Home » Category >இந்தியா (Page 4)

எலிக்காய்ச்சல்:கேரளாவுக்கு சென்ற தமிழக பெண் பலி

கோவை, செப்.6:கேரளாவுக்கு சென்று திரும்பிய திருப்பூரை சேர்ந்த பெண் எலி காய்ச்சலால் பாதிக்கபட்டு மரணமடைந்துள்ளார். இதையடுத்து திருப்பூர் மற்றும் தமிழக கேரள எல்லையில் எலி காய்ச்சலை தடுக்க தீவிர மருத்துவ முகாம்கள் நடத்தபட்டு வருகின்றன. கேரளாவில் அண்மையில் ஏற்பட்ட பெரும் மழை வெள்ளத்திற்கு பிறகு எலி காய்ச்சல் பரவி வருகிறது. இந்த மாநிலத்தில் இதுவரை 12 க்கும் அதிகமானோர் இந்த காய்ச்சாலால் பலியாகியுள்ளனர். கேரளாவிலிருந்து தமிழகத்திற்கு எலி...
மேலும்

செல்போன் பயன்பாடு: ஆய்வில் அதிர்ச்சி தகவல்

புதுடெல்லி, செப்.6:செல்போன் மற்றும் கம்ப் யூட்டர்களை அதிகம் பயன்படுத்துவதால் கண்களுக்கு ஆபத்து ஏற்படுவதாக ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. செல்போன், கம்ப்யூட்டர், லேப்டாப் ஆகியவற்றை பயன்படுத்துவது நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் கண்கள் பாதிக்கப்படுவதாக அந்த ஆய்வு எச்சரிக்கை விடுத்துள்ளது. பல மணி நேரம் தொடர்ந்து இந்த கருவிகளை பயன்படுத்துவதால் கண்களில் நீர் சத்து குறைந்து வருவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். அதிலும் 20 முதல் 30 வயதுக்குட்பட்டவர் களுக்கு...
மேலும்

தெலுங்கானா மாநில அரசை கலைக்க பரிந்துரை:கவர்னர் ஏற்றார்

ஐதராபாத், செப்.6:தெலுங்கானா மாநில அரசை முன்கூட்டியே கலைக்க, அம்மாநில அமைச்சரவை செய்த பரிந்துரையை கவர்னர் நரசிம்மன் ஏற்றுக்கொண்டு உள்ளார். தெலுங்கானா மாநிலம் பிரிக்கப்பட்ட பின்னர் 2014 ஆண்டு நடந்த முதல் தேர்தலில் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி ஆட்சியைக் கைப்பற்றியது. அந்த கட்சியின் தலைவரான சந்திரசேகர ராவ் முதலமைச்சர் ஆனார். தெலுங்கானா சட்டசபையின் ஆயுள் காலம் முடிவதற்கு இன்னும் 8 மாத காலம் உள்ளது. எனினும், சட்டசபையை முன்கூட்டியே...
மேலும்

நளினி உள்பட 7 பேர் விடுதலை: தமிழக அரசு முடிவு செய்யலாம்

புதுடெல்லி, செப்.6:ராஜிவ் காந்தி கொலை வழக்கில் 27 ஆண்டுகளுக்கு மேலாக சிறை தண்டணை அனுபவித்து வரும் பேரறிவாளன், நளினி உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்வது குறித்து தமிழக அரசு முடிவு எடுக்கலாம் என உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. 2014 ல் ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது இவர்களை விடுதலை செய்ய தமிழக அரசு எடுத்த முடிவை எதிர்த்து மத்திய அரசு தொடர்ந்த வழக்கில் இந்த தீர்ப்பு...
மேலும்

இந்தியாவில் ஓரினச் சேர்க்கை குற்றமல்ல :உச்சநீதிமன்றம்

புதுடெல்லி, செப்.6:இந்தியாவில் ஓரினச்சேர்க்கை குற்றமல்ல என்று உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பை வழங்கி உள்ளது. ஓரினச்சேர்க்கைக்கு தண்டனை விதிக்க வகை செய்யும் இந்திய தண் டனைச் சட்டத்தின் 377-வது பிரிவை உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு ரத்து செய்துள்ளது. ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுவதை இந்திய தண்டனைச் சட்டத்தின் 377–வது பிரிவு குற்றம் என்று கூறியிருந்தது.இயற்கைக்கு மாறாக உறவு கொண்டால் குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், அதிக பட்சமாக ஆயுள்...
மேலும்

தரமற்ற பால்: அதிர்ச்சியூட்டும் தகவல்

புதுடெல்லி, செப்.6:நாட்டில் விற்பனையாகும் பெருமளவு பால் தரமானது அல்ல என்ற அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகி இருக்கிறது. மனிதர்களின் அன்றாட உணவுப் பொருள் பட்டியலில் முதலிடத்தில் பார் உள்ளது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் அருந்தும் பாலில் 68.7 சதவீதம் அளவுக்கு தரம் குறைந்தது என்ற தகவலை இந்திய விலங்குகள் நல வாரியம் வெளியிட்டுள்ளது. மத்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரநிர்ணய ஆணையம் நிர்ணயித்துள்ள தரத்தின்படி நம்...
மேலும்

சிறுமியை கற்பழித்து கொன்று கண்களை தோண்டிய கொடூரம்

ஸ்ரீநகர், செப்.5:காஷ்மீர் மாநிலம் பாரமுல்லா மாவட்டத்தில் 9 வயது சிறுமியை கூட்டாக சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்ததுடன் அவளை கொலை செய்து கண்களை தோண்டிய கொடூரச் செயல் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி உள்ளது. இந்த காட்டுமிராண்டித்தனமான செயலுக்கு காரணமான சிறுமியின் தந்தையின் முதல் மனைவி, அவளது மகன் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஊரி என்ற இடத்தைச் சேர்ந்த அந்த சிறுமி கடந்த மாதம் 23-ம்...
மேலும்

துணை முதல்வரின் ஷூவை துடைத்த காவலர்

பெங்களூரு, செப்.5: கர்நாடக துணை முதலமைச்சரும், காங்கிரஸ் தலைவருமான ஜி.பரமேஸ்வராவின் உடையையும், காலணியையும் அவரது மெய்க்காப் பாளர் துடைக்கும் காட்சி வைரலாக வலம் வந்துள்ளதால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. பெங்களூரு மேம்பாட்டு அமைச்சராகவும் உள்ள பரமேஸ்வரா மாநகராட்சியில் நடைபெறும் பணிகளை பார்வையிட்டார். அப் போது மழையால் தேங்கியிருந்த தண்ணீரால் அவரது காலணியும், வெள்ளை நிற சட்டையும் அழுக்கானது. அதை பரமேஸ்வராவின் மெய்க் காப்பாளர் தண்ணீரை எடுத்து துடைத்த காட்சியே வைரலானது....
மேலும்

ஆசிரியர் தினம்: ஜனாதிபதி வாழ்த்து

புதுடெல்லி, செப்.5:மாபெரும் தத்துவமேதையாக விளங்கிய முன்னாள் ஜனாதிபதி டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் பிறந்த நாளான செப்டம்பர் 5 ஆம் நாளை ஒவ்வொரு வருடமும் ஆசிரியர் திருநாளாக இந்தியா முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. ஆசிரியர் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் ஜனாதி பதி ராம்நாத்கோவிந்த் கூறியிருப்பதாவது:- “நமது சிறந்த ஆசான்கள் நமது தேசத்தை கட்டமைக்க நமக்கு வழிகாட்டட்டும்;...
மேலும்

இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் சரிவு

புதுடெல்லி, செப். 5: சர்வதேச சந்தையில் அமெரிக்க டாலருக்கான நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்று மேலும் 25 காசுகள் குறைந்தது. இன்றைய டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 71.79 ஆக உள்ளது. ஆசிய நாடுகள் இடையே இந்திய நாணயத்தின் மதிப்புதான் இந்த ஆண்டில், மிக மோசமான அளவுக்கு குறைந்திருப்பதாக சந்தை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த 2 நாட்களுக்குமுன் ரூபாயின் மதிப்பு 71.43 ஆகவும், 73.58 ஆகவும்...
மேலும்

வைரங்கள் பதிக்கப்பட்ட தங்க டிபன் பாக்ஸ், டீ கப் மாயம்

ஐதராபாத், செப்.4: ஐதராபாத் அருகே நிஜாம் அருங்காட்சியகத்தில் கொள்ளையர்கள் நுழைந்து ரூ.50 கோடி மதிப்புள்ள தங்க டிபன் பாக்ஸ், தங்க டீ கப் ஆகியவற்றை திருடிசென்று விட்டனர். இந்த கொள்ளையர்களை பிடிக்க 10 தனிப்படை போலீஸ் அமைக்கபட்டுள்ளது. ஐதராபாத் புறநகரில் உள்ள புரனிஹவேலி என்ற பகுதியில் உள்ள அருஙகாட்சியகத்தில் நிஜாம் மன்னர்கள் பயன்படுத்திய தங்கத்தினால் ஆன பொருட்கள் மற்றும் பழங்கால பாரம்பரிய பொருட்கள் காட்சிக்காக வைப்பட்டுள்ளன. சம்பவத்தன்று...
மேலும்