Home » Category >அரசியல்

சசிகலாவிடம் 2-வது நாளாக விசாரணை

பெங்களூரு, டிச.14:பெங்களூரு சிறையில் சசிகலாவிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று 2-வது நாளாக விசாரணை நடத்தினர். ஜெயலலிதாவின் தோழி சசிகலா சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டிக் கப்பட்டு கடந்த 2 ஆண்டுகளாக பெங்களூருவில் உள்ள பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். இந்த நிலையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீடு, சசிகலாவின் அறை, ஜெயா டிவி அலுவலகம், சசிகலா பங்குதாரராக உள்ள நிறுவனங்களின்...
மேலும்

திமுகவுக்கு திரும்பினார் செந்தில் பாலாஜி

சென்னை, டிச.14:முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி அமமுகவிலிருந்து விலகி இன்று மீண்டும் தாய் கழகத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் இணைந்தார். கரூரை சேர்ந்தவர் முன்னாள் அதிமுக அமைச்சர் செந்தில்பாலாஜி. மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் உண்மை விசுவாசியாகவும், அவரது தோழியான சசிகலாவுடனும் நல்ல நட்பு கொண்டவர். ஜெயலலிதா மறைந்த பின்னர், சசிகலா அணியில் இருந்த அவர், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் தொடங்கியவுடன் அதில் ஐக்கியமானார். அவருக்கு...
மேலும்

நாடாளுமன்ற தேர்தலில் பிஜேபி நிச்சயம் வெல்லும்

சென்னை, டிச.13:அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் பிஜேபி நிச்சயமாக வெற்றிப்பெற்று மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என்று அக்கட்சி யின் மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்துள்ளார். டெல்லி செல்லும் வழியில் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் பேசினார். அப்போது அவர் கூறியதாவது: மேகதாது அணையைப் பொறுத்த வரை, அணை கட்டுவதற்கு தடையில்லை என்று உச்சநீதிமன்றம் கூறவில்லை. திட்ட அறிக்கைக்கு மட்டுமே தடை விதிக்க...
மேலும்

தினகரனை தவிர மற்றவர்கள் வரலாம்:இபிஎஸ்

கோவை, டிச.13:டிடிவி தினகரனை தவிர அமமுகவில் உள்ள அனைவரும் அதிமுகவுக்கு வரலாம் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். கோவை மாவட்டத்தில் பயணம் மேற்கொண்டுள்ள அவர், அங்கு செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது: அதிமுகவில்- இருந்து பிரிந்து சென்ற தொண்டர்கள் அனைவரும் மீண்டும் கட்சிக்கு திரும்ப வேண்டும் என்று நானும், ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வமும் அழைப்பு விடுத்துள்ளோம். இந்த அழைப்பு தினகரனை தவிர மற்ற அனைவருக்கும் பொருந்தும்....
மேலும்

சசிகலாவிடம் விசாரணை தொடங்கியது

சென்னை, டிச.13: பெங்களூரு சிறையில் சசிகலாவிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று நேரில் விசாரணை நடத்தி வருகின்றனர். ஜெயலலிதாவின் தோழி சசிகலா சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டிக் கப்பட்டு கடந்த 2 ஆண்டுகளாக பெங்களூருவில் உள்ள பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். இந்த நிலையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீடு, ஜெயா டிவி அலுவலகம், சசிகலா பங்குதாரராக உள்ள நிறுவனங்களின் அலுவலகங்...
மேலும்

3 ஓட்டுகளில் வெற்றி பெற்ற வேட்பாளர்

ஐஸ்வால், டிச.12 மிசோராம் மாநிலத்தில் 3 வாக்குகளில் காங்கிரஸ் வேட்பாளர் தோல்வி அடைந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நடந்து முடிந்த ஐந்து மாநில சட்டசபை தேர்தலில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அதாவது மிசோரம் மாநிலத்தில் மிசோ தேசிய முன்னணிக் கட்சியின் வேட்பாளர் லால்சந்தாமா ரால்டே பெரும் அதிர்டசாலி ஆனார். மிசோரம் மாநிலத்தின் துய்வால் தொகுதியில் மிசோ தேசிய முன்னணிக் கட்சியின் சார்பாக போட்டியிட்ட லால்சந்தாமா ரால்டே, காங்கிரஸ்...
மேலும்

நோட்டாவிடம் தோற்ற இடதுசாரி

புதுடெல்லி, டிச.12: நடைபெற்ற 5 மாநிலங்களில் நான்கில் நோட்டா வாக்குகளைவிட குறைவாகவே இடதுசாரிகள், ஆம் ஆத்மி, சமாஜ்வாதி, தேசியவாத காங்கிரஸ், இடதுசாரி கட்சிகள் உள்ளிட்ட கட்சிகள் பெற்றுள்ளன. மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலங்கானா, மிசோரம் ஆகிய 5 மாநிலங்களிலும் நோட்டாவை விட இந்த கட்சிகளுக்கு மிகக் குறைவாக வாக்குகள் கிடைத்துள்ளன. மிசோராம் மாநிலத்தில் மட்டும்தான் நோட்டாவுக்கு 0.5 சதவீத வாக்குகள் பதிவாகின. 5 மாநிலங்களில் இங்குதான்...
மேலும்

ம.பி.யில் பிஜேபிக்கு ஓட்டு அதிகம் ; சீட்டு குறைவு

போபால், டிச.12:மத்திய பிரதேசத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் பிஜேபி, காங்கிரசை விட அதிக வாக்குகளை பெற்ற போதிலும் இடங்களை குறைவாக பெற்று ஆட்சியை இழந்துள்ளது. தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள புள்ளி விவரப்படி இந்த தேர்தலில் பிஜேபிக்கு ஒரு கோடியே 56 லட்சத்து 42 ஆயிரத்து 950 ஓட்டுகள் கிடைத்துள்ளன. இது பதிவான வாக்குகளில் 41 சதவீதம் ஆகும். காங்கிரசுக்கு இதை விட குறைவாக 1 கோடியே 55...
மேலும்

ம.பி. முதலமைச்சராக கமல்நாத்துக்கு ஆதரவு

புதுடெல்லி, டிச.12:மத்திய பிரதேசத்தின் புதிய முதலமைச்சராக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர்களில் ஒருவரான கமல்நாத் பதவியேற்க இருக்கிறார். 114 இடங்களில் வெற்றி பெற்று மாயாவதியின் கட்சியின் 2 உறுப்பினர் களின் ஆதரவுடன் காங்கிரஸ் பெரும் பான்மையை பெற்றதை தொடர்ந்து கவர்னரை சந்தித்து ஆட்சி அமைக்க கமல்நாத் உரிமை கோரினார். 230 தொகுதிகள் கொண்ட மத்திய பிரதேசத்தில் நடந்து முடிந்த தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நேற்று காலை...
மேலும்

114 அடி உயர பிரம்மாண்டமான திமுக கொடி கம்பம்

சென்னை, டிச.12:சென்னை அண்ணா அறிவாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள 114 அடி உயர பிரமாண்டமான கொடி கம்பத்தில், திமுக கொடியை, அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் ஏற்றிவைத்தார். சென்னை அண்ணா அறிவாலயத்தில், மிக பிரமாண்டமான 114 அடி உயர கொடிக் கம்பம் நிறுவப்பட்டது. 14 லட்சம் ரூபாய் செலவில், 2 ஆயிரத்து 430 கிலோ எடை கொண்ட இரும்பு கொடிக்கம்பம் கடந்த சில நாட்களுக்கு முன்பு அமைக்கப்பட்டது. இந்தியாவிலேயே கட்சிகளின் தலைமை...
மேலும்

டெல்லியில் ராகுல், ஸ்டாலின், சந்திரபாபு நாயுடு கூடி மெகா கூட்டணிக்கு அடித்தளம்

புதுடெல்லி, டிச.10: வரும் நாடாளுமன்ற தேர்தலில் பிஜேபிக்கு எதிராக மெகா கூட்டணியை உருவாக்கும் முயற்சியாக இன்று எதிர்க்கட்சித் தலைவர்கள் டெல்லியில் கூடி வியூகம் வகுக்கிறார்கள். இந்த கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், தெலுங்கு தேசம் கட்சித் தலைவரும், ஆந்திர மாநில முதல்வருமான சந்திரபாபு நாயுடு, இடதுசாரி கட்சித் தலைவர்கள் உட்பட பல தலைவர்கள் கலந்து...
மேலும்