Home » Category >இந்தியா (Page 3)

மனைவியைக் கொன்று மறைத்து வைத்த கணவர் கைது

புதுடெல்லி, பிப்.5:டெல்லியில் மனைவியைக் கொன்று 18 நாட்களாக படுக்கைக்கு அடியில் மறைத்து வைத்த கணவர் கைது செய்யப்பட்டார். டெல்லியின் துக்ளகாபாத்தைச் சேர்ந்தவர் 26 வயதான சுரேஷ்சிங் இவர் தன்னை விடவும் 4 வயது மூத்த பெண்ணான மரியா என்பவரை முகநூல் மூலம் கிடைத்த அறிமுகத்தில் கடந்த 2015ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். தனது சொந்த ஊரில் வேறொரு பெண்ணையும் திருமணம் செய்த சுரேஷ் முதல்...
மேலும்

நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் மனு

டெல்லி,பிப்.5:தினகரன் அணி அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி கிடையாது. தினகரன் அணிக்கு கட்சி பெயரை வழங்க உத்தரவிட முடியாது என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா, 2016 டிசம்பரில் இறந்தார். இதன் பின், பன்னீர் செல்வம் தலைமையில் ஒரு அணி பிரிந்து சென்றது. அந்த அணிக்கு அ.தி.மு.க. புரட்சி தலைவி அம்மா அணி என்றும், சசிகலா-எடப்பாடி-தினகரன் அடங்கிய அணியை, அ.திமு.க. அம்மா அணி...
மேலும்

ராஜஸ்தான் இடைத்தேர்தல்: காங்கிரஸ் அமோக வெற்றி

புது டெல்லி, பிப். 1: ராஜஸ்தான், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் மக்களவைத் தொகுதிகளில் இடைத்தேர்தலில் காங்கிரஸ் மற்றும் திரிணாமூல் காங்கிரஸ் வெற்றி பெற்றது. அஜ்மீர் தொகுதி எம்.பி.யாக இருந்த சன்வர்லால் ஜேட் (பிஜேபி), அல்வர் தொகுதி எம்.பி.யாக இருந்த மஹந்த் சந்த் நாத் யோகி (பிஜேபி), மண்டல்கர் தொகுதி எம்எல்ஏவான கீர்த்தி குமாரி (பிஜேபி) ஆகியோர் கடந்த ஆண்டு மரணம் அடைந்தனர், அதையடுத்து, அந்தத் தொகுதிகளில்...
மேலும்

பட்ஜெட்: விளை பொருட்களின் விலை 1.5 மடங்கு உயர்த்தப்படும்

சென்னை, பிப்.1: மத்திய பட்ஜெட்டில் விவசாயத்துக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு ரூ.22,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. கிராமப்புற சந்தைக்கு ரூ.2,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.இந்த ஆண்டு விவசாயத்துறைக்கு அதிக முக்கியத்துவம் அளித்துள்ளார் நிதியமைச்சர் அருண் ஜெட்லி. வரும் 2019ல் நாடு லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. இது கவர்ச்சி பட்ஜெட்டாகவோ, சலுகை பட்ஜெட்டாகவோ இருக்காது என்று பிரதமர் மோடி கூறியிருந்தார். இந்த பட்ஜெட்டில் வேளாண்துறைக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. வேளாண் கட்டமைப்பு...
மேலும்

தனி நபர் வருமான வரியில் மாற்றம் இல்லை: அருண்ஜெட்லி

புதுடெல்லி, பிப்.1: 2018-19-ம் ஆண்டிற்கான மத்திய நிதிநிலை அறிக்கையை நிதி அமைச்சர் அருண்ஜெட்லி இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். வருமான வரி விதிப்பிற்கான வரம்பில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.நாடு தழுவிய அளவில் 50 கோடி மக்கள் பயன் அடையும் வகையில் மருத்துவ காப்பீட்டு திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.ரெயில் பெட்டிகளில் கண்காணிப்பு கேமிரா மற்றும் வை-பை வசதி செய்யப்பட இருக்கிறது. பெரம்பூரில் அதி நவீன புதிய ரெயில் பெட்டி தொழிற்சாலை...
மேலும்

வருமான வரி வசூல் அதிகரிப்பு

வருமான வரி கணக்கு தாக்கல் செய்தவர்களின் எண்ணிக்கை 44.72 லட்சமாக அதிகரித்து இருக்கிறது என்று மத்திய பட்ஜெட்டில் தெரிவிக்கப் பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட அதிகமாகும். அதேபோல் வருமான வரி வசூலும் ரூ.90,000 கோடி அதிகரித்து இருக்கிறது. வருமான வரி தாக்கல் முறை எளிதாக்கப்பட்டு இருப்பதால் கணக்கு தாக்கல் செய்வோரின் எண்ணிக்கை அதிகரித்து இருப்பதாக நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்தார்.
மேலும்

ஜனாதிபதி சம்பளம் ரூ.5 லட்சமாக உயர்வு

புதுடெல்லி, பிப்.1:மத்திய பட்ஜெட்டில் ஜனாதிபதி யின் சம்பளம் ரூ.5 லட்சமாகவும், துணை ஜனாதிபதியின் சம்பளம் ரூ.4 லட்சமாகவும் மற்றும் மாநில கவர்னர்களின் சம்பளம் ரூ.3.5 லட்சமாகவும் அதிகரிக்கப்பட்டு உள்ளது. இவர்களது சம்பளம் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை மாற்றம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பளமும் 5 ஆண்டுக்கு ஒரு முறை மாற்றி அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்

உயர்வுடன் தொடங்கிய இந்திய பங்கு சந்தை

மும்பை, பிப்.1: இந்திய பங்குச்சந்தைகளில் வர்த்தகம் உயர்வுடன் தொடங்கியது.மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் நேற்று 35 ஆயிரத்து 965 புள்ளிகளுடன் வர்த்தக முடிந்த நிலையில் இன்று 80 புள்ளிகளுக்கும் அதிக உயர்வுடன் வர்த்தகம் தொடங்கியது. இன்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸ் அதிகபட்சமாக 36 ஆயிரத்து 151 புள்ளிகளைத் தொட்டது. அதேபோன்று நிஃப்டி நேற்று 11 ஆயிரத்து 27 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்த நிலையில் இன்று உயர்வுடன் தொடங்கி அதிகபட்சமாக...
மேலும்

ஷாருக்கான் பண்ணை இல்லம் ‘சீல்’ வைப்பு

மும்பை, ஜன.31: மகாராஷ்டிராவின் மும்பை நகரில் அலிபாக் பகுதியில் இந்தி திரையுலகின் மெகா ஸ்டாராக இருக்கும் நடிகர் ஷாருக் கானின் பண்ணை இல்லம் ஒன்று உள்ளது. இந்த நிலையில், விவசாயம் செய்யும் நிலத்தில் அவர் பங்களா கட்டி உள்ளார் என குற்றச்சாட்டு எழுந்தது. கடந்த டிசம்பரில், பினாமி சொத்து பரிமாற்றம் தடை சட்டத்தின்கீழ் வருமான வரி துறையினர் அவருக்கு நோட்டீஸ் அனுப்பினர். இந்த பண்ணை இல்லத்தின் அறிவிக்கப்பட்ட...
மேலும்

நாகாலாந்தில் தேர்தல் நடத்துவதில் சிக்கல்

கோகிமா, ஜன.30: நாகாலாந்தில் தீவிரவாதிகள் பிரச்சனைக்கு தீர்வு காணாததை கண்டித்து பிப்ரவரி 27-ந் தேதி நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை புறக்கணிக்கப்போவதாக பிஜேபி, காங்கிரஸ் உள்ளிட்ட 11 கட்சிகள் அறிவித்துள்ளன. வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான நாகாலாந்தில், தனி நாடு கோரி பல ஆண்டுகளாக போராட்டம் நடைபெற்று வருகிறது. தனி நாடு கோரிக்கைக்காக வன்முறைப் பாதையில் போராடி வந்த போராளிக் குழுக்களுக்கும் ராணுவத்துக்கும் தொடர்ந்து சண்டை நடைபெற்று வந்தது....
மேலும்

புதுவையில் பெண் தாதா எழிலரசி, கூட்டாளிகள் கைது

புதுவை, ஜன. 30:  புதுச்சேரி முன்னாள் சபாநாயகர் சிவக்குமார் கொலை வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான பெண் தாதா எழிலரசி மற்றும் அவரது கூட்டாளிகள் 14 பேரை போலீசார் கைது செய்தனர்.
மேலும்