Home » Category >விளையாட்டு (Page 2)

செரினா அதிர்ச்சி தோல்வி: ஒசாகா சாம்பியன்

நியூயார்க், செப்.9:அமெரிக்க ஓபன் மகளிர் ஒற்றையர் டென்னிஸ் இறுதிப் போட்டியில் ஜப்பான் வீராங்கனை ஒஸாகா அமெரிக்க நட்சத்திர வீராங்கனை செரினா வில்லியம்சை 6-2, 6-4 என்ற நேர் செட்களில் வென்று வரலாறு படைத்துள்ளார். இந்திய நேரப்படி நேற்று நள்ளிரவு நடைபெற்ற இறுதிப் போட்டியில் அமெரிக்க வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் – ஜப்பான் வீராங்கனை நவோமி ஒஸாகா ஆகியோர் மோதினர். இதில், ஒஸாமா 6-2, 6-4 என்ற நேர்...
மேலும்

கோலி, ரவி சாஸ்திரி மீது இந்திய வீரர்கள் அதிருப்தி

மும்பை, செப். 7: அணி வீரர்கள் தேர்வில் அடிக்கடி மாற்றம் செய்வதால் கேப்டன் விராத் கோலி மற்றும் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி மீது இந்திய வீரர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். இதனால், அணிக்குள்ளேயே இவர்கள் இருவருக்கும் எதிர்ப்புகள் வலுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரவி சாஸ்திரி பயிற்சியாளரான பிறகு, வெளிநாடுகளில் நடக்கும் ஆட்டங்களில் இந்திய அணி சோபிக்கவில்லை. தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணத்தில் அந்த அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி...
மேலும்

யு.எஸ். ஓபன்: இறுதிப்போட்டியில் செரினா

நியூயார்க், செப். 7:தன்னை எதிர்த்து விளையாடிய லாத்வியா வீராங்கனையை, எளிதாக வீழ்த்திவிட்டு இறுதிப்போட்டிக்குள் அசால்ட்டாக நுழைந்துள்ளார், அமெரிக்காவின் செரினா வில்லியம்ஸ். கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற அமெரிக்கா ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடந்துவருகிறது. இதில் பெண்கள் அரையிறுதி ஆட்டங்களில் லாத்வியாவின் செவாஸ்டோவாவை, அமெரிக்காவின் முன்னணி வீராங்கனையான செரினா வில்லியம்ஸ் எதிர்கொண்டார். இதில் செரினா, 6-3 , 6 -0 என்ற கணக்கில் செவாஸ்டோவாவை எளிதாக வீழ்த்தி...
மேலும்

டேவிஸ் கோப்பை: இந்திய முன்னணி வீரர்கள் விலகல்

புதுடெல்லி, செப். 6: டேவிஸ் கோப்பை டென்னிசில் உலக குரூப் பிளே-ஆப் சுற்றில் இந்தியா-செர்பியா இடையிலான ஆட்டம் வருகிற 14-ந்தேதி முதல் 16-ந்தேதி வரை செர்பியாவின் கிரால்ஜிவோ நகரில் நடக்கிறது. இந்த போட்டிக்கான அணியில் இருந்து இந்திய முன்னணி ஒற்றையர் பிரிவு வீரர் யுகி பாம்ப்ரி மற்றும் சமீபத்தில் ஆசிய விளையாட்டில் இரட்டையரில் தங்கம் வென்ற திவிஜ் சரண் ஆகியோர் விலகியுள்ளனர். திவிஜ் சரண் தோள்பட்டை காயத்தாலும், அமெரிக்க...
மேலும்

அரபு எமிரேட்ஸ் – ஹாங்காங் இடையே கடும் போட்டி

மலேஷியா, செப். 6:  ஆசிய கோப்பையில் பங்கேற்கும் 6-வது அணிக்கான தகுதிச்சுற்று போட்டியின் இறுதி போட்டி, யுனைடெட் அரபு எமிரேட்ஸ் மற்றும் ஹாங்காங் அணிகள் இடையே நாளை நடைபெற உள்ளது. ஆசிய கோப்பை போட்டிகள் வரும் செப்டம்பர் 15-ம் தேதி தொடங்கி 28-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில், இந்தியா,இலங்கை,வங்கதேசம்,பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் நேரடியாக விளையாட தகுதி பெற்றுள்ளன. இந்த தொடரில் பங்குபெறும் ஆறாவது...
மேலும்

வெட்ட வெளிச்சமானது கோலி – ரோஹித் பனிப்போர்

லண்டன், செப். 6:  விராட் கோலியை ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராமில் இருந்து ரோஹித் சர்மா அன்ஃபாலோ செய்துள்ளதால், இவர்கள் இருவரிடையேயான பனிப்போர் வெட்ட வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கிரிக்கெட்டை பொறுத்தவரை ஒரு அணியில் டாப் 2 இடங்களில் இருக்கும் வீரர்களுக்கு இடையே பனிப்போர் நடப்பது வழக்கம். அந்த வகையில், இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராத் கோலிக்கும், தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் சர்மாவுக்கும் இடையே பனிப்போர் நடந்துவந்திருக்கலாம் என்பதை...
மேலும்

இந்திய வீரர் சவுரப் சவுத்ரி தங்கப்பதக்கம் வென்றார்

சங்வான், செப்.6:தென்கொரியாவில் நடைபெறும் உலக துப்பாக்கிச்சுடுதல் சாம்பியன் ஷிப் போட்டியில் இந்திய வீரர் சவுரப் சவுத்ரி தங்கப்பதக்கம் வென்றுள்ளார். உலக துப்பாக்கிச்சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டிகள் கடந்த 2014 ஆம் ஆண்டு ஸ்பெயினில் நடைபெற்றது. நான்கு ஆண்டுகளுக்கு பிறகு தற்போது, 52-வது உலக சாம்பியன்ஷிப் போட்டி தென்கொரியாவில் உள்ள சங்வான் நகரில் ஆகஸ்ட் 31 ஆம் தேதி துவங்கியது. செப்டம்பர் 15 -ஆம் தேதி வரை நடைபெற உள்ள...
மேலும்

மைக்டைசன் இந்தியா வருகிறார்

நியூயார்க், செப்.5: முன்னாள் குத்து சண்டை வீரர் மைக்டைசன் இந்தியா வருகிறார் என கூறப்படுகிறது. குத்துச்சண்டை உலகத்தில் மிகவும் புகழ் பெற்றவர் மைக் டைசன். இவருக்கு ரசிகர்கள் ஏராளம் குத்துச்சண்டை போட்டியில் உலக சாம்பியன் பட்டம் வென்ற டைசன், குத்துச்சண்டையில் எதிரிகளுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்தவர். மைக்டைசன் முதன்முறையாக மும்பைக்கு வருகை தருகிறார். இந்திய கலப்பு தற்காப்புக் கலை அமைப்பாலும், உலக கிக்பாக்சிங் கூட்டமைப்பாலும் ஆதரிக்கப்பட்ட லீக்...
மேலும்

சென்னையில் டி20 போட்டி

சென்னை, செப்.5: சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நவம்பர் மாதம் 11ம் தேதி இந்தியா – மேற்கிந்திய தீவுகள் இடையே போட்டி நடைபெறுகிறது. இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்ய உள்ள மேற்கிந்திய தீவுகள் அணி 2 டெஸ்ட், 5 ஒரு நாள், மூன்று டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. இதில் இரு அணிகள் மோதும் 3வது டி20 கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நவம்பர் மாதம் 11-ம்...
மேலும்

ஜோகோவிச் காலிறுதிக்கு முன்னேற்றம்

நியூயார்க், செப். 4:  முன்னாள் நம்பர் ஒன் வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச், அமெரிக்க ஓபன் டென்னிஸ் காலிறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார். கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்கா ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடந்துவருகிறது. 4-வது சுற்று ஆட்டங்கள் நடந்துவரும் நிலையில், நேற்றிரவு நடந்த ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில், முன்னாள் நம்பர் ஒன் வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச் – 68-வது இடம் வகிக்கும் போர்ச்சுகீஸின்...
மேலும்

ஆறுதல் வெற்றிக்காக இந்திய அணியில் மாற்றம்

லண்டன், செப். 4:  இங்கிலாந்திற்கு எதிரான 5-வது டெஸ்ட்டில் ஆறுதல் வெற்றி பெறும் நோக்கில் இந்திய கிரிக்கெட் அணி தேர்வில் சில மாற்றங்கள் செய்ய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 4 டெஸ்ட் போட்டிகளிலுமே சரியாக பேட்டிங் செய்யாத ராகுலுக்கு பதிலாக, 19 வயதே ஆன இளம் வீரர் பிரித்வி ஷா அணியில் சேர்க்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல, மீண்டும் அஸ்வின் காயமடைந்துள்ளதாகவும் அவருக்கு பதிலாக ரவீந்திர...
மேலும்