Home » Category >அரசியல் (Page 5)

7 பேரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்:ஸ்டாலின்

சென்னை, செப்.6: ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்ற 7 பேரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய தமிழக அரசு முடிவு செய்யலாம் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பை வரவேற்பதாக தெரிவித்தார்....
மேலும்

தெலுங்கானா மாநில அரசை கலைக்க பரிந்துரை:கவர்னர் ஏற்றார்

ஐதராபாத், செப்.6:தெலுங்கானா மாநில அரசை முன்கூட்டியே கலைக்க, அம்மாநில அமைச்சரவை செய்த பரிந்துரையை கவர்னர் நரசிம்மன் ஏற்றுக்கொண்டு உள்ளார். தெலுங்கானா மாநிலம் பிரிக்கப்பட்ட பின்னர் 2014 ஆண்டு நடந்த முதல் தேர்தலில் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி ஆட்சியைக் கைப்பற்றியது. அந்த கட்சியின் தலைவரான சந்திரசேகர ராவ் முதலமைச்சர் ஆனார். தெலுங்கானா சட்டசபையின் ஆயுள் காலம் முடிவதற்கு இன்னும் 8 மாத காலம் உள்ளது. எனினும், சட்டசபையை முன்கூட்டியே...
மேலும்

திருநாவுக்கரசர் பரபரப்பு பேச்சு

சென்னை, செப்.5:என் மீது புகார்கள் கூறப்படுமானால் பதவியை ராஜினாமா செய்ய தயாராக இருக்கிறேன் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் கூறியுள்ளார். காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர்கள் கூட்டம் சத்தியமூர்த்தி பவனில் திருநாவுக்கரசர் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு அகில இந்திய காங்கிரசின் தமிழக பொறுப்பாளர்கள் சின்னாரெட்டி, சஞ்சய்தத் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்தின்போது ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் ஆதரவாளர்களுக்கும், திருநாவுக்கரசர் ஆதரவாளர்களுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது....
மேலும்

தமிழக அரசுக்கு வைகோ கண்டனம்

சென்னை, செப். 5:இந்திய ஜனநாயகத்துக்கே உலை வைக்கும் மத்திய அரசின் நடவடிக்கைகளால், கோடிக்கணக்கான மக்கள் மனதில் ஏற்பட்டுள்ள அச்சத்தையும், வேதனையையும் வெளிப்படுத்தி, மாணவி சோபியா கருத்துத் தெரிவித்தது அவரது ஜனநாயக உரிமை ஆகும். அதற்காக அவர் மீது தமிழக காவல்துறை வழக்குப் பதிவு செய்து கைது செய்தது கண்டனத்துக்கு உரியதாகும். சாதாரணக் குடும்பத்தில் பிறந்து தமிழகத்தில் கல்வி கற்று முன்னேறிய மாணவி சோபியா டெல்லியில் இளநிலை பட்டம்...
மேலும்

சிபிஐ சோதனை:திமுக,பாமக கேள்வி

சென்னை,செப்.5:குட்கா விவகாரத்தில்சிபிஐ சோதனை நடத்திய பிறகும் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க அரசு தயங்குவது ஏன் என்று திமுக,பாமக, தமாகா உள்ளிட்ட கட்சிகள் கேள்வி விடுத்துள்ளனர். குட்காவிவகாரம் தொடர்பாக சென்னை உட்பட தமிழகத்தில் 40 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் இன்று சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், ஓய்வு பெற்ற டிஜிபி ஜார்ஜ் வீடு உள்ளிட்ட இடங்களில் இந்த சோதனை நடந்து வருகிறது.இதுகுறித்து திமுக பொருளாளர்...
மேலும்

விரைவில் புதிய கட்சி துவங்க அழகிரி முடிவு?

சென்னை, செப்.5: அறிவித்தபடி அமைதிப் பேரணியை நடத்திக் காட்டிய மு.க.அழகிரி, அடுத்தக்கட்ட நடவடிக்கையாக விரைவில் புதிய கட்சி தொடங்குவார் என அவரது ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர். விமான நிலையத்தில் தன்னை வரவேற்ற நிர்வாகியை கட்சியை விட்டு நீக்கிய ஸ்டாலினால் பேரணியில் பங்கேற்ற ஒன்றரை லட்சம் பேரையும் நீக்க முடியுமா? என்று மு.க.அழகிரி கேள்வி எழுப்பி உள்ளார். திமுகவில் இருந்து நீக்கி வைக்கப் பட்டுள்ள மு.க.அழகிரி, கட்சியில் மீண்டும் சேர மேற்கொண்ட...
மேலும்

குட்கா முறைகேடு: 40 இடங்களில் ரெய்டு

சென்னை, செப்.5: குட்கா முறைகேடு தொடர்பாக தமிழகத்தில் 40 இடங்களில் சிபிஐ அதிரடி சோதனை நடைபெற்று வருகிறது. சென்னை முகப்பேரில் உள்ள டிஜிபி இல்லத்திலும் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். குட்கா உரிமையாளர் மாதவராவிடம் நடத்திய விசாரணையை தொடர்ந்து சிபிஐ அதிகாரிகள் இந்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
மேலும்

அழகிரி பேரணி தேறுமா? பிசுபிசுக்குமா?

சென்னை, செப்.4: மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், மு.க.அழகிரி நாளை நடத்த உள்ள அமைதிப் பேரணி, வெற்றி பெறுமா அல்லது பிசுபிசுக்குமா என்பது நாளை வெட்ட வெளிச்சமாகி விடும். மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் மகனும், முன்னாள் மத்திய அமைச்சருமான மு.க.அழகிரி கட்சி விரோத நடவடிக்கை காரணமாக கடந்த 2014-ம் ஆண்டு திமுகவில் இருந்து நீக்கப்பட்டார். கருணாநிதி இருந்த வரை அமைதி காத்து...
மேலும்

உள்ளாட்சி தேர்தல்: 500 இடங்களில் பிஜேபி வெற்றி

பெங்களூரு, செப்.3:கர்நாடக மாநிலத்தில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புக ளுக்கான தேர்தலில் முதல் இடத்தை பிடிப்பதில் காங்கிரசுக்கும் பிஜேபிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. 2079 வார்டுகளுக்கான தேர்தல் கடந்த மாதம் 31-ந் தேதி நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது. இதுவரை அறிவிக்கப்பட்ட முடிவுகளில் காங்கிரஸ் 560 இடங்களை வெற்றி பெற்றுள்ளது. பிஜேபி 499 இடங்களை கைப்பற்றி முன்னேறி வருகிறது. மதச்சார்பற்ற ஜனதா தளம்...
மேலும்

ஜெயா நினைவு இல்ல பணிகள் தொய்வு

ராமேஸ்வரம், செப்.3: மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லத்தை நினைவிடமாக்க மாற்றப்படும் என தமிழக அரசு அறிவித்து, 1 ஆண்டு ஆகியும் நினைவிடம் அமைக்கும் பணியில் தேய்வு ஏற்பட்டுள்ளது. ஜெயலலிதா உடல்நலக்குறைவு காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த நிலையில் 2015-ம் ஆண்டு டிசம்பர் 5-ம் தேதி கிச்சை பலனின்றி மரணம் அடைந்தார். இதை தொடர்ந்து முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது பதவியை ராஜினாமா...
மேலும்

தமிழக அரசு மீது ஸ்டாலின் தாக்கு

திருச்சி, செப். 3:முதல்வர் கூறியபடி அணைகளுக்கு காய்ச்சல் வந்ததோ இல்லையோ ஆனால் அதிமுக அரசு தற்போது கோமா நிலையில் உள்ளது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். திருச்சி முக்கொம்பு மேலணையில் மதகுகள் உடைந்ததால் பெருமளவு தண்ணீர் கொள்ளிடம் ஆற்றில் வீணாக சென்று கடலில் கலந்தது. மதகுகள் உடைந்த இடத்தை திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அங்கு நடைபெற்று வரும்பணிகள்...
மேலும்