w
Home » Category >சினிமா (Page 5)

காதலர் தினத்தில் ‘தேவ்’

கடைக்குட்டி சிங்கம் படத்தை தொடர்ந்து கார்த்தி நடிப்பில் அடுத்ததாக ரிலீசாகவிருக்கும் படம் ‘தேவ்’. படப்பிடிப்பு முடிந்து புரமோஷன் பணிகள் நடந்து வரும் நிலையில், படத்திற்கு தணிக்கைக் குழுவில் யு சான்றிதழ் கிடைத்துள்ளது. படம் காதலர் தினமான பிப்ரவரி 14-ம் தேதி ரிலீசாகும் என்றும் படக்குழு அறிவித்துள்ளது. அறிமுக இயக்குனர் ரஜத் இயக்கியிருக்கும் இந்த படத்தில் கார்த்தி ஜோடியாக ரகுல் ப்ரீத்தி சிங் நடித்துள்ளார். கிரைம் த்ரில்லர் கலந்த...
மேலும்

கெத்துதான் என் சொத்து: சிம்பு

சிம்பு நடிப்பில் சுந்தர்.சி இயக்கி உள்ள வந்தா ராஜாவாத்தான் வருவேன் படம் வரும் 1-ம் தேதி வெளியாகிறது. இந்த படத்தில் சிம்பு உடன் கேத்ரினா தெரேசா கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் மகத், குஷ்பு ஆகியோரும் நடித்துள்ளனர். ஹிப் ஆப் ஆதி இசையமைக்க, கே. செல்வபாரதி ஒளிப்பதிவு செய்துள்ளார். கோபி அமர்நாத் எடிட்டிங் செய்ய ஸ்ரீகாந்த் கலை அமைத்துள்ளார். லைக்கா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு யு சான்று கிடைத்துள்ளது....
மேலும்

பேரன்பு படத்தில் சம்பளம் வாங்காமல் நடித்த மம்மூட்டி: நிவின் பாலி நெகிழ்ச்சி

ராம் இயக்கத்தில் மம்மூட்டி, அஞ்சலி, சாதானா ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் ‘பேரன்பு’. இந்தப் படம் வருகிற பிப்ரவரி 1-ம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில் படத்தின் முன்னோட்ட காட்சியை பார்த்த நடிகர் நிவின் பாலி தனது டுவிட்டர் பக்கத்தில் பேரன்பு திரைப்படம் உறைய வைக்கும் பேரழகு என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் கூறுகையில், நீங்கள் காண விரும்பிய அத்தனையும் இந்த படத்தில் உள்ளது. மனித உணர்வுகளை...
மேலும்

பிப்ரவரி 8-ல் ‘ஹலோ’ படம் ரிலீஸ்

தெலுங்கு சூப்பர் ஸ்டார் நாகர்ஜுனா, அமலா தம்மபதியரின் மகன் அகில் நடித்து தெலுங்கில் மாபெரும் வெற்றி பெற்று 50 கோடிக்கு மேல் வசூல்சாதனை செய்த ‘ஹலோ’ படம் அதே பெயரில் தமிழிலும் வெளியாகிறது. தமிழிலும் நாகர்ஜூனாவே தயாரிக்கிறார். கதாநாயகியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கிறார். இவர் பிரபல இயக்குனர் பிரியதர்ஷனின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது. மாதவன் நடித்த யாவரும் நலம், சூர்யா நடித்த 24 ஆகிய படங்களை இயக்கிய...
மேலும்

‘நடிகரை திருமணம் செய்ய மாட்டேன்’: காஜல் அகர்வால்

சென்னை, ஜன.29:  தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நாயகியான காஜல் அகர்வால் தான் ஒரு நடிகரை திருமணம் செய்ய மாட்டேன் என்று கூறியுள்ளார். கமல்ஹாசன், விஜய், அஜித், சூர்யா என தமிழின் முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்துவிட்டார் காஜல் அகர்வால். ரஜினிகாந்துடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பை மட்டும் எதிர்பார்த்துள்ள அவர் கிசுகிசுக்களில் அதிகம் சிக்காதவர். இந்நிலையில் தனது திருமணம் குறித்து அளித்த பேட்டியில், திரைத்துறையில் இருக்கும் ஒருவரை...
மேலும்

அஜித்துடன் இணையும் ஷ்ரத்தா ஸ்ரீநாத்

விஸ்வாசம் படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து அஜித் குமார் நடிக்கும் அடுத்த படத்தை பே வியூ ப்ரொஜெக்ட்ஸ் எல் எல் பி என்ற நிறுவனத்தின் சார்பில் போனி கபூர் தயாரிக்க, வினோத்குமார் இயக்க உள்ளார். வரும் மே மாதம் கோடை விடுமுறையில் படத்தை வெளியிட வேண்டும் என்கிற உத்வேகத்துடன் படக்குழுவினர் உள்ளனர். இது குறித்து தயாரிப்பாளர் போனி கபூர் கூறியதாவது:- அஜித்குமாருடனான தொழில் முறையான எங்கள் உறவு...
மேலும்

பாண்டியராஜன் மகன் ப்ரித்வி நடிக்கும் ‘காதல் முன்னேற்ற கழகம்’

ப்ளு ஹில்ஸ் புரொடக்ஷன் சார்பில் மலர்க்கொடி முருகன் தயாரித்துள்ள படம் ‘காதல் முன்னேற்ற கழகம்’. இதில் ப்ரித்விராஜன் கதாநாயகனாக நடிக்கிறார். நாயகியாக சாந்தினி நடிக்கிறார். இவர்களுடன் சிங்கம் புலி, கஞ்சா கருப்பு, கிஷோர்குமார், நாதஸ்வரம் முனிஸ்ராஜா, அமீர் ஹலோ கந்தசாமி ஆகியோரும் நடித்துள்ளனர். முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் சிவசேனாதிபதி நடித்துள்ளார். படத்திற்கு ஹாரிஸ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்ய, சுரேஷ் அர்ஸ் எடிட்டிங் செய்கிறார். பிரகதீஸ்வரன் கலை அமைக்க...
மேலும்

இந்தியன்-2 படக்குழு தைவான் பயணம்

சென்னை, ஜன.28:ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் – காஜல் அகர்வால் நடிக்கும் இந்தியன்-2 படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், முக்கிய காட்சிகளை படமாக்க படக்குழு தைவான் செல்லவிருக்கிறது. கமல்ஹாசன் நடிப்பில் பிரமாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன்-2 படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக சென்னையில் நடந்து வருகிறது. படத்தின் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் சித்தார்த் நடிக்க இருக்கிறார். கமல்ஹாசனின் மகனாக சித்தார்த் நடிக்க உள்ளார் என்று...
மேலும்

இளையராஜா விழா: ஐகோர்ட் கேள்வி

சென்னை, ஜன.28: இளையராஜா 75 நிகழ்ச்சிக்காக செலவிடப்பட்ட தொகை குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.. நடிகர் விஷால் தயாரிப்பாளர் சங்க தலைவராக பதவி ஏற்றபின் பல முறைகேடுகள் நடைபெற்று வருவதாகவும், சங்க நிதி கையாடல் செய்யப்பட்டுள்ளதால் ஓய்வு பெற்ற நீதிபதியை கொண்டு தயாரிப்பாளர் சங்க தேர்தல் மற்றும் பொது குழு நடத்த கோரியும், தயாரிப்பாளர் சங்கம் சார்பில் நடத்தப்பட இருக்கும் இளையராஜா...
மேலும்

இளையராஜாவுக்கு கௌரவ டாக்டர் பட்டம்

சிதம்பரம்,ஜன.25:சிதம்பரம் அண்ணாமலை பல்கலைகழகத்தில் பிரபல இசையமைப்பாளர் இளையராஜாவின் 75ஆவது பிறந்தநாள் விழா பல்கலைக்கழக சாஸ்திரி ஹாலில் துணைவேந்தர் முருகேசன் தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவில் துணைவேந்தர் முருகேசன் பேசுகையில் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் 90 வது ஆண்டு துவக்க விழாவில் இளையராஜாவின் எழுபத்தைந்தாவது பிறந்தநாள் விழா கொண்டாடப் படுகிறது இளையராஜாவின் முதல் படமான அன்னக்கிளி படத்தில் வரும் அன்னக்கிளி உன்னைத் தேடுதே பாடலுக்காக பலமுறை அந்த படத்தை நான் பார்த்தவன்...
மேலும்

நயன்தாரா டயலாக் டைட்டிலானது

ஸிக்மா ஃபிலிம்ஸ் பட நிறுவனத்தின் சார்பில் மனோஜ் தயாரித்துள்ள படம் ஒங்கள போடணும் சார். இந்த படத்தில் ஜித்தன் ரமேஷ் கதாநாயகனாக நடிக்க அவருடன் சனுஜா சோமநாத், ஜோனிட்டா, அனு நாயர், பரிட்சித்தா, வைஷாலி என 5 அறிமுக கதாநாயகிகள் நடிக்கிறார்கள். இப்படம் பற்றி இரட்டை இயக்குநர்கள் ஆர்.எல்.ரவி மற்றும் ஸ்ரீஜித் கூறுகையில், நான்கு வாலிபர்கள் மற்றும் நான்கு இளம்பெண்கள் ஒரு வேலைக்காக ஒரு இடத்தில் ஒன்றாக...
மேலும்