Home » Category >சினிமா (Page 2)

வெற்றிமாறன் மீது கமிஷனரிடம் புகார்

சென்னை, அக்.22:தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் கடந்த 18-ந் தேதி வெளியான படம் வடசென்னை.இந்த படத்தில் இடம் பெற்றுள்ள வசனங்கள் மற்றும் வடசென்னை மக்களை காட்டியுள்ள விதம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. பலதரப்பினர் படத்தை தடை செய்ய வேண்டும் எனவும் இயக்குனர் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் கூறி வருகின்றனர். இந்நிலையில் சமூக நீதிக்கான வழக்கறிஞர்கள் சங்க தலைவர் எல்.கே.சார்லஜ் அலெக்சாண்டர் இன்று காலை கமிஷனர் அலுவலகத்தில்...
மேலும்

சிம்புவும் சிக்குகிறார்?

சென்னை, அக்.22:மீ டூ ஹாஷ்டாக்கில் நாள்தோறும் பிரபலமானவர்கள் மீது பெண்கள் கூறும் பாலியல் புகார்கள் குவிந்த வண்ணம் உள்ளன. இதில் லேட்டஸ்டாக லேகா வாஷிங்டன் என்பவர் ஒரு நடிகர் மீது புகார் தெரிவித்துள்ளார். அவரது டுவிட்டர் பதிவில், ‘ஒரே வார்த்தை: கெட்டவன். #Mஞுகூணிணி’ என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.ஜெயங்கொண்டான், கல்யாண சமையல் சாதம் போன்ற படங்களில் நடித்துள்ள லேகா வாஷிங்டன், நடிகர் சிம்புவுடன் ‘கெட்டவன்’ என்ற படத்தில் சில...
மேலும்

வைரமுத்து அப்படித்தான்!:ஏ.ஆர்.ரஹ்மான் சகோதரி

சென்னை,அக்.22:வைரமுத்து மீது பாடகி சின்மயி தொடங்கி பல பெண்கள் தெரிவித்துள்ள பாலியல் புகார்கள் குறித்து தனக்கு ஏற்கனவே தெரியும் என்றும், இது பலருக்கும் தெரிந்த ரகசியமே என்றும் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் சகோதரி ரெய்ஹானா கூறியுள்ளார். வைரமுத்து மீது பாலியல் புகாரை மீ டூ ஹாஷ்டாக்கில் முதன் முதலாக பின்னணி பாடகி சின்மயி கூறியிருந்தார். ஒரு நிகழ்ச்சிக்காக சுவிட்சர்லாந்து சென்ற போது, வைரமுத்து அத்துமீறி நடந்து கொண்டது பற்றியும்,...
மேலும்

மீடூ விவகாரத்தில் சிக்கிய அர்ஜுன்

பெங்களூரு, அக்.20: மீடூ விவகாரத்தில் கவிஞர் வைரமுத்து, நடிகர் ராதாரவி ஆகியோரை தொடர்ந்து தற்போது ஆக்ஷன் கிங் அர்ஜுன்  சிக்கியிருக்கிறார்.நடன இயக்குநர் கல்யாண், பிரபல பாடகர் கார்த்திக், இயக்குநர் சுசி கனேசன் என இந்த பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. இந்நிலையில் தற்போது நடிகர் அர்ஜூன் மீது மீடூ பாய்ந்துள்ளது. கன்னட உலகின் பிரபல நடிகை ஸ்ருதி ஹரிஹரன் இவர் மீது குற்றச் சாட்டினை முன்வைத்துள்ளார். நடிகர்...
மேலும்

வைரமுத்து மீது மற்றொரு பாடகி புகார்

சென்னை, அக்.19:மிடூ விவகாரம் உச்சத்தை தொட்டுள்ள நிலையில், அதில் சிக்கியுள்ள வைரமுத்து மீது பாடகி சின்மயி மட்டுமின்றி மலேசியா வாசுதேவன் மருமகள் ஹேமமாலினியும் புகார் கூறியிருக்கிறார். பிரபல கவிஞர் வைரமுத்து மீது பிரபல பாடகி சின்மயி பாலியல் குற்றச்சாட்டை வைத்ததையடுத்து தமிழகம் முழுவதும் மீ டூ பிரச்சனை மிக பரபரப்பாக பேசப்பட்டது. இதனையடுத்து வைரமுத்து மீது அடுக்கடுக்காக பல பாலியல் குற்றச்சாட்டுகள் வந்தன. சின்மயியை தொடர்ந்து சிந்துஜா...
மேலும்

வட சென்னை படத்திற்கு எதிர்ப்பு வலுக்கிறது

சென்னை, அக்.19:வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள ‘வட சென்னை’ படத்திற்கு அப்பகுதி இளைஞர்களிடையே எதிர்ப்பு வலுத்து வருகிறது. எங்கள் பகுதி மக்களை ரவுடியாக சித்தரித்துள்ளதற்கு அவர்கள் கண்டனம் தெரிவித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு உள்ளனர். பிரபல இயக்குனர் வெற்றிமாறன், தனுஷ் கூட்டணியில் கடந்த 17-ந் தேதி வெளியான படம் ‘வடசென்னை’ இந்த படத்தில் 80-களில் வட சென்னை எப்படி இருந்தது என்பதை இயக்குனர் சொல்லியிருக்கிறார். படம் துவக்கம்...
மேலும்

நீதிமன்றத்தில் நடிகர் விஷால் ஆஜர்

சென்னை, அக்.17:ரூ.1 கோடி வரை சேவை வரி செலுத்தாது தொடர்பாக நடிகர் விஷால் மீது தொடரப்பட்ட வழக்கில் சென்னை எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் அவர் ஆஜரானார். சேவை வரித்துறை தொடர்ந்து இந்த வழக்கு விசாரணை இன்று நீதிபதி மலர்மதி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. நடிகர் விஷால் நீதிமன்றத்தில் ஆஜரானார். அவர் மீதான புகார் நகல் அவரிடம் வழங்கப்பட்டது. புகார் மனுவில் கையெழுத்திட்டு அந்த நகலை விஷால்...
மேலும்

ஆட்டோகிராப் கேட்ட பெண் பற்றி ஆபாச கவிதை

சென்னை, அக்.16: கவிஞர் வைரமுத்து மீது மற்றொரு பெண் அதிரடி புகாரை தெரிவித்துள்ளார். ஆட்டோகிராப் வாங்க வந்த பெண் பற்றி ஆபாச வர்ணனை செய்து கவிதை வாசித்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி பாலியல் தொல்லை கொடுத்து குறித்து ‘மீ டூ’வில் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். அதனைத் தொடர்ந்து நாள்தோறும் ஒவ்வொரு புகாராக வந்த வண்ணம் உள்ளன. தற்போது டுவிட்டரில் ஐஸ்வர்யா என்ற பெண்...
மேலும்

ரஜினி, விஜய், அஜித் படங்கள் பாதிக்கும்

சென்னை, அக்.16:  சன்பிக்சர்ஸ், லைகா இடையிலான பனிப்போரால் ரஜினி, விஜய், அஜித் படங்கள் பாதிக்கும் சூழ்நிலை உருவாகி உள்ளது. இதனால் 2.0, பேட்ட படங்களின் ரிலீஸ் தேதியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் சர்கார் படத்தை தயாரித்து வரும் சன்பிக்சர்ஸ் நிறுவனம், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் பேட்ட படத்தையும் தயாரித்து வருகிறது. இதில் சர்கார் படம் தீபாவளி தினமான நவம்பர்...
மேலும்

மோகன்லால் படத்தை இயக்கும் சித்திக்

தமிழ் மற்றும் மலையாள படங்களை இயக்கி பிரபலமானவர் சித்திக். இவர் இயக்கத்தில் தமிழில் வெளிவந்த ப்ரண்ட்ஸ், காவலன் ஆகிய படங்கள் மிகப்பெரிய வெற்றி பெற்றன. இந்நிலையில், மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் நடிக்கும் புதிய படத்தை சித்திக் இயக்க உள்ளார். மற்ற நடிகர் நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்களின் விவரம் விரைவில் அறிவிக் கப்படும்.
மேலும்

பாலியல் குற்றங்களை சொல்லும் ‘சித்திரமே சொல்லடி’

சித்திரமே சொல்லடி திரைப்படத்தின் இசைவெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இப்படத்தை, எம்,ஜி,எம் ப்ரொடஷன் பட நிறுவனம் சார்பில் கௌரி சங்கர் தயாரித்து இயக்குகிறார். இப்படத்தில் கூல் சுரேஷ் கதாநாயகனாகவும், கோபிகா நாயர் கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். மேலும் இவர்களுடன் தெனாலி, மகாநதி சங்கர், தேனி முருகன், விஜய் கணேசன், சுமதி, அஞ்சலி டேவி, அப்சர் மற்றும் பெரெரொ உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்துக்கு மகி பாலன் ஒளிப்பதிவு செய்ய,...
மேலும்