Home » Category >தமிழ்நாடு (Page 2)

மணல் கொள்ளையர்களால் காவலர் அடித்துக்கொலை

நெல்லை, மே 7:நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே மணல் கொள்ளையை தடுக்க முயன்ற காவலர் அடித்துக் கொல்லப்பட்டார். இதுதொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். நாங்குநேரி அருகே சிந்தாமணிப் பகுதியைச் சேர்ந்த ஜெகதீஷ்துரை என்பவர், தெற்கு விஜயநாராயணம் காவல் நிலையத்தில், எஸ்.பி.யின் நேரடிக் கட்டுப்பாட்டில் உள்ள தனிப்பிரிவு காவலராக பணியாற்றி வந்தார். இந்நிலையில், பாண்டிச்சேரி கிராமம் அருகே உள்ள நம்பியாற்றுப் பகுதியில் இரவு நேரத்தில் சிலர்...
மேலும்

தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு

சென்னை,மே.6:வங்க கடலில் மேலடுக்கு சுழற்சி ஏற்பட்டுள்ளதால், தென் மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் நேற்று முன்தினம் துவங்கியது. ஆனால் பல இடங்களில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக சேலம், கோவை மாவட்டங்களில் எதிர்பாராத அளவுக்கு இடி, மின்னலுடன் மழை கொட்டியது. இந்நிலையில் வங்க கடலில் மேலடுக்கு சுழற்சி நீடிப்பதால், இன்று தமிழகத்தின் தெற்கு பகுதிகளில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை...
மேலும்

ஜெ. நினைவு மண்டபம்: நாளை அடிக்கல்

சென்னை,மே.6:மறைந்த முதல்வர் ஜெயலலிதா நினைவு மண்டபத்திற்கு அடிக்கல் நாட்டு விழா நாளை காலை 9 மணியளவில் நடைபெறவுள்ளது. முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமியும், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் இணைந்து நினைவு மண்டபத்திற்கு அடிக்கல் நாட்டவுள்ளனர். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உடல் நலக்குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார், 2016-ம் ஆண்டு டிசம்பர் 5-ம் தேதி ஜெயலலிதா மரணம் அடைந்தார். அவரது உடல் மெரீனா கடற்கரையில் அமைந்துள்ள எம்ஜிஆர் நினைவிடத்திற்கு...
மேலும்

நீட் தேர்வு எழுதிய மாணவனின் தந்தை மரணம்

திருத்துறைப்பூண்டி, மே 6:திருத்துறைப்பூண்டியில் இருந்து எர்ணாகுளத்திற்கு நீட் தேர்வு எழுதச் சென்ற மாணவனின் தந்தை தேர்வு கூடத்திற்கு வெளியே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அவரது உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவின் பேரில் அதிகாரிகள் குழு எர்ணாகுளம் விரைந்துள்ளது. விளாக்குடி கிராமத்தில் இருந்து கேரள மாநிலம் எர்ணா குளத்தில் உள்ள தேர்வு மையத்தில் நீட் தேர்வு எழுதி கொண்டிருந்த...
மேலும்

அண்ணா பல்கலை ஆலோசகர் நடிகர் அஜித்

சென்னை, மே 4:திரையுலகில் கோடிக்கணக்கில் சம்பாதிக்கும் நடிகர் அஜித், அண்ணா பல்கலைக்கழகத்திற்குட்பட்ட எம்ஐடியில் ஆளில்லாத விமானங்களை இயக்குவதற்கு பயிற்சி அளிப்பதற்கு ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.இந்த வேலைக்கு ரூ.1000 மட்டுமே அவர் சம்பளமாக பெறுகிறார். நடிகர்கள் ரஜினிகாந்த், கமலஹாசன் ஆகியோர் அரசியலுக்கு வந்துவிட்ட நிலையில் நடிகர் அஜித் புதிய பாதையை தேர்ந்தெடுத்து சேவை யாற்ற முடிவெடுத்துள்ளார். இந்நிலையில் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் ஹெலிகாப்டர் சோதனை பைலட்டாக நடிகர் அஜித் நியமனம்...
மேலும்

நாளை பால் தட்டுப்பாடு இருக்காது: ஆவின்

சென்னை, மே 4:வணிகர் தின மாநாட்டில் பால் முகவர்கள் கலந்து கொள்ள இருப்பதால் நாளை பால் தட்டுப்பாடு ஏற்படும் என கூறப்பட்ட நிலையில், 24 மணி நேரமும் பால் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஆவின் அறிவித்துள்ளது. இந்திய வணிகர் மீட்பு மாநாட்டில் தமிழக மாநில, மாவட்ட நிர்வாகிகள் உட்பட ஆயிரக்கணக்கான பால் முகவர்கள் மாநாட்டில் கலந்துகொள்ள இருக்கிறார்கள். இதனால், நாளை ஒரு நாள் மட்டும் பால் விற்பனை...
மேலும்

மின்னல் தாக்கியதில் தாய். மகன் உயிரிழந்தனர்

விழுப்புரம், மே 2: சென்னை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் வெயில் கொளுத்தி வந்தாலும், வடமாவட்டங்களில் நேற்றிரவு பலத்த மழை பெய்த நிலையில், விழுப்புரம் அருகே மின்னல் தாக்கி 2 பேர் உயிரிழந்தனர். உளுந்தூர்பேட்டை அருகே இடிதாக்கியதில் இருவர் உயிரிழந்தனர். உளுந்தூர்பேட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்றிரவு இடியுடன் கூடிய கனமழை பெய்தது. மழை காரணமாக எம்.குண்ணத்தூர் கிராமத்தைச் சேர்ந்த சகுந்தலா, இளவரசன் ஆகியோர் ஒரு மரத்தின்...
மேலும்

திமுக செய்த துரோகம்:முதல்வர்

அம்பத்தூர், மே 2:காவிரி விவகாரத்தில் துரோகம் விளைவித்தது திமுக தான் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டினார். மேலும் பொது மக்கள் சட்டம் ஒழுங்கு பாதிக்காமல் அமைதியான முறையில் போராட வேண்டும் எனவும் அவர் கேட்டு கொண்டார்.திருவள்ளூர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மேதின பொதுக்கூட்டம் அம்பத்தூரில் மாவட்ட செயலாளர் அலெக்சாண்டர் எம்.எல்.ஏ. தலைமையில் நடைபெற்றது. இதில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு தொழிலாளர்களுக்கு நலத்திட்ட...
மேலும்

ரஜினிகாந்த் 5-ந் தேதி சென்னை திரும்புகிறார்

சென்னை, மே 2:அமெரிக்கா சென்றுள்ள சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 5-ந் தேதி சென்னை திரும்ப உள்ளார். அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்க நிர்வாகிகள் திட்டமிட்டுள்ளனர். புதிய கட்சி தொடங்குவேன் என நடிகர் ரஜினிகாந்த் அறிவித்த கையோடு, மாவட்ட வாரியாக நிர்வாகிகள் நியமனம் நடந்து வருகிறது. விரைவில் தனது கட்சி பெயர் மற்றும் கொடியை அறிமுகப்படுத்த ரஜினி திட்டமிட்டுள்ளார். அதற்கான பணிகளில் ரஜினி தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில்...
மேலும்

குடிகார தந்தையால் தற்கொலை செய்த மாணவன்

நெல்லை-, மே 2:குடிகார தந்தையை திருத்த நெல்லை சேர்ந்த மாணவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இவர் தனது முடிவுக்கு பின்னரும் டாஸ்மாக் கடைகள் மூடப்படாவிட் டால் ஆவியாக வந்து அவற்றை மூடச் செய்வேன் என்று உருக்கமான கடிதத்தை அந்த மாணவர் எழுதி வைத்துள்ளார். குருக்கள்பட்டி கிராமத்தை சேர்ந்த மாடசாமி என்பவரது மகன் தினேஷ் 12ம் வகுப்பு படிக்கும் மாணவரான இவரின் தந்தை, கடந்த சில...
மேலும்

தமிழக தலைவர்கள் மே தின வாழ்த்து

சென்னை, ஏப்.30:மே தினத்தை முன்னிட்டு தொழிலாளர்களுக்கு பல்வேறு கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.இதுகுறித்து அவர்கள் வெளியிட்ட செய்தி வருமாறு:- ஜி.கே. வாசன்-தொழிலாளர்கள் தங்களுடைய உரிமைகளை போராடி பெற்ற மே தினத்தில் உழைக்கும் தோழர்களுக்கு தமாகா சார்பில் மே தின நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். ராமதாஸ்-பாமக தலைவர் டாக்டர் ராமதாஸ் தனது மே வாழ்த்து செய்தியில், உழைப்பாளர்களின் ஒற்றுமையை உலகிற்கு உணர்த்திய பாட்டாளிகளின் நாளை மே நாளாக கொண்டாடும் உலகத்...
மேலும்