Home » Category >தமிழ்நாடு (Page 5)

2.0 மண்சோறு சாப்பிட்ட ரசிகர்கள்

சென்னை, நவ.29:ரஜினியின் 2.0 இன்று உலகம் முழுவதும் வெளியானது. மதுரை மாவட்டத்தை சேர்ந்த ரஜினி ரசிகர்கள் 2.0 படம் வெற்றி பெற வேண்டி திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் மொட்டை அடித்துக்கொண்டு அங்கப்பிரதட்ஷணம் செய்ததுடன் மண் சோறு சாப்பிட்டு பிரார்த்தனையை நிறைவேற்றினர்.
மேலும்

அனுமதியை திரும்ப பெற வேண்டும்: முதல்வர் கடிதம்

சென்னை, நவ.28:  காவிரியில் மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசின் வரைவு அறிக்கைக்கு அளிக்கப்பட்டுள்ள அனுமதியை திரும்ப பெற வேண்டும் என பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார். இது தொடர்பாக பிரதமருக்கு நேற்று அவர் அனுப்பி உள்ள கடிதத்தில் கூறியிருப்பது வருமாறு:- இதுதொடர்பாக முதல்வர் பழனிசாமி நேற்று பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில், காவிரி ஆற்றின் குறுக்கே கர்நாடகாவின் மேகதாது பகுதியில்...
மேலும்

மருத்துவமனை முற்றுகை:உறவினர்கள் போராட்டம்

புதுச்சேரி, நவ.28: சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட வாலிபர் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகை யிட்டதால் பாகூர் சப்- இன்ஸ் பெக்டர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். உடலை வாங்காமல் உ றவினர்கள் இன்றும் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். கடலூர் மாவட்டம் ரெட்டிச்சாவடி கரிக்கன் நகர், புதுநகர் பகுதியைச் சேர்ந்தவர் செல்வகுமாரின் மகன் ஜெயமூர்த்தி (வயது 21) .கூலிவேலை செய்து வரும் இவருக்கு திருமணமாகி...
மேலும்

தமிழகத்திற்கு பெரும் அநீதி: வைகோ கண்டனம்

சென்னை, நவ.28: காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணைகட்டஅனுமதி அளித்துள்ள மத்திய அரசு தமிழகத்திற்கும் பெரும் அநீதி இழைத்துள்ளது என்றும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- காவிரியின் குறுக்கே மேகதாது ராசி மணலில் தடுப்பு அணை கட்டுவதற்கு கர்நாடக மாநில அரசு தொடர்ந்து திட்டங்களை வகுத்துச் செயல்படுத்த முனைந்துள்ளது. மேகேதாதுவில் அணை கட்டுவதற்குக் கர்நாடக மாநிலம் அளித்த செயல்திட்டத்திற்கு மத்திய...
மேலும்

7பேரை உடனே விடுவிக்க ஆணையிட வேண்டும்: ராமதாஸ்

சென்னை, நவ.28: பேரறிவாளன், முருகன் உள்ளிட்ட 7 தமிழர்களை உடனே விடுதலை செய்ய தமிழக கவர்னர் ஆணையிட வேண்டும் என்று பாமக தலைவர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களும் விடுதலை ஆகி விடக் கூடாது என்ற எண்ணத்தில் தான், விதிகளே இல்லாத சூழலில் தங்கள் விருப்பப்படி அது குறித்த கோரிக் கையை மத்திய அரசு நிராகரித்துள்ளது....
மேலும்

கால்நடை உதவி மருத்துவர் பணியில் சேர அவகாசம்

சென்னை, நவ.28:ஒப்பந்த அடிப்படையில் தேர்ந்தொடுக்கப்பட்டுள்ள  பணியில் சேர்வதற்கான அவகாசம் டிசம்பர் 7 வரை நீட்டிக்கப்பட்டிருப்பதாக கால்நடை பராமரிப்பு மற்றும் மருத்துவ பணிகள் துறை இயக்குனர் தெரிவித்துள்ளார். இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பது வருமாறு:-தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத் துறையில், கால்நடை பராமரிப்பு மற்றும் மருத்துவப் பணிகள் இயக்ககத்தின் கட்டுப்பாட்டில் இயங்கிவரும் பல்வேறு கால்நடை நிலையங்களில் காலியாக உள்ள கால்நடை உதவி மருத்துவர் பணியிடங்களில்...
மேலும்

காதலியை கத்தியால் குத்திக்கொன்ற வாலிபர்

திருநெல்வேலி, நவ.28: பேச மறுத்த காதலியைக் கத்தியால் குத்திக்கொன்ற பட்டதாரி வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை பகுதியைச் சேர்ந்த செல்வராஜ் என்பவரின் மகள் மெர்சி (வயது 23). இவர் திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் பிரபல ஜவுளிக்கடையில் பணியாற்றி வந்துள்ளார். திருக்குறுங்குடி மகிழடியைச் சேர்ந்த பி.இ. பட்டதாரியான ரவீந்திரனும் அதே பிரிவில் பணியாற்றி வந்துள்ளார். இவர்கள் இருவரும் காதலித்து வந்ததாக கூறப்படும் நிலையில், இரண்டு மாதங்களுக்கு முன்பு...
மேலும்

‘ஸ்டெர்லைட் ஆலை மூடியது தவறு’

தூத்துக்குடி, நவ.28:தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடியது தவறு என்றும், இந்த ஆலை செயல்பட அனுமதி வழங்கலாம் என்றும் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் ஓய்வு பெற்ற நீதிபதி தருண் அகர்வால் தலைமையிலான குழு அறிக்கை தாக்கல் செய்துள்ளது. இதற்கு தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் ஒரு வாரத்தில் பதிலளிக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. தூத்துக்குடியில் செயல்பட்டு வந்த ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையால் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிப்பதாக கடந்த மாதம் அப்பகுதி...
மேலும்

நாகை மாவட்டத்தில் முதலமைச்சர் ஆய்வு

நாகை, நவ.28:நாகையில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை முதலமைச்சர் வழங்கினார். கஜா புயல் பாதித்த பகுதிகளை பார்வையிட்ட மத்தியக்குழுவினர் நேற்று முதலமைச்சருடன் சென்னையில் ஆலோசனை நடத்தி சென்றனர். இதனைத் தொடர்ந்து கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட முதலமைச்சர் காரைக்கால் விரைவு ரயில் மூலமாக இன்று...
மேலும்

இலவச சைக்கிள்கள் எம்எல்ஏ வழங்கினார்

கடலூர், நவ.27:  பண்ருட்டி சுப்பராயசெட்டியார் பெண்கள் பள்ளியில் விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவிற்கு பள்ளி நிர்வாக குழு செயலாளர் என்ஜினியர் கிருஷ்ணசாமி தலைமை வகித்தார். இணை செயலாளர் மாதவன், கீர்த்தனா மாதவன் ஆகியோர் முன்னிலை வகித்தார். தலைமைஆசிரியர் செல்வி வரவேற்று பேசினார். நிகழ்ச்சியில் +1 மாணவிகள் 700 பேருக்கு ரூ.25 லட்சம் மதிப்பிலான இலவச சைக்கிள்களை சத்யா பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. வழங்கி பேசினார்.
மேலும்

கள்ளுக்கான தடையை நீக்க கோரிக்கை

திருச்சி, நவ.27: கஜா புயல் பாதித்த பகுதிகளில் ராணுவம் மூலம் மீட்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி கூறுகையில், கஜா புயலின் கோரத்தாண்டவத்துக்கு பனைமரங்கள் அழிந்தது தான் காரணம். 1947-ம் ஆண்டில் தமிழகத்தில் 50 கோடி பனைமரங்கள் இருந்தன. தற்போது வெறும் 4 கோடி பனை மரங்கள் மட்டுமே உள்ளன. பனைமரங்கள் இருந்து இருந்தால் புயலின் கோரத்தாண்டவத்தை ஓரளவுக்கு கட்டுப்படுத்தி இருக்கும்....
மேலும்