w
Home » Category >ஆன்மீகம்

மயிலம் ஸ்ரீ முருகன் ஆலயத்தில் தேரோட்டம்

விழுப்புரம், மார்ச். 20:பங்குனி உத்திர பெருவிழாவை யொட்டி மயிலம் முருகன் கோவில் தேரோட்டம் இன்று நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனர். விழுப்புரம் மாவட்டம் மயிலத்தில் மயில் வடிவிலான மலையில் முருகன் கோவில் உள்ளது. மயிலம் முருகன் ஆலயத்தில் பங்குனி உத்திர விழா கடந்த 15-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் 8-ம் திருவிழாவான நேற்று முருகனுக்கு திருக்கல்யாண உற்சவமும், வெள்ளி குதிரை வாகனத்தில்...
மேலும்

பங்குனி உத்திர தீமிதி திருவிழா: எம்பி பங்கேற்பு

செங்குன்றம், மார்ச் 19: பாடியநல்லூர் கிராமம் பர்மா நகரில் அருள் வழங்கும் முனீஸ்வரர் அங்காள ஈஸ்வரி திருக்கோவில் பங்குனி உத்திர தீமிதி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. திருவள்ளுர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர். பி.வேணுகோபால், பொன்னேரி சட்ட மன்ற உறுப்பினர் சிறுணியம் பி.பலராமன் ஆகியோர் கோவிலுக்கு தரிசனம் செய்ய வந்தனர். திருக்கோயில் தலைவர் எஸ்.மனோகரன், செயலாளர், ஜி.ராஜேந்திரன், பொருளாளர், கே.வேலாயுதம் மற்றும் அறங்காவலர் குழு நிர்வாகிகள்...
மேலும்

மரக்கிளைகளில் சிக்கிய தேர்

சென்னை, மார்ச் 17: திருவான்மியூர் மருந்தீஸ்வரர் திருக்கோயிலில் இன்று காலை திருத்தேரோட்டம் வெகுவிமரிசையாக நடைபெற்றது. சுற்றுப்புற மக்கள் அதிகாலை 5 மணி முதலே மாடவீதிகளுக்கு கூட்டம் கூட்டமாக வந்து தேர் இழுத்தனர். தேர் பவனி வந்த போது சில இடங்களில் மரக்கிளைகளை முன்கூட்டியே தேரின் உயரத்திற்கு ஏற்ப அகற்றாமல் இருந்ததால் கிழக்கு மாடவீதியில் தேர் பவனி வந்த போது தேரின் உச்சிப்பகுதி சிக்கி கொண்டது. திருக்கோயில் ஊழியர்கள்...
மேலும்

ஏகாம்பரநாதர் உற்சவர் சிலை சீரமைப்பு பணி

காஞ்சிபுரம், மார்ச் 14: பங்குனி உத்திர விழாவை முன்னிட்டு காஞ்சி ஏகாம்பரநாதர் கோயிலில் உள்ள பழைய உற்சவர் சிலைகள் சீரமைக்கும் பணி தொடங்கியது. பிரசித்தி பெற்ற ஏகாம்பரநாதர் கோயிலில் புதிய உற்சவர் சிலை அமைத்ததில் முறைகேடு நடைபெற்றதைத் தொடர்ந்து, பங்குனி உத்திர விழா நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட்டது. இந்நிலையில், ஏகாம்பரநாதர் கோயில் தொண்டு அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் பங்குனி உத்திர விழாவை நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்து...
மேலும்

 பங்காரு அடிகளார் 79-வது அவதார தினம்

மேல்மருவத்தூர் மார்ச் 3.மேல்மருவத்தூர் ஆன்மிககுரு அருள்திரு பங்காரு அடிகளாரின் 79-வது அவதார தின விழா மேல்மருவத்தூரில் செவ்வாடை பக்தர்களால் மிகவும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. அருள்திரு அடிகளாரின் அருள்தரிசனம் பெற்ற பல லட்சம் செவ்வாடை பக்தர்கள் அவரிடம் ஆசிபெற்றனர்.இன்று காலை 7.30 மணிக்கு தம் இல்லத்தில் உள்ள தன் பெற்றோரின் படங்களுக்கு தீபாராதனை காட்டி வணங்கிவிட்டு அடிகளார் வீட்டிலிருந்து வெளியே வந்ததும், அவரைப் பார்க்க ஆவலோடு காத்திருந்த பக்தர்கள்...
மேலும்

திருவையாறில் பஞ்சரத்ன கீர்த்தனை இசையஞ்சலி

திருவையாறு, ஜன.25: திருவையாறு தியாகராஜ சுவாமிகளின் 172-வது ஆராதனை விழாவில் பஞ்சரத்ன கீர்த்தனை இசை அஞ்சலி நடைபெற்று வருகிறது. காவிரியாற்றின் படித்துறையில் ஆயிரக்கணக்கான இசை கலைஞர்கள் கீர்த்தனைகளை பாடி இசையஞ்சலி செலுத்தினர்
மேலும்

மதுரை மாரியம்மன் கோயில் தைப்பூச தெப்ப திருவிழா

மதுரை, ஜன.21:மதுரையில் தைப்பூச தெப்ப திருவிழாவையொட்டி மாரியம்மன் கோயில் தெப்பக்குளம் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. இன்று காலையில் அம்மன் பஞ்ச மூர்த்திகளுடன் கோயிலிலிருந்து புறப்பட்டு மாரியம்மன் கோயில் தெப்பக் குளத்தை சென்றடைந்தார். அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த தெப்பத்தில் அம்மன் எழுந்தருளி தெப்பக்குளத்தை இரண்டு முறை சுற்றி வலம் வந்தார். மாலையில் தெப்பக்குளத்தின் மைய மண்டபத்தில் அம்மன் எழுந்தருளி பக்தி உலாத்துதல் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து அம்மன் இரவும்...
மேலும்

வள்ளலார் ஜோதி தரிசன விழா

சிதம்பரம் ஜன. 21: கடலூர் மாவட்டம் வடலூரில் ராமலிங்க அடிகளார் சத்திய ஞான சபை உள்ளது இதில் 148வது தைப்பூச திருவிழா 20 1 2019 அன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. மேலும் ராமலிங்க அடிகளார் பிறந்த மருதூரில் உள்ள அவரது வீட்டிலும் அருகே உள்ள கருங்குழி என்ற இடத்தில் ராமலிங்க அடிகளார் தண்ணீரால் விளக்கேற்றிய இடத்திலும் கொடி ஏற்றப்பட்டது முக்கிய திருவிழாவான தைப்பூச ஜோதி தரிசன விழா...
மேலும்

மஹாநந்திக்கு சிறப்பு அலங்காரம்

தஞ்சாவூர், ஜன.16: தஞ்சாவூர் பெரியக்கோவிலில் மகர சங்கராந்தியை முன்னிட்டு 1000 கிலோ எடை கொண்ட காய்கறிகள்,பழங்கள்,இனிப்பு வகைகளால் மஹாநந்திக்கு சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. தஞ்சாவூர் பெரியகோவில் என்றழைக்கப்படும் அருள்மிகு பெரியநாயகி அம்மன் உடனாய ஸ்ரீபெருவுடையார் ஆலயம் உலகப்பிரசித்தி பெற்று விளங்குகிறது,இக்கோவிலில் மஹா நந்தியெம்பெருமான் வீற்றிருந்து அருள்பாலித்து வருகிறார், இந்நிலையில் மகரசங்கராந்தியை முன்னிட்டு மஹாநந்திக்கு சிறப்பு அலங்காரமும் சிறப்பு தீபாரதனையும் நடைபெற்றது. சுமார் 1000 கிலோ எடையுள்ள பக்தர்களால்...
மேலும்

ஆஞ்சநேயருக்கு வடை மாலை லட்சார்ச்சனை

திருவள்ளூர், ஜன.7: திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் ஒன்றியத்திற்குட்பட்டது திருப்பந்தியூர் கிராமம் இங்கு விஸ்வரூப பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. அனுமன் ஜெயந்தியையொட்டி விஸ்வரூப பஞ்சமுகம் ஆஞ்சநேயருக்கு 51 ஆயிரம் வடைகளால் ஆனா மாலை செலுத்தி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
மேலும்

உ.பி. கும்பமேளாவுக்கு ரூ.4,300 கோடி ஓதுக்கீடு

சென்னை, ஜன.6: பிரயாக்ராஜில் ஜன.15-ம் தொடங்கவிருக்கும் 2019 மகா கும்ப மேளாவுக்கான அனைத்து அத்தியாவசியக் கட்டமைப்புகளுக்காக ரூ.4300 கோடிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக உத்தரப்பிரதேச ஆயத்தீர்வை மற்றும் மதுவிலக்கு அமைச்சர் ஜெய்பிரதாய் சிங் தெரிவித்துள்ளார். இது குறித்து நேற்று எப்ஐசிசிஐ சார்பில் நடைபெற்ற விழாவில் அவர் கூறியதாவது: யுனெஸ்கோவின் பிரத்யேக மனித நேயக் கலாச்சாரப் பாரம்பரிய அங்கீகாரமாக விளங்கும் பிரயாக்ராஜ் கும்பமேளாவைச் சிறப்பாக நடத்தத் தன்னை உத்தரப்பிரதேச முதல்வர் யோகி...
மேலும்