Home » Category >அரசியல் (Page 3)

18 எம்எல்ஏ தகுதி நீக்க வழக்கு: நாளை தீர்ப்பு?

சென்னை,மே.6:18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் நாளை தீர்ப்பு வெளியாகும் என தகவல் வெளியாகி உள்ளது. ஜெயலலிதா மறைவிற்கு பிறகு முதலமைச்சர் பதவி வகித்த ஓ.பன்னீர்செல்வம் சசிகலா குடும்பத்தினரின் நெருக்கடி காரணமாக தனது முதலமைச்சர் பதவி எடப்பாடி கே.பழனிசாமி ஏற்று கொண்டார். இந்நிலையில் சசிகலா சிறைக்கு சென்றதை தொடர்ந்து, டிடிவி தினகரன் துணை பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டதை ஏற்று கொள்ள, எடப்பாடி தரப்பு மறுத்ததை தொடர்ந்து. டிடிவி தினகரன்...
மேலும்

தேர்தலுக்கு 6 மாதத்திற்கு முன்பு ரஜினி கட்சி

சென்னை, மே 6:தேர்தல் அறிவிப்பதற்கு 6 மாதத்திற்கு முன்பு தான் ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிப்பார் என்று அவரை சந்தித்த பின் கராத்தே தியாகராஜன் கூறினார். தென்சென்னை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் கராத்தே தியாகராஜன் இன்று காலை போயஸ் கார்டன் பகுதியில் உள்ள இல்லத்தில் ரஜினி காந்தை சந்தித்து பேசினார். அரை மணி நேர சந்திப்புக்குப் பிறகு வெளியில் வந்த அவர் நிருபர்களிடம் கூறியதாவது : ரஜினிகாந்த்...
மேலும்

வழக்குகளுக்கு அஞ்சமாட்டோம்: ஸ்டாலின்

கோவை, மே. 4:கோவையில் ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் பேசியதாவது: ஜனநாயக ரீதியில் போராட்டம் நடத்தியவர்கள் கைது செய்யப்பட்டனர். வழக்குப்பதிவு செய்து இரவோடு இரவாக வீடுகளில் சென்று, திமுகவினர் கைது செய்யப்பட்டனர். இது போன்ற வழக்குகளைகண்டு அஞ்ச மாட்டோம் ஒடுங்கிவிட மாட்டோம். வழக்குகளை கண்டும் அஞ்சும் இயக்கம் திமுக அல்ல. இவ்வாறு அவர் பேசினார்.
மேலும்

மாணவர்கள் திசை மாறிவிடக்கூடாது:முதல்வர்

சென்னை, மே 4:சுயநல சக்திகள் போலி வாக்குறுதிகளை அளிக்கின்றன. இதை நம்பி மாணவர்கள் திசை மாறிவிடக்கூடாது என்று பச்சையப்பன் கல்லூரி விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார். இந்த பச்சையப்பன் கல்லூரி பழமையும், பெருமையும் மிக்க கல்லூரியாகும். பச்சையப்பன் கல்லூரியில் படிப்பதும், பணிபுரிவதும் பெருமையாகும். மிகச்சிறந்த அரசியல் தலைவர்களையும், அறிஞர் பெருமக்களையும் உருவாக்கிய மேன்மையான கல்லூரி இந்த கல்லூரி. கல்விக்கும், அந்தக் கல்வியை வழங்கிய கல்வி நிலையத்திற்கும்...
மேலும்

ஜனாதிபதிக்கு சென்னையில் கவர்னர், முதல்வர் வரவேற்பு

சென்னை, மே 4:தமிழகத்தில் இரண்டு நாள் சுற்றுப்பயணம் செய்வதற்காக இன்று காலை 10.45 மணிக்கு சென்னை வந்த ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை விமான நிலையத்தில் கவர்னர் பன்வாரிலால் புரோகித், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் உயர் அதிகாரிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். சென்னை மற்றும் வேலூரில் ஜனாதிபதி இன்றும் நாளையும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். இதற்காக டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் இன்று காலை 10.45...
மேலும்

திமுக செய்த துரோகம்:முதல்வர்

அம்பத்தூர், மே 2:காவிரி விவகாரத்தில் துரோகம் விளைவித்தது திமுக தான் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டினார். மேலும் பொது மக்கள் சட்டம் ஒழுங்கு பாதிக்காமல் அமைதியான முறையில் போராட வேண்டும் எனவும் அவர் கேட்டு கொண்டார்.திருவள்ளூர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மேதின பொதுக்கூட்டம் அம்பத்தூரில் மாவட்ட செயலாளர் அலெக்சாண்டர் எம்.எல்.ஏ. தலைமையில் நடைபெற்றது. இதில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு தொழிலாளர்களுக்கு நலத்திட்ட...
மேலும்

கவர்னருடன் திரைப்பட உலகினர் சந்திப்பு

சென்னை, மே 2:காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விவகாரத்தில் தமிழகத்திற்கு 2 வாரத்தில் சாதகமான பதில் கிடைக்கும் என கவர்னர் கூறியதாக நடிகர் சங்க தலைவர் நாசர் பேட்டி அளித்தார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி நடிகர் சங்கம் சார்பில் கடந்த மாதம் 8-ந் தேதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் அறவழி உண்ணாவிரதப்போராட்டம் நடைபெற்றது. இதில் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், விக்ரம் உள்ளிட்ட முன்னணி நடிகர்,...
மேலும்

பெட்ரோல், டீசல் விலை உயர்வு நிறுத்திவைப்பு

புதுடெல்லி, மே 2:கர்நாடக தேர்தலை கவனத்தில் கொண்டு கடந்த 10 நாட்களாக பெட்ரோல், டீசல் விலை உயர்வை எண்ணெய் நிறுவனங்கள் நிறுத்தி வைத்து இருப்பதாக தெரியவந்துள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருவதை தொடர்ந்து பெட்ரோல் விலை லிட்டர் ரூ.76 ஆகவும், டீசல் விலை ரூ.66 ஆகவும் அதிகரித்தது. இது கடந்த 55 மாதங்களில் இல்லாத விலை உயர்வு என்பதால் மத்திய அரசு இந்த...
மேலும்

தேர்தல்:கர்நாடகத்தில் ரூ.65 கோடி பறிமுதல்

பெங்களூரு, மே 2:கர்நாடக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில் அதிரடி சோதனை மூலம் தேர்தல் ஆணையம் இதுவரை ரூ.65 கோடியை பறிமுதல் செய்துள்ளது. இது கடந்த தேர்தலில் பறிமுதல் செய்யப்பட்டதை விட 350 சதவீதம் அதிகமாகும். கர்நாடக சட்டமன்ற தேர்தல் வரும் 12-ந் தேதி நடைபெற உள்ள நிலையில் 224 தொகுதிகளிலும் தேர்தல் ஆணையம் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளது. வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை...
மேலும்

ரஜினிகாந்த் 5-ந் தேதி சென்னை திரும்புகிறார்

சென்னை, மே 2:அமெரிக்கா சென்றுள்ள சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 5-ந் தேதி சென்னை திரும்ப உள்ளார். அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்க நிர்வாகிகள் திட்டமிட்டுள்ளனர். புதிய கட்சி தொடங்குவேன் என நடிகர் ரஜினிகாந்த் அறிவித்த கையோடு, மாவட்ட வாரியாக நிர்வாகிகள் நியமனம் நடந்து வருகிறது. விரைவில் தனது கட்சி பெயர் மற்றும் கொடியை அறிமுகப்படுத்த ரஜினி திட்டமிட்டுள்ளார். அதற்கான பணிகளில் ரஜினி தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில்...
மேலும்

திவாகரனுக்கு ஆறுமுகசாமி ஆணையம் சம்மன்

சென்னை, ஏப்.30: ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட தனி நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையம் திவாகரனுக்கு சம்மன் அனுப்பியுள்ளது. மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. ஜெயலலிதாவின் உறவினர்கள், நெருக்கமானவர்கள், அதிகாரிகள், மருத்துவர்கள் என அனைத்து தரப்பினருக்கும் நீதிபதி ஆறுமுகசாமி சம்மன் அனுப்பி விசாரணை நடத்தி வருகிறார். சசிகலாவின் உறவினர்கள் விவேக்,...
மேலும்