Home » Category >தமிழ்நாடு (Page 4)

திமுகவுக்கு 4-வது இடமே கிடைக்கும்:அழகிரி சாபம்

சென்னை, செப்.7:திமுகவில் என்னை சேர்க்காவிட்டால், திருவாரூர், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல்களில் திமுகவுக்கு 4-வது இடமே கிடைக்கும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி கூறியுள்ளார். ஆங்கில தனியார் தொலைக்காட்சி சேனலுக்கு அளித்த சிறப்பு பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது: திருமங்கலம் பார்முலா என்றால் ஏதோ பணத்தை கொடுத்து ஜெயித்த தேர்தல் என்கிற குற்றச்சாட்டு சொல்கிறார்கள். ஆனால் 1962 இல் இருந்து கருணாநிதி எப்படி தேர்தல் பணியாற்றுகிறார் என்பதை நான் கவனித்து...
மேலும்

தற்கொலை மிரட்டல் விடுத்த இயக்குனர்

சென்னை, செப்.7: படவாய்ப்பு இல்லாததாலும், பண நெருக்கடியாலும் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக மிரட்டல் விடுத்த இயக்குனரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. விஜய்காந்த் நடித்த பூந்தோட்ட காவல்காரன் உள்ளிட்ட பல படங்களை இயக்கியவர் செந்தில்நாதன். பின்னர் பட வாய்ப்புகள் குறைந்ததை தொடர்ந்து சின்னத்திரையில் நடித்து வந்தார். அந்த நாடகத்தில் இருந்தும் இவர் தூக்கப்பட்டதால் விரக்தியடைந்தார். இந்நிலையில் சொந்தமாக ஒரு படத்தை தயாரித்து இயக்கி வந்துள்ளார். அந்த படத்தை 4...
மேலும்

தூத்துக்குடி விசாரணை: மேலும் 6 மாத அவகாசம்

சென்னை, செப்.7:துப்பாக்கிச்சூடு தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்ட அருணா ஜெகதீசன் ஆணையத்திற்கு மேலும் 6 மாத அவகாசத்தை வழங்குவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. கடந்த மே மாதம் நடைபெற்ற தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்புப் போராட்டத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து, மே 28ஆம் தேதி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு உத்தரவிட்டது. மேலும், இது குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற...
மேலும்

நித்தியானந்தாவுக்கு கோர்ட் பிடிவாரண்ட்

பெங்களூரு, செப்.7:பாலியல் வன்கொடுமை வழக்கில் ஆஜராகாத நித்தியானந்தாவுக்கு ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. நித்தியானந்தாவுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை வழக்குகர்நாடக மாநிலத்தில் உள்ள ராமநகர் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்றுவருகிறது. இந்த வழக்குவிசாரணைக்காக கடந்த ஜூன் 6 ஆம் தேதிக்கு பிறகு, நித்தியானந்தா நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இந்நிலையில் இந்த வழக்குநேற்று விசாரணைக்கு வந்தபோது, நித்யானந்தா நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கக்கோரி அவரது வழக்கறிஞர் மனுதாக்கல் செய்தார்....
மேலும்

பாரத் பந்த்: திமுக ஆதரவு

சென்னை, செப்.7:பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிராக வரும் 10–ந்தேதி நாடுதழுவிய அளவில் நடைபெறவிருக்கும் முழு அடைப்புக்கு திமுக ஆதரவு அளிக்கும் என்று அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருவதால் பொதுமக்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நாள்தோறும் மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது. பெட்ரோல், டீசல் விலைகள் உயர்நது வருஞவதால் விலைவாசி அதிகரித்து வருகிறது. இந்த விலை உயர்வை கண்டித்தும்,...
மேலும்

நாளை முதல் 412 நீட் பயிற்சி மையங்கள் செயல்படும்:செங்கோட்டையன்

சென்னை, செப்.6:தமிழகம் முழுவதும் உள்ள 412 நீட் பயிற்சி மையங்கள், நாளை முதல் செயல்படத்தொடங்கும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார் சென்னை அடையாறில் கைவினைப்பொருட்களுக்கான கண்காட்சியை தொடங்கிவைத்த பின் செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் , கடுமையாக உழைத்துக்கொண்டிருக்கும் ஆசிரியர்களுக்கு, அவர்களுக்கான விடுமுறையின் போது, அருகாமையில் உள்ள சுற்றுலாத்தலங்களுக்கு அவர்களை அழைத்துச்செல்வதற்கு அரசு பரிசீலித்து வருகிறாம். மேலும், 412 நீட் பயிற்சி மையங்கள் நாளை...
மேலும்

கார் பாலத்தில் மோதி கணவன், மனைவி பலி

திருச்சி, செப்.6:மதுரையில் உள்ள மகனை பார்க்க சென்ற போது பாலத்தில் கார் கவிழந்து கணவன் மனைவி உட்பட மூன்று பேர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இன்று அதிகாலை நடந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:- திருச்சி அருகே துறையூர் அடுத்த துரைமங்கலம் மணியாரப்பட்டிக் கிராமத்தை சேர்ந்தவர் வெள்ளையன் (வயது 65). இவரது மனைவி சின்னம்மாள்...
மேலும்

கூட்டுறவு தேர்தல்: அதிமுக வெற்றி

திருவாரூர், செப்.6:திருவாரூர் மாவட்டத்தில் மணலி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மற்றும் கட்டக்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி ஆகிய இரண்டு வங்கிகளுக்கும் நடைபெற்ற நிர்வாகக்குழு உறுப்பினர் தேர்தலில் அதிமுக வெற்றிப்பெற்றுள்ளது. மணலி கூட்டுறவு வங்கி நிர்வாக்ககுழு உறுப்பினர் பொறுப்புக்கு அதிமுக தரப்பில் 11பேரும், திமுக கூட்டணி தரப்பில் 11 பேரும் சுயேட்சைகளாக 8 பேரும் ஆக கூடுதல் 30 பேரும், கட்டக்குடி கூட்டுறவு வங்கி...
மேலும்

எலிக்காய்ச்சல்:கேரளாவுக்கு சென்ற தமிழக பெண் பலி

கோவை, செப்.6:கேரளாவுக்கு சென்று திரும்பிய திருப்பூரை சேர்ந்த பெண் எலி காய்ச்சலால் பாதிக்கபட்டு மரணமடைந்துள்ளார். இதையடுத்து திருப்பூர் மற்றும் தமிழக கேரள எல்லையில் எலி காய்ச்சலை தடுக்க தீவிர மருத்துவ முகாம்கள் நடத்தபட்டு வருகின்றன. கேரளாவில் அண்மையில் ஏற்பட்ட பெரும் மழை வெள்ளத்திற்கு பிறகு எலி காய்ச்சல் பரவி வருகிறது. இந்த மாநிலத்தில் இதுவரை 12 க்கும் அதிகமானோர் இந்த காய்ச்சாலால் பலியாகியுள்ளனர். கேரளாவிலிருந்து தமிழகத்திற்கு எலி...
மேலும்

லாரி மோதி பெண் பலி

செங்குன்றம், செப்.6:செங்குன்றம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த பெண்ணின் மீது லாரி மோதியதில் அவர் சம்பவ இடத்தில் பலியானது அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: புழல் அருகே உள்ள லட்சுமிபுரம் பாரதியார் தெருவை சேர்ந்தவர் புஷ்பா(வயது 32). இவர் நேற்றிரவு செங்குன்றத்தில் நடைபெற்ற உறவினர் வீட்டு வளையல் காப்பு நிகழ்ச்சிக்கு சென்று விட்டு தனது இருசக்கர வாகனத்தில்...
மேலும்

நடிகர் வெள்ளை சுப்பையா மரணம்

ஈரோடு , செப்.6:பிரபல நகைச்சுவை நடிகர் வெள்ளை சுப்பையா உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 72. ஈரோடு மாவட்டம் குஞ்சைபுளியம் பட்டியைச் சேர்ந்த வெள்ளை சுப்பையா சிறு வயதில் ஏராளமான நாடகங்களில் நடித்து வந்தார். சிவாஜி, எம்ஜிஆர், ரஜினி, கமல், விஜயகாந்த் உள்ளிட்ட பல்வேறு முன்னணி நடிகர்களுடன் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். சிறிது காலமாக உடல்நலம் பாதிக் கப்பட்டு இருந்த அவர், நேற்றிரவு மேட்டுப்பாளையத்தில் காலமானார்.
மேலும்