w
Home » Category >அரசியல் (Page 70)

மேகாலயா புதிய முதல்வர் பதவியேற்பு

ஷில்லாங், மார்ச் 6:மேகாலயாவின் புதிய முதலமைச்சராக முன்னாள் மக்களவை சபாநாயகர் பி.ஏ.சங்மாவின் மகன் கான்ராட் சங்மா இன்று பதவியேற்றார். அவருடன் 11 அமைச்சர்களும் பதவியேற்றனர். இந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், பிஜேபி தலைவர் அமித் ஷா உள்ளிட்டோர் பங்கேற்றனர். மேகாலயா சட்டமன்ற தேர்தலில் மொத்தம் உள்ள 60 தொகுதிகளில் தேசிய மக்கள் கட்சி 19 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இந்த கட்சிக்கு ஐக்கிய ஜனநாயக...
மேலும்

ராகுல்காந்தி மீண்டும் வெளிநாடு பயணம்

புதுடெல்லி, மார்ச் 6: மூன்று வடகிழக்கு மாநிலங்களில் வாக்கு எண்ணிக்கை நடந்த போது வெளிநாட்டில் இருந்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மீண்டும் நாளை மறுதினம் சிங்கப்பூர் செல்கிறார். திரிபுரா, மேகாலயா, நாகாலந்து மாநில சட்டமன்ற தேர்தல்களில் பதிவான வாக்குகள் கடந்த 3-ந் தேதி எண்ணப்பட்ட போது காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்நாட்டில் இல்லை. அவர் இத்தாலியில் உள்ள தனது பாட்டியை பார்ப்பதற்காக சென்றிருந்தார். இதை...
மேலும்

கொங்கு மண்டலத்தில் கமல் சுற்றுப்பயணம்

சென்னை, மார்ச் 6:வரும் 10-ம் தேதி முதல் நடிகர் கமல்ஹாசன் மீண்டும் சுற்றுப்பயணம் செல்கிறார். அவிநாசி, ஈரோடு, கோபிசெட்டிப்பாளையம் ஆகிய இடங்களில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார். மக்கள் நீதி மய்யம் சார்பில் மகளிர் தின பொதுக்கூட்டம் வருகிற 8-ந்தேதி சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெற உள்ளது.இந்த கூட்டத்துக்கு அக்கட்சியின் நிறுவன தலைவர் கமல்ஹாசன் தலைமை தாங்குகிறார்....
மேலும்

நிர்வாகிகளுடன் கமல் முக்கிய ஆலோசனை

சென்னை, மார்ச் 5:மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்துவது தொடர்பாக மாவட்ட பொறுப்பாளர்களுடன் கமல்ஹாசன் இன்று ஆலோசனை நடத்தினார். மக்கள் நீதி மய்யம் சார்பில் மகளிர் தின பொதுக்கூட்டம் வருகிற 8-ந்தேதி சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்துக்கு அக்கட்சியின் நிறுவன தலைவர் கமல்ஹாசன் தலைமை தாங்குகிறார். மேலும் கூட்டத்தில் பங்கேற்கும் பெண்களிடம், அவர் கலந்துரையாடல் செய்கிறார். அப்போது...
மேலும்

சுப்ரீம் கோர்ட்டில் கார்த்தி சிதம்பரம் அப்பீல்

புதுடெல்லி, மார்ச் 5: அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில கார்த்தி சிதம்பரம் அப்பீல் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு நாளை விசாரணைக்கு வருகிறது.இதனிடையே சிபிஐயால் கைது செய்யப்பட்ட கார்த்தி சிதம்பரம் மும்பைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். மும்பை சிறையில் உள்ள ஐஎன்எக்ஸ் மீடியாவில் பங்குதாரரான இந்திராணி முகர்ஜியிடம் நேருக்கு நேராக வைத்து விசாரணை நடத்தப்பட்டது. தான் லஞ்சம் கொடுத்ததை இந்திராணி உறுதிப்பட தெரிவித்தார். இதை எந்த...
மேலும்

ஸ்டாலின் மீது அமைச்சர் கடும் தாக்கு

ராமநாதபுரம், மார்ச் 5: பதவி வெறி பிடித்தவர்கள் இந்த அரசை எப்படியும் கலைத்துவிட வேண்டும் என்ற நோக்கில் செயல்பட்டுக் கொண்டிருப்பதாக அமைச்சர் மணிகண்டன் தெரிவித்தார். ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அம்மா இரு சக்கர வாகனம் வழங்கும் திட்டத்தின் தொடக்க விழா நடைபெற்றது. கலெக்டர் எஸ்.நடராஜன் தலைமை வகித்தார். விழாவில் கலந்துகொண்ட தமிழகத் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் டாக்டர் மு.மணிகண்டன் 100 பெண்களுக்கு இருசக்கர வாகனத்தை வழங்கி...
மேலும்

மாநிலங்களவையில் அதிமுக அமளி

புதுடெல்லி, மார்ச் 5:காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி தமிழகத்தைச் சேர்ந்த அதிமுக எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டதால் மாநிலங்களவை ஒத்திவைக்கப்பட்டது. இதேபோல பஞ்சாப் நேஷனல் வங்கி வழக்கு தொடர்பாக எம்பிக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் மக்களவையும் ஒத்திவைக்கப்பட்டது.நாடாளுமன்றத்தின் இரண்டாம் கட்ட பட்ஜெட் கூட்டத் தொடர் இன்றுகாலை தொடங்கியது. பல்வேறு பிரச்சனைகள் தொடர்பாக எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டதால் மக்களவை மற்றும் மாநிலங்களவை இரண்டும் மதியம் 12 மணிவரை முதலில் ஒத்திவைக்கப்பட்டன. மக்களவை...
மேலும்

மு.க.ஸ்டாலின் தகவல்கள் தவறு: அமைச்சர்

சென்னை, மார்ச் 5: முதல்வருடனான ஆலோசனை குறித்து ஸ்டாலின் தரும் தகவல்கள் தவறு என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- காவிரி விவகாரத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடனான ஆலோசனை குறித்து எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் தவறான தகவல்களைத் தருகிறார். ஸ்டாலின் முதல்வராக வேண்டுமென்று மக்கள் விரும்பவில்லை. திமுகவினர்தான் அப்படி விரும்புகின்றனர். ஸ்டாலின் பக்குவப்பட்ட தலைவர் இல்லை. காவிரி விவகாரம் தொடர்பாக முதல்வருடன் நடந்த...
மேலும்

அதிமுக எம்பிக்கள் ராஜினாமா செய்ய தயார் : மைத்ரேயன்

சென்னை, மார்ச் 5: அதிமுக தலைமை ஆணையிட்டால் தான் வகித்து வரும் மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்ய தயார் எனவும் நாட்டு நலனுக்காக அனைத்து எம்பிக்களும் பதவி விலகவும் தயார் என்றும் எம்பி மைத்ரேயன் தெரிவித்துள்ளார். திமுக செயல் தலைவரும், தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களின் அழைப்பை ஏற்று, கடந்த 3ந்தேதி தலைமைச் செயலகத்தில் அவரை நேரில் சந்தித்து,...
மேலும்

ஜெயக்குமார் மீது ஸ்டாலின் விமர்சனம்

சென்னை, மார்ச் 4:அமைச்சர் ஜெயக்குமார் ஒரு முந்திரிக்கொட்டை என திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். சென்னை அருகே தண்டையார் பேட்டையில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற திமுக செயல் தலைவர் ஸ்டாலின், காவிரி விவகாரத்தில் அனைத்துக் கட்சி பிரதிநிதிகளை பிரதமர் சந்திக்க முடியாது என்று தெரிவித்தது தமிழகத்திற்கு நேர்ந்த அவமானம் என்று கூறினார்.காவிரி விவகாரத்தில் பதவியை ராஜினாமா செய்யும் அளவிற்கு அதிமுக நாடாளுமன்ற...
மேலும்

மாசுக்கட்டுப்பாடு: கமல் காட்டம்

சென்னை, மார்ச் 3: தமிழகத்தில் மேலும் ஒரு அரசுத்துறை செயலற்றிருப்பது நிரூபணம் ஆகியிருப்பதாக மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் குற்றம் சாட்டியிருக்கிறார். மக்கள் நீதி மய்யம் துவக்கப்பட்ட பிறகு தற்போது மற்றொரு குற்றச்சாட்டை கூறியிருக்கிறார். ‘மேலும் ஒரு அரசுத்துறை செயலற்று இருப்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. காவிரிப் படுகையில் மாசுக்கட்டுப்பாடு வாரியத்தின் செயல்கள் அதிர்ச்சி அளிக்கிறது. தமிழ் மக்களின் நம்பிக்கைக்குத் துரோகம் இழைக்கிறது வாரியம். மாசுக்கட்டுப்பாடு வாரியமே விழித்தெழு’...
மேலும்