w
Home » Category >சினிமா (Page 82)

ஜூலி 2 படத்தில் படு கவர்ச்சியா?:ராய்லட்சுமி மனந்திறந்து பேட்டி

இயக்குனர் ஆர்.பி.உதயகுமார் என்னை கற்க கசடற படம் மூலம் தமிழில் அறிமுகப்படுத்தினார். தொடர்ந்து மலையாளம், தெலுங்கு, ஒரு பாலிவுட் படம் என 4 மொழிகளில் 49 படங்களில் நடித்துள்ளேன். ஜூலி 2 படம் எனக்கு 50வது படமாகும். ஒரு நடிகையாக, ஒரு நடிகையின் வாழ்க்கையை 50வது படத்தில் நடிப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த படத்தின் ட்ரெயிலரை பார்த்தவுடன் நான் கவர்ச்சியாக நடித்திருப்பதால் ஆபாச படம் என...
மேலும்

அசோக்குமார் உடலுக்கு திரையுலகினர் அஞ்சலி

சென்னை, நவ.22:தற்கொலை செய்து கொண்ட சினிமா தயாரிப்பாளர் அசோக்குமார் உடலுக்கு ராயப்பேட்டை மருத்துவமனையில் திரையுலகினர் அஞ்சில் செலுத்தினர். சென்னை வளசராவாக்கத்தில் நேற்று இரவு தற்கொலை செய்து கொண்ட சினிமா தயாரிப்பாளர் அசோக்குமாரின் உடல் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் இன்று காலை பிரேதபரிசோதனை செய்யப்பட்டது. மருத்துவமனையில் அசோக்குமார் மனைவிக்கு இயக்குனர்கள் சசிகுமார், அமீர், சுசீந்திரன், நடிகர் பரணி மற்றும் உதவி இயக்குனர்கள் உள்ளிட்டோர் ஆறுதல் கூறியதுடன் அசோக்குமார் உடலுக்கு...
மேலும்

இயக்குனர் அமீர் பரபரப்பு பேச்சு

சென்னை, நவ.22: கந்து வட்டி பிரச்சனை குறித்து தயாரிப்பாளர்கள் சங்கமும் விநியோகதஸ்தர்கள் சங்கமும் பேசி முடிவு செய்ய வேண்டும் என்று இயக்குனர் அமீர் கூறியுள்ளார். கந்துவட்டி கொடுமையால் நடிகர் சசிகுமாரின் நண்பரும், உறவினருமான அசோக்குமார் தற்கொலை செய்துகொண்டார்.- இந்த சம்பவம் குறித்து இயக்குனர் அமீர் கூறுகையில், ‘சினிமாவில்தான் வீரவசனம் பேசுகிறார்கள். பாதிப்பு குறித்து யார் வெளியே சொல்கிறார்கள். பைனான்சியர் அன்புச்செழியன் மீது கொலை வழக்கு பதிவு செய்ய...
மேலும்

கந்துவட்டி கும்பலுக்கு விரைவில் முடிவு:விஷால்

சென்னை,நவ.22: சினிமா தயாரிப்பாளர் அசோக்குமார் தற்கொலை செய்து கொண்டதற்கு காரணமானவர்களை போலீசார் உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று நடிகரும் தயாரிப்பாளர் சங்க தலைவருமான விஷால் கேட்டுக் கொண்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், தயாரிப்பாளர் சங்கத்திற்கு புதிய நிர்வாகிகள் பொறுப்புக்கு வந்த பின்னர், சிக்கல்களில் மாட்டிக் கொள்ளும் தயாரிப்பாளர்களை மீட்டெடுத்து, அவர்களுக்கு பாதுகாப்பும், ஆதரவும் அளித்து வருவாக கூறியுள்ளார். விரைவில் இந்தக் கந்துவட்டி...
மேலும்

‘வன்முறையுடன் கூடிய எந்த விவாதமும் தவறு’

சென்னை, நவ. 21: தீபிகா பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் பத்மாவதி படத்திற்கு ஆதரவாகவும் நடிகர் கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதுகுறித்து டுவிட்டரில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், இந்த படப் பிரச்னையில் நடிகை தீபிகா படுகோனே பாதுகாக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளார். உடலுக்கு தலை எவ்வளவு முக்கியமோ, அதுபோல் அவருக்கான சுதந்திரத்தை மறுக்கக் கூடாது என்று தெரிவித்துள்ளார். தன்னுடைய திரைப்படங்களுக்கும் பல்வேறு சமுதாயத்தினர் எதிர்ப்பு தெரிவித்திருப்பதாக சுட்டிக்...
மேலும்

பேஸ்புக்கில் பெண் தேடும் நடிகர் ஆர்யா

சென்னை, நவ.21: நடிகர் ஆர்யா தான் வாழ்க்கை துணை தேடுவதாக தனது சமூக வலைதள பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். சென்ற வாரம் ஆர்யா ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் போது தனது நண்பர்களுடன் பேசிய வீடியோ ஒன்று வெளியானது. அதில் அவர் தனது திருமணம் குறித்து பேசி இருந்தார். இதனை பலர் பகிர்ந்தனர். இந்நிலையில் அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் அதில், அனைவருக்கும் வணக்கம்....
மேலும்

ஆண்களுக்கும் இதே நிலைதான்: மனம் திறக்கும் ராதிகா ஆப்தே

சினிமாத்துறையில் ஆண்களும் பாலியல் துன்புறுத்தல்களைச் சந்திக்கின்றனர் என நடிகை ராதிகா ஆப்தே கூறியுள்ளார். ஹாலிவுட்டில் மிகப்பெரிய தயாரிப்பாளர் ஹார்வி வின்ஸ்டன். அவரின் கீழ் வேலைப் பார்த்த பல பெண்கள், தாங்கள் அனுபவித்த பாலியல் சீண்டல்கள் பற்றியும் வன்முறையைப் பற்றியும் கூறியிருந்தவை அமெரிக்காவின் பிரபல பத்திரிகை ஒன்றில் சில மாதங்களுக்கு முன் வெளிவந்திருந்தது. இது, உலகம் முழுவதும் பெரிய விவாதத்தை ஏற்படுத்தியிருந்தது. அது போல உலகம் முழுவதும் பல...
மேலும்

குற்றாலத்தில் சிவா-சமந்தா ஆட்டம்

பொன்ராம்-சிவகார்த்திகேயன்-சமந்தா கூட்டணியில் உருவாகி வரும் புதிய படம் 55 சதவீதம் முடிந்து விட்டதாக கூறப்படுகிறது. வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்திற்குப் பிறகு பொன்ராம்- சிவகார்த்திகேயன் கூட்டணியில் புதிய படம் ஒன்று தயாராகி வருகிறது. இந்தத் திரைப்படத்திற்கு இன்னும் தலைப்பு வைக்கவில்லை. கடந்த ஜூன் மாதம் மிக இந்தப் படத்தின் ஷூட்டிங் ஆரம்பித்தது. தென்காசியில் நடந்த படப்பிடிப்பில் நடிகை சமந்தா கலந்து கொண்டார். சிவாவின் வேலைக்காரன் வெளியீட்டு வேலைகள்...
மேலும்

வில்லனின் மகன் ஹீரோ ஆகிறார்

ராஜ்கென்னடி பிலிம்ஸ் பட நிறுவனத்தின் சார்பாக மன்சூர்அலிகான் கதை எழுதி இயக்கி, தயாரிக்கும் படத்திற்கு ‘கடமான்பாறை’ என்று பெயரிட்டுள்ளார். இந்த படத்தில் இளம் கதாநாயகனாக மன்சூர்அலிகானின் மகன் அலிகான் துக்ளக் அறிமுகமாகிறார். கதாநாயகியாக அனுராகவி நடிக்கிறார். இன்னொரு நாயகியாக ஜெனி பெர்ணாண்டஸ் நடிக்கிறார். மற்ற நடிகர்கள் அனைவரும் புதியவர்கள் படத்திற்கு மகேஷ் ஒளிப்பதிவு செய்ய ரவிவர்மா இசையமைக்கிறார். படம் பற்றி இயக்குனர் கூறுகையில், காட்டுக்குள்ளே நடக்கும் திருவிழா,...
மேலும்

24ல் டிக்டிக்டிக் பட டிரெய்லர்

ஜெயம் ரவி நடித்துள்ள டிக்டிக்டிக் திரைப்படத்தின் டிரெய்லர் இம்மாதம் 24ந்தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜெயம் ரவி மற்றும் நிவேதா பெத்துராஜ் நடித்து வரும் திரைப்படம் டிக் டிக் டிக். மிருதன் படத்தைத் தொடர்ந்து இரண்டாவது முறையாக ஜெயம் ரவியை இயக்கி வருகிறார் சக்தி சௌந்தர்ராஜன். இந்தப் படத்தின் படப்பிடிப்பு கேரள மாநிலத்தில் உள்ள மூணார் பகுதி முதலில் தொடங்கியது. இதில் முதன்முறையாக ஜெயம் ரவியின்...
மேலும்

என் படத்தில் பிரேம்ஜி நடிக்க மாட்டார்: வெங்கட்பிரபு

2 மூவி பஃப்ஸ் ரகுநாதன் மற்றும் அக்ராஸ் ஃபிலிம்ஸ் பிரபு வெங்கடாசலம் தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘திட்டம் போட்டு திருடுற கூட்டம்’. இதில் கயல் சந்திரன், சாத்னா டைட்டஸ், பார்த்திபன், சாம்ஸ், டேனி ஆகியோர் நடித்துள்ளனர். அறிமுக இயக்குனர் சுதர் இயக்கியிருக்கிறார். அஷ்வத் இயக்கியிருக்கும் இந்த படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இயக்குனர் ராஜேஷ் வெளியிட வெங்கட் பிரபு பெற்றுக் கொண்டார்....
மேலும்