Home » Category >இந்தியா (Page 91)

சபரிமலை தங்க கொடி மரம் சேதம்

பம்பை, ஜூன் 26 : சபரிமலை அய்யப்பன் கோவிலில் புதியதாக நிறுவப்பட்ட தங்க கொடிமரத்தை ரசாயனம் வீசி சேதப்படுத்தியதாக ஆந்திராவைச்  சேர்ந்த 5 பேர் கைது செய்யப்பட்டனர். சபரிமலை அய்யப்பன் கோவிலில் 9 கிலோ 161 கிராம் எடையுள்ள தங்க தகடுகள் மற்றும் 300 கிலோ காப்பர் வளையங்களால் புதிய கொடி மரம் உருவாக்கப்பட்டது. ரூ. 3.5 கோடி மதிப்புள்ள இந்த கொடி மரத்தை ஆந்திராவை சேர்ந்த வியாபார...
மேலும்

டிரம்புடன் மோடி பேச்சு

வாஷிங்டன், ஜூன் 26:  அமெரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து வரும் பிரதமர் மோடி இன்று வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் அதிபர் டிரம்பை சந்தித்து முக்கிய பேச்சு நடத்துகிறார். அப்போது இந்தியாவுக்கு அமெரிக்காவிடமிருந்து ரூ. 2 பில்லியன் டாலர் மதிப்பிலான ஆளில்லாத விமானங்கள் வாங்குவது தொடர்பானது உள்ளிட்ட பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின்றன. அதிபர் டிரம்ப் பதவியேற்ற பிறகு முதல் முறையாக வெளிநாட்டு தலைவருக்கு விருந்து அளிப்பது இதுவே முதல் முறையாகும்....
மேலும்

மான் கி பாத் நிகழ்ச்சியில்  மோடி பேச்சு

வாஷிங்டன், ஜூன் 25: நெருக்கடி நிலை 1975 ஜூன் 25-ல் பிரகடனம் செய்யப்பட்டதை மக்கள் மறக்க மாட்டார்கள். இதை எதிர்த்து ஜனநாயக மாண்புகளை மக்கள் காத்தனர். அதைத் தொடர்ந்து பின்பற்றுவோம் என்று மான் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கூறினார்.இது குறித்து வானொலி இன்று அவர் பேசியதாவது: உத்தரபிரதேசத்தின் பிஜ்னோர் கிராம மக்கள் கழிப்பறைகள் கட்ட, மாவட்ட நிர்வாகம் வழங்கிய பணத்தை ஏற்காமல் தாங்களாகவே கட்டி கொண்டனர்....
மேலும்

காஷ்மீரில் பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு

ஸ்ரீநகர், ஜூன் 25 :காஷ்மீரின் ஸ்ரீநகரில் பள்ளி ஒன்றில் பதுங்கி இருந்து, எல்லை பாதுகாப்பு படையினரை குறிவைத்து பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். அதற்கு பாதுகாப்புப் படையினர் தக்க பதிலடி அளித்து வருகின்றனர். காஷ்மீரின் ஸ்ரீநகரில் பள்ளி கட்டிடத்தில் பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் நேற்று பாதுகாப்புப் படையினர் மீது திடீர் தாக்குதல் நடத்தினர். அவர்களுக்கு ராணுவத்தினர் தக்க பதிலடி அளித்தனர். இந்நிலையில், பயங்கரவாதிகள் இன்று அதிகாலை 3.40...
மேலும்

பாக் அதிரடிப்படை வீரர் சுட்டுக் கொலை

ஜம்மு, ஜூன் 24: காஷ்மீரில் பூஞ்ச் பகுதிக்குள் தலையில் ஹெட்பேட் கேமராவை அணிந்து கொண்டு கையில் வாளுடன் ஊடுருவிய பாகிஸ்தான் எல்லை பாதுகாப்பு படை வீரரை இந்திய ராணுவம் இன்று சுட்டுக் கொன்றது. இவர் இந்திய வீரரை சுட்டுக் கொன்று உடலை சிதைக்க வாளுடன் வந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. இந்திய எல்லைக்குள் பாகிஸ்தானின் எல்லை பாதுகாப்பு அதிரடி படை வீரர்கள் அடிக்கடி ஊடுருவி வருகிறார்கள். கடந்த 22-ம்...
மேலும்

எல்லைக்காவலனாக ‘கார்ட்டோசாட்’ செயல்படும்

புதுடெல்லி, ஜூன் 23: இன்று புதிதாக வானில் ஏவப்பட்ட ‘கார்ட்டோசாட் – 2’ செயற்கைக்கோள் வானத்தில் இருந்தபடியே தேசத்தின் எல்லைகளை காக்கும் எல்லைக்காவலனாகவும் விளங்கும் என்று இஸ்ரோ தலைவர் கூறி உள்ளார். இஸ்ரோ தலைவர் ஏ.எஸ்.கிரண்குமார் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில், “ பூமியில் உள்ள பல்வேறு பொருள்கள் குறித்த தகவல்களைஏற்கனவே உள்ள செயற்கைக்கோள்கள் படம்பிடித்து நமக்கு அனுப்புவதில் சில பிரச்சினைகள் இருந்தன. நம் அவசரத்துக்கு...
மேலும்

கல்லால் அடித்து போலீஸ் அதிகாரி படுகொலை

ஸ்ரீநகர், ஜூன்.23:ஸ்ரீநகரில் வன்முறைக்கும்பல் கல்வீசி தாக்கியதில் போலீஸ் அதிகாரி இறந்தார். வன்முறைக்கும்பலின் வெறியாட்டத்தை அடுத்து அங்கு ஏராளமான பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டு பொது மக்கள் நடமாட்டத்திற்கு தடை விதிக்கப் பட்டுள்ளது. ஸ்ரீ நகரில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு ராணுவ நடவடிக்கைகளுக்கு எதிராக கடைகளை மூடும்படி கோரி ஒரு வன்முறைக்கும்பல் அழைப்பு விடுத்தது. இதையடுத்து பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டனர். வன்முறையாளர்கள் பாதுகாப்பு படையினர் மீது கல்வீசி தாக்குதல்...
மேலும்

ராம்நாத் வேட்பு மனு தாக்கல்

புதுடெல்லி, ஜூன் 23:ஜனாதிபதி தேர்தலில் பிஜேபி வேட்பாளராக போட்டியிடும் ராம்நாத் கோவிந்த் இன்றுவேட்பு மனு தாக்கல் செய்தார். அவரது மனுவை பிரதமர் மோடி, மூத்த தலைவர் அத்வானி உள்ளிட்ட தலைவர்கள் முன்மொழிந்து இருந்தனர்.தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, மகாராஷ்டிரா முதலமைச்சர் பட்னாவிஸ், உத்தரபிரதேச மாமுதல்வர் ஆதித்யநாத் உள்ளிட்ட முதலமைச்சர்கள் வழிமொழிந்தனர். மோடி, அத்வானி உள்ளிட்ட தலைவர்கள் புடைசூழ வேட்டு மனுவை தேர்தல்...
மேலும்

நீட் தேர்வு முடிவு வெளியிடப்பட்டது

புதுடெல்லி, ஜூன் 23:மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் நுழைவுத் தேர்வு முடிவுகள் இன்று சிபிஎஸ்இ இணையதளத்தில் வெளியிடப்பட்டது. இதில் பெறப் படும் மதிப்பெண்கள் அடிப்படையில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு மாணவர்கள் சேர்க்கப்படுவர்.நாடு தழுவிய அளவில் சுமார் 12 லட்சம் பேரும், தமிழகத்தில் சுமார் 85 ஆயிரம் பேரும் இந்த தேர்வை எழுதியிருந்தனர். நீட் நுழைவுத் தேர்வு வினாத் தாள்களில் எழுந்த சர்ச்சைகள் தொடர்பாக தேர்வு முடிவை வெளியிட...
மேலும்

கத்தாரிலிருந்து இந்தியர்களை அழைத்து வர கூடுதல் விமானம்

புதுடெல்லி, ஜூன் 22: கத்தாரில் இருந்து இந்தியர்களை தாயகத்துக்கு அழைத்து வர இன்று முதல் கூடுதல் விமான சேவைகள் இயக்கப்பட உள்ளன. தீவிரவாதத்துக்கு கத்தார் உதவுவதாக கூறி அந்நாட்டுனான உறவுகளை சௌதி உள்ளிட்ட அரபு நாடுகள் முறித்து கொண்டன. இதனால் அங்கு வாழும் இந்தியர்கள் நிலை கேள்விக்குறியானது. இதனைத் தொடர்ந்து கத்தாரில் இருந்து வெளியேற விரும்பும் இந்தியர்களுக்கு உதவ கூடுதல் விமான சேவைகளை இயக்க வேண்டும் என்று விமான...
மேலும்

எதிர்க்கட்சிகளின் வேட்பாளர் மீராகுமார்

சென்னை, ஜூன் 22:ஜனாதிபதி தேர்தலில் ராம்நாத் கோவிந்தை எதிர்த்து மக்களவை முன்னாள் சபாநாயகர் மீராகுமாரை நிறுத்துவது என்று சோனியா காந்தி தலைமையில் இன்று மாலை நடைபெறும் 16 கட்சிகள் கொண்ட கூட்டத்தில் முடிவு எடுக்கப்படுகிறது. இந்த கூட்டத்திற்கு முன்னதாக காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மற்றும் மீராகுமாரை தமது இல்லத்திற்கு அழைத்து இன்று காலை சோனியா ஆலோசனை நடத்தினார். ஜனாதிபதி தேர்தலில் எதிர்க் கட்சிகளின் நிலைப்பாடு குறித்து ஆலோசிப்பதற்காக...
மேலும்