Home » Category >தமிழ்நாடு (Page 3)

தண்டவாளத்தில் விரிசல்

சென்னை, அக். 14:ரெயில்வே பணியாளர்கள் இன்று காலை செங்கல்பட்டு அருகே தண்டவாளத்தில் சோதனை செய்து வந்தனர். அப்போது ரெயில் தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டது தெரியவந்தது. இது குறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தென் மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு வந்த ரெயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேல் தண்டவாளத்தை சரிசெய்யும் பணி நடைபெற்றது.
மேலும்

2 கொள்ளையர் பரபரப்பு வாக்குமூலம்

சென்னை, அக்.14:ரெயில் பெட்டியில் துளையிட்டு ரூ.5.78 கோடி கொள்ளையடிக்கபட்ட வழக்கில் கைதான 2 பேர் பரபரப்பு வாக்குமூலத்தில் அவர்கள் ஒரு மாதமாக நோட்டமிட்டு கொள்ளையடித்ததாகவும் அவர்கள் வாக்குமூலத்தில் கூறியுள்ளனர். மேலும் 10 பேரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர். இது குறித்து சிபிசிஐடி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:கடந்த 2016ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 8 ந் தேதி சேலத்திலிருந்து சென்னைக்கு வந்த விரைவு ரெயிலில் சேலம்...
மேலும்

 துப்பாக்கிச்சூடு சம்பவம் போலீஸ் அதிகாரிகள் சாட்சியம்

தூத்துக்குடி, அக்.14: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் துப்பாக்கிச்சூடு நடந்தது தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் இன்று போலீஸ் இன்ஸ்பெக்டர்களிடம் விசாரணை நடத்தினார்கள். இரண்டாவது நாளாக நடைபெற்ற இந்த விசாரணையில் பல்வேறு தகவல்களை சிபிஐ சேகரித்தது. தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த மே மாதம் 22-ந்தேதி நடந்த போராட்டத்தின் போது போலீசார் நடத்திய தடியடி மற்றும் துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியானார்கள். 99 போலீசாரும்,...
மேலும்

நடராஜர் கோவிலில் நாட்டியாஞ்சலி விழா

சிதம்பரம், அக்.14: சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஒரே நேரத்தில் 3000 பேர்கள் பரதநாட்டியம் ஆடி நடராஜப்பெருமானுக்கு நாட்டிய அஞ்சலி செலுத்தினார்கள். சிதம்பரம் அக்டோபர் 14 சிதம்பரம் நடராஜர் கோவிலில் சபாபதி சங்கீத கான சபா டிரஸ்ட் சார்பில் நவராத்திரி சம்பூர்ண இசை விழா இம்மாதம் 9ஆம் தேதி தொடங்கி 13-ம் தேதி வரை நடைபெற்றது. இதில் நிறைவு நாளான 13 ஆம் தேதி மாலை 6 மணி...
மேலும்

பெருமாள் கோயில் சிலைகள் திருட்டு

வாடிப்பட்டி,அக்.14:மதுரை மாவட்ட குருவித்துறையில் உள்ள வல்லப பொருமாள் கோயிலில் சிலைகள் திருபடப்பட்டுள்ள சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகேயுள்ள குருவித்துறையில் சித்திர ரத வல்லப பெருமாள் கோவில் உள்ளது. இங்கு இருந்த, ஐம்பொன்னாலான, ஸ்ரீதேவி, பூதேவி, சமேத பெருமாள், சீனிவாச பெருமாள் சிலைகளை மர்ம நபர்கள் திருடி சென்றனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு...
மேலும்

மத்திய அமைச்சர் எம்.ஜே.அக்பர் ராஜினாமா?

புதுடெல்லி, அக்.14:பாலியல் சர்ச்சையில் சிக்கியுள்ள மத்திய அமைச்சர் எம்.ஜே.அக்பர், தனது வெளிநாட்டு சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு இந்தியா திரும்பிய நிலையில், தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. வெளியுறவுத்துறை இணை அமைச்சராக இருந்த எம்.ஜே.அக்பர் முன்பு ஏசியன் ஏஜ் உள்ளிட்ட பல்வேறு ஆங்கிலப் பத்திரிகைகளில் ஆசிரியராக பணியாற்றி, செய்தி, கட்டுரைகள் எழுதியுள்ளார். ஊடகத்துறையில் பிரபலமாக விளங்கிய அவர், தனது சக பெண் பத்திரிகையாளர்களுக்கு பாலியல் தொல்லை...
மேலும்

விஜய் அரசியலுக்கு வருவதில் என்ன தவறு?

நெல்லை, அக்.13: நடிகர் விஜய் அரசியலுக்கு வரவேண்டும் என அவரது தந்தையும், இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.  இயக்குனரும் நடிகர் விஜயின் தந்தையுமான எஸ்.ஏ.சந்திரசேகர் இன்று காலை பாபநாசம் வந்தார். அங்கு நடைபெற்ற தாமிரபரணி புஷ்கர விழாவில் அவர் கலந்துகொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- நான் பிறப்பால் கிறிஸ்தவனாக இருந்தாலும் இந்து தத்துவத்தை பின்பற்றுகிறேன். இந்தியாவில் பிறந்த அனைவருமே இந்துக்கள் தான். தற்போது ஆன்மீக பயணமாக நான்...
மேலும்

பெண் தூக்கிட்டு தற்கொலை

சென்னை, அக்.12:வியாசர்பாடியில் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதயில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமாநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர் கவாஸ்கி(வயது 26). இவர் ராமநாதபுரத்தில் ரேஷன் கடையில் வேலை செய்துவந்தார். வியாசர்பாடியை சேர்ந்த கார்த்தி(வயது 30) என்பவருடன் திருமணம் நடைபெற்று வாழ்ந்து வந்த நிலையில் நேற்றிரவு திடீரென வீட்டில் தூக்குபோட்டு இறந்துள்ளார். இதுகுறித்து எம்கேபி நகர் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும்

136 பயணிகளுடன் விமானம் சுவரில் மோதியது

திருச்சி, அக்.12:திருச்சியிலிருந்து இன்று அதிகாலை துபாய் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் விமான நிலைய சுற்றுசுவரில் மோதியது. சேதம் அடைந்த நிலையில் விமானம் 4 மணிநேரம் பறந்து மும்பையில் தரை இறங்கியது. விமானத்தில் இருந்த 136 பயணிகளும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். திருச்சி விமான நிலையத்திலிருந்து இன்று அதிகாலை 1.20 மணியளவில், 136 பயணிகளுடன் துபாய் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் இயந்திர கோளாறு காரணமாக விமானியின்...
மேலும்

மினி லாரி கவிழ்ந்து 5 பேர் பலி

கோவை, அக்.11:கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே வால்பாறை சாலையில் மினி லாரி கவிழ்ந்து 5 பேர் உயிரிழந்தனர். குறுமலை காட்டுப்பட்டி மலை வாழ் மக்கள் குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த 18 பேர் கோட்டூர் சந்தையில் அத்தியாவசிய பொருட்களை வாங்கிக்கொண்டு மினி லாரியில் வால்பாறை வழியாக திரும்பிக் கொண்டிருந்தார்கள். காடம்பாறை அருகே வந்தபோது மினி லாரி டிரைவர் கட்டுப்பாட்டை இழந்தது. சாலையோரம் இருந்த தடுப்புச்சுவரில் மோதி பள்ளத்தில் கவிழ்ந்தது....
மேலும்

தாமிரபரணி மஹா புஷ்கர விழா துவங்கியது

திருநெல்வேலி, அக்.11:144 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும், தாமிரபரணி மகா புஷ்கர விழாவை முன்னிட்டு வேத மந்திரங்கள் முழங்க, தீபாராதனை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து தூத்துக்குடி, திருநல்வேலி மாவட்டங்களில் பாய்ந்தோடும் தாமிரபரணி ஆற்றின் படித்துறைகளில் பக்தர்கள் புனித நீராடி வருகின்றனர். நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களைச் சேர்ந்த பாபநாசம், அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி உள்ளிட்ட இடங்களில் உள்ள தாமிரபரணி ஆற்றின் படித்துறைகளில் மகா புஷ்கர விழா இன்று தொடங்கியுள்ளது. குருபகவான் துலாம்...
மேலும்