Home » Category >இந்தியா (Page 1)

மணமகனுக்கு மொட்டை அடித்த பெண்ணின் குடும்பம்

உத்திரபிரதேச மாநிலம் லக்னோவில் வரதட்சணை கேட்டு திருமணம் செய்ய மறுத்த மணமகனுக்கு மொட்டை அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்திரபிரதேச மாநிலம் லக்னோவை சேர்ந்தவர் மங்கள் சிங். இவருக்கு நிச்சயிக்கப்பட்டிருந்த பெண்ணின் பெற்றோரிடம் வரதட்சணை கொடுத்தால் தான் திருமணம் என்று கூறி மிரட்டியுள்ளார். தனக்கு வரதட்சணையாக மோட்டார் சைக்கிள், தங்கச் சங்கிலி கொடுக்க வேண்டும் என்பது அவரது நிபந்தனையாகும். பணம் இல்லாததால் இதைக் கொடுக்க பெண் வீட்டார்...
மேலும்

டெல்லியில் 400 பெட்ரோல் பங்குகள் மூடல்

புதுடெல்லி, அக்.22:பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு காரணமான வாட் வரியைக் குறைக்க வலியுறுத்தி டெல்லியில் நடந்த ஒருநாள் போராட்டத்தில் 400 பெட்ரோல் பங்குகள் இன்று மூடப்பட்டன. ‘கடந்த செப்டம்பர் மாதம் 4 ஆம் தேதி மத்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசல் விலையை 2.50 காசுகள் குறைத்தது. ஆனால் டெல்லி மாநில அரசு வாட் வரியை குறைக் காததால் அண்டை மாநிலங்களை விட இங்கு எரிபொருட்களின் விலை...
மேலும்

ஷியாமளாவாகும் சிம்லா

சென்னை, அக்.22:இமாச்சலப்பிரதேச மாநிலத்தின் தலைநகரான சிம்லாவின் பெயரை ஷியாமளா என மாற்ற ஆளும் பிஜேபி அரசு ஆலோசித்து வருகிறது. அண்மையில் உத்தரப்பிரதேசத்தில் உள்ள அலகாபாத் நகரின் பெயர் பிராயாக்ராஜ் என மாற்றப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, பிஜேபி ஆளும் இமாச்சலப்பிரதேசத்தில் உள்ள சிம்லாவின் பெயரை ஷியாமள என மாற்ற ஆலோசிக்கப்பட்டு வருகிறது. சிம்லா என்ற பெயர் ஆங்கிலேயர்களால் சூட்டப்பட்டது என்றும், அதே பெயரை நாமும் பின்பற்றுவது மனதளவில் அடிமைத்தனம்...
மேலும்

பேருந்துகள் மோதி 19 பேர் பலி

இஸ்லாமாபாத்,அக்.22:பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் அருகே புல் காஜி காட் பகுதியில் இரண்டு பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் 19 பேர் உயிரிழந்தனர். 40 பேர் காயமடைந்துள்ளனர். இஸ்லாமாபாத்திலிருந்து தேரா காஜி கான் நகரை நோக்கி சென்று கொண்டிருந்த ஒரு பேருந்தும், எதிர் திசையில் வந்த மற்றொரு பேருந்தும் நேருக்கு நேராக மோதி பயங்கரமான விபத்து ஏற்பட்டது. இதில் பேருந்துகளில் முன்பக்கங்கள் முற்றிலுமாக சேதம் அடைந்தன....
மேலும்

6000 நீதிபதிகளை தேர்வு மூலம் நியமிக்க திட்டம்

புதுடெல்லி,அக்.22:நாட்டில் உள்ள கீழமை நீதிமன்றங்களில் காலியாக இருக்கும் நீதிபதிகளின் பணியிடங்களை நிரப்ப தேர்வு மூலம் 6000 நீதிபதிகளை நியமிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் சுமார் 2.78 கோடி வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த வழக்குகளை விரைந்து முடிக்க அரசும், உச்சநீதிமன்றமும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. லோக் அதாலத், கிராம சபை கூட்டங்களில் ஆயிரக்கணக்கான வழக்குகள் ஒரே நாளில் தீர்த்து வைக்கப்படுகின்றன....
மேலும்

ஐயப்பன் சன்னிதானம் வரை வந்த பெண்களால் பரபரப்பு

 சபரிமலை, அக்.19:ஐயப்பன் பக்தர்கள் மற்றும் சபரிமலை சன்னிதான அர்ச்சகர்களின் கடும் எதிர்ப்பால், கோவிலுக்குள் நுழையச் சென்ற 2 பெண்கள் திருப்பி அனுப்பப்பட்டனர். கோவிலுக்குள் பெண்கள் நுழைந்தால் சன்னிதானத்தை மூடுமாறு பந்தளம் மன்னர் மேல்சாந்திக்கு உத்தரவிட்டு உள்ளார். சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த மாத ஐயப்ப பூஜைக்காக புதன்கிழமை நடை திறக்கப்பட்டது. உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து பெண்கள் சிலர் சபரிமலை கோவிலுக்குச்...
மேலும்

சாலையோரம் உறங்கிய 6 பேர் விபத்தில் பலி

திருப்பதி, அக்.17:ஆந்திராவில் சாலையோரம் படுத்து உறங்கிய 6 பேர் லாரி மோதி உயிரிழந்தனர். ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டம் ஆளூரு மண்டலம் பெத்த ஓத்தூரு பகுதியை சேர்ந்தவர் ஷேக் காஜா (வயது 27). இவரது மனைவி பாத்திமா. இவர்களது குழந்தைக்கு மொட்டை போடுவதற்காக தங்களது உறவினர்கள் 21 பேருடன் 3 லோடு ஆட்டோவில் கர்னூல் அருகேயுள்ள எல்லாத்தி தர்காவுக்கு இன்று அதிகாலை சென்றனர். கர்னூல் அருகே அவர்கள்...
மேலும்

சபரிமலையில் பக்தர்கள் போராட்டம்

சபரிமலை, அக்.17:சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களும் அனுமதிக்கப்பட வேண்டும் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு பின்னர் மாதாந்திர பூஜைக்காக கோவில் நடை இன்று திறக்கப்படவுள்ள நிலையில் பம்பா, நிலக்கல் உள்ளிட்ட பகுதிகளில் போராட்டங்கள் நடந்து வருகின்றன. நிலக்கல்லில் பக்தர்களின் கூடரங்கள் அகற்றப்பட்டதால், போலீசுக்கும்,பக்தர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. சபரிமலை கோயிலில் பாதுகாப்பை உறுதி செய்ய ,போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களும்...
மேலும்

சபரிமலை சிக்கல் நீடிப்பு

புதுடெல்லி, அக்.16: சபரிமலை விவகாரத்தில் உச்சநீதி மன்றத்தின் உத்தரவை அமல்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று கேரள மாநில அரசு அறிவித்திருப்பது பிரச்சனையை சிக்கலாக்கும் என கருதப்படுகிறது. அனைத்து வயது பெண்களும் சபரி மலை ஐயப்பன் கோவிலில் வழிபாடு நடத்தலாம் என்று கடந்த மாதம் 28-ந் தேதி உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆரம்பத்தில் இந்த தீர்ப்பு வரவேற் கப்பட்டபோதிலும் பின்னர் அதற்கு கடும் எதிர்ப்பு...
மேலும்

பிரதமர் மோடி ஆலோசனை

புதுடெல்லி, அக்.15: பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், டெல்லியில் எண்ணெய் நிறுவன தலைமைச் செயல் அதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தி உள்ளார். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை உயர்ந்து வருவதால், இந்தியாவில் பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயுவின் விலை தொடர்ந்து கடுமையாக உயர்ந்து வருகிறது. இதன் காரணமாக நாட்டின் வளர்ச்சி பாதிக்கப்படும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.  இந்த நிலையில் வரும் நவம்பர்...
மேலும்

மகாராஷ்டிராவில் வீடு தேடி வரும் மது

மும்பை, அக்.14:குடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவர்களால் சாலை விபத்துகள் தொடர்ந்து உயர்ந்து வருவதை குறைக்கும் வகையில் மதுபானங்களை வீட்டிற்கே சென்று வழங்கும் திட்டத்தை அறிமுகம் செய்ய உள்ளதாக மகாராஷ்டிரா அரசு தெரிவித்துள்ளது. மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவர்களால் சாலை விபத்துகள் தொடர்ந்து உயர்ந்த வண்ணம் உள்ளன. சாலை விபத்துகளை குறைப்பதற்கும், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவர்களை கட்டுப்படுத்தவும் அந்தந்த மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில்...
மேலும்