Home » Category >அரசியல் (Page 4)

‘பச்சோந்தி அரசியல் செய்யும் சந்திரபாபு நாயுடு’:முதல்வர்

கோவை, நவ.11:சென்னையில் மு.க.ஸ்டாலினை சந்தித்து பச்சோந்தி அரசியலில் சந்திரபாபு நாயுடு ஈடுபட்டுள்ளார். இந்த சந்திப்பின் போது பாலாற்றில் தடுப்பணை கட்டுவது பற்றிய பிரச்சனையை ஸ்டாலின் எழுப்பியிருக்க வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார். கோவை விமான நிலையத்தில் முதல்வர் பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்தபோது அறித்த பேட்டி விவரம் வருமாறு:- கேள்வி : தொகுதிப் பணிகள் முடங்கியுள்ளதாக டிடிவி தினகரன் அணியினர் கூறுகிறார்களே? பதில்: யாரால் முடங்கி...
மேலும்

நாளைய முதல்வரை நானே முடிவு செய்வேன்: கமல்

சென்னை, நவ.11:தமிழகத்தின் நாளைய முதல்வர் யார் என்பதை நானும், எனது கட்சியினரும் முடிவு செய்வோம் என்று கமல்ஹாசன் கூறினார். இரண்டு நாள் சுற்றுப்பயணமாக கிருஷ்ணகிரி,தருமபுரி மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் மக்களை சந்தித்த மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் நேற்று ஓசூரில் உரை நிகழ்த்தினார். அப்போது தமது கட்சி நாளைய முதல்வரை முடிவெடுக்கக் கூடிய கட்சி என்று அவர் குறிப்பிட்டார். மக்கள் தங்கள் கோபத்தைக் காட்டக் கூடிய...
மேலும்

டெல்லியில் எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டம்

சென்னை, நவ.11: நவம்பர் 22 ம் தேதி நடக்கும் பிஜேபிக்கு எதிரான கட்சிகளின் ஆலோசனை கூட்டம் டெல்லியில் நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில் திமுக சார்பில் ஸ்டாலின் கலந்து கொள்வார் என தெரிகிறது. பிஜேபிக்ரு எதிராக தேசிய அளவில் மெகா கூட்டணியை உருவாக்கும் முயற்சியில் சந்திரபாபு இறங்கி உள்ளார். இதற்காக கடந்த சில வாரங்களாக அவர் பல்வேறு கட்சி தலைவர்களை சந்தித்து, கூட்டணியில் இணைய அழைப்பு விடுத்து வருகிறார்....
மேலும்

ஜெ.வுக்கு ‘ஸ்லோ பாய்சன்’:அமைச்சர் பரபரப்பு பேச்சு

மதுரை, நவ.11:வெளிநாட்டில் சிகிச்சை அளித் திருந்தால் ஜெயலலிதா இன்று உயிரோடு இருந்திருப்பார் என்று சட்டமன்ற துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் கூறினார். மேலும் சர்க்கரை நோயாளியான ஜெயலலிதாவுக்கு கொடுக்கக் கூடாததை ஸ்லோபாய்சன் போல் கொடுத்துவிட்டனர் என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறியுள்ளார். ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி யில் இடைத்தேர்தலுக்காக நடை பெற்ற ஆலோசனை கூட்டத்தில் பொள்ளாச்சி ஜெயராமன் கலந்துகொண்டு பேசினார். அப்போது 2016 சட்டமன்ற தேர்தலின் போதே...
மேலும்

சுகாதாரத்துறை கின்னஸ் சாதனை:விஜயபாஸ்கர்

புதுக்கோட்டை,நவ.11:உடல் உறுப்பு தான விழிப்புணர்வில் தமிழக சுகாதாரத்துறை புதிய கின்னஸ் சாதனை படைத்து வருவதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் முத்துபட்டினத்தில் புதிதாக ஆரம்ப சுகாதார நிலையம் கட்டுவதற்கான பூமி பூஜை இன்று காலை நடந்தது. விழாவில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் கலந்து கொண்டு பூமி பூஜையை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் நிருபர்களுக்கு அமைச்சர் விஜயபாஸ்கர்...
மேலும்

ஸ்டாலின்-நாயுடு சந்திப்பு அரசியல் நாடகம்: தம்பிதுரை

திருச்சி, நவ.10:திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு சந்திப்பு ஒரு அரசியல் நாடகம் என்று மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை கூறியிருக்கிறார். கரூரில் செய்தியாளர்களிடம் மக்களவை துணை சபாநாயகர் மு. தம்பிதுரை கூறியதாவது: தேர்தல் தேதி அறிவிக்கப்படாமல் தேர்தல் பணியை தொடங்க முடியாது இருப்பினும் மக்களை ஆயத்தப்படுத்துவதற்காக, எங்கள் கழக நண்பர்களை ஊக்கும் விக்கும் பணியில் தான் ஈடுபட்டு வருகின்றோம். தேர்தல் பணி என்பது...
மேலும்

திமுக தலைவருடன் காங். தலைவர் சந்திப்பு

சென்னை, நவ.10:திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை காங்கிரஸ் மேலிடப் பார்வையாளர் சஞ்சய் தத் இன்று சந்தித்துப் பேசினார். இது குறித்து திமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது: இன்று (10-11-2018) சென்னை ஆழ்வார்பேட்டையில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலினை தமிழக காங்கிரஸ் கமிட்டியின் மேலிட பொறுப்பாளர் சஞ்சய் தத் மரியாதை நிமித்தமாக சந்தித்தார். அப்போது, தி.மு.கழக முதன்மைச் செயலாளரும்...
மேலும்

ஜனவரி-4ல் தமிழக சட்டசபை கூடும்?

சென்னை, நவ.10:தமிழக சட்டசபையின் கூட்டம் வருகிற ஜனவரி 4-ந் தேதி கவர்னர் உரையுடன் கூடும் என்று எதிர்பார்க் கப்படுகிறது. மேலும் மே மாதத்தில் மக்களவை தேர்தல் வருவதால் அரசு செலவினங்களுக்கு 6 மாதத்திற்கு தேவையான நிதியை இக்கூட்டத்தில் ஒதுக்கவும் அரசு திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. தமிழக சட்டசபையின் கூட்டம் இந்த ஆண்டு ஜூலை மாதத்தில் நடைபெற்றது. மானியக் கோரிக்கை கள் மீதான விவாதங்கள் நடைபெற்று நிறைவேற்றப்பட்டது. ஜூலை...
மேலும்

4 எம்எல்ஏக்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ்

சென்னை, நவ.9: தகுதி நீக்கம் செய்வது தொடர்பாக கருணாஸ் உள்ளிட்ட 4 அதிமுக எம்எல்ஏக்களுக்கு நோட்டீஸ் அனுப்ப இன்று முடிவு எடுக்கப்பட்டது. அதிமுக எம்எல்ஏக்கள் கலைச்செல்வன், ரத்தினசபாபதி, பிரபு மற்றும் அதிமுக சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கருணாஸ் ஆகியோர் ஆட்சிக்கு எதிராக செயல்பட்டு வந்தனர் என குற்றஞ் சாட்டப்பட்டது. கருணாஸ் அளித்த பேட்டியில் சபாநாயகர் பாரபட்சமாக செயல்படு வதாக கூறியிருந்தார். அவரை பதவி நீக்கம் செய்ய...
மேலும்

சர்கார் விவகாரம்: இரண்டாவது நாளாக அதிமுக போராட்டம்

சென்னை, நவ.9: அதிமுகவினர் போராட்டத்தால் இன்று 2-வது நாளாக சர்கார் படம் திரையிட்ட தியேட்டர்கள் வெறிச்சோடி காணப்பட்டன. சில இடங்களில் காலை காட்சிகள் ரத்து செய்யப்பட்டன. எல்லா தியேட்டர் முகப்புகளிலும் விஜய் பேனர்கள் அகற்றப்பட்டிருந்தன. விஜய் நடிப்பில் தீபாவளிக்கு வெளியான சர்கார் திரைப்படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்கக்கோரி அதிமுகவினர் 2-வது நாளாக இன்று தியேட்டர்கள் முன்பு சென்னையில் ஜாபர்கான்பேட்டையில் உள்ள காசி தியேட்டர், ராயபேட்டையில் உள்ள உட்லண்ட்...
மேலும்

அமைச்சர் வீரமணிக்கு எதிராக கோர்ட்டில் வழக்கு

சென்னை, நவ.8:நில மோசடிக்கு துணைபோனதாக அமைச்சர் வீரமணிக்கு எதிரான புகார் குறித்து விசாரணை நடத்தக்கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. வேலூரில் சுந்தர்ராஜன் என்பவருக்கு சொந்தமான 6 ஏக்கர் 90 சென்ட் நிலத்தை குத்தகைக்கு பெற்றிருந்த ராமமூர்த்தி, ஜெயபிரகாஷ் ஆகியோர் தாக்கல் செய்த மனுவில், 2010 ம் ஆண்டு இந்த நிலத்தை சேகர் ரெட்டி உள்ளிட்டோர் வாங்கியுள்ளனர். பின் அந்த நிலத்தை 225 கோடி ரூபாய்க்கு...
மேலும்