Home » Category >தமிழ்நாடு (Page 147)

3 ஆம்னி பஸ் பறிமுதல்

சென்னை, ஆக.12: நான்கு நாள் தொடர் விடுமுறை வருவதால் சொந்தஊர் செல் பவர்களிடம் ஆம்னி பஸ்களில் கட்டண கொள்ளை நடைபெறுவதாக புகார் வந்தது. இதையடுத்து அமைச்சர் நள்ளிரவில் ஆய்வு நடத்தி நடவடிக்கை எடுத்தார். இதன் விளைவாக 11 பஸ்களில் வசூலிக்கப்பட்ட அதிக கட்டணம் பயணிகளுக்கு திருப்பி கொடுக்கப்பட்டது. 3 பஸ்கள் பறிமுதல் செய்யப்பட்டன. சனி, ஞாயிறு வார விடுமுறை, கிருஷ்ணஜெயந்தி, சுதந்திரதினம் என தொடர்ச்சியாக 4 நாட்கள்...
மேலும்

மெரினாவில் மீண்டும் சிவாஜி சிலை: தமிழ் திரையுலகம் சார்பில் கோரிக்கை

சென்னை, ஆக.12:  மெரினாவில் மீண்டும் சிவாஜி சிலையை அமைக்க வேண்டும் என தமிழ் திரையுலகம் சார்பில் அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. மறைந்த நடிகர்திலகம் சிவாஜி கணேசனுக்கு சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் காந்தி சிலைக்கு எதிரே வெண்கல சிலை கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு அப்போதைய திமுக ஆட்சியில் அமைக்கப்பட்டது. போக்குவரத்துக்கு இடையூறாக அந்த சிலையிருப்பதால் அதை அகற்ற வேண்டும் என நீதிமன்றத்தில் பொது நல...
மேலும்

2 கிராம் எடையில் தங்க செங்கோட்டை

சிதம்பரம் ஆக.12: சிதம்பரத்தில் நகை செய்யும் ஊழியர் ஒருவர் 2 கிராம் எடையில் தங்கத்தில் செங்கோட்டையை செய்து  சாதனை படைத்திருக்கிறார். சிதம்பரம் இளமையாக்கினார் கோவில் தெருவில் பவுன் நகைகள் செய்து தரும் கடை வைத்து இருப்பவர் ஜெயபால். இவரது மகன் முத்துகுமரன் வயது 36. இவர் தனது தந்தைக்கு உதவியாக கடையில் நகைகள் தயாரித்து வருகிறார். இவர் தீப்பெட்டி அளவுக்கு குறைவான அளவில் 2 கிராம் 150...
மேலும்

மத்திய அரசு மீது திருநாவுக்கரசர் தாக்கு

சென்னை, ஆக.12: அதிமுகவின் இரு அணிகளிடமும் மத்திய அரசு கட்டபஞ்சாயத்து நடத்துகிறது என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கூறினார். தூத்துக்குடி செல்லும் வழியில் இன்று காலை சென்னை விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. விலைவாசி தாறுமாறாக உயர்கிறது. அரசின் தவறான கொள்கைகளால் மக்கள் பல இன்னல்களை அனுபவித்து வருகிறார்கள்.  தமிழகத்தில் பிரச்சனைகளை தீர்ப்பதற்கு பதிலாக அமைச்சர்கள் டெல்லியில்...
மேலும்

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து  8,150 கனஅடியாக அதிகரிப்பு

மேட்டூர் , ஆக.12: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 8,150 கனஅடியாக அதிகரித்து வருகிறது. காவிரி நீர்பிடிப்பு பகுதிகளிலும் சில தினங்களால் கனமழை பெய்து வருகிறது.இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 8 ஆயிரத்து 150 கன அடியாக அதிகரித்துள்ளது. கர்நாடகாவில் உள்ள கிருஷ்ணராஜசாகர், கபினி அணைகளில் இருந்து காவிரியில் தமிழகத்துக்கு நீர் திறக்கப்பட்டு வருகிறது. நேற்று விநாடிக்கு 7 ஆயிரத்து 249 கனஅடி நீர் மேட்டூர் அணைக்கு வந்து...
மேலும்

கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையத்தில் அமைச்சர் திடீர் ஆய்வு

சென்னை, ஆக.12: நேற்று இரவு கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையத்தில் தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்ஆர்சு விஜயபாஸ்கர் தனியார் பேருந்து மற்றும் அரசு பேருந்துகளை திடீர் ஆய்வு செய்தார். அதிகக் கட்டணம் வசூலித்த 15 ஆம்னிப் பேருந்துகள் சிறைபிடிக்கப்பட்டதாக அமைச்சர்எ ம்ஆர்விஜயபாஸ்கர் தெரிவித்தார். மேலும் ஆம்னிப் பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார். இன்று முதல் நான்கு நாட்களுக்கு...
மேலும்

டிடிவி தினகரன் எச்சரிக்கை

தஞ்சாவூர், ஆக.11: எடப்பாடி பழனிசாமி தடம் மாறினால் ஆட்சிக்கு சிக்கல் ஏற்படும் என்றும் கட்சியின் நலன் கருதி எந்த முடிவையும் எடுக்க ஒரு போதும் தயங்கமாட்டேன் என்றும் டிடிவி தினகரன் தெரிவித்தார். முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும் டிடிவி தினகரனுக்கும் இடையே அதிகாரப் போட்டி உச்சக்கட்டத்தை அடைந்திருக்கும் நிலையில், டிடிவி தினகரன் கட்சி பதவி செல்லாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அதற்கு பதில் அளிக்கும் வகையில் செய்தியாளர்களை சந்தித்தார்...
மேலும்

ராஜீவ் வழக்கில் தண்டனை பெற்ற ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார் முன்கூட்டி விடுதலை செய்ய முடியாது

சென்னை, ஆக.11:ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் ராபர்ட் பயஸ்,  ஜெயக்குமார் ஆகியோரை முன் கூட்டியே விடுதலை செய்ய முடியாது என்று மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது.  முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதிகளாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள ராபர்ட் பயஸ், ஜெயகுமார் ஆகியோர், தங்களை முன்கூட்டி விடுதலை செய்யக் கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில்...
மேலும்

அரசு பேருந்து ஓட்டுரை பிளேடால் தாக்கிய மாணவர்கள்

கரூர், ஆக.11:கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையத்தில் அரசு பேருந்து ஓட்டுநர் சிவக்குமார் என்பவருடன் ஏற்பட்ட தகராறில் அவரை பிளேடால் தாக்கிய 2 மாணவர்களை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 2 பேரையும் விடுவிக்க கோரி அரசு பள்ளி முன்பு மாணவர்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.
மேலும்

எடப்பாடி, ஓ.பி.எஸ் கூட்டாக பேட்டி அளிக்க திட்டம்

சென்னை, ஆக.11:  துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பதவியேற்பு விழாவில் பங்கேற்பதற்காக டெல்லி சென்றுள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் பிரதமர் மோடியை சந்தித்து பேச திட்டமிட்டுள்ளனர். இந்த சந்திப்பிற்கு பிறகு இணைப்பு பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை இருவரும் கூட்டாக வெளியிடுவார் என்று தெரிகிறது. இந்த அறிவிப்பு டெல்லியில் இருந்து இருவரும் திருந்திய உடன் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக இரு தரப்பு வட்டாரம் தெரிவித்துள்ளது.
மேலும்

எடப்பாடி மீதே நடவடிக்கை எடுப்பேன்: தினகரன்

சென்னை, ஆக.11:  அதிமுக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் நேற்று தஞ்சாவூரில் அளித்த பேட்டியில், கட்சி பொறுப்புக்கு யாரை வேண்டுமானாலும் நியமிக்க எனக்கு அதிகாரம் உள்ளது என்றும், என்னை நீக்க பொதுச்செயலாளருக்கு மட்டுமே அதிகாரம் இருக்கிறது என்றும் கூறினார். அவர் மேலும் கூறுகையில், தவறு செய்தவர்கள் திருந்த வேண்டும். அமைச்சர்கள் எஞ்சிய காலத்திற்குள் சுருட்ட நினைக்கிறார்கள். கட்சியின் நலன் கருதி முதலமைச்சர் எடப்பாடி மற்றும் அமைச்சர்கள் மீது...
மேலும்