w
Home » Category >சினிமா (Page 1)

இந்தியன்-2 படப்பிடிப்பு துவங்கியது

தென்னிந்தியாவின் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் இரண்டு வேடங்களில் நடித்து மிகப்பெரிய வெற்றி பெற்ற படம் இந்தியன். இந்த படம் சுமார் 15 ஆண்டுகளுக்குப்பிறகு 2-ம் பாகமாக உருவாக உள்ளது. இதில் கமல்ஹாசனுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். முதல் பாகத்தில் நடித்த நெடுமுடிவேணு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். நடிகர் சித்தார்த் நடிக்க உள்ளது உறுதியாகி உள்ளது. வெளிநாட்டு நடிகை ஒருவரும் நடிக்க உள்ளார்....
மேலும்

‘விஸ்வாசம்’ ரூ.125 கோடி: ‘பேட்ட’ ரூ.100 கோடி வசூல்

சென்னை, ஜன.18:அஜித் நடிப்பில் வெளியான விஸ்வாசம் படம் 8 நாளில் ரூ.125 கோடி வசூல் செய்துள்ளது. அதேநேரத்தில் ரஜினிகாந்த் நடித்த பேட்ட படம் ரூ.100 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. இந்த வசூல் நிலவரம் இருதரப்பு ரசிகர்களிடையே கருத்து மோதலை ஏற்படுத்தி உள்ளது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் பேட்ட படமும், சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான விஸ்வாசம் படமும் கடந்த 10-ம் தேதி உலகம்...
மேலும்

வைரமுத்து மீது புது கவிஞர் ‘திடுக்’ புகார்

சென்னை, ஜன.17: பல விருதுகளைப் பெற்ற வாகைசூடவா படத்தில் வரும் ‘சரசர’ என்ற பாடலை எழுதியது நான் என்று இளம் கவிஞர் கார்த்திக் நேத்தா கவிஞர் வைரமுத்து மீது பரபரப்பான குற்றச்சாட்டை கூறியிருக்கிறார். இந்த கவிதை திருட்டு தொடர்பாக முகநூலில் வெளியான குற்றச்சாட்டு விவரம் வருமாறு:- 2011-ம் ஆண்டில் வெளியான ‘வாகை சூட வா’ படத்தின் வெற்றிக்கு அதன் பாடல்களும் இசையும் ஒரு முக்கிய காரணம், இசையமைப்பாளர் ஜிப்ரானுக்கு...
மேலும்

அலேகா படத்தில் ஆரியுடன் இணையும் ஐஸ்வர்யா

பிக்பாஸ் சீசன்-2 நிகழ்ச்சி மூலம் தமிழ் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த நடிகை ஐஸ்வர்யா தத்தாவிற்கு பட வாய்ப்புகள் குவியத் தொடங்கி உள்ளது. மகத்துடன் இணைந்து ஒரு படத்தில் நடித்து வரும் ஐஸ்வர்யா, அதனைத் தொடர்ந்து நடிகர் ஆரியுடன் சேர்ந்து நடிக்க உள்ளார். அந்த படத்திற்கு அலேகா என பெயர் சூட்டி உள்ளனர். இந்த படத்தை எஸ்.எஸ்.ராஜமித்ரா இயக்குகிறார். இவர் ஐயனார் என்ற படத்தை இயக்கியவர். இந்த...
மேலும்

மாதவன், அனுஷ்கா நடிக்கும் திகில் படம்

பீப்பள் மீடியா பேக்ட்ரி மற்றும் கோனா ஃபிலிம் கார்ப்பரேஷன் ஆகியவை இணைந்து தமிழ், தெலுங்கு, ஹாலிவுட் நடிகர்கள் நடிக்கும் புதிய படமொன்றை பிரம்மாண்டமாக தயாரிக்கவுள்ளனர். இதில் மாதவன், அனுஷ்கா ஷெட்டி, அஞ்சலி, ஷாலிணி பாண்டே, சுபா ராஜு, அவசராலா ஸ்ரீனிவாஸ் உள்ளிட்ட பலர் நடிக்கவுள்ள இப்படத்தில் ஹாலிவுட் நடிகர்களும் தொழில்நுட்ப வல்லுனர்களும் பணியாற்ற உள்ளனர். இப்படத்தை ஹேமந்த் மதுக்கர் தமிழ், தெலுங்கு மொழிகளில் இயக்குகிறார். திகில் படமாக...
மேலும்

கோடை விடுமுறையை குறிவைக்கும் சூர்யாவின் என்ஜிகே

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் என்ஜிகே. அரசியல் கலந்த திரில்லர் படமாக உருவாகும் இதில் சூர்யா ஜோடியாக சாய் பல்லவி, ரகுல் ப்ரீத்தி சிங் நடிக்கின்றனர். ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரபு தயாரிக்கும் இந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு முடியும் தருவாயில் உள்ளது. வெகு விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரத்தில் போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகளும் துவங்கவிருப்பதாக தகவல்...
மேலும்

மாணவிகளுக்கு பாட வாய்ப்பு கொடுத்த இளையராஜா

இசைஞானி இளையராஜா சமீபத்தில் மகளிர் கல்லூரி விழாக்களில் கலந்து கொண்டார். அங்கே அவரது பிறந்த நாள் விழாவையும் மாணவிகள் முன்னிலையில் கேக் வெட்டிக் கொண்டாடினார். இந்த நிகழ்ச்சியில் பேசியும், பாடியும் அவர் கல கலப்பூட்டினார். கல்லூரி மாணவிகளுடன் கலந்துரையாடியதுடன் அவர்களின்கேள்விகளுக்கும் பதிலளித்தார். அப்போது அவரது இசையைப் பற்றி மாணவிகள் சந்தேகங்கள், கேள்விகள் கேட்டுத் தெரிந்து கொண்டனர். அப்போது அந்த இரண்டு கல்லூரிகளிலும் மாணவிகள் சிலர் பாடல்கள் பாடியதுடன்,...
மேலும்

ரஜினி, அஜித் இடையே கடும் வசூல் போட்டி

சென்னை, ஜன.11: பொங்கலையொட்டி நேற்று வெளியான ரஜினி, அஜித் படங்களுக்கு இடையே கடும் வசூல் போட்டி நிலவுகிறது. நேற்று ஒரே நாளில் பேட்ட படம் ரூ 1.10 கோடியும், விஸ்வாசம் படம் ரூ.96 லட்சமும் கலெக்ஷன் செய்துள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் பேட்ட படம் நேற்று வெளியானது. அதே போல் அல்டிமேட் ஸ்டார் அஜித் குமார் நடிப்பில் சிவா...
மேலும்

விஸ்வாசம்-விமர்சனம்

தேனி மாவட்டம், கொடுவார்பட்டி கிராமத்தில் அரிசி ஆலை நடத்தி வருகிறார் அஜித் (தூக்குத்துரை). பெரிய குடும்பத்துடன் ஊர் முழுக்க சொந்த பந்தங்களுடன் சொகுசாக அடாவடித்தனம் செய்தபடி வாழ்ந்து வருகிறார். மும்பையில் டாக்டர் படிப்பை முடித்து விட்டு அந்த கிராமத்தில் மருத்துவ முகாம் நடத்துவதற்காக நயன்தாரா (நிரஞ்சனா) வருகிறார். அப்போது ரோட்டில் சண்டை போட்டுக்கொண்டு இருக்கும் அஜித் அவர்கள் வந்த வாகனத்தை உடைத்து விடுகிறார். இதனால் ஆத்திரமடையும் நயன்தாரா...
மேலும்

இணையதளத்தில் வெளியான பேட்ட, விஸ்வாசம்

சென்னை, ஜன.11: நீதிமன்றத்தின் தடையை மீறி, ரஜினிகாந்தின் பேட்ட, அஜீத்குமாரின் விஸ்வாசம் ஆகிய இரு படங்களும் திரையரங்கில் வெளியான சிலமணி நேரத்திலேயே தமிழ்ராக்கர்ஸ் இணையதளத்தில் வெளியிடப்பட்டதால் படக்குழுவினரும், ரசிகர்களும் அதிர்ச்சி அடைந்தனர். 10 ந்தேதி அதிகாலை ரசிகர்களின் பேராதரவோடு வெளியான நடிகர் ரஜினிகாந்தின் பேட்ட மற்றும் நடிகர் அஜீத்குமாரின் விஸ்வாசம் ஆகிய இரு படங்களையும் அடுத்த சில மணி நேரத்தில் தமிழ்ராக்கர்ஸ் இணையதளம் ஆன்லைனில் வெளியிட்டு விட்டது....
மேலும்

திரையரங்குகளில் திருவிழாக்கோலம்

சென்னை, ஜன.10:ரஜினியின் ‘பேட்ட’, அஜித்தின் ‘விஸ்வாசம்’ ஆகிய படங்கள் இன்று ஒரே நாளில் வெளியானதால் தியேட்டர்கள் திருவிழா போல் காட்சியளித்தன. தங்கள் அபிமான நட்சத்திரங்களின் கட்அவுட்டிற்கு ரசிகர்கள் பாலபிஷேகம் செய்தனர். மேலும் கரகாட்டம், பேண்டு வாத்தியம் முழங்க பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ‘பேட்ட’ படம் இன்று வெளியானது. அதே...
மேலும்