Home » Category >அரசியல் (Page 69)

சசிகலாவின் 256 நாள் பதவி முடிந்தது

ஜெயலலிதா உயிரோடு இருந்த வரை நிழல் முதல்வராகவும், கட்சியை ஆட்டிப்படைப்பவராகவும் சசிகலா இருந்தார். கடந்த டிசம்பர் மாதம் 29-ந் தேதி நடந்த அதிமுக பொதுக்குழுவில் வி.கே.சசிகலா பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டாலும் டிசம்பர் 31-ந் தேதி தான் பதவியேற்றார். அதனை தொடர்ந்து முதல்வராக அவர் முயற்சிகளை மேற்கொண்டார். அப்போது சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. பிப்ரவரி 18-ல் அவர் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் இருந்த...
மேலும்

அதிமுக பொதுக்குழுவில் சசிகலா பொதுச்செயலாளர் பதவி ரத்து

சென்னை, செப்.12: பரபரப்புடன் இன்று கூடிய அதிமுக பொதுக்குழுவில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படியே சசிகலாவின் பொதுச்செயலாளர் பதவி ரத்து செய்யப்பட்டது. பொதுச்செயலாளருக்கு உள்ள அதிகாரம் அனைத்தும் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளருக்கு வழங்கப்பட்டுள்ளது. துணை பொதுச்செயலாளர் என்ற பெயரில் டிடிவி தினகரன் அறிவித்த நியமனங்கள் எதுவும் செல்லாது என்றும், ஏற்கனவே ஜெயலலிதாவால் நியமிக்கப்பட்டவர்கள் அந்தந்த பதவிகளில் நீடிப்பார்கள் என்றும் தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது. அதிமுக பொதுக்குழு இன்று...
மேலும்

தீர்மானங்கள் செல்லாது: தினகரன்

சென்னை, செப்.12:  சென்னையில் இன்று நடைபெற்றது அதிமுக பொதுக்குழு அல்ல, பொதுக்கூட்டம் என்று டிடிவி தினகரன் கூறினார். இந்த கூட்டத்தில் நிறை வேற்றப்பட்ட தீர்மானங்கள் எதுவும் செல்லாது என்றும் அவர் தெரிவித்தார். அதிமுக அம்மா அணியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மதுரையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- இபிஎஸ், ஓபிஎஸ் அணியினர் பொதுக்கூட்டம் போல் பொதுக்குழுவை கூட்டி தீர்மானங்கள் நிறைவேற்றுகிறார்கள். பொதுக்குழு உறுப்பினர்களில் 500...
மேலும்

உயர்நீதிமன்றத்தில் திமுக சார்பில் மனு

சென்னை, செப்.12: சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வேண்டும் என கோரி திமுக சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று மனு தாக்கல் செய்யப்பட்டது. திமுக சார்பில் தமிழக  சட்டப்பேரவையை உடனடியாக கூட்டி எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு அங்கு பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும். அதற்கு கவர்னர் உத்தரவிட வேண்டும் என்பதை வலியுறுத்தி ஏற்கனவே அக்கட்சி சார்பில் கவர்னரிடம் மனு அளிக்கப்பட்டது....
மேலும்

தினகரன் கூட்டத்திற்கு அனுமதி மறுப்பு

திருச்சி, செப்.11: நீட் விவகாரம் தொடர்பாக வரும் 16-ஆம் தேதி அதிமுக அம்மா அணி துணைபொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் நடத்த திட்டமிட்ட பொதுக் கூட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. தற்கொலை செய்து கொண்ட அரியலூர் மாணவி அனிதாவின் மரணத்தினை தொடர்ந்து தமிழகம் முழுவதும் பரவலாக ’நீட்’ தேர்வுக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. நீட் தேர்வுக்கு எதிராக செப்டம்பர் 9-ஆம் தேதி போராட்டம் நடத்தப்படும் என டிடிவி தினகரன்...
மேலும்

நம்பிக்கை வாக்கெடுப்பை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு வாபஸ்

புதுடெல்லி, செப்.11: எடப்பாடி அரசு மீது கடந்த பிப்ரவரி 18-ந் தேதி நடைபெற்ற நம்பிக்கை ஓட்டு நிறைவேறியதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை ஓபிஎஸ் அணியை சேர்ந்த அமைச்சர் கே.பாண்டியராஜன் இன்று திரும்ப பெற்றுக்கொண்டார்.இரு அணிகளும் இணைந்ததை தொடர்ந்து பாண்டியராஜன் இந்த மனுவை திரும்ப பெற்றுக்கொண்டார். இதனால் இந்த வழக்கு முடிவுற்றது.
மேலும்

பரபரப்புடன் கூடுகிறது அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு

சென்னை, செப்.11:அதிமுக பொதுக்குழு நாளை பரபரப்புடன் கூடுகிறது. சசிகலா பொதுச்செயலாளர் பதவி பற்றி முக்கிய முடிவு எடுக்கப்படுகிறது. அதிமுகவை நிர்வகிக்க புதிய ஏற்பாடுகள் குறித்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், அதிமுக பொதுக்குழு, செயற்குழுக் கூட்டம் நாளை நடைபெறுகிறது. சென்னையை அடுத்த வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி திருமண மண்டபத்தில் இந்தக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக பொதுக்குழு,...
மேலும்

கொறடா மீது வெற்றிவேல் புகார்

சென்னை, செப்.11:சட்டசபை கொறடாவை மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தினகரன் ஆதரவு எம்எல்ஏ வெற்றிவேல் இன்று கடிதம் கொடுத்தார். சபாநாயகர் தனபாலை தினகரன் ஆதரவு எம்எல்ஏ வெற்றிவேல் இன்று சந்தித்து கடிதம் கொடுத்தார். அதில் சட்டசபை கொறடா ராஜேந்திரன் கட்சி தலைமைக்கு விரோதமாக செயல் படுகிறார் என்றும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டு இரக்கிறார்.
மேலும்

நதிகள் இணைப்பு குறித்து ரஜினி வாய்ஸ்

சென்னை, செப்.11:நதிகள் இணைப்பு குறித்து சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் மீண்டும் குரல் கொடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் பேசியுள்ள வீடியோ பதிவு டுவிட்டரில் வெளியிடப்பட்டுள்ளது. நதிகளை இணைப்போம், பாரதம் காப்போம்இயக்கத்தின் சார்பில் இந்தியா முழுவதும் நதிகள் இணைப்புக்கான விழிப்புணர்வு கூட்டங்களும், பேரணிகளும் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் நதிகள் இணைப்பை வலியுறுத்தி நடிகர் ரஜினிகாந்த் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு வீடியோ பதிவை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- ரத்த...
மேலும்

தினகரன் ஆதரவாளருக்கு ரூ.1 லட்சம் அபராதம்

சென்னை, செப்.11:அதிமுக சார்பாக வானகரம் ஸ்ரீவாரு மண்டபத்தில் நாளை நடைபெறும் பொதுக்குழு கூட்டத்திற்கு இடைக்கால தடை விதிக்க கோரி டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏ வெற்றிவேல் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி வழக்கை தள்ளுபடி செய்தார். மேலும் வழக்கு தொடர்ந்த வெற்றிவேலுக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்தார். கட்சியில் உள்ள அதிமுக நிர்வாகிகள் கலந்து கொள்ள விருப்பமில்லையென்றால்...
மேலும்

உள்ளாட்சித் தேர்தலில் அதிக இடங்களில் போட்டியிட காங். முடிவு

சென்னை, செப்.10: தமிழகத்தில் நவம்பரில் நடைபெறவுள்ள உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணியில் அதிக இடங்களை கேட்டு பெற காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக திருநாவுக்கரசர் தலைமையில் மூத்த தலைவர்களுடன் அவசர ஆலோசனை கூட்டமும் நடைபெற்றது. உள்ளாட்சி தேர்தல் நவம்பர் 17-ம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் மாநில தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் சில விளக்கங்களை கேட்டுள்ளது. இதை தொடர்ந்து தேர்தலுக்கு தயாராகும்...
மேலும்