Home » Category >அரசியல் (Page 39)

அதிமுகவில் குழப்பம் ஏற்படுத்த திமுக முயற்சி

சென்னை, நவ.28: அதிமுகவில் திமுக வேண்டும் என்றே குழப்பத்தை ஏற்படுத்துகிறது என்றும் கட்சியில் எந்த குழப்பம் இல்லை என்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார். அமைச்சர் செல்லூர் ராஜூ இன்று காலை மதுரை செல்லும் வழியில் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:- ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அதிமுக மகத்தான வெற்றி பெறும். நாங்கள் ஒன்றுபட்டு தேர்தல் பணியாற்றுகிறோம். எங்களுக்குள் எந்த கருத்துவேறுபாடும் இல்லை. இரட்டை இலை...
மேலும்

மதுசூதனன் விருப்ப மனு தாக்கல் செய்தார்

சென்னை,நவ.28: ஆர்.கே.நகர் தொகுதியில் அதிமுக வேட்பாளராக போட்டியிடுவதற்கு மதுசூதனன் இன்று தலைமை கழகத்தில் விருப்பமனு தாக்கல் செய்தார். நாளை நடைபெறும் ஆட்சிமன்ற கூட்டத்தில் இவர் வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. டிசம்பர் 21-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் ஆர்.கே.நகரில் நேற்று வேட்புமனு தாக்கல் தொடங்கியது. முதல் நாளில் 4 பேர் மனு தாக்கல் செய்தனர். 5-வதாக மனு தாக்கல் செய்வதற்காக வந்த மனோகர் என்பவர் ரூ.10 ஆயிரம்...
மேலும்

டி.டி.வி. தினகரனின் கூடாரம் காலியாகிறது

சென்னை, நவ.28: தினகரன் அணியில் இருந்த மாநிலங்களவை உறுப்பினர்கள் நவநீத கிருஷ்ணன், விஜிலா சத்யானந்த், என்.கோகுல கிருஷ்ணன் ஆகியோர் நேற்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை அவரது இல்லத்தில் சந்தித்து அதிமுகவிற்கு ஆதரவு தெரிவித்தனர். இதன் பின்னர் அவர்கள் அளித்த பேட்டியில் தங்களை பின்பற்றி மேலும் பலர் தினகரன் அணியில் இருந்து விலகி அதிமுகவில் சேர இருப்பதாக தெரிவித்தனர். அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் மறைவுக்கு பின் அக்கட்சி...
மேலும்

பா.வளர்மதி, கே.பி.முனுசாமிக்கு முக்கிய பொறுப்பு

சென்னை, நவ.27:அதிமுக ஆட்சி மன்ற குழு உறுப்பினர்களாக முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, பா.வளர்மதி ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக அதிமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது. அதிமுகவின் ஆட்சிமன்ற குழுவில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மற்றும் குழந்தைகள் நல வாரிய தலைவர் விசாலாட்சி நெடுஞ்செழியன் ஆகியோர் பதவி வகித்து வந்தனர். அந்த இடங்கள் காலியாக இருந்ததையடுத்து இவர்கள் இருவரும் அந்த பொறுப்புக்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும்

திமுக சார்பில் வழக்கு

சென்னை, நவ.27: அதிமுக பேனர் விழுந்ததில் பலியான பொறியாளர் ரகுபதி குடும்பத்துக்கு உரிய நஷ்ட ஈடு வழங்க உத்தரவிடக் கேட்டு, சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக எம்.எல். ஏ. சார்பில் முறையீடு செய்யப்பட்டது. கோவை சிங்காநல்லூர் திமுக எம்எல்ஏ கார்த்திக் சார்பாக வழக்கறிஞர் நீலகண்டன், சென்னை உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி பெஞ்ச் முன்பு இன்று ஆஜராகி முறையிட்டார். அப்போது அவர், கோவை அவினாசியில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவின்...
மேலும்

100 இடங்களில் சிசிடிவி கேமரா பொருத்தம்

சென்னை, நவ.27: ஆர்கே நகரில் முறைகேடுகளை தவிர்க்க 100 இடங்களில் சிசிடிவி கேமரா நிறுவப்பட்டுள்ளது. இந்த பகுதிகளில் நடைபெறும் அனைத்து சம்பவங்களும் உயர் அதிகாரிகள் தங்களது செல்போனிலேயே பார்த்து தெரிந்து கொள்ளும் அளவிற்கு வசதி செய்யப்பட்டுள்ளது. பணப்பட்டுவாடா உள்ளிட்ட அனைத்து முறைகேடுகளையும் தடுக்க இம்முறை எல்லா ஏற்பாடுகளையும் முன்கூட்டியே செய்து இருப்பதாக சென்னை வடக்கு போலீஸ் இணை ஆணையர் ஆர்.சுதாகர் கூறியுள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,...
மேலும்

சென்னையிலிருந்து கொச்சிக்கு சொகுசு கப்பல்

புதுச்சேரி, நவ.27: சென்னை – புதுச்சேரி ஏற்றுமதி, இறக்குமதி துறைமுகப்பணிகள் விரைவில் தொடங்கும் என்று முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். சட்டசபையில் அவர் செய்தி யாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- சென்னை வந்த மத்திய அமைச்சர் நிதின்கட்காரி சென்னை – புதுச்சேரி துறைமுகம் இடையே 4.5 லட்சம் டன் சரக்கு ஏற்றுமதி, இறக்குமதி ஒப்பந்தம் மூலம் தொடங்க உள்ளது என்றும், சென்னையில் இருந்து புதுச்சேரி வழியாக கேரளா மாநிலம் கொச்சின்...
மேலும்

உயர்மட்டக் குழு கூடி முடிவெடுக்கும்

திருச்சி, நவ.27: தமிழகம் முழுவதும் பிரிந்து சென்ற மற்றவர்களை ஏற்றுக் கொள்வதற்கு உயர்மட்டக்குழு தான் முடிவு எடுக்கும். 1.5 கோடி தொண்டர்கள் எங்கள் பக்கம் உள்ளதாக தேர்தல் ஆணையமே கூறியுள்ளது.ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் அதிமுக பெற்றி பெறும் என திருச்சியில் வெல்லமண்டி நடராஜன் தெரிவித்தார். திருச்சியில் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:- ஜெயலலிதாவின் மறைவுக்கு பின், அதிமுகவை கபளீகரம் செய்து விடலாம் என நினைத்தவர்களின்...
மேலும்

ஆர்கே நகர் தொகுதியில் போட்டியா? ஆதரவா?

சென்னை, நவ.27: ஆர்கே.நகர் இடைத்தேர்தலில் தனித்து போட்டியிடுவதா, மற்ற கட்சிகளுக்கு ஆதரவு அளிப்பதா என்பது பற்றி விரைவில் அறிவிக்கப்படும் என மபாமக தலைவர் மயிலை சத்யா கூறியுள்ளார். மகாகவி பாரதியார் மக்கள் கழகம் சார்பில் ஆர்கே.நகர் இடைத்தேர்தல் குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் ஆர்கே.நகர் இடைத்தேர்தலில் தனித்து போட்டியிடுவதா, மற்ற கட்சிகளுக்கு ஆதரவு அளிப்பதா என்பது பற்றி வரும் 29-ந் தேதி நிறுவனத்தலைவர் மயிலை சத்யா...
மேலும்

பணி நிரந்தரம் செய்ய கோரி நர்சுகள் ஆர்ப்பாட்டம்

சென்னை, நவ.27 சென்னை அண்ணாசாலையில் பணி நிரந்தரம் செய்யக்கோரி அரசு ஆஸ்பத்திரி நர்சுகள் 1000 க்கும் மேற்பட்டோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசு ஆஸ்பத்திரிகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ஒப்பந்த அடிப்படையில் நர்சுகள் பணியில் அமர்த்தப்பட்டனர். மருத்துவ தேர்வு வாரியம் (எம்.ஆர்.பி.) மூலம் இவர்கள் தேர்வு எழுதி தேர்வு செய்யப்பட்டார்கள். 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நர்சுகள் மாத சம்பளம் ரூ.7,700 பெற்று...
மேலும்

ஆர்.கே.நகர்: 5 பேர் வேட்பு மனு தாக்கல்

சென்னை, நவ.27:ஆர்.கே.நகர் தொகுதியில் முதல் நாளான இன்று 5 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். வேட்பு மனு தாக்கல் தொடங்கியதையொட்டி தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் இன்று வேட்பு மனு தாக்கல் தொடங் கியது. டிசம்பர் 4-ந் தேதி மனு தாக்கல் செய்ய கடைசி நாளாகும். 5-ந் தேதி வேட்பு மனு பரிசீலனை நடைபெறும். 7-ந் தேதி வாபஸ் பெற கடைசி...
மேலும்