w
Home » Category >சினிமா (Page 3)

இளையராஜா விழாவில் ரஜினி ருசிகர பேச்சு

சென்னை,பிப்.4: தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில், ஆயிரம் படங்களுக்கு மேல் இசையமைத்த இளையராஜாவுக்கு, சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் 2 நாள் பாராட்டு விழா நடந்தது. இளையராஜா-75 என்ற பெயரில் நடந்த இந்த விழாவை நேற்று முன்தினம் கவர்னர் பன்வாரிலால் புரோஹித் தொடங்கி வைத்தார். அன்றைய தினம் நடிகர், நடிகைகள் இளையராஜா பாடல்களுக்கு மேடையில் நடனமாடினர். நேற்று 2-வது நாள் நிகழ்ச்சியாக இளையராஜாவின் இசை...
மேலும்

பேட்ட படம் 25-வது நாள் கொண்டாட்டம்

சென்னை, பிப்.4: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பேட்ட படத்தின் 25-வது நாளை ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடினர். இளம் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பேட்ட திரைப்படம் பொங்கலையொட்டி கடந்த ஜனவரி மாதம் 10-ம் தேதி வெளியானது. தமிழகம் மட்டுமின்றி உலகம் முழுவதும் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டு இருக்கிறது. இந்நிலையில், இந்த படத்தின் 25-வது நாள் கொண்டாட்டம் சென்னை பெரம்பூரில்...
மேலும்

இசை ஆட்சி புரிந்தவர் இளையராஜா:கவர்னர்

சென்னை, பிப்.3:இசையால் தமிழர்களின் மனதில் ஆட்சிப் புரிந்தவர் இளையராஜா என்று கவர்னர் பன்வாரிலால் புரோகித் பாராட்டு தெரிவித்துள்ளார். 75-வது வயதில் அடியெடுத்து வைத்துள்ள இளையராஜாவுக்கு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில், சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நேற்று பாராட்டு விழா நடைபெற்றது. தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு குத்துவிளக்கு ஏற்றி விழாவினை தொடங்கிவைத்தார். இளையராஜாவுக்கு பொன்னாடை போர்த்தி பூங்கொத்தும் அவர் வழங்கினார்....
மேலும்

தெறி தெலுங்கு ரீமேக்கில் கேத்ரினா

மெட்ராஸ் படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் கேத்ரினா தெரெசா. தொடர்ந்து கதகளி, வேலைன்னுவந்தா வெள்ளக்காரன், கடம்பன், கலகலப்பு-2, கணிதன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். சிம்பு நடிப்பில் நேற்று வெளியான வந்தா ராஜாவாத்தான் வருவேன் படத்திலும் நடித்துள்ளார். இது தவிர ஜெய் நடிப்பில் நீயா-2 மற்றும் சித்தார்த் நடிப்பில் அருவம் படத்திலும் நாயகியாக நடித்து வருகிறார். மேலும் கேத்ரினா தெலுங்கு மற்றும் மலையாளத்திலும் நடித்து வருகிறார். விஜய், சமந்தா,...
மேலும்

நீயா 2 படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ்

கமல்ஹாசன், ஸ்ரீப்ரியா, லதா ஆகியோர் நடித்து 1979-ல் வெளியாகி வெற்றிகரமாக ஓடிய படம் நீயா. தனது இணையை கொன்றவர்களை இச்சாதாரி என்ற பெண் பாம்பு எப்படி பழிவாங்குகிறது என்பது கதை. இதில் ஸ்ரீப்ரியா இச்சாதாரி பாம்பாக நடித்து அவரே படத்தை தயாரித்திருந்தார். இந்தப் படத்துக்கு சங்கர் கணேஷ் இசையமைத்திருந்தார். படத்தில் இடம்பெற்ற நான் கட்டில் மேலே கண்டேன் வெண்ணிலா, ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம் வாராய் கண்ணா...
மேலும்

கண்ணே கலைமானே 22-ல் வெளியாகிறது

சீனு ராமசாமி இயக்கத்தில் உதயநிதி, தமன்னா நடிப்பில் உருவாகி உள்ள ‘கண்ணே கலைமானே’ வரும் 22-ம் தேதி வெளியாவதையொட்டி, ஒரு தயாரிப்பாளராக, நடிகராக உதயநிதி ஸ்டாலின் மகிழ்ச்சியின் உச்சத்தில் இருக்கிறார். ஏற்கனவே படத்தின் டிரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்ததில் கூடுதல் மகிழ்ச்சியில் உள்ளார். இது பற்றி அவர் கூறும்போது, இந்த படத்தின் எல்லா கிரெடிட்டும் இயக்குனர் சீனு ராமசாமியை தான் சேரும். இதில் நான்...
மேலும்

இளையராஜா விழாவுக்கு தடை வருமா?

சென்னை, பிப்.1:இளையராஜா 75 நிகழ்ச்சிக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் அப்பீல் செய்யப்பட்டது. இந்த வழக்கை அவசர வழக்காக எடுத்து விசாரிக்க நீதிபதிகள் கிருபாகரன், அப்துல் குத்தூஷ் ஆகியோர் கொண்ட பெஞ்ச் அனுமதித்துள்ளது. சென்னை, நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் சினிமா தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில், நாளை மற்றும் நாளை மறுநாள் தேதிகளில், இளையராஜா 75 இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதற்கு தடை விதிக்கக் கோரி...
மேலும்

அஜித்துக்கு அண்ணா பல்கலை. அழைப்பு

சென்னை, பிப்.1:ஆளில்லா விமானத்தை வெற்றிகரமாக தயாரிக்க ஆலோசனை கூறி உதவிய நடிகர் அஜித்துக்கு அண்ணா பல்கலைக்கழகம் நன்றி தெரிவித்துள்ளதுடன் கவுரவ ஆலோசகராக பணியாற்ற வேண்டுமென அழைப்பும் விடுத்துள்ளது. அவசரம் மற்றும் பேரிடர் காலத்தின்போது, மக்களுக்கு உதவும் வகையில், ஒருவர் பயணம் செய்யும் படியான, நவீன விமானத்தை அண்ணா பல்கலைக்கழக குழு தயாரித்தது. இந்த விமானத்தின் வடிவமைப்பு மற்றும் தயாரிப்பில் நடிகர் அஜித் ஆலோசனைகளை வழங்கி ஆலோசகராக 10...
மேலும்

அகோரி அனுபவம் குறித்து ஜாக்கி ஷெராப் பேட்டி

கஸ்தூரி ராஜா இயக்கத்தில் ஜாக்கி ஷெராப் அகோரி வேடத்தில் நடித்து வரும் படம் பாண்டி முனி. இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. படப்பிடிப்பில் அகோரி வேடத்தில் நடித்துக் கொண்டிருந்தார் ஜாக்கி ஷெராப். படத்தில் அகோரியாக நடித்த அனுபவம் பற்றி அவர் கூறியதாவது:- டைரக்டர் கஸ்தூரிராஜா கதையை சொன்னவுடன் எனக்கு புது மாதிரியான கேரக்டராக இருக்கும் என்று நினைத்து ஓ.கே.சொன்னேன். ஆரண்ய காண்டம் மாயவன் மாதிரி...
மேலும்

கமலுடன் நடிக்க ஆவலாக உள்ளேன்: நவாசுதீன்

நவாசுதீன் சித்திக் நடிப்பில் தாக்கரே படம் ரிலீசாகியிருக்கும் நிலையில், அவர் அளித்த பேட்டியில் கூறி இருப்பதாவது:- நேர்மையாக நடிக்கவேண்டும். உண்மையாக நடிக்கவேண்டும். யாரையும் காப்பி அடித்து நடிக்கக் கூடாது. அதில் எனக்கு உடன்பாடு இல்லை. இப்போது தாக்கரே படத்தில் நடித்தேன். இதற்காக நிறையவே ஹோம் ஒர்க் செய்தேன். பால்தாக்கரே எப்படி நடப்பார், பார்ப்பார், எப்படிப் பேசுவார் என்பதை எல்லாம் உள்வாங்கி கொண்டு நடித்தேன். தமிழில் என்னுடன் நடித்த...
மேலும்

2 விஜய்களுடன் நடிக்கும் ராஷி கன்னா

விஜய் சேதுபதி நடிக்கும் புதிய படத்தில் நடிக்க ராஷி கன்னா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இமைக்கா நொடிகள் படம் மூலம் கோலிவுட்டில் கால் பதித்தவர் ராஷி கன்னா. அந்த படம் ஹிட்டானது. அதன் பிறகு அவர் ஜெயம் ரவியுடன் சேர்ந்து நடித்த அடங்கமறு படமும் சூப்பர் ஹிட்டானது. தொடர்ந்து வெற்றிப் படங்களில் நடித்து வரும் ராஷி கன்னா தற்போது விஷாலின் அயோக்யா படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் விஜய்...
மேலும்