Home » Category >சினிமா

எச்.ராஜா மன்னிப்பு கேட்க வேண்டும்:விஷால்

சென்னை,அக்.22:மெர்சல் படத்தை இணையதளத்தில் சட்டவிரோதமாக பார்த்ததை ஒப்புக் கொண்டுள்ள பிஜேபி தேசிய செயலாளர் எச்.ராஜா மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தயாரிப்பாளர் சங்க தலைவர் நடிகர் விஷால் வலியுறுத்தி இருக்கிறார்.தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஒரு தேசியக் கட்சியின் தேசிய செயலாளர் பொறுப்பில் இருப்பவர் பொதுவெளியில் ‘நான் திருட்டுத்தனமாக இணையத்தில் புதிய படத்தை சட்டவிரோதமாக பார்த்தேன்’ என்று ஒப்புக்கொண்டிருப்பது மிகவும் வேதனையளிக்கிறது. ஒருவேளை...
மேலும்

மெர்சல் படத்தில் 4 காட்சிகள் நீக்கம்

சென்னை,அக்.21:நடிகர் விஜய் நடித்துள்ள மெர்சல் படத்தில் வரும் ஜிஎஸ்டிக்கு எதிரான வசனங்களுக்கு பிஜேபி தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து 4 காட்சிகளை நீக்க படத்தின் தயாரிப்பாளர் முடிவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது. விஜய் நடித்த ‘மெர்சல்’ படம் தீபாவளிக்கு வெளியாகி ஓடிக்கொண்டு இருக்கிறது. மருத்துவ துறையில் நடக்கும் தவறுகளை மையமாக வைத்து இந்த படம் வந்துள்ளது. விஜய் ஐந்து ரூபாய்க்கு வைத்தியம் பார்க்கும் டாக்டர் கதாபாத்திரத்தில்...
மேலும்

ரஜினி பட உதவி இயக்குனர் புகார்

சென்னை, அக்.21:சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 2.0 படத்தில் பணியாற்றியதற்கான சம்பளத்தை தனக்கு தரவில்லை என்று துணை இயக்குனர் முரளி மனோகர் புகார் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் சென்னையில் அளித்த பேட்டியில், பிரம்மாண்டமான முறையில் தயாரிக்கப்பட்ட இந்த படத்தில் நான் பல மாதங்களாக பணியாற்றி இருக்கிறேன்.கர்ப்பமுற்ற எனது மனைவி மற்றும் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட எனது மகனின் மருத்துவ செலவுக்காகவாவது என் சம்பளத்தை தாருங்கள் என்று பட...
மேலும்

ரசிகர்களுக்கு விஜய் நன்றி

சென்னை, அக்.20:மெர்சல் படத்தை வெற்றிப்படமாக்கிய அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார் நடிகர் விஜய். மெர்சல் திரைப்படம் தீபாவளி வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது.இந்த நிலையில், மெர்சல் படத்தை மிகப்பெரும் வெற்றிப்படமாக்கிய அனைவருக்கும் நன்றி என்று என்று நடிகர் விஜய் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
மேலும்

‘இந்திரஜித்’ இசையமைப்பாளர் அறிமுகம்

தமிழ் சினிமாவில் கதாநாயகிகள் மற்றும் முக்கிய கதாபாத்திரங்களை ரகசியமாக வைத்திருப்பது வழக்கம். ஆனால் சமீப காலமாக இசையமைப்பாளர் யார் என்பதை ரகசியமாக வைத்து பாடல் வெளியீட்டு விழாவில் அறிமுகப்படுத்துகின்றார்கள். அதேபோல் கவுதம் கார்த்திக் நடித்துள்ள ‘இந்திரஜித்’ படத்தின் இசையமைப்பாளர் யார் என்பதை சமீபத்தில் நடந்த அதன் இசை வெளியீட்டு விழாவில் அறிமுகப்படுத்தியது படக்குழு. பிரபல இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்தின் மாணவரான கே.பி. என்கிற பிரபாகர் இந்த...
மேலும்

ரஜினியின் ‘ஜானி’ டைட்டிலில் பிரசாந்த்

சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்து மெகா ஹிட்டான ஜானி படத்தின் தலைப்பில் தற்போது பிரசாந்த் நடிக்க உள்ளார். இப்படத்தை ஸ்டார் மூவிஸ் சார்பில் நடிகர் தியாகராஜன் தயாரிக்கிறார். இதில் பிரசாந்த் ஜோடியாக சஞ்சிதா செட்டி நடிக்கிறார். இதில் பிரபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஆனந்த்ராஜ் காமெடி கலந்த கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். மேலும் அசுத்தோஸ் ராணா, சாயாஜி ஷிண்டே நடிக்கின்றனர். புதுமுக இயக்குனர் வெற்றிச்செல்வன் இயக்குகிறார். படம்...
மேலும்

3 மில்லியன் பேர் பார்த்த ஸ்கெட்ச் டீசர்

விக்ரம் நடிக்கும் 53-வது படம் ஸ்கெட்ச். இந்தப் படத்தை விஜய் சந்தர் இயக்குகிறார். எஸ்.எஸ்.தமன் படத்துக்கு இசையமைக்கிறார். கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கும் இந்தப் படத்துக்கு சுகுமார் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ஸ்கெட்ச் படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆகஸ்ட் மாதத்தில் நிறைவடைந்தது. சமீபத்தில் வெளியான ஸ்கெட்ச் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் மூலம் படத் துக்கான எதிர்பார்ப்பு ஏகத்துக்கும் எகிறிக்கிடக்கும் நிலையில், தீபாவளி அன்று படத்தின்...
மேலும்

டுவிட்டரில் தீபிகா சொன்ன கருத்து

பிரபல திரைப்பட இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலியின் பத்மாவதி படத்தில் நடிகை தீபிகா படுகோனே, ரன்வீர் சிங் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படத்தில் ராஜபுத்திரர்களை இழிவு படுத்தியதாக கூறி ராஜ்புத் கர்னி சேனா என்ற அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் குஜராத் மாநிலம் சூரத்தில் உள்ள ஒரு மாலில் தீபிகா படுகோனின் உருவத்தை கரன் என்ற ரங்கோலி கலைஞர் கோலமாக வரைந்திருந்தார். சுமார் 3 நாள்...
மேலும்

இரண்டே நாளில் ரூ.70 கோடி வசூலித்த ‘மெர்சல்’

சென்னை, அக்.20: விஜயின் மெர்சல் படம் வெளியான இரண்டு நாட்களில் ரூ.70 கோடி அளவிற்கு வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இதன் மூலம் ரஜினியின் கபாலி, அஜித்தின் விவேகம் ஆகிய படங்களின் முதல் இரண்டு நாள் வசூல் சாதனையை விஜயின் மெர்சல் முறியடித்துள்ளது. விஜய் நடித்த ‘மெர்சல்’ படம் பல்வேறு இடையூறுகளை கடந்து நேற்று முன்தினம் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகம், கேரளா உள்பட உலகம் முழுவதும் ரிலீஸ் ஆனது....
மேலும்

மேயாத மான் விமர்சனம்

3 வருடங்களாக ஒருதலையாக காதலிக்கும் பெண்ணுக்கு திருமண நிச்சயம் ஆவதால் தற்கொலை செய்து கொள்ள போகும் இதயம் முரளியின் வாழ்க்கையில் நடப்பதே மேயாதமான். சில வருடங்களுக்கு முன்பு மது என்ற பெயரில் வெளியான குறும்படத்தை தற்போது முழு நீல திரைப்படமாக எடுத்திருக்கிறார் புதுமுக இயக்குநர் ரத்ன குமார். இதயம் முரளி(வைபவ்) 3 வருடங்களாக மதுமிதாவை(பிரியா பவானி சங்கர்) ஒரு தலையாக காதலித்து வருகிறார். மதுமிதாவிற்கு திருமணம் நிச்சயமாக...
மேலும்

கின்னஸ் சாதனை நோக்கி தமிழர் குறும்படம்

சென்னை, அக். 19:உலகில் அதிகம் பார்க்கப்பட்ட மற்றும் லைக் செய்யப்பட்ட குறும்படம் என்ற புகழை மிஸ்டர் காப்லர் என்னும் தமிழ் குறும்படம் பெற்றுள்ளது. மனித நேயத்தையும் எந்தத் தொழிலுக்கும் மரியாதை தரவேண்டும் என்கிற கருத்தையும் வெளிப்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டது மிஸ்டர் காப்லர் குறும்படம். இதனை சதீஷ் குருவப்பன் இயக்கி உள்ளார். இவர் முன்னரே 13 குறும்படங்களை இயக்கி உள்ளார். சென்னையில் உள்ள ஐ.டி.நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வரும்...
மேலும்