Home » Category >சினிமா (Page 53)

காலா படப்பிடிப்பில் ரித்விகா

ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் காலா படத்தின் படப்பிடிப்பில்சென்னையை அடுத்த பூந்தமல்லி ஈவிபி பூங்காவில் நடந்து வருகிறது. இதில் ரஜினி சம்மந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே ரஞ்சித் இயக்கத்தில் கபாலி படத்தில் ரித்விகா நடித்து இருந்தார். அந்த கதாபாத்திரம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் காலா படத்திலும் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் ரித்விகா நடிக்க உள்ளார். இதற்காக காலா செட்டிற்கு நேற்று ரித்விகா...
மேலும்

கௌதம் ஜோடியாக ரெஜினா

மணிரத்தினம் இயக்கத்தில் கார்த்திக், ரேவதி நடித்து மிகப்பெரிய வெற்றி பெற்ற மௌனராகம் படத்தில் இடம் பெற்ற ‘மிஸ்டர் சந்திரமௌலி’ என்ற வசனம் மிகவும் பிரபலம். பல வருடங்களுக்கு பிறகு கார்த்திக்கும் அவரது மகன் கௌதம் கார்த்திக்கும் இணைந்து நடிக்க உள்ள புதிய படத்திற்கு ‘மிஸ்டர் சந்திரமௌலி’ என்று பெயர் சூட்டி உள்ளனர். இப்படத்தை திரு இயக்க, கிரியேட்டிவ் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் தனஞ்செயன் தயாரிக்கிறார். தென்னிந்தியாவின் முன்னணி கதாநாயகிகளில்...
மேலும்

தீபாவளிக்கு மெர்சல் வெளியாவதில் சிக்கல்

சென்னை, அக்.11: கேளிக்கை வரியை நீக்கும் வரை புதிய படங்களை வெளியிடுவதில்லை என தயாரிப்பாளர் சங்கம் அறிவித்துள்ளதால் தீபாவளிக்கு திட்டமிட்டப்படி மெர்சல் படம் வெளியாகுமா என்பது கேள்வி குறியாக உள்ளது.இந்நிலையில் வரியை நீக்குவது குறித்து திரைப்படத்துறையினர் நேற்று அமைச்சருடன் நடத்திய பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. ஓரிரு நாளில் முதல்வரை சந்திக்க திட்டமிட்டுள்ளனர். திரைப்படத்துறைக்கு 10 சதவீதம் கேளிக்கை வரியை தமிழக அரசு விதித்துள்ளது. இதை எதிர்த்து திரைப்படத்துறையினர்...
மேலும்

சந்தானத்தை கைது செய்ய போலீஸ் தீவிரம்

சென்னை, அக்.11:பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் பிரேம் ஆனந்த் என்ற பிஜேபி வழக்கறிஞரை தாக்கியதாக நடிகர் சந்தானம் மீது 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் தலைமறைவாக உள்ள சந்தானத்தை கைது செய்ய போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். நகைச்சுவை நடிகர் சந்தானம் கடந்த 2015-ம் ஆண்டு வளசரவாக்கத்தைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபரும் பில்டிங் கான்ட்ராக்டருமான சண்முகசுந்தரம் (54) என்பவரிடம் கோவூரை...
மேலும்

அமிதாப் பிறந்தநாள்: மோடி வாழ்த்து

புதுடெல்லி, அக்.11:இந்தி நடிகர் அமிதாப்பச்சனின் 75-வது பிறந்த தினத்தையொட்டி பிரதமர் மோடி அவருக்கு டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் பல்வேறு சமூக பிரச்சனைகளுக்காக குரல் கொடுக்கும் அமிதாப்பச்சன் சினிமா கலைஞர்களில் ஈடுஇணையற்றவர் என்பதில் நாம் பெருமை கொள்வோம் என்றும் அவர் நீண்டகாலம் உடல்நலத்துடன் வாழ வேண்டும் என்றும் கூறியுள்ளார். தனது பிறந்த தினத்தை கொண்டாட விரும்பவில்லை என்பதால் அமிதாப்பச்சன் இன்று மும்பையில் இல்லை. அவர் குடும்பத்துடன் மாலத்தீவிற்கு...
மேலும்

ரூ.100 கோடியை தொட்ட மெர்சல்

சென்னை, அக்.10:  விஜய் நடிப்பில் தீபாவளி பண்டிகைக்கு வெளிவர உள்ள மெர்சல் படத்தின் வியாபாரம் ரூ.100 கோடியை தொட்டுள்ளது. படத்தை வெளியிட திரையரங்கு உரிமையாளர்கள் போட்டிப்போடுகின்றனர். அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி உள்ள மெர்சல் படம் வரும் தீபாவளிக்கு வெளியாகிறது. இந்த படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்நிறுவனத்தின் 100-வது படமாக இது உருவாகி உள்ளது. மிகவும் பிரமாண்டமான முறையில் சுமார் 125 கோடி...
மேலும்

மெர்சல் ப்ரோமோவில் மிரட்டும் விஜய்

மெர்சல் படத்தின் ப்ரோமோ இணையதளத்தில் நேற்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் மெர்சல். அண்மையில் படத்தின் தலைப்புக்கு சில பிரச்சனைகள் எற்பட்டு தற்போது தீர்வு காணப்பட்டுள்ளது. இந்தப் படத்திற்கு தணிக்கை குழுவினர் யு/ஏ சான்றிதழ் வழங்கி இருப்பது படக்குழுவினருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விஜய் ரசிகர்கள் மத்தியில் இப்படத்திற்கு பெரிய எதிர்ப்பார்ப்பு உள்ளது. இந்நிலையில் நேற்று மெர்சல் படத்தின் இரண்டு ப்ரோமோவை...
மேலும்

தமிழ் சினிமாவில் டிரெண்டாகி வரும் பார்ட்-2க்கள்

பெரும்பாலான ஹாலிவுட் மற்றும் பாலிவுட் படங்களின் அடுத்தடுத்த பாகங்கள் வெளிவந்து மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து பதிவு செய்து வருகின்றன. இத்தகைய படங்களின் வெற்றி சூச்சுமத்தை தமிழ் சினிமா இயக்குநர்களும் தற்போது அடையாளம் கண்டுள்ளனர். இதன் விளைவு தமிழ் சினிமாவிலும் பார்ட் 2 படங்களின் ஆதிக்கம் அதிமாகியுள்ளது. தமிழ் திரையரங்கில் சமீபகாலமாக பேய் கதைகளே டிரெண்டாகிவந்த நிலையில், தற்போது அந்த இடத்தை பாகம் 2 படங்கள் பிடித்துள்ளன. பாகுபலி...
மேலும்

தோனி ரசிகராக விக்ரம் பிரபு நடிக்கும் ‘பக்கா’

‘அதிபர்’ படத்தை தயாரித்த பென் கன்ஸ்டோரிடியம் பட நிறுவனம் சார்பில் டி.சிவகுமார் அடுத்து தயாரிக்கும் படம் ‘பக்கா’. இதில் விக்ரம் பிரபு கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகிகளாக நிக்கி கல்ராணி, பிந்து மாதவி இருவரும் நடிக்கிறார்கள். மேலும் சூரி, சதீஷ், ஆனந்த்ராஜ், நிழல்கள் ரவி, சிங்கமுத்து, சிங்கம் புலி, ரவிமரியா, வையாபுரி, இமான் அண்ணாச்சி, ஜெயமணி, கிருஷ்ணமூர்த்தி முத்துகாளை, சிசர்மனோகர், சுஜாதா, நாட்டாமை ராணி, சாய்தீனா ஆகியோர் நடிக்கிறார்கள்....
மேலும்

ஜெயிக்கிறகுதிரக்கு ‘ஏ’ சர்டிபிகேட்

சினிமா பாரடைஸ் மற்றும் சரண் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ள படம் ‘ஜெயிக்கிறகுதிர’. இந்த படத்தில் ஜீவன் கதாநாயகனாக நடித்துள்ளார். கதாநாயகிகளாக டிம்பிள் சோப்டே, சாக்ஷிஅகர்வால், அஸ்வினி ஆகியோர் நடித்துள்ளனர். மற்றும் ஜெயப்பிரகாஷ், தலைவாசல் விஜய், கோவைசரளா, ரவிமரியா, சிங்கம் புலி, சித்ராலட்சுமணன், லிவிங்ஸ்டன், ரமேஷ்கண்ணா, மதன் பாப் யோகி பாபு, படவா கோபி, டி.பி.கஜேந்திரன், பாண்டு, ஏ.எல்.அழகப்பன், ரோபோசங்கர், இமான்அண்ணாச்சி, தீபா, ராமானுஜம், வையாபுரி, பவர்ஸ்டார், ஆதவன் ஆகியோர்...
மேலும்

கமல்ஹாசனுக்கு உடல்நல குறைவு

சென்னை, அக். 8:நடிகர் கமல்ஹாசனுக்கு திடீரென்று உடல்நிலை சரியில்லாமல் போனதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் கமல்ஹாசன் கடந்த சில நாட்களாக இருமல் மற்றும் தொண்டை வலியால் அவதிப்பட்டு வந்தார். தொடர் இருமல் இப்போது மிகவும் அதிகமாகிவிட்டதால் அவரது உடல்நிலை மேலும் மோசடைந்துள்ளது. இதனால், அவருக்கு சிறிது காலம் ஓய்வுக்கு தேவைப்படுகிறது என்பதால் அவர் பங்கேற்க இருந்த நிகழ்ச்சி அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன என்று தகவல் வெளியாகியுள்ளது. நடிகர்...
மேலும்