Home » Category >இந்தியா (Page 59)

ஹேமமாலினியை முட்ட வந்த காளை

லக்னோ, நவ. 2:மும்பை எல்பின்ஸ்டோன் ரோடு ரெயில் நிலையத்தில் ஏற்பட்ட விபத்தில் 23 பேர் பலியாகினர். இதைத்தொடர்ந்து ரெயில்வே அமைச்சர் பியூஷ் கோயல், அனைத்து எம்.பி-க்களும் தங்களது தொகுதிகளில் உள்ள ரெயில் நிலையங்களை ஆய்வுசெய்ய வேண்டும் என தெரிவித்தார். இதனையடுத்து பிரபல இந்தி நடிகையான ஹேமமாலினி, பிஜேபியின் நாடாளுமன்ற உறுப்பின ராக உள்ளார். இவர் உத்தரப்பிரதேசத்தில் தனது தொகுதியான மதுரா ரெயில் நிலையத்திற்கு வருகை தந்து ஆய்வு...
மேலும்

தொழில் தொடங்க உகந்த சூழல்: 50 இடத்துக்குள் வர இந்தியா முயற்சி

மும்பை, நவ.2: தொழில் தொடங்க உகந்த சூழல் நிலவும் நாடுகள் பட்டியலில் இந்தியாவை முதல் 50 இடத்துக்குள் கொண்டு வர 200 சீர்திருத்தங்களை மத்திய அரசு மேற்கொண்டு வருவதாக தொழில்துறை கொள்கை மற்றும் மேம்பாட்டுத் துறையின் செயலாளர் ரமேஷ் அபிஷேக் தெரிவித்துள்ளார். தில்லியில் புதன்கிழமை இந்தியத் தொழிலகக் கூட்டமைப்பு (சிஐஐ) சார்பில் நடைபெற்ற வட மாநில முதலீட்டு மேம்பாடு தொடர்பான மாநாடு நடைபெற்றது. இதில் பங்கேற்ற ரமேஷ் அபிஷேக்...
மேலும்

ஆதாருக்கு இன்னமும் பதிவு செய்யவில்லை

ஷில்லாங், நவ.2: ஆதாருக்கு இன்னமும் பதிவு செய்யவில்லை என்று மேகாலயா மாநிலத்தின் முதல்வர் முகுல் சங்மா தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஷில்லாங்கில் அவர் செய்தியாளர்களிடம் புதன்கிழமை கூறியதாவது: ஆதார் எண்ணுக்கு நான் இன்னமும் பதிவு செய்யவில்லை. எனது மக்களின் துன்பத்தை நானும் பகிர்ந்து கொண்டுள்ளேன். தனிமனித ரகசியம் காத்தல் என்பது ஜனநாயகத்தில் மிகவும் முக்கியமான ஒன்றாகும். இல்லையெனில், ஜனநாயகத்தின் ஒட்டுமொத்த சித்தாந்தமே நீர்த்து போய்விடும். இதுதொடர்பாக நானும், அஸ்ஸாம் முதல்வர்...
மேலும்

இரட்டை இலைச் சின்னம் விவகாரம்: விசாரணை நவ.6க்கு ஒத்திவைப்பு

புதுடெல்லி, நவ.2: அதிமுகவின் இரட்டை இலைச் சின்னம் விவகாரம் தொடர்பான வழக்கில், இபிஎஸ், ஓபிஎஸ் தரப்பினர் உண்மை விவரங்களை மறைத்துள்ளனர் என்று விசாரணையின் போது தினகரன் தரப்பு வழக்குரைஞர் வாதிட்டார். இதைத் தொடர்ந்து, அடுத்த கட்ட விசாரணையை தேர்தல் ஆணையம் திங்கள்கிழமைக்கு (நவம்பர் 6) ஒத்திவைத்தது. இந்த விவகாரம் தொடர்பான வழக்கு விசாரணை ஐந்தாவது கட்டமாக தில்லியில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஏ.கே. ஜோதி, தேர்தல் ஆணையர்கள் ஓ.பி....
மேலும்

நோயாளி வயிற்றில் 639 ஆணிகள்

கொல்கத்தா, நவ.1:மேற்குவங்கத்தில் நோயாளி ஒருவரின் வயிற்றில் இருந்து 639 ஆணிகளை டாக்டர்கள் ஆபரேசன் மூலம் அகற்றினர். மேற்கு வங்காள மாநிலம் கோபர்க்தங்கா பகுதியைச் சேர்ந்த 48 வயதான மனநோயாளி ஒருவர் கடந்த சில தினங்களாக தொடர் வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். அடிக்கடி வாந்தியும் எடுத்துள்ளார். இதையடுத்து அவரை கொல்கத்தாவில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். டாக்டர்கள் அவரை பரிசோதனை செய்து பார்த்தபோது வயிற்றினுள்...
மேலும்

ரூ.80 லட்சம் செம்மரக்கட்டைகள் பறிமுதல்

திருப்பதி, நவ.1:  திருப்பதியில் ரூ.80 லட்சம் மதிப்புள்ள 29 செம்மரக்கட்டைகளை வனத்தறையினர் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக தப்பியோடிய 32 பேரை ஆந்திர வனத்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
மேலும்

பிரம்மபுத்ராவை திசை திருப்ப சீனா முயற்சி

பெய்ஜிங், அக்.31: இந்தியாவில் பாயும் ஜீவ நதிகளில் ஒன்றான பிரம்மபுத்ராவை திசை திருப்பி கொண்டு செல்ல சீனா பொறியாளர்கள் எடுத்துள்ள முடிவால் வடகிழக்கு மாநிலங்கள் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள திபெத் பகுதியில் உருவாகும் பிரம்மபுத்ரா நதியை 1,000 கி.மீ. தூரம் சுரங்கம் அமைத்து தண்ணீர் கொண்டு செல்ல அந்நாட்டு பொறியாளர்கள், அரசிற்கு அறிக்கை அளித்துள்ளனர். இது ஏற்கப்பட்டால், இந்திய வடகிழக்கு மாநிலங்கள் பாதிக்கும் அபாயம்...
மேலும்

புதுவையை தூய்மை செய்வது எனது கடமை’: கிரண் பேடி உறுதி

புதுச்சேரி, அக்.31: நான் கவர்னராக பொறுப்பேற்றதில் இருந்து தூய்மை செய்து அழகான புதுச்சேரியை உருவாக்குவது தான் என் கடமை. மேலும் நான் புதுச்சேரியின் நிரந்தரமான கவர்னர் இல்லை. என் பணி காலம் முடியும் வரை புதுச்சேரி மக்களுக்காக உழைப்பேன் என்று கிரண் பேடி கூறியுள்ளார். புதுச்சேரி கவர்னர் மாளிகையில் கவர்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- நான் பதவியேற்றதில் இருந்து கவர்னர் மாளிகையில் எந்தவித கோப்புகளும் தேக்கி...
மேலும்

முதல்வர் வேண்டுகோளை ஏற்ற மணமகன்

பாட்னா, அக்.30:பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமாரின் கோரிக்கையை ஏற்று வரதட்சணையை திருப்பி அளித்தவருக்கு பாராட்டுகள் குவிகின்றன. பீகார் மாநில முதல்வர் நிதிஷ்குமார் கடந்த 4-ந் தேதி, பிள்ளைகளின் திருமணத்தின்போது வரதட்சணை வாங்காதீர்கள் என்று பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார். இதையடுத்து போஜ்பூர் மாவட்டம் பர்நவ் கிராமத்தை சேர்ந்த முன்னாள் தலைமை ஆசிரியர் ஹரிந்தர்குமார் சிங் தனது மகன் பிரேம்ரஞ்சன் சிங்குக்கு அனுராதா என்ற பெண்ணை டிசம்பர் 3-ந் தேதி திருமணம்...
மேலும்

மம்தா பானர்ஜிக்கு சுப்ரீம்கோர்ட் கேள்வி

புதுடெல்லி, அக்.30:மத்திய அரசு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றிய சட்டத்தை எதிர்த்து ஒரு மாநில அரசு எப்படி வழக்குத் தொடர முடியும் என ஆதார் குறித்த வழக்கில் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. மொபைல் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயம் என்ற மத்திய அரசின் உத்தரவை எதிர்த்து மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, அம்மாநில அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்....
மேலும்

மோடி பற்றி விமர்சனம்:ஒருவர் கைது

விருதுநகர், அக்.30: பிரதமர் நரேந்திர மோடியை பேஸ்புக்கில் விமர்சனம் செய்தவர் கைது செய்யப்பட்டுள்ளார். விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே ராமகிருஷ்ணபுரத்தை சேர்ந்தவர் திருமுருகன். இவர் பிரதமர் நரேந்திர மோடியை பேஸ்புக்கில் விமர்சித்ததாக கூறப்படுகிறது. இது குறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் பிஜேபியினர் கொடுத்த புகாரில் திருமுருகனை கைது செய்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும்