Home » Category >சினிமா (Page 84)

கமல்ஹாசன் அழைப்பு-: ரஜினி ரசிகர்கள் ஆவல்

புகைப்படம் எடுப்பது எப்போது என்று காத்துக் கொண்டிருக்கின்றனர். 2.0, காலா படங்களில் ரஜினிகாந்த் தீவிரமாக நடித்து வருவதால் ரசிகர்களை சந்திக்க முடியவில்லை என்று மன்ற பொறுப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். அடுத்த ஜனவரி மாதம் 2.0 படத்தை திரைக்கு கொண்டு வர ஷங்கர் திட்டமிட்டுள்ளனர். தற்போது காலா படப்பிடிப்பில் ரஜினிகாந்த் கலந்துகொண்டு நடித்து வருகிறார். ஏற்கனவே மும்பையில் படப்பிடிப்பு முடிந்த நிலையில் சென்னையில் அமைக்கப்பட்டுள்ள செட்டில் மீதமுள்ள படப்பிடிப்பு நடைபெற்று...
மேலும்

பிக்பாஸ் வீட்டில் மீண்டும் ஓவியா

சென்னை, செப். 19: பிக் பாஸ் நிகழ்ச்சியில் மீண்டும் பங்கேற்பதை நடிகை ஓவியா உறுதி செய்துள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களின் பேராதரவை பெற்றவர் ஓவியா. அவரை மீண்டும் நிகழ்ச்சிக்கு அழைத்து வர அவரிடம் பிக்பாஸ் நிகழ்ச்சி நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், அதற்கு ஓவியா மறுத்ததாகவும் தகவல்கள் வெளியாயின. இந்நிலையில் செப்டம்பர் 30ம் தேதி பிக்பாஸ் நிகழ்ச்சியின் 100வது நாள். இந்த சீசனின் இறுதி நிகழ்ச்சியும் இதுதான்....
மேலும்

ஸ்கெட்ச் படத்திற்காக பிரம்மாண்ட பாடல் காட்சி

கலைப்புலி எஸ்.தாணுவின் வி கிரியேசன்ஸ் வழங்க மூவிங் பிரேம் பட நிறுவனம் சார்பில் மிக பிரமாண்டமாக தயாராகும் படம் ஸ்கெட்ச். விக்ரம் நாயகனாக நடிக்கிறார். நாயகியாக தமன்னா நடிக்கிறார். மற்றும் சூரி, ஆர்.கே.சுரேஷ், அருள்தாஸ், மலையாள நடிகர் ஹரீஷ், ஸ்ரீமன், மதுமிதா, விஷ்வாந்த், பாபுராஜா, வினோத், வேலராமமூர்த்தி, சாரிகா ஆகியோர் நடிக்கிறார்கள். இவர்களுடன் முக்கிய வேடத்தில் பிரியங்கா நடிக்கிறார். எஸ்.எஸ்.தமன் இசை அமைக்க, சுகுமார் ஒளிப்பதி செய்கிறார்....
மேலும்

இசையமைப்பாளர் தரண் திருமண வரவேற்பு

சென்னை, செப்.18: இசையமைப்பாளர் தரண் மற்றும் நடிகை தீக்ஷிதா திருமணம் சிறப்பாக நடைபெற்றது. இதில் பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். போடா போடி, மணல் கயிறு, ஆஹா கல்யாணம் ஆகிய படங்களுக்கு இசையமைத்தவர் தரண். இவர் நடிகை தீக்ஷிதாவை திருமணம் செய்து கொண்டார். திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், நடிகர் விஜய் சேதுபதி, இயக்குநர் தரணி, நடிகர் சத்யராஜ், சிபிராஜ், ஹரிசரண், மாதன் கார்கி,...
மேலும்

பொங்கலுக்கு ‘தானா சேர்ந்த கூட்டம்’

விக்னேஷ் சிவன் இயக்கும் ‘தானா சேர்ந்த கூட்டம்’ படம் பொங்கலுக்கு ரிலீசாக உள்ளது. இதில் சூர்யா நாயகனாகவும், கீர்த்தி சுரேஷ் நாயகியாகவும் நடித்துள்ளனர். இப்படத்தில் சுரேஷ் மேனன், ரம்யா கிருஷ்ணன், செந்தில், தம்பி ராமையா, ஆர்.ஜே.பாலாஜி, மற்றும் பலர் நடித்துள்ளனர். கே.இ.ஞானவேல்ராஜாவின் ‘ஸ்டுடியோ கிரீன்’ நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார். தற்போது இந்த படத்தின் புதிய போஸ்டர் ஒன்று வெளியாகி உள்ளது. இதில் உள்ள...
மேலும்

பிக் பாஸ் சாம்ராஜ்யம் டூ போலீஸ் சாம்ராஜ்யம் ஓவியாவின் அடுத்த மூவ்

அன்னபூரணி மூவீஸ் சார்பில் அருணாச்சலம் தயாரித்து இருக்கும் படம் போலீஸ் சாம்ராஜ்யம். உளவுத்துறை அதிகாரியாக பிருத்விராஜ் நடிக்கும் இப்படத்தில் ஓவியா, ஜெமினி கிரண், கலாபவன் மணி, சத்யா, ஐஸ்வர்யா, ஜெகதீஷ், சீமா, தேவா, பாபுராஜ் ஆகியோர் நடித்திருக்கின்றனர். சீமா, சேஷலின் ஆகியோர் பாடல்கள் எழுத விஷ்ணு கலையமைக்கிறார். கூல் ஜெயந்த் நடன காட்சிகளை அமைக்க கோபால் ராம் வசனம் எழுதியுள்ளார். டான் மேக்ஸ் எடிட்டிங் பணிகளை மேற்கொள்ள...
மேலும்

‘டிக் டிக் டிக்’ படத்தை தேனாண்டாள் நிறுவனம் வெளியிடுகிறது

‘மிருதன்’ படத்தின் மூலமாக அனைவரின் கவனத்தையும் ஈர்த்த இயக்குநர் சக்தி சௌந்தர்ராஜன் அடுத்ததாக இயக்கி வரும் படம் ‘டிக் டிக் டிக்’. இப்படத்தில் ஜெயம் ரவி, நிவேதா பெத்துராஜ் ஆகியோர் நடித்துள்ளனர். டி.இமான் இசையமைக்கிறார். இதுவரை ஹாலிவுட்டை கலக்கிக் கொண்டிருந்த ஸோம்பி கான்செப்ட்டை, இயக்குநர் சக்தி சௌந்தர்ராஜன் ‘மிருதன்’ படம் மூலமாக தமிழ்த் திரைப்பட உலகுக்கு அறிமுகப்படுத்தினார். அது நல்ல வரவேற்பைப் பெற்றது. அதை தொடர்ந்து யாருமே...
மேலும்

மணிரத்னம் இயக்கும் படம் ஜனவரியில் ஷூட்டிங்

மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்கும் 17-வது படத்தில் அரவிந்த்சாமி, சிம்பு, விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில், ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே நடிக்க உள்ளது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்கிறார். ஸ்ரீகர் பிரசாத் படத் தொகுப்பு மேற் கொள்கிறார். கதை, திரைக்கதை, வசனம் எழுதி மணிரத்னம் இயக்குகிறார். பிரமாண்டமான பொருட்செலவில் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த...
மேலும்

நரகாசூரன் படப்பிடிப்பு துவங்கியது

துருவங்கள் 16 வெற்றிப்படத்தை இயக்கிய இளம் இயக்குனர் கார்த்திக் நரேன் அடுத்ததாக இயக்க உள்ள படம் ‘நரகாசூரன்’.  இதில் அரவிந்தசாமி, சந்திப் கிஷன், இந்திரஜித், ஷ்ரேயா சரண், ஆத்மிகா ஆகியோர் நடிக்கின்றனர். இந்த படத்தை கௌதம் மேனனின் ஒன்ராகா என்டர்டெயின்மெண்ட் நிறுவனமும் பத்ரி கஸ்தூரியின் ஷ்ரத்தா என்டர்டெயின்மெண்ட் நிறுவனமும் இணைந்து தயாரிக்கின்றன. வெங்கட் சோமசுந்தரம் இசையமைக்க, ரேஷ்மா கட்டாலா ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் முதல் நாள் படப்பிடிப்பு...
மேலும்

‘விக்டரை’ மீண்டும் இயக்கும் கௌதம்

அருண்விஜயின் 25-வது படத்தை கௌதம் மேனன் இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தற்போது இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் தற்போது விக்ரம் நடிப்பில் ‘துருவ நட்சத்திரம்’ படத்தை இயக்கி வருகிறார். மேலும் தனுஷ் நடித்துள்ள ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’ படத்தை முடித்து இறுதி கட்ட பணிகளில் கவனம் செலுத்தி வருகிறார். இந்த படங்களை முடித்த பிறகு அருண்விஜயுடன் அவர் ஜோடி சேருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே...
மேலும்

விஜய்யுடன் மோதும் கார்த்தி

‘சதுரங்க வேட்டை’ வெற்றி பட இயக்குனர் வினோத் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள படம் ‘தீரன் அதிகாரம் 1’. இதில் கார்த்தி ஜோடியாக ரகுல் பிரீத் சிங் நடித்துள்ளார். இந்த படத்தின் கதை 2005-ம் ஆண்டு நாளிதழில் வந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டது. இதற்காக இயக்குனர் 600 பக்கங்கள் கொண்ட திரைக்கதையை எழுதியுள்ளார். மேலும் பல்வேறு போலீஸ் அதிகாரிகளுடன் கலந்து பேசியுள்ளார்.வட மாநிலங்களில் நடந்த கிரைம்...
மேலும்