐபிஎல் போட்டி இழுபறியில் இருந்த நிலையில், மழையின் வரலால், 4 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணி த்ரில் வெற்றி பெற்றது. ஐ.பி.எல். போட்டியின் 32-வது லீக் ஆட்டம் டெல்லியில் உள்ள பெரோஸ்ஷா கோட்லா மைதானத்தில் நேற்று இரவு 8 மணிக்கு தொடங்கியது. இதில் ஷ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான டெல்லி டேர்டெவில்ஸ் அணியும், ரகானே தலைமையிலான ராஜஸ்தான்...
மேலும்

முன்னாள் சாம்பியன்கள் மோதல்

கொல்கத்தா, மே 3: இன்றைய ஐபிஎல் போட்டியில் முன்னாள் சாம்பியன்களான சென்னை சூப்பர் கிங்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் சந்திக்கின்றன. ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் 33-வது லீக் ஆட்டம், கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. இதில், முன்னாள் சாம்பியன்கள் சென்னை சூப்பர் கிங்ஸ்-கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. தோனி தலைமையிலான சென்னை அணி வழக்கம் போல இந்த சீசனிலும் வலுவான...
மேலும்

டெல்லி-ராஜஸ்தான் இடையே வாழ்வா? சாவா?

டெல்லி, மே 2: இன்றைய போட்டியில் வென்றால் மட்டுமே ஐபிஎல் தொடரில் நீடிக்கமுடியும் என்பதால், டெல்லி – ராஜஸ்தான் ஆகிய இரு அணிகளும் இன்றைய போட்டியில் வென்றாக வேண்டிய நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளது.  டெல்லியில் நடைபெற உள்ள இன்றைய ஐபிஎல்-யின் லீக் போட்டியில் டெல்லி டேர் டெவில்ஸ் அணியை, ராஜஸ்தான் ராயல்ஸ் அணி எதிர்கொள்கிறது. தொடர் தோல்வி காரணமாக கேப்டன் பதவியில் இருந்து கவுதம் காம்பீர் விலகிய நிலையில்...
மேலும்

அனுஷ்காவிற்கு கோலியின் பிறந்தநாள் பரிசு

பெங்களூரு, மே 2: இது தனக்கு கிடைத்த மிகச்சிறந்த பிறந்தநாள் பரிசு என கோலியின் மனைவி அனுஷ்கா சர்மா மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.  ஐபிஎல் கிரிக்கெட் 31-வது ஆட்டம் பெங்களூருவில் நேற்றிரவு நடைபெற்றது. புள்ளிகள் பட்டியலில் 6-ம் இடத்தில் உள்ள மும்பைக்கும், 7-ம் இடத்தில் உள்ள பெங்களூருவுக்கும் இந்த ஆட்டம் வாழ்வா சாவா ஆட்டமாக அமைந்தது. பெங்களூரு அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 167 ரன்களை...
மேலும்

ராகுலுக்கு விருது: பிசிசிஐ கைவிரிப்பு

டெல்லி, மே 2: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட், தற்போது இந்திய ஜூனியர் அணிக்கு பயிற்சியாளராக உள்ளார். இவரது பயிற்சியின் கீழ் 19 வயதுக்குட்பட்டோருக்கான 2017-ம் ஆண்டு உலக கோப்பையை இந்திய அணி வென்று அசத்தியது. இதையடுத்து ராகுல் டிராவிட்டுக்கு பாராட்டுக்கள் குவிந்தது. இந்த நிலையில் மத்திய அரசின் துரோணச்சாரியா விருதுக்கு ராகுல் டிராவிட் பெயரை இந்திய கிரிக்கெட் வாரியம் பரிந்துரைத்து உள்ளதாக...
மேலும்

சென்னை சிங்கங்கள் முதலிடத்திற்கு முன்னேறுமா?

புனே, ஏப். 30: டெல்லிக்கு எதிரான இன்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்று முதலிடத்திற்கு முன்னேறும் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர். டெல்லி டேர் டெவில்ஸ் – சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் இடையேயான 30-வது ஐபிஎல் லீக் போட்டி, புனேயில் இன்று இரவு 8 மணிக்கு தொடங்குகிறது. இந்த சீசனில் சென்னை அணி, 7 போட்டியில் விளையாடி 5 வெற்றிகளைப் பெற்றுள்ளது. 2 போட்டிகளில்...
மேலும்

ஹாட்ரிக் வெற்றியை ஐதராபாத் பெறுமா?

ஜெய்ப்பூர் / பெங்களூரு, ஏப்.29: ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் மோதும் ஐதராபாத் ஹாட்ரிக் வெற்றியை பெறுமா என்று ரசிகர்கள் ஆர்வத்துடன் உள்ளனர். ஐபிஎல் 11-வது சீசன் போட்டியில் இன்று இரண்டு ஆட்டங்கள் நடைபெறுகின்றன. மாலை 4 மணிக்கு ஜெய்ப்பூரில் நடைபெறும் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி எதிர்கொள்கிறது. ராஜஸ்தான் ராயல்ஸ் 3 வெற்றி, 3 தோல்வியுடன் 6...
மேலும்