Home » Category >இந்தியா (Page 90)

ரெயில்வே கட்டணங்கள் விரைவில் உயர்கிறது : ஜிஎஸ்டியால் முதல் வகுப்புக்கும் கூடுகிறது

புதுடெல்லி, ஜூன் 27: ஜிஎஸ்டி வரியின் காரணமாக ஒருபுறம் முதல் வகுப்பு ஏசி பயணக் கட்டணம் உயர உள்ள அதேவேளையில், மற்ற ரெயில் டிக்கெட் கட்டணம் விரைவில் உயர்த்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ரெயில்வே நிர்வாகம், நாடெங்குமிலும் ஆயிரக்கணக்கான ரெயில்சேவைகளை இயக்கி வருகிறது. இந்த ரெயில்சேவைகளின் இயக்கத்திற்கு எரிபொருள், ஊழியர் சம்பளம் என பல்வேறு பிரிவுகளில் ரெயில்வே நிர்வாகத்திற்கு செலவு உள்ளது. இவற்றில் பயணிகள் ரெயில்சேவை...
மேலும்

டெல்லி புறப்பட்டு சென்றார் அமித்ஷா

சென்னை, ஜூன் 27: பிஜேபி தேசியத்தலைவர் அமித்ஷா இரண்டு நாள் பயணமாக நேற்று புதுச்சேரி வந்தார். விமானம் மூலம் சென்னை வந்த அவர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் புதுச்சேரி சென்றார். புதுவையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் திருவண்ணாமலை சென்ற அவர் அங்கு ரமணர் ஆசிரமம், அண்ணாமலையார் கோவிலில் தரிசனம் செய்து விட்டு 11.30 மணி அளவில் சென்னை புறப்பட்டார். பகல் 1.30 மணி அளவில் சென்னை விமான...
மேலும்

பழங்குடியினர் 15 பேர் பலி: 2 வாரத்தில் நடந்த சோகம்

அமராவதி, ஜூன் 27: ஆந்திராவின் பழங்குடியினர் கிராமத்தில் வாந்தி, வயிற்றுப்போக்கால் அவதிப்பட்டு வந்த பொதுமக்களில் 15 பேர் கடந்த 2 வாரங்களில் உயிரிழந்த சம்பவம் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. ஆந்திராவின் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் சவராயீ என்ற வனப்பகுதி கிராமம் உள்ளது. பழங்குடி மக்கள் வசித்து வரும் இங்கு கடந்த மாதம் 29-ந்தேதி ஒரு திருமண விழா நடந்தது. இதில் விருந்து சாப்பிட்ட அந்த கிராம மக்களுக்கு, சில நாட்களுக்குப்பின்...
மேலும்

சல்மான் ரசிகர்கள் மீது போலீஸ் தடியடி

மும்பை, ஜூன் 27: ஒவ்வொரு வருடமும் ரம்ஜான் பண்டிகையின் போது சல்மானை ரசிகர்கள் சந்திக்க வருவது வழக்கம். அதே போல வீட்டின் முன் நேற்று ரசிகர்கள் கூடினர். ரம்ஜான் வாழ்த்து தெரிவித்தனர்.  வீட்டில் இருந்து ரசிகர்களை நோக்கி கைகாட்டினார். சில ரசிகர்கள் ஆர்வ மிகுதியால் வீட்டின் காம்பவுண்டை தாண்டிக் குதிக்க முயன்றனர். பவுன்சர்கள் அவர்களைத் தடுத்தனர். இதையடுத்து போலீசார் குவிக்கப்பட்டனர். அவர்கள், ரசிகர்களை கலைந்து போகும்படி கூறினர். யாரும் கலைந்து...
மேலும்

அட்டர்னி ஜெனரல் வேணுகோபால்?

புதுடெல்லி, ஜூன் 27: நாட்டின் புதிய அட்டர்னி ஜெனரலாக மூத்த வழக்கறிஞர் கே.கே. வேணுகோபால் நியமிக்கப்படலாம் என செய்திகள் வெளியாகியுள்ளன. மத்திய அரசின் சார்பில் தற்போது முகுல் ரோத்தஹி அட்டர்னி ஜெனரல் பதவி வகித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்னர், இவர் பதவியை ராஜினாமா செய்து, மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பினார். இதனையடுத்து அடுத்த அட்டர்னி ஜெனரலை நியமிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில்அடுத்த அட்டர்னி...
மேலும்

ஹிஸ்புல் தலைவர் சர்வதேச பயங்கரவாதி

வாஷிங்டன், ஜூன் 27: ஹிஸ்புல் அமைப்பின் தலைவர் சலாஹூதீனை சர்வதேச பயங்கரவாதியாக அமெரிக்கா அறிவித்துள்ளது. இது இந்தியாவுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாக கருதப்படுகிறது. காஷ்மீரில் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை தொடர்ந்து ஊக்குவித்து, அதற்கு பின்புலமாக இருந்து வந்த சையத் சலாஹூதீனை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க வேண்டும் என இந்தியா தொடர்ந்து முயற்சித்து வந்தது. இதையடுத்து ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாத அமைப்பின் தலைவர் சையத் சலாஹூதீனை சர்வதேச பயங்கரவாதியாக அமெரிக்கா...
மேலும்

பிரதமர் மோடி – டிரம்ப் சபதம்

வாஷிங்டன், ஜூன் 27: பயங்கரவாதத்தை வேரறுக்க இந்தியா- அமெரிக்கா அரசுகள் இணைந்து பாடுபடும் என அதிபர் டிரம்ப்-பிரதமர் மோடி இருவரும் தெரிவித்துள்ளனர். முன்னதாக அமெரிக்கா சென்ற நமது பிரதமருக்கு விமான நிலையத்திலும், வெள்ளை மாளிகையிலும் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டதுடன், அதிபர் டிரம்ப் தனது மனைவியுடன் வாசலுக்கே வந்து வரவேற்று அழைத்துச் சென்றதுடன், அங்கிருந்து புறப்பட்டபோது, வாசலுக்கே வந்து வழியனுப்பி வைத்தார். அமெரிக்காவின் இந்த உபசரிப்பு இதுவரை வேறு...
மேலும்

பரோலில் விடுதலை செய்ய நீதிபதி கர்ணன் கோரிக்கை

கொல்கத்தா, ஜூன் 27: பரோலில் விடுதலை செய்யக்கோரி, மேற்கு வங்காள கவர்னருக்கு நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சிறையில் உள்ள நீதிபதி கர்ணன் மனு அனுப்பி உள்ளார். நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், நீதிபதி கர்ணனுக்கு கடந்த மே 9-ந் தேதி, சுப்ரீம் கோர்ட்டு 6 மாத ஜெயில் தண்டனை விதித்தது. ஒரு மாதத்துக்கு மேல் தலைமறைவாக இருந்த கர்ணன், கடந்த 20-ந் தேதி, கோவை அருகே கைது செய்யப்பட்டார். மறுநாள்,...
மேலும்

ஆதாருக்கு தடை இல்லை

புதுடெல்லி, ஜூன் 27: சமூக நலத்திட்டங்களில் ஆதாரை கட்டாயமாக்கும் மத்திய அரசின் முடிவுக்குத் தடை விதிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அதேசமயம் சமூக நலத்திட்டங்களை தொடர வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணை வரும் ஜூலை 7ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு தற்போது அனைத்து திட்டங்களுக்கும் ஆதார் எண்ணை கட்டாயமாக்கி வருகிறது. சமையல் காஸ் மானியத்தில் தொடங்கிய இந்த திட்டம், வங்கி...
மேலும்

சபரிமலை தங்க கொடி மரம் சேதம்

பம்பை, ஜூன் 26 : சபரிமலை அய்யப்பன் கோவிலில் புதியதாக நிறுவப்பட்ட தங்க கொடிமரத்தை ரசாயனம் வீசி சேதப்படுத்தியதாக ஆந்திராவைச்  சேர்ந்த 5 பேர் கைது செய்யப்பட்டனர். சபரிமலை அய்யப்பன் கோவிலில் 9 கிலோ 161 கிராம் எடையுள்ள தங்க தகடுகள் மற்றும் 300 கிலோ காப்பர் வளையங்களால் புதிய கொடி மரம் உருவாக்கப்பட்டது. ரூ. 3.5 கோடி மதிப்புள்ள இந்த கொடி மரத்தை ஆந்திராவை சேர்ந்த வியாபார...
மேலும்

டிரம்புடன் மோடி பேச்சு

வாஷிங்டன், ஜூன் 26:  அமெரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து வரும் பிரதமர் மோடி இன்று வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் அதிபர் டிரம்பை சந்தித்து முக்கிய பேச்சு நடத்துகிறார். அப்போது இந்தியாவுக்கு அமெரிக்காவிடமிருந்து ரூ. 2 பில்லியன் டாலர் மதிப்பிலான ஆளில்லாத விமானங்கள் வாங்குவது தொடர்பானது உள்ளிட்ட பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின்றன. அதிபர் டிரம்ப் பதவியேற்ற பிறகு முதல் முறையாக வெளிநாட்டு தலைவருக்கு விருந்து அளிப்பது இதுவே முதல் முறையாகும்....
மேலும்