Home » Category >இந்தியா (Page 5)

இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் சரிவு

புதுடெல்லி, செப். 5: சர்வதேச சந்தையில் அமெரிக்க டாலருக்கான நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்று மேலும் 25 காசுகள் குறைந்தது. இன்றைய டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 71.79 ஆக உள்ளது. ஆசிய நாடுகள் இடையே இந்திய நாணயத்தின் மதிப்புதான் இந்த ஆண்டில், மிக மோசமான அளவுக்கு குறைந்திருப்பதாக சந்தை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த 2 நாட்களுக்குமுன் ரூபாயின் மதிப்பு 71.43 ஆகவும், 73.58 ஆகவும்...
மேலும்

வைரங்கள் பதிக்கப்பட்ட தங்க டிபன் பாக்ஸ், டீ கப் மாயம்

ஐதராபாத், செப்.4: ஐதராபாத் அருகே நிஜாம் அருங்காட்சியகத்தில் கொள்ளையர்கள் நுழைந்து ரூ.50 கோடி மதிப்புள்ள தங்க டிபன் பாக்ஸ், தங்க டீ கப் ஆகியவற்றை திருடிசென்று விட்டனர். இந்த கொள்ளையர்களை பிடிக்க 10 தனிப்படை போலீஸ் அமைக்கபட்டுள்ளது. ஐதராபாத் புறநகரில் உள்ள புரனிஹவேலி என்ற பகுதியில் உள்ள அருஙகாட்சியகத்தில் நிஜாம் மன்னர்கள் பயன்படுத்திய தங்கத்தினால் ஆன பொருட்கள் மற்றும் பழங்கால பாரம்பரிய பொருட்கள் காட்சிக்காக வைப்பட்டுள்ளன. சம்பவத்தன்று...
மேலும்

ஸ்டெர்லைட் ஆலை வழக்கு அவசரமாக விசாரிக்க மறுப்பு

புதுடெல்லி, செப்.4: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையின் நிர்வாக பிரிவு செயல்பட தேசிய பசுமை தீர்ப்பாயம் வழங்கிய அனுமதியை எதிர்த்து தமிழக அரசு தொடர்ந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் இன்று மறுத்துவிட்டது. தமிழக அரசின் வழக்கு அடுத்த வாரம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி மே 22-ல் நடைபெற்ற போராட்டத்தின்போது 13 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து இந்த ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கு...
மேலும்

இந்திய போர் விமானம் விபத்து: விமானி தப்பினார்

ஜோத்பூர், செப்.4: இந்திய விமான படைக்கு சொந்தமான மிக் 27 போர் விமானம் இன்று காலை ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் அருகே விபத்துக்குள்ளானது. விமானி அதிர்ஷ்டவசமாக குதித்து தப்பினார். ஜோத்பூர் விமான படை தளத்திலிருந்து இன்று காலை வழக்கமான பயிற்சிக்காக புறப்பட்ட இந்த விமானம் பனாட் பகுதியில் பறந்துகொண்டிருந்தபோது திடீரென தரையை நோக்கி பாய்ந்து மோதியது. இதை உணர்ந்த விமானி அதிர்ஷ்டவசமாக வெளியில் குதித்து தப்பினார். சம்பவ இடத்திற்கு...
மேலும்

தெலுங்கானாவில் ஆட்சியை பிடிப்போம்

ஹைதராபாத், செப்.4: தென் மாநிலங்களில் பிஜேபியின் அடுத்த குறி தெலுங்கானா என்றும், இம்மாநில சட்டமன்ற தேர்தலில் பிஜேபியை வெற்றி பெற செய்யும் பொறுப்பை தாம் ஏற்றிருப்பதாகவும் அமித்ஷா கூறியுள்ளார். பிஜேபி தேசிய தலைவர் அமித்ஷா ஹைதராபாத்தில் தெலுங்கானா மாநில பிஜேபி தலைவர்களை சந்தித்து ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் பேசியதாவது: தெலுங்கானா சட்டமன்ற தேர்தலை சந்திக்க நாங்கள் தயாராக இருக்கிறோம். இந்த மாநிலத்தில் பிஜேபி நல்ல வளர்ச்சி அடைந்துள்ளது....
மேலும்

ஆட்டோ கட்டணத்தை விட குறைவான விமான கட்டணம்

புதுடெல்லி, செப்.4: ஆட்டோவில் பயணம் செய்ய வசூலிக்கப்படும் கட்டணத்தை விட இன்றைய நிலையில் விமான கட்டணம் குறைவாக உள்ளதாக மத்திய சிவில் விமான போக்குவரத்துத் துறை இணையமைச்சர் ஜெயந்த்  சின்ஹா தெரிவித்துள்ளார். இது எப்படி சாத்தியமாகும் என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், பின்வரும் விளக்கத்தை அளித்தார். இரண்டு பேர் ஆட்டோவில் பயணம் செய்தால் ஒரு கிலோமீட்டருக்கு 10 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. அப்படியானால் நபர் ஒருவருக்கு 5 ரூபாய் கட்டணமாகிறது....
மேலும்

நடிகர் ரஜினிகாந்தின் அண்ணி காலமானார்

பெங்களூரு, செப்.3:நடிகர் ரஜினிகாந்தின் அண்ணன் சத்தியநாராயணராவ் மனைவி கலாவதிபாய் (வயது 70) நேற்றிரவு பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மரணம் குறித்து அறிந்ததும் ரஜினிகாந்த் உடனடியாக பெங்களூரு விரைந்தார். கலாவதிபாய்க்கு சிறுநீரகக் கோளாறு, சர்க்கரைநோய் ஆகியவை இருந்ததால் பெங்களூருவில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்றிரவு 11.30 மணிக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. மருத்துவர்கள் தீவிர...
மேலும்

திருப்பதி கோவில் நகைகள் எங்கே? ஆந்திர அரசுக்கு நோட்டீஸ்

புதுடெல்லி, செப்.3:திருப்பதி கோயிலுக்கு கிருஷ்ணதேவராயர் வழங்கிய ஏராளமான தங்க ஆபரணங்கள் எங்கே உள்ளன என்று மத்திய தகவல் ஆணையம் கேள்வி எழுப்பி உள்ளது. திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் தலைமை அர்ச்சகராக இருந்த ரமணா தீட்சதலு என்பவர் திருமலை தேவஸ்தானத்தில் வைக்கப்பட்டிருந்த பழங்கால நகைகள் காணவில்லை என்ற அதிர்ச்சிகரமான தகவலை தெரிவித்திருந்தார். மேலும் தேவஸ்தானத்தில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாகவும் அவர் குற்றம் சாட்டி இருந்தார். திருமலை திருப்பதி தேவஸ்தானத்தை...
மேலும்

உள்ளாட்சி தேர்தல்: 500 இடங்களில் பிஜேபி வெற்றி

பெங்களூரு, செப்.3:கர்நாடக மாநிலத்தில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புக ளுக்கான தேர்தலில் முதல் இடத்தை பிடிப்பதில் காங்கிரசுக்கும் பிஜேபிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. 2079 வார்டுகளுக்கான தேர்தல் கடந்த மாதம் 31-ந் தேதி நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது. இதுவரை அறிவிக்கப்பட்ட முடிவுகளில் காங்கிரஸ் 560 இடங்களை வெற்றி பெற்றுள்ளது. பிஜேபி 499 இடங்களை கைப்பற்றி முன்னேறி வருகிறது. மதச்சார்பற்ற ஜனதா தளம்...
மேலும்

பாலியல் புகாரில் கடற்படை அதிகாரி கைது

கோட்டயம், செப்.3:8 முறை இந்திய ஆணழகன் பட்டத்தை வென்ற கேரளராவைச் சேர்ந்த கடற்படை அதிகாரி ஒருவர் கற்பழிப்பு குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். முரளி குமார் என்ற அந்த கடற்படை அதிகாரி மும்பையில் பணியாற்றி வந்தார். அவர் கோட்டயத்தை சேர்ந்த 20 வயது பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி ஓட்டல் அறை ஒன்றிற்கு வரவழைத்து உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது. திருமணம் செய்ய அந்த...
மேலும்

ஒலிம்பிக் சாம்பியனை வீழ்த்தி இந்திய வீரர் தங்கம்

ஜகர்தா, செப்.1: ஆசிய விளையாட்டு குத்துச்  சண்டை போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்ற அமித் தங்கம் பதக்கம் வென்றுள்ளார்.  49 கிலோ எடைப்பிரிவில் நடந்த குத்துச்சண்டை இறுதிப்போட்டியில் இந்திய வீரர் அமித் பங்கால், ஒலிம்பிக் சாம்பியனான கஜஸ்கஸ்தான் வீரர் அஸனை எதிர்கொண்டார். மிகவும் விறுவிறுப்பாக நடந்த போட்டியின் இறுதியில், இந்திய வீரர் அமித் கடுமையாக மல்லுக்கட்டி, கஜஸ்கஸ்தான் வீரரை வீழ்த்தி வெற்றி பெற்றார். இதன்மூலம், இந்தியாவிற்கு 14-வது...
மேலும்