Home » Category >அரசியல் (Page 71)

கருணாநிதியை சந்தித்து நலம் விசாரித்தார் மோடி

சென்னை,நவ.6:தமிழக மழை நிவாரணத்துக்கு மத்திய அரசு அனைத்து உதவிகளையும் செய்யும் என்று பிரதமர் நரேந்திர மோடி உறுதி அளித்துள்ளார். ஒரு நாள் பயணமாக இன்று காலை 9.55 மணி அளவில் சென்னை வந்த பிரதமருக்கு விமான நிலையத்தில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் மற்றும் முப்படை அதிகாரிகள் வரவேற்றனர். சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா கட்டிடத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பின்னர் எம்ஆர்சி நகரில் மேயர் ராமநாதன் செட்டியால்...
மேலும்

கமலுக்கு பிரகாஷ்ராஜ், அரவிந்தசாமி ஆதரவு

சென்னை, நவ.4: வார இதழ் ஒன்றில் எழுதியுள்ள கட்டுரையில் கமல்ஹாசன் தமிழகத்தில் இந்துதுவா ஊடுருவதாக கூறுவதை மறுக்க முடியாது என கூறியிருந்தார். இதற்கு இந்து அமைப்புகளிடம் இருந்து எதிர்ப்புகள் எழுந்துவரும் நிலையில் நடிகர் பிரகாஷ்ராஜ் கமலுக்கு ஆதரவாக டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். அதில் ‘கலாச்சாரம் என்ற பெயரில் இளம் காதலர்களை நடுரோட்டில் அடித்து துன்புறுத்துவது, மாட்டு இறைச்சி சாப்பிடுவோரை அடித்து உதைப்பது போன்றவை இந்து தீவிரவாதம் தான்’...
மேலும்

இந்துத்துவா ஊடுருவல்: கமல்

சென்னை, நவ.2: கமல்ஹாசன் வார இதழ் ஒன்றில் தொடர் எழுதி வருகிறார்.அதில் இந்து தீவிரவாதம் குறித்து அவர் சொன்ன கருத்துக்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள முதல்வர் பினராயி விஜயன், இந்துத்துவ சக்திகள் மெதுவாக தமிழகத்தில் ஊடுருவுவதன் மூலம் திராவிடப் பண்பாட்டை பலவீனப்படுத்துகின்றன. ஒரு சமூக ஆர்வலராக இது பற்றிய உங்கள் கருத்து என்ன? என்று கேள்வி கேட்டிருந்தார். இதற்கு பதிலளித்த கமல்ஹாசன், இந்து வலதுசாரியினர் மற்ற மதத்தைச்...
மேலும்

மூழ்க தயாராகும் சென்னை: எச்சரிக்கும் கமல்

சென்னை, நவ.2:சென்னையின் தென்மேற்கு மற்றும் வடமேற்கு பகுதியில் நீரில் மூழ்க தயாராகி கொண்டிருக்கிறது நடிகர் கமல்ஹாசன் ‘டுவிட்டர்’ மூலம் எச்சரித்துள்ளார். நடிகர் கமல்ஹாசன் தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் நேற்று பதிவிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-இது அரச்சுக்கும், மக்களுக்கும் கொடுக்கப்படும் முன் அறிவிப்பு. உடனே செயல்பட்டால் வருமுன் காப்பதாகும். எனக்கு வரும் செய்திகள் கவலை அளிக்கின்றன. சென்னையின் தென்மேற்கு, வடமேற்கு பகுதிகள் நீரில் மூழ்க தயாராகி கொண்டிருக்கின்றன. சேலையூர் ஏரி,...
மேலும்

ஸ்டாலின் எங்களை எதிரியாக பார்க்கிறார் :அமைச்சர்

புதுடெல்லி, நவ.1:திமுக கட்சி எதிர் கட்சி தலைவர் ஸ்டாலின் எங்களை எதிரியாக பார்க்கிறார் என்று அமைச்சர் ஜெயக்குமார் குற்றஞ்சாட்டியுள்ளார். இரட்டை இலை சின்னம் தொடர்பான விசாரணை டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையத்தில் நடைபெற்று வருகிறது. அதில் கலந்து கொள்ள அமைச்சர் இன்று விமானம் மூலம் டெல்லி சென்றார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது; இரட்டை இலை சின்னத்தை முடக்கி, திமுகவின் எண்ணத்தை நிறைவேற்ற மு.க.ஸ்டாலினுடன், தினகரன் ஒப்பந்தம்...
மேலும்

டிடிவி தினகரனுக்கு நீதிபதி உத்தரவு

சென்னை, நவ.1:அந்நிய செலாவணி மோசடி வழக்கில் வரும் 6ம் தேதி சாட்சிகள் தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்று டிடிவி தினகரனுக்கு எழும்பூர் குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இங்கிலாந்தில் உள்ள வங்கியில் ரூ.1 கோடியே 4 லட்சத்து 93 ஆயிரம் அமெரிக்க டாலர் மற்றும் ரூ.44 லட்சம் இங்கிலாந்து பவுண்டுகளை மற்றொரு நிறுவனத்தின் பெயரில் சட்டவிரோதமாக முதலீடு செய்தது தொடர்பாக கடந்த 1996-ம் ஆண்டு டி.டி.வி.தினகரன்...
மேலும்

ஆளே இல்லாத ஊரில் கச்சேரி நடத்தும் தினகரன்: ஜெயக்குமார்

சென்னை, அக்.30: ஆளே இல்லாத ஊரில் தினகரன் கச்சேரி நடத்துகிறார் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். இரட்டை இலையை யாருக்கு வழங்குவது என்பது தொடர்பான வழக்கு டெல்லி தலைமை தேர்தல் ஆணையத்தில் நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக இன்று இறுதி விசாரணை நடத்தி முடிவு அறிவிக்கப்படலாம் என கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த விசாரணையில் பங்கேற்க டெல்லி புறப்பட்டார். அப்போது சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது; தேர்தல் ஆணையம்...
மேலும்

பழனிசாமி, பன்னீர்செல்வம் போஸ்டர்கள் கிழிப்பு..! பசும்பொன்னில் பதற்றம்..

ராமநாதபுரம், அக்.30: தேவர் குருபூஜை விழாவுக்கு வரும் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அவரை வரவேற்று ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் எல்லாம் தினகரன் ஆதரவாளர்கள் கிழித்து வருவது கலவர சூழலை ஏற்படுத்தியுள்ளது.
மேலும்

தமிழகத்தில் காங்கிரஸ் முடக்கப்பட்டுள்ளது : திருநாவுகரசர் மீது இளங்கோவன் பாய்ச்சல்

சென்னை, அக்.30: தமிழகத்தில் செயல்படமால் காங்கிரஸ் கட்சி திருநாவுக்கரசரால் முடக்கப்பட்டுள்ளது என ஈவிகேஎஸ் இளங்கோவன் குற்றம்சாட்டியுள்ளார். இது குறித்து தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறுகையில்: அரசியலுக்கு யார் வேண்டுமானலும் வரலாம். நடிகர் கமலஹாசன் அரசியலுக்கு வருவதை நான் வரவேற்கிறன். தமிழகத்தில் அதிமுக மற்றும் தமிழக அரசு மட்டும் முடங்கவில்லை. திருநாவுக்கரசால் தமிழக காங்கிரசும் முடக்கப்பட்டுள்ளது.
மேலும்

தீபாவை காணவில்லை:தொண்டர்கள் ஏமாற்றம்

சென்னை, அக்.30:மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா அவர் வசிக்கும் தி.நகர் இல்லம் பூட்டப்பட்டு இருப்பதால் தொண்டர்கள் அவரை காண முடியாமல் ஏமாற்றம் அடைந்துள்ளனர். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அவரது அண்ணன் மகள் ஜெ.தீபா ஜெஅம்மாதீபா பேரவையை தொடங்கி உள்ளார். இந்த பேரவை தீபா வசித்து வரும் அவரது தி.நகர் இல்லத்தில் செயல்பட்டு வருகிறது. நாள்தோறும் இங்கு தீபாவை காண ஏராளமான தொண்டர்கள் வருவது வழக்கம்....
மேலும்

சசிகலா பற்றி திடுக் தகவல் வெளியிட்ட டிஐஜி ரூபா

பெங்களூரு, அக்.29:பெங்களூர் சிறையில் சசிகலாவுக்கு சிறப்பு சலுகைகள் அளிக்கப்பட்டதில் பெரும் தொகை கைமாறி இருக்கிறது என்றும், இது குறித்து விசாரணைக் குழுவிடம் தாம் அறிக்கை தாக்கல் செய்திருப்பதாகவும் போலீஸ் அதிகாரி ரூபா கூறினார். சொத்துக்குழுவிப்பு வழக்கில் சிறைத்தண்டனை பெற்று பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவுக்கு சிறப்பு சலுகைகள் அளிக்கப்பட்டதை டிஐஜி ரூபா கண்டுபிடித்து அம்பலப்படுத்தினார். இது குறித்து வினய்குமார் என்ற ஓய்வு பெற்ற அதிகாரி தலைமையில் விசாரணைக்...
மேலும்