Home » Category >இந்தியா (Page 2)

சோம்நாத் சாட்டர்ஜி கொல்கத்தாவில் மரணம்

சென்னை, ஆக.13:மக்களவை முன்னாள் சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி (வயது 89) காலமானார். உடல்நலம் பாதிக்கப்பட்ட சோம்நாத் ஆகஸ்ட் 10-ம் தேதி கொல்கத்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த சோம்நாத் சாட்டர்ஜி, 2004 முதல் 2009 வரை ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது, மக்களவை சபாநாயகராக இருந்தார். அப்போது ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு அளித்து வந்த ஆதரவை...
மேலும்

கமல், சூர்யா தலா ரூ.25 லட்சம் நிதியுதவி

திருவனந்தபுரம், ஆக.12: மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மாநிலத்திற்கு கமல், சூர்யா ஆகியோர் தலா ரூ.25 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளனர். விஜய் தொலைக்காட்சி ரூ.25 லட்சம் நிதியுதவியை முதலமைச்சர் துயர் நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளது. மற்றும் விஜய் மக்கள் இயக்கம் சார்பாக பாதிக்கப்பட்டுள்ள திருவனந்தபுரம் பகுதியில் மக்களுக்கு இலவசமாக அரிசி சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் ஆகியவை நேரில் சென்று வழங்கினர். கேரளாவில் வெள்ளப்பெருக்கு மற்றும் மண் சரிவால் எட்டு மாவட்டங்கள்...
மேலும்

மீட்பு பணியில் ராணுவம், தேசிய பேரிடர் குழு

திருவனந்தபுரம், ஆக.11: கேரளாவில் மழை வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 29 ஆக உயர்ந்துள்ளது. மூணார் ஓட்டலில் சிக்கி தவித்த 60 சுற்றுலா பயணிகளை ராணுவம் மீட்டது. வெள்ளசேத பகுதிகளை பார்வையிட மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நாளை கேரளா வருகிறார். சுற்றுலா தளமான மூணாறில் உள்ள ஓட்டலில் சிக்கி தவித்த 60 சுற்றுலா பயணிகளை ராணுவத்தினர் பத்திரமாக மீட்டனர். கேரளாவில் சில நாட்களாக ஓய்ந்து இருந்த...
மேலும்

டெல்லியில் 2 ம் வகுப்பு மாணவி பலாத்காரம்

புதுடெல்லி, ஆக.10:தலைநகர் டெல்லியில் அரசால் நடத்தபட்டு வரும் பள்ளியில் 2 ம் வகுப்பு மாணவியை எலக்ட்ரீசியன் பாலியல் பலாத்காரம் செய்யபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த பள்ளி வளாகத்தில் உள்ள தண்ணீர் பம்புக்கு அந்த மாணவியை இழுத்து சென்று அங்கு பாலியல் பலாத் காரம் செய்ததாக குற்றம் சாட் டப்பட்டுள்ளது. இதுதொடர்பாக எலக்ட்ரீசியனை டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர். பாதிக்கபட்ட சிறுமி பள்ளிகூடம் அருகே உள்ள...
மேலும்

கடவுளின் தேசம் சின்னாபின்னமாகியது

திருவனந்தபுரம், ஆக.10:கடவுளின் தேசம் என அழைக்கப்படும் இயற்கை எழில் கொஞ்சும் கேரளாவில் கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பெரும் மழை வெள்ள சேதம் ஏற்பட்டுள்ளது. மிகவும் உயரமான இடுக்கி அணை உள்ளிட்ட மாநிலத்தின் 24 அணைகளும் திறந்துவிடப்பட்டு இருப்பதால் கேரளாவில் மத்திய பகுதி முழுவதும் வெள்ளமாக காட்சியளிக்கிறது. இதுவரை 26 பேர் பலியாகியுள்ளனர். பிரதமர் மோடி முதலமைச்சர் பினராயி விஜயனை தொடர்புகொண்டு மத்திய அரசு எல்லா...
மேலும்

காசி கங்கை கரையில் கருணாநிதிக்கு சிரார்த்தம்

வாரணாசி, ஆக9:மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு புகழ் பெற்ற காசியில் கங்கை கரையில் அவரது நினைவாக சிரார்த்தம் செய்யப்பட்டது. காசியில் உள்ள கங்கை நதிக்கரையில் இரவில் நடைபெறும் கங்கா ஆர்த்தி நிகழ்ச்சி உலகப் புகழ்பெற்றதாகும். அதிலும் உயிரிழந்தவர்களுக்கு சிரார்த்தம் கொடுப்பது மிகவும் புண்ணியமானதாக கருதப்படுகிறது. கருணாநிதியின் உடல் நேற்று மெரினா கடற்கரையில் அண்ணா சமாதி அருகே நல்லடக்கம் செய்யப்பட்டபோது இங்கு வர முடியாத காசி வாழ் தமிழர்களும்,...
மேலும்

திருமுருகன் காந்தி கைது: வைகோ கண்டனம்

பெங்களூரு, ஆக.9: ஐக்கிய நாடுகள் சபையில் உரை நிகழ்த்திவிட்டு நாடு திரும்பிய மே 17 இயக்கம் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தியை பெங்களூரு விமான நிலையத்தில் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டத்தின் போது நிகழ்த்தப்பட்ட துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக மே 17 இயக்கம் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி ஐக்கிய நாடுகள் சபையில் உரை நிகழ்த்தினர். இதனைத் தொடர்ந்து இன்று அவர் நாடு திரும்பினர்....
மேலும்

மாநிலங்களவை துணைத் தலைவராக  பிஜேபி ஆதரவு ஹரிவன்ஷ் வெற்றி

புதுடெல்லி, ஆக.9:மாநிலங்களவை துணைத் தலைவராக தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் ஹரிவன்ஷ் வெற்றி பெற்று உள்ளார். காங்கிரஸ் வேட்பாளர் பி.கே. ஹரிபிரசாத்தை 125 ஓட்டுகள் அதிகம் பெற்று வெற்றி பெற்று உள்ளார்.மாநிலங்களவைத் துணை தலைவராக இருந்த பி.ஜே.குரியனின் பதவிக்காலம் கடந்த ஜூலை 1ம் தேதியுடன் முடிவடைந்த நிலையில் அந்தப் பதவிக்கு இன்று காலை 11 மணிக்கு தேர்தல் நடைபெற்றது. இதில் பிஜேபி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின்...
மேலும்

ஐசிசி தரவரிசை: விராட் கோலி முதலிடம்

லண்டன், ஆக.5: ஐசிசி டெஸ்ட் போட்டிகளுக்கான பேட்ஸ்மேன்கள் தர வரிசையில் முதல் இடத்தை பிடித்தார் விராட் கோலி. இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி முதல் டெஸ்ட் போட்டியில் 31 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இந்திய அணி தோல்வியை தழுவிய போதிலும் விராட் கோலி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி முதல் இன்னிங்சில் 149 ரன்களையும் இரண்டாவது இன்னிங்சில் 51 ரன்களையும் குவித்தார்.இதனால் புதிதாக வெளியிடப்பட்டுள்ள பேட்ஸ்மேன்களுக்கான...
மேலும்

பரூக் அப்துல்லா வீட்டை தகர்க்க முயற்சி

ஸ்ரீநகர், ஆக.4: ஜம்மு காஷ்மீரில் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லாவின் வீட்டின் மீது காரை மோதவிட்டு கேட்டை இடித்து தள்ளிய தீவிரவாதி பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொள்ளப்பட்டார். ஜம்மு காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வரும் தேசிய மாநாட்டுக் கட்சி தலைவருமான பரூக் அப்துல்லாவின் வீடு ஜம்முவின் பதிண்டி பகுதியில் உள்ளது. இவரது வீட்டை நோக்கி இன்று மர்ம நபர் ஒருவர் காரில் வந்துள்ளார். வந்த வேகத்தில் வீட்டின் முன்பக்க...
மேலும்

ரெயில் படிக்கட்டில் இளைஞர்கள் அட்டகாசம்

மும்பை, ஆக.2:மும்பையில் புறநகர் ரயில் படிக்கட்டில் பயணம் செய்து கொண்டிருந்த இளைஞர்கள் சிலர் அதை செல்பி வீடியோ எடுத்தனர். அப்போது ரயில்வே நடைபாதையில் சென்றுக்கொண்டிருந்த ஒருவருடைய போனை இளைஞர்களில் ஒருவர் பறித்தார். இந்த சம்பவமும் அந்த கைபேசியில் எடுக்கப்பட்ட வீடியோவில் பதிவானது. செல்போனை திருடியது மட்டுமில்லாமல், மும்பை இளைஞர்கள் ஆபத்தை உணராது செய்த இந்த பயணம் பலரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது. இந்த வீடியோ தற்போது வெளியாகி...
மேலும்