Home » Category >இந்தியா

மக்களவையில் 6 மணிக்கு வாக்கெடுப்பு

புதுடெல்லி, ஜூலை 20:மக்களவையில் மோடி அரசு மீதான நம்பிக்கை இல்லா தீர்மானம் மீது இன்று மாலை 6.00 மணிக்கு வாக்கெடுப்பு நடைபெறுகிறது. இதில் தீர்மானம் தோற்கடிக்கப்பட்டு அரசுக்கு ஆதரவாக 312பேர் வாக்களிப்பார்கள் என்று நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் ஆனந்தகுமார் கூறியுள்ளார். ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கி அதிக நிதி ஒதுக்கீடு செய்யாததை சுட்டிக்காட்டி மோடி தலைமையிலான மத்திய அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தை நேற்று முன்தினம் தெலுங்கு...
மேலும்

நாடு முழுவதும் லாரிகள் வேலை நிறுத்தம்

சென்னை, ஜூலை 20:நாடு முழுவதும் இன்று காலை 6 மணி முதல் லாரிகள் வேலை நிறுத்தம் துவங்கியது. தமிழ்நாட்டில் சுமார் 4 லட்சம் லாரிகள் ஓடவில்லை. இதனால் அத்தியாவசிய பொருட்கள் தேங்கி உள்ளது. டீசல் விலையை குறைக்க வேண்டும், சுங்க சாவடிகளை அகற்றி விட்டு ஆண்டுக்கு ஒரு முறை சுங்க கட்டணம் வசூலிக்க வேண்டும், 3-ம் நபர் காப்பீட்டு தொகை உயர்யவ கட்டுப்படுத்த வேண்டும் என்பது உள்பட...
மேலும்

பேருந்து கவிழ்ந்து 10 பேர் பலி

டேராடூன், ஜூலை 19:உத்தரகாண்ட் மாநிலம் ரிஷிகேஷ் – கங்கோத்ரி நெடுஞ்சாலையில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 10 பேர் பலியாகினர். 25 பயணிகளுடன் சென்ற உத்தரகாண்ட் அரசு போக்குவரத்துக் கழக பேருந்து, சுல்யாதர் என்ற இடத்தில் கட்டுப்பாட்டை இழந்து 250 மீட்டர் பள்ளத்தில் கவிழ்ந்துள்ளது. தகவலறிந்து அதிகாரிகள் மற்றும் மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். இதில் 10 பேர் உடல்நசுங்கி சம்பவ...
மேலும்

மோடி அரசு வெற்றி பெறுவது உறுதி-மத்திய அமைச்சர்

புதுடெல்லி, ஜூலை 19:மக்களவையில் நாளை நடைபெறவுள்ள நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் மோடி அரசு வெற்றி பெறும் என்றும், அரசுக்கு 3 ல் 2 பங்கு எம்பிக்கள் ஆதரவாக உள்ளனர் என்றும் மத்திய அமைச்சர் அனந்தகுமார் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் மழைக்கால கூட்டத்தொடரில் முதல் நாளான நேற்று மோடி அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தை தெலுங்கு தேசம் கட்சி கொண்டு வந்தது இதற்கு எதிர்கட்சிகளை சேர்ந்த 50 எம்பிக்கள்...
மேலும்

மோடி அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு அனுமதி

புதுடெல்லி, ஜூலை 18:மோடி அரசுக்கு எதிராக எதிர்க்கட்சி கள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தை விவாதித்திற்கு அனுமதிப்பதாக மக்களவையில் சபாநாயகர் சுமித்ரா மகாஜன் அறிவித்தார். நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. மக்களவை கூடியதும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பல்வேறு பிரச்சினைகளை எழுப்பி அமளியில் ஈடுபட்டனர்.ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் விஷயத்தில் மோடி அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவதற்கான நோட்டீசை...
மேலும்

ஆறுமாடி கட்டிடம் இடிந்து விழுந்து 3 பேர் பலி

நொய்டா, ஜூலை 18:நொய்டாவில் 6 மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் சுமார் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். உத்தரப்பிரதேசம் மாநிலம் நொய்டாவில் ஷா பரி கிராமத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் 6 மாடி கட்டிடம் திடீரென அதன் அருகாமையில் இருந்த கட்டிடம் மீது இடிந்து விழுந்ததில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பவம் குறித்து அNஐ தகவலின் படி, இந்த விபத்தில் இடிபாடுகளில் சிக்கி சுமார் 3...
மேலும்

மூழ்கிய காரில் இருந்து உயிர் தப்பிய குடும்பம்

மும்பை, ஜூலை 17: மும்பை அருகே நவி மும்பை பகுதியில் ஆற்றில் மூழ்கிய காரில் இருந்து 4 பேர் கொண்ட குடும்பம் அதிசயமாக உயிர் தப்பியுள்ளது. தால்ஜோ பகுதியில் உள்ள கார்மேகான் என்ற இடத்தில் நேற்று மதியம் இந்த 4 பேர் கொண்ட குடும்பத்தினர் காரில் சென்று கொண்டிருந்த போது பாலத்தில் மோதிய கார் ஆற்றுக்குள் விழுந்து விட்டது. கரைபுரண்டு ஓடிய வெள்த்தில் அடித்து செல்லப்பட்ட காரை ஒரு...
மேலும்

சட்டத்தை கையில் எடுக்கக்கூடாது: சுப்ரீம் கோர்ட்

புதுடெல்லி, ஜூலை 17: பசுப் பாதுகாவலர்கள் எனக்கூறி எந்த ஒரு குடிமகனும் சட்டத்தை கையில் எடுக்க முடியாது என உச்சநீதிமன்றம் அறிவுரை கூறியுள்ளது. பசுப் பாதுகாவலர்கள் என்ற பெயரில் பொதுமக்கள் மீது நடத் தப்படும் வன்முறை சம்பவங்கள் குறித்து உபி, ராஜஸ்தான், அரியானா ஆகிய மூன்று மாநிலங்களின் தலைமை செயலாளர்களும் நேரில் ஆஜராகி அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து, பசுப் பாதுகாவலர்கள் எனக்கூறி...
மேலும்

இந்தியர்களின் கணக்குகளை சுவிஸ் வெளியிட்டது

டெல்லி, ஜூலை 16:  சுவிட்சர்லாந்தில் உள்ள வங்கிகளில், உள்நாட்டவர், வெளிநாட்டவர்களால் வங்கி கணக்கு தொடங்கப்பட்டு, உரிமை கோராமல் முடங்கிக் கிடக்கும் கணக்குகள் குறித்த விபரங்களை, அந்நாட்டு வங்கி கட்டுப்பாட்டு அமைப்பு 2015-ம் ஆண்டுமுதல் வெளியிட்டு வருகிறது. இந்த நிலையில், மூன்றாம் ஆண்டாக, தற்போது, புதிய பட்டியலை சுவிட்சர்லாந்து வங்கி கட்டுப்பாட்டு அமைப்பு வெளியிட்டுள்ளது. அதில், 3,500 பேரின் கணக்கு விவரங்கள் இடம்பெற்றுள்ளன. இதில், ஆறு இந்தியர்களின் கணக்குகள்...
மேலும்

நரசிம்மராவ் உறவினருக்கு 3 ஆண்டு சிறைதண்டனை

புதுடெல்லி, ஜூலை 13: யூரியா உரம் ஊழல் வழக்கில் முன்னாள் பிரதமர் நரசிம்மராவின் உறவினர் சஞ்சீவராவுக்கு 3 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து டெல்லி சிறப்பு சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 1996-ம் ஆண்டு தேசிய உரம் நிறுவனம் செய்து கொண்ட ஒப்பந்தங்களில் ரூ.133 கோடி ஊழல் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது குறித்து சிபிஐ விசாரணை நடத்தி வழக்கு தொடர்ந்தது. உர நிறுவனத்திற்கு 2 லட்சம் மெட்ரிக் டன் யூரியா...
மேலும்

ராகுல்காந்தியுடன் பா.ரஞ்சித் சந்திப்பு

புதுடெல்லி, ஜூலை 11: மெட்ராஸ், கபாலி, காலா படங்களை இயக்கிய பா.ரஞ்சித் புதுடெல்லியில் நேற்று அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியை சந்தித்து பேசினார். அவருடன் நடிகர் கலையரசனும் உடன் சென்றார். ராகுல்காந்தியுடன் அரசியல் நிலவரம், சமூதாயப் பிரச்சனை மற்றும் திரைப்படங்கள் குறித்து விவாதித்ததாக ரஞ்சித் கூறியுள்ளார்.அதேபோல் ராகுல்காந்தியும் தனது டுவிட்டர் பக்கத்தில் ரஞ்சித் உடனான சந்திப்பு குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். சமீபத்தில் நடிகரும், மக்கள் நீதி...
மேலும்