w
Home » Category >தமிழ்நாடு (Page 146)

பாம்பாறு கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

வேலூர், செப்.7:வேலூர்-திருப்பத்தூரில் கனமழையால் ஆண்டியப்பனூர் அணை நிரம்ப உள்ளதால் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பாம்பாறு கரையோர கிராம மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.
மேலும்

கௌரி லங்கேஷ் படுகொலை: வைகோ கண்டனம் 

சென்னை, செப்.7: கௌரி லங்கேஷ் படுகொலைக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கன்னட பத்திரிகையான “லங்கேஷ் பத்திரிகே வார இதழின் நிறுவனரும், முதன்மை ஆசிரியருமான கௌரி லங்கேஷ் பெங்களூருவில் 5ம் தேதி இரவு தனது வீட்டில், மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டுள்ளார். பெண் பத்திரிகையாளராக பல்வேறு ஆங்கில நாளேடுகளில் பணியாற்றிய கௌரி லங்கேஷ் வகுப்புவாதம், மதவாதத்திற்கு...
மேலும்

நீட்டுக்கு எதிராக 12-ல் பாமக சார்பில் போராட்டம்

சென்னை, செப்.7: நீட் தேர்விலிருந்து விலக்கு கிடைக்கும் வரை போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும். இப்போது நடைபெற்று வரும் போராட்டங்கள் மேலும் தீவிரப்படுத்தப்பட வேண்டும் என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நீட்தேர்வால் கிராமப்புற ஏழை மாணவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து தொடக்கம் முதலே எச்சரித்து வந்ததும், நீட்டுக்கு எதிராக தொடர் போராட்டங்களை நடத்தி வந்ததும் பாட்டாளி...
மேலும்

அனிதாவிற்கு மூளை சலவை செய்யப்பட்டது: கிருஷ்ணசாமி

டெல்லி, செப்.7:  அரியலூர் அனிதா மூளைச் சலவை செய்யப்பட்டதாலேயே தற்கொலை செய்து கொண்டதாக புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி குற்றம்சாட்டியுள்ளார். இதற்கான ஆதாரங்களை சிபிஐ முன் அளிக்க தயாராக உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது:- அரியலூர் மாணவி அனிதா மூளைச் சலவை செய்யப்பட்டதால்தான் தற்கொலை செய்துள்ளார். இது தொடர்பான ஆதாரங்கள் என்னிடம் உள்ளன. சிபிஐ அல்லது விசாரணை ஆணையம்...
மேலும்

மரம் விழுந்து உயிரிழந்தவர் குடும்பத்திற்கு ரூ.4 லட்சம் நிதி

சென்னை, செப்.7: மரம் விழுந்து உயிரிழந்த மாணவன் குடும்பத்திற்கு ரூ.4 லட்சம் மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து உடனடியாக வழங்க முதலமைச்சர் எடப்பாடி உத்தரவிட்டுள்ளார். இது குறித்து அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: கோயம்புத்தூர் மாவட்டம், வால்பாறை வட்டம், ஆனைமலைக் குன்றுகள் கிராமம், வால்பாறை நகராட்சிக்கு சொந்தமான அண்ணா திடல், வால்பாறை – பொள்ளாச்சி பிரதான சாலையில் மழையின் காரணமாக, பழமையான மரம் சாய்ந்து விழுந்ததில், பள்ளிக்கு...
மேலும்

ஜாக்டோ ஜியோ போராட்டத்திற்கு கோர்ட் தடை

மதுரை, செப்.7: ஜாக்டோ ஜியோ அமைப்பினர் போராட்டத்திற்கு இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் ஜாக்டோ ஜியோ அமைப்பின் ஒரு பிரிவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் சேகரன் என்பவர் இந்த போராட்டத்திற்கு தடை விதிக்க கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு...
மேலும்

பேருந்து நிழற்குடை சரிந்து 4 பேர் பலி

கோவை, செப்.7:கோவை மாவட்டம் சோமனூர் பேருந்து நிலையத்தில் மேற்கூரை சரிந்து விழுந்ததில் அதன் கீழ் நின்றிருந்த 4 பேர் பரிதாபமாக பலியானார்கள். காயமடைந்த பலர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
மேலும்

மின்வேலியில் சிக்கி இருவர் பலி

அரியலூர், செப்.7: அரியலூர் அருகே மின்வேலியில் சிக்கி தந்தை, மகன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அரியலூர் மாவட்டம் சாத்தாம்பாடி கிராமத்தைச் சேர்ந்த வேலாயுதமும், அவரது மகன் தங்கராசுவும் தங்களது நிலத்துக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது அங்கு காட்டுப்பன்றிக்காக போடப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கி இருவரும் உயிரிழந்தனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும்

பூச்சி மருந்து குடித்து விவசாயி தற்கொலை

திருப்பூர், செப்.7: பல்லடத்தில் வங்கி அதிகாரிகள் ட்ராக்டரை ஜப்தி செய்ததால் விவசாயி தற்கொலை செய்துக்கொண்டதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர். திருப்பூர் மாவட்டம் பல்லடம் கணபதிபாளையம் பகுதியைச் சேர்ந்த வெள்ளியங்கிரிநாதன். விவசாயியான இவர் அப்பகுதியில் உள்ள தனியார் வங்கியில் கடன் பெற்று ட்ராக்டர் வாங்கியுள்ளார். சில மாதங்களாக முறையாக தவணை கட்டாததால் வங்கி அதிகாரிகள் ட்ராக்டரை ஜப்தி செய்துள்ளனர். இது தொடர்பாக புகார் மனுவை காவல்துறையினர் பெற மறுத்தால் பூச்சிகொல்லி...
மேலும்

டாஸ்மாக் ஊழியர்களிடம் ரூ.5 லட்சம் கொள்ளை

திருப்பூர், செப்.7: திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் டாஸ்மாக் ஊழியர்களை கத்தியால் குத்தி 5 லட்சம் ரூபாய் வழிப்பறி செய்த மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர். திருப்பூர் மாவட்டம் வடுகபாளையம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை நேற்று இரவு 10 மணியளவில் பூட்டிவிட்டு ஊழியர்கள் ஜெய்பிரசாந்த், பழனிவேல் ஆகியோர் கடையில் இருந்த 5 லட்சம் ரூபாயுடன் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது மற்றொரு இருசக்கர...
மேலும்

சரக்கு வாகனம் மோதி பெண் சப்-இன்ஸ்பெக்டர் பலி

மதுரை, செப்.7: விபத்தில் சிக்கிய லாரிகளை ஓழுங்குபடுத்தியபோது, உதவி பெண் ஆய்வாளர் மீது சரக்கு வாகனம் ஒன்று மோதியதில் சம்பவ இடத்திலேயே அவர் பலியானார். நெல்லையிலிருந்து மதுரை செல்லும் புறவழிசாலையில் தாழையூத்து அருகே இன்று அதிகாலை 2 மணியளவில் சாலை ஓரமாக நின்று கொண்டிருந்த சிலிண்டர் லாரி மீது தண்ணீர் லாரி ஓன்று மோதி விபத்துக்குள்ளானது. இதையடுத்து அந்த இடத்திற்கு வந்த தாழையூத்து காவல் நிலைய உதவி...
மேலும்