Home » Category >அரசியல் (Page 2)

சசிகலா- திவாகரன் மோதல் பின்னணி

சென்னை, மே 12: தன் பெயரை பயன்படுத்தக்கூடாது என்று தனது உடன்பிறந்த சகோதரர் திவாகரனுக்கு சசிகலா வக்கீல் நோட்டீஸ் கொடுத்துள்ளது ஏன் என்பது பற்றிய பரபரப்பு தகவல்கள் கிடைத்துள்ளன. திவாகரன் மீது சசிகலா மிகவும் பிரியமாக இருப்பார். அவர் ஜெயலலிதாவால் சிறையில் அடைக்கப்பட்ட போதெல்லாம் அவருக்காக சசிகலா மிகவும் வருத்தப்படுவார். ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு சசிகலாவின் குடும்பத்தினரிடையே சொத்து மற்றும் கட்சிப் பதவிகளுக்காக போட்டி ஏற்பட்டுள்ளது. சசிகலா முதல்வராக...
மேலும்

வாக்குப்பதிவு விறுவிறுப்பு

பெங்களூரு, மே 12: கர்நாடகா சட்டமன்ற தேர்தலில் பகல் 2 மணி நிலவரப்படி 46% வாக்குகள் பதிவாகி உள்ளன. புதிய ஆட்சியை தேர்ந்தெடுக்கும் ஆர்வத்தில் பெங்களூரு, சிமோகா, மைசூரு உள்ளிட்ட முக்கிய இடங்களில் அனைத்து வாக்குச் சாவடிகளிலும் மக்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகிறார்கள். முதலமைச்சர் சித்தராமையா, பிஜேபி முதல்வர் வேட்பாளர் எடியூரப்பா உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் காலையிலேயே வாக்களித்தனர். கர்நாடக சட்டசபையின் பதவிக்காலம் வரும் 28-ம்...
மேலும்

ஜெயலலிதா தோழிக்கு ஆணையம் சம்மன்

சென்னை, மே 9:ஜெயலலிதாவின் பள்ளி தோழி பதர் சயீத் நாளை ஆறுமுகசாமி விசாரணை கமிஷனில் ஆஜராகி சாட்சியம் அளிக்கிறார். ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்தி வரும் ஆறுமுகசாமி விசாரணை கமிஷன் முன் இன்று அப்பல்லோவின் இன்னொரு மருத்துவர் சாந்தாராம் ஆஜராகி சாட்சியம் அளித்தார். இவர் 2015-ம் ஆண்டில் இருந்தே ஜெயலலிதாவுக்கு சர்க்கரை நோய்க்கான சிகிச்சை அளித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆறுமுகசாமி விசாரணை கமிஷன் தற்போது...
மேலும்

போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவி தொகை வழங்குக: வைகோ

சென்னை, மே 8: சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் பயிலும் ஆதிதிராவிடர் மாணவர்களுக்கு போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகையை உடனடியாக வழங்கவேண்டும் என்று மத்திய மாநில அரசுகளுக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அவரது அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:- சுயநிதிபொறியியல் கல்லூரிகள், பலிடெக்னிக் கல்லூரிகள், ஆசிரியர் பயிற்றசி நிறுவனங்களில் பயிலும் ஆதிதிராவிடர் மற்றும் மதம் மாறிய கிறித்துவ ஆதிதிராவிடர் மாணவர்களுக்கு போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை 2017-18ம் ஆண்டுக்கான...
மேலும்

பண்பாட்டை சீரழிக்கும் படம்: ராமதாஸ் கண்டனம்

சென்னை, மே 8:  பண்பாட்டு சீரழிவை ஏற்படுத்தும் திரைப்படத்தை தமிழக அரசு உடனடியாக தடை விதிக்க வேண்டும் என்று பாமக தலைவர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: – இருட்டு அறையில் முரட்டுக் குத்து என்ற தலைப்பிலான திரைப்படம் தமிழக திரையரங்குகளில் கடந்த வாரம் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த திரைப்படம் ஏற்படுத்திவரும் பண்பாட்டு சீரழிவுகள் குறித்த தகவல்கள் பெரும் அதிர்ச்சியையும்,...
மேலும்

மோடியை ‘பாராட்டிய’ சித்தராமையா

பெங்களூரு, மே 9: தேர்தல் பிரச்சார கூட்டம் ஒன்றில் பிரதமர் நரேந்திர மோடியை கர்நாடக முதல்வர் சித்தராமையா தன்னை அறியாமல் பாராட்டி பேசிய சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. காங்கிரஸ் கட்சி வேட்பாளர் நரேந்திரசாமியை ஆதரித்து அவர் பிரச்சாரம் மேற்கொண்டார். இந்த கிராமங்களுக்கு குடிநீர் வசதி, சாலைகள் வசதி உட்பட பல்வேறு வசதிகள் கிடைத்திருக்கிறது என்றால் அதற்கு காரணம் நரேந்திர மோடி என்று தன்னை அறியாமல் கூறினார். எனவே...
மேலும்

உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு இடைக்கால மனு

புதுடெல்லி, மே 7:தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட இயாது என்று கர்நாடக அரசு கைவிரித்துள்ள நிலையில், உடனடியாக தண்ணீர் திறந்து விட உத்தரவிடுமாறு தமிழக அரசு இன்று உச்சநீதிமன்றத்தில் இடைக்கால மனுவை தாக்கல் செய்துள்ளது. விரைவில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உத்தரவிட வேண் டுமென்றும் தமிழக அரசு தனது மனுவில் கூறியுள்ளது.காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க உத்தரவிடக் கோரி தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் இடைக்கால...
மேலும்

ஜெ. நினைவு மண்டபம்: நாளை அடிக்கல்

சென்னை,மே.6:மறைந்த முதல்வர் ஜெயலலிதா நினைவு மண்டபத்திற்கு அடிக்கல் நாட்டு விழா நாளை காலை 9 மணியளவில் நடைபெறவுள்ளது. முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமியும், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் இணைந்து நினைவு மண்டபத்திற்கு அடிக்கல் நாட்டவுள்ளனர். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உடல் நலக்குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார், 2016-ம் ஆண்டு டிசம்பர் 5-ம் தேதி ஜெயலலிதா மரணம் அடைந்தார். அவரது உடல் மெரீனா கடற்கரையில் அமைந்துள்ள எம்ஜிஆர் நினைவிடத்திற்கு...
மேலும்

18 எம்எல்ஏ தகுதி நீக்க வழக்கு: நாளை தீர்ப்பு?

சென்னை,மே.6:18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் நாளை தீர்ப்பு வெளியாகும் என தகவல் வெளியாகி உள்ளது. ஜெயலலிதா மறைவிற்கு பிறகு முதலமைச்சர் பதவி வகித்த ஓ.பன்னீர்செல்வம் சசிகலா குடும்பத்தினரின் நெருக்கடி காரணமாக தனது முதலமைச்சர் பதவி எடப்பாடி கே.பழனிசாமி ஏற்று கொண்டார். இந்நிலையில் சசிகலா சிறைக்கு சென்றதை தொடர்ந்து, டிடிவி தினகரன் துணை பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டதை ஏற்று கொள்ள, எடப்பாடி தரப்பு மறுத்ததை தொடர்ந்து. டிடிவி தினகரன்...
மேலும்

தேர்தலுக்கு 6 மாதத்திற்கு முன்பு ரஜினி கட்சி

சென்னை, மே 6:தேர்தல் அறிவிப்பதற்கு 6 மாதத்திற்கு முன்பு தான் ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிப்பார் என்று அவரை சந்தித்த பின் கராத்தே தியாகராஜன் கூறினார். தென்சென்னை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் கராத்தே தியாகராஜன் இன்று காலை போயஸ் கார்டன் பகுதியில் உள்ள இல்லத்தில் ரஜினி காந்தை சந்தித்து பேசினார். அரை மணி நேர சந்திப்புக்குப் பிறகு வெளியில் வந்த அவர் நிருபர்களிடம் கூறியதாவது : ரஜினிகாந்த்...
மேலும்

வழக்குகளுக்கு அஞ்சமாட்டோம்: ஸ்டாலின்

கோவை, மே. 4:கோவையில் ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் பேசியதாவது: ஜனநாயக ரீதியில் போராட்டம் நடத்தியவர்கள் கைது செய்யப்பட்டனர். வழக்குப்பதிவு செய்து இரவோடு இரவாக வீடுகளில் சென்று, திமுகவினர் கைது செய்யப்பட்டனர். இது போன்ற வழக்குகளைகண்டு அஞ்ச மாட்டோம் ஒடுங்கிவிட மாட்டோம். வழக்குகளை கண்டும் அஞ்சும் இயக்கம் திமுக அல்ல. இவ்வாறு அவர் பேசினார்.
மேலும்