w
Home » Category >இந்தியா (Page 114)

சசிகலாவுக்கு சலுகை: ஃபிரிட்ஜை மறைத்த அதிகாரிக்கு பரிசாக வீட்டுமனை, புதிய கார்

பெங்களூரு, ஜூலை 25: சோதனையின் போது ஒரு ஃபிரிட்ஜையே மறைத்து வைத்த சிறை அதிகாரி பற்றி அதிர்ச்சி தகவல் கிடைத்துள்ளது. சசிகலாவுக்கு அளித்த சிறப்பு சலுகைகளுக்காக அவருக்கு வீட்டு மனையும், புதிய காரும் பரிசளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. பெங்களூரு சிறையில் சசிகலாவுக்கு சிறப்பு வசதிகள் அளித்தது தொடர்பாக தினமும் ஒவ்வொரு செய்திகள் வெளியாகி வருகின்றன. கர்நாடக மாநில டிஜிபிக்கு வந்துள்ள மர்ம கடிதத்தில் அதிர்ச்சி தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்போதைய காவல்துறை...
மேலும்

பிரிவினைவாத இயக்கங்களைச் சேர்ந்த 7 பேர் கைது: காஷ்மீரில் பலத்த பாதுகாப்பு

காஷ்மீர், ஜூலை 25: காஷ்மீரில் பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி உதவி அளித்தது தொடர்பாக 7 பேர் கைது செய்யப்பட்டது. இதுகண்டித்து காஷ்மீரில் இன்று முழு அடைப்பிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி உதவி அளித்தது தொடர்பான புகாரில் காஷ்மீர் பிரிவினைவாத இயக்கங்களைச் சேர்ந்த 7 பேரை காஷ்மீர் மற்றும் டெல்லியில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட ஏழு பேரும்...
மேலும்

நாட்டின் 14-வது ஜனாதிபதியாக ராம்நாத் கோவிந்த் பதவியேற்றார்

புதுடெல்லி, ஜூலை 25: நாட்டின் 14-வது ஜனாதிபதியாக ராம்நாத் கோவிந்த் இன்று பதவியேற்றார். அவருக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். பதவியேற்ற பின் உரையாற்றிய ராம்நாத் கோவிந்த்,பெருமைக்குரிய இந்த பணியை பணிவுடன் ஏற்று கொள்வதாகவும், பொறுப்பை உணர்ந்து சிறப்பாக பணியாற்றுவேன் என்றும் உறுதி அளித்தார். 2012 முதல் ஜனாதிபதி பதவியை வகித்த பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் நிறைவடைந்து விட்டதால் புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்காக கடந்த...
மேலும்

மன்னிப்பு கேட்டார் அக்‌ஷய் குமார்

ஜூலை.24  இங்கிலாந்தில் நடைபெற்ற மகளிர் கிரிக்கெட் இறுதிப்போட்டியை காண நேற்று சென்றார் இருந்த பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார். ஸ்டேடியத்தில் இருந்தபடி தேசியக் கோடியுடன் இந்திய அணி வீராங்கனைகளை உற்சாகப்படுத்தி வந்தார். அப்போது தேசியக்கொடியை தலைகீழாக பிடித்திருந்தார். இதை கவனிக்காமல் அந்த புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டிருந்தார். வெளியான சில நிமிடங்களிலேயே அக்‌ஷய் குமார் சர்ச்சைக்குள்ளானது. இதையடுத்து அவர் அந்த புகைபடத்தையும் நீக்கினார். இதையடுத்து அக்‌ஷய் குமார் தனது...
மேலும்

கணவர் இறந்த நாளில் குழந்தை பெற்றெடுத்த பெண்

மும்பை, ஜூலை 24: கணவர் இறந்த நாளன்று மனைவிக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. மகாராஷ்டிராவின் பால்கரை சேர்ந்தவர் கிரண்(வயது 25), இவரது மனைவி நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார்.சம்பவத்தன்று கிரண் சரக்கு வேனில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.அப்போது வேன் திடீரென சூடானதால் நந்தூர் கிராம பகுதியில் நிறுத்திவிட்டு வேனின் உள்ளே அமர்ந்திருந்தார்.அந்தவழியாக வந்த அரசு பேருந்து வேனின் மீது மோதவே உள்ளே இருந்த கிரண் பரிதாபமாய் உயிரிழந்தார்....
மேலும்

முன்னாள் இஸ்ரோ தலைவர் மரணம்: மோடி இரங்கல்

பெங்களூரு, ஜூலை 24: இந்தியாவின் முதல் செயற்கைகோள் விஞ்ஞானி, ஆரியப்பட்டாவை விண்ணில் ஏவ முக்கிய பங்காற்றி யு.ஆர்.ராவ் உடல்நலக்குறைவால் இன்று காலமானர். இவர் 10 ஆண்டுகள் இஸ்ரோ தலைவராக பணியாற்றி பல்வேறு சாதனைகளை புரிந்தார். இவரின் மரணத்துக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலத்தின் அடமாரு என்ற கிராமத்தில் 1932-ம் ஆண்டு மார்ச் 10-ம் தேதி உடுப்பி ராமச்சந்திர ராவ் பிறந்தார். உடுப்பி ராமச்சந்திர ராவ்,...
மேலும்

மோடியுடன் ஓபிஎஸ் திடீர் சந்திப்பு

புதுடெல்லி, ஜூலை 24:டெல்லி சென்றுள்ள முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், பிரதமர் நரேந்திர மோடியை இன்று சந்தித்துள்ளார். அவருடன் எம்.பி. மைத்ரயன், முன்னாள் அமைச்சர் செம்மலை, கே.பி. முனுசாமி ஆகியோர் சென்றனர். இந்த சந்திப்பின்போது, தமிழக அரசியல் நிலவரம் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. அதிமுக அணிகள் இணைப்பு குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.தொடர்ந்து நீட் தேர்வு விவகாரம் குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது. அவர்களின் இந்த சந்திப்பு...
மேலும்

லாலு மகள் சொத்து பறிமுதலா?

புதுடெல்லி, ஜூலை 24:ஊழல் குற்றச்சாட்டு காரணமாக லாலு பிரசாத் மகள் மிசாபாரதியின் சொத்துகளை முடக்கி கையகப்படுத்த அமலாக்கத்துறை முடிவு செய்துள்ளது. விரைவில் அதற்கான நடவடிக்கைகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பீகார் முன்னாள் முதலமைச்சரும் ராஷ்டீரிய ஜனதா தளம் கட்சித் தலைவருமான லாலு பிரசாத் யாதவின் மகள் மிசா பாரதி. இவர் எம்பியாக உள்ளார். மிசா பாரதியும் அவரது கணவர் சைலேஷ்குமாரும் ஏராளமான அசையும் மற்றும் அசையா சொத்துக்கள்...
மேலும்

உச்சம் தொட்ட பங்குசந்தைகள்

புதுடெல்லி, ஜூலை 24:பங்குச் சந்தை இன்று திறந்தவுடன் சென்செக்ஸ் 32,135 புள்ளிகளையும், நிப்டி 9,939 புள்ளிகளையும் தொட்டு சாதனை படைத்துள்ளன. நாட்டின் வர்த்தக பங்குச் சந்தை இன்று காலை திறந்தவுடன் 32,100.22 புள்ளிகளை சென்செக்ஸ் தொட்டது. பின்னர் 32,135 புள்ளிகள் உயர்ந்தது. கடந்த வெள்ளிக் கிழமை சென் செக்ஸ் 32,082 புள்ளிகளுடன் நிறைவடைந்தது. இன்று 53.62 புள்ளிகள் அதிகரித்துள்ளது. 52 வாரங்களுக்குப் பின்னர் இன்று சென்செக்ஸ் உச்சத்தை...
மேலும்

திலீப் ஜாமீன் மனு: ஐகோர்ட் தள்ளுபடி

திருவனந்தபுரம், ஜூலை 24: நடிகை பாவனா காரில் கடத்தப்பட்டு, மானபங்கம் செய்யப்பட்ட வழக்கில், மலையாள நடிகர் திலீப்பிற்கு ஜாமின் வழங்க கேரள உயர்நீதிமன்றம் மறுத்து விட்டது. பிரபல திரைப்பட நடிகை பாவனா கடந்த பிப்ரவரி மாதம் கேரளாவில் ஓடும் காரில் கடத்தப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இந்த வழக்கில் பல்சர் சுனில் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களைத் தொடர்ந்து இச்சம்பவத்திற்கும் நடிகர் திலீப்பிற்கும் தொடர்பு இருப்பதாக...
மேலும்

பிரணாப் முகர்ஜிக்கு பிரிவு உபசார விழா

புதுடெல்லி, ஜூலை 24:நாடாளுமன்ற மைய மண்டபத்தில் பிரணாப் முகர்ஜிக்கு பிரிவு உபசார விழா நேற்று நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஓய்வு பெற உள்ள நிலையில், அவருக்கு நாடாளுமன்ற மைய மண்டபத்தில் பிரிவு உபச்சார விழா நடைபெற்றது. இதில், பிரதமர் மோடி, மாநிலங்களவை தலைவரும் துணை ஜனாதிபதியுமான ஹமீது அன்சாரி, மக்களவை தலைவர் சுமித்ரா மஹாஜன், மத்திய...
மேலும்