Home » Category >விளையாட்டு

உலககோப்பைக்கு வெஸ்ட் இண்டீஸ் தகுதி பெற்றது

ஹராரே, மார்ச் 22:ஜிம்பாப்வேயில் நடைபெற்று வரும் உலக கோப்பை கிரிக்கெட் தகுதிச்சுற்றுக்கான போட்டியில் ஸ்காட்லாந்து அணியை வெஸ்ட் இண்டீஸ் அணி வீழ்த்து உலககோப்பை போட்டிக்கு தகுதி பெற்றது. டாஸ் வென்ற ஸ்காட்லாந்து அணி பவுலிங்கை தேர்வு செய்தது. வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க வீரர்களாக கிறிஸ் கெயில், எவின் லீவிஸ் களம் புகுந்தனர். முதல் பந்திலேயே கிறிஸ் கெயில் வெளியேறி அதிர்ச்சி அளித்தார். அடுத்து களமிறங்கிய விக்கெட்...
மேலும்

சென்னை அணிக்கு ஏங்கும் தினேஷ் கார்த்திக்

சென்னை,மார்ச்21:ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பெறாதது வருத்தம் அளிப்பதாக இந்திய கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் வேதனை தெரிவித்துள்ளார். இலங்கையில் நடைபெற்ற முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் வங்காள தேச அணிக்கெதிராக கடைசி பந்தில் சிக்ஸ் அடித்து அணியை வெற்றி பெற வைத்தார், இந்திய கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக். இதன்மூலம், சுமார் 10 வருடங்கள் கழித்து மிகப்பெரிய அங்கீகாரம்...
மேலும்

தொடர் நாயகன் சுந்தர்

தொடர் நாயகன் விருது பெற்ற வாஷிங்டன் சுந்தர் பேசும்போது, இந்த இளம் வயதில் இப்படியொரு விருதை வாங்குவது பெருமையாக இருக்கிறது. இதற்கு என் குடும்பத்தினருக்கு நன்றி சொல்ல வேண்டும். பவர்பிளேயில் பந்து வீசுவது சவாலான ஒன்று. அதில் சிறப்பாக செயல்பட்டு விக்கெட் வீழ்த்தினேன். நாட்டுக்காக விளையாடுவது பெருமையான விஷயம். எப்போதும் பேட்ஸ்மேனின் மனநிலையை அறிந்து பந்துவீச வேண்டும். நான் அப்படித்தான் செய்தேன். தினேஷ் கார்த்திக் சிறப்பாக விளையாடினார்....
மேலும்

இலங்கை கொடியை ஏந்திய இந்திய கேப்டன்

கொழும்புவில் நேற்று நடந்த போட்டியில் இலங்கை ரசிகர்களின் ஆதரவு முழுவதுமாக இந்தியாவிற்கே இருந்தது. இந்திய அணி வெற்றி பெற்ற பின்பு இலங்கை ரசிகர்கள் தங்கள் அணி வெற்றி கண்டது போல கொண்டாடினர். வெற்றிக்கு பின் இலங்கையில் தேசிய கொடியை இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா ஏந்தி வந்தார்.
மேலும்

8 பந்தில் 29 ரன்கள்: மேட்சை வென்ற தினேஷ் கார்த்திக்

கொழும்பு, மார்ச் 19: இலங்கையின் 70வது சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில் இந்தியா, இலங்கை, வங்கதேச அணிகள் இடையேயான டி20 கிரிக்கெட் தொடர் நடந்து வந்தது. நேற்று நடந்த இறுதிப்போட்டியில் இந்திய அணி 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. போட்டி கைவிட்டுப் போய்விடும் என்ற நிலையில், தினேஷ் கார்த்திக் அதிரடியாக விளையாடி அணியை வெற்றி பெற வைத்தார். இதையடுத்து தினேஷ் கார்த்திக்கிற்கு ரசிகர்களும் கிரிக்கெட் வீரர்களும் வாழ்த்து...
மேலும்

தினேஷ் அப்சட்டாக இருந்தார்: ரோகித் சர்மா

கேப்டன் ரோகித் சர்மா பேசுகையில், இந்த போட்டியில் தினேஷ் கார்த்திக் சிறப்பாக விளையாடினார். அவரிடம் இந்த போட்டியில் நீங்கள் தான் ஆட்டத்தை முடிக்க வேண்டும். கடைசி 4 ஓவர்களில் உங்கள் திறமை பயன்படும் என்றேன். ஏழாவது வரிசையில் களமிறங்கச் சொன்னேன். அதனால் தான் நான் அவுட் ஆனதும் அவர் இறங்க வேண்டிய இடத்தில் விஜய் சங்கர் இறங்கினார். இப்படி செய்ததில் தினேஷ் கார்த்திக்கிற்கு வருத்தம் இருந்தது. ஆனால்...
மேலும்

மனைவி புகாருக்கு ஷமி மறுப்பு

கொல்கத்தா, மார்ச் 8: தன் மீது மனைவி கூறியுள்ள புகார்கள் உண்மையில்லை என்று இந்திய கிரிக்கெட் அணி வீரர் முகமது ஷமி மறுத்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவர் முகமது ஷமி. உத்தரபிரதேசத்தை சேர்ந்த 29 வயதான முகமது ஷமி தற்போது மேற்குவங்காளத்தில் உள்ள கொல்கத்தாவில் வசித்து வருகிறார். முகமது ஷமிக்கும், ஹசின் ஜஹன் என்ற பெண்ணுக்கும் கடந்த 2014ம் ஆண்டு திருமணம் நடந்தது....
மேலும்

வார்னருக்கு அபராதம் 

டர்பன், மார்ச் 8: தென்னாப்பிரிக்க அணி வீரர் குவின்டான் டி காக்குடன் வாக்குவாதம் செய்த ஆஸ்திரேலிய அணி துணை கேப்டன் டேவிட் வார்னருக்கு, போட்டிக்கான ஊதியத்தில் 75 சதவீத அபராதம் விதிக்கப்பட்டது. டர்பனில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியின் முடிவில் வீரர்கள் அறை அருகே நடந்த இந்த சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியதை அடுத்து சர்ச்சை வெடித்தது. இது குறித்து விசாரணை நடத்திய ஐசிசி போட்டி...
மேலும்

தோல்வியில் இருந்து மீளுமா இந்தியா?

கொழும்பு, மார்ச் 8: முத்தரப்பு டி 20 தொடரில் இந்தியா தனது 2-வது லீக் ஆட்டத்தில் இன்று வங்கதேசம் அணியுடன் மோதுகிறது. தொடக்க போட்டியில் இலங்கையுடன் மோதிய இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வி அடைந்தது. கொழும்பு மைதானத்தில் நேற்று முன்தினம் நடந்த இப்போட்டியில் டாசில் வென்ற இலங்கை பந்துவீசிய நிலையில், இந்தியா 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 174 ரன் குவித்தது. தவான் 90,...
மேலும்

கோலிக்கு ரூ.7 கோடி, தோனிக்கு ரூ 5 கோடி: பிசிசிஐ ஒப்பந்தம்

மும்பை, மார்ச் 8: கிரிக்கெட் வாரியத்தின் வருடாந்திர ஒப்பந்த வீரர்கள் பட்டியலில், முன்னாள் கேப்டன் டோனி ஏ+ கிரேடில் இருந்து ஏ கிரேடுக்கு தள்ளப்பட்டுள்ளார். பிசிசிஐ நேற்று வெளியிட்ட ஒப்பந்த வீரர்கள் விவரம் (அக். 2017 – செப். 2018). ஏ+ கிரேடு (தலா ரூ. 7 கோடி): விராத் கோஹ்லி, ரோகித் ஷர்மா, ஷிகர் தவான், புவனேஷ்வர் குமார், ஜஸ்பிரித் பூம்ரா. ஏ கிரேடு (தலா ரூ.5...
மேலும்

ஐபிஎல் தொடக்க விழா தேதி மாறுகிறது

மும்பை, மார்ச் 6: ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் தொடக்க விழா ஏப்ரல் 6ந்தேதி நடைபெறவிருந்த நிலையில்,7ந்தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. நடப்பாண்டிற்கான ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் தொடரானது வரும் ஏப்ரல் மாதம் தொடங்குகிறது. இதன் தொடக்க விழா ஏப்ரல் 6ந்தேதி நடைபெறுவதாக ஐபிஎல் நிர்வாகம் முடிவு செய்திருந்தது. இந்நிலையில், உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட பிசிசிஐ நிர்வாகக்குழுவின் அறிவுறுத்தலின்படி தொடக்க விழா 7ந் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. ஐபிஎல் தொடரின் தொடக்க விழா கிரிக்கெட்...
மேலும்