w
Home » Category >தமிழ்நாடு (Page 145)

தமிழிசையை விமர்சிக்காதீர்: சூர்யா மன்றம்

சென்னை, செப்.10: சூர்யா நீட் தேர்வை பற்றி தமிழ் ஹிந்து நாளேட்டில் தம்முடைய கருத்துக்களை பதிவிட்டு இருந்தார். அதற்கு சமூகத்தின் பல்வேறு தரப்புகளிடமிருந்தும் ஆக்கபூர்வமான ஆதரவு குரல்கள் வந்து கொண்டிருக்கின்றன. எதிர்பாராத விதமாக, தமிழக பிஜேபி மாநிலத் தலைவர் மருத்துவர் தமிழிசை சௌந்தரராஜன் மட்டும், மேலோட்டமாக விமர்சித்துள்ளார்.அது அவரது கருத்து. அதற்கு எதிர்வினையாக, சமூக வலைத்தளங்களில் உங்களில் சிலர் தரமற்ற வார்த்தைகளால் மருத்துவர் தமிழிசை சௌந்தரராஜன் விமர்சிப்பதாக...
மேலும்

பிஜேபியுடன் கூட்டணி?

காஞ்சிபுரம், செப்.9: பிஜேபியுடன் கூட்டணி குறித்து உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் பரீசிலித்து முடிவு எடுக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியிருக்கிறார். வேலூரில் நடைபெறும் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் கலந்து கொள்ள இன்று சென்னையில் இருந்து முதல்வர் எடப்பாடி பழனி சாமி காலை 10.30 மணியளவில் காஞ்சிபுரம் வந்தார். வழி நெடுகிலும் மக்கள் வரிசையாக நின்று வரவேற்பு அளித்தனர். காஞ்சிபுரம் சேத்தன்குளம் பகுதியில் பிரமாண்ட வரவேற்பு...
மேலும்

நடிகர் சூர்யா மீது தமிழிசை கடும் தாக்கு

சென்னை, செப்.9: நடிகர் சூர்யாவுக்கு நீட் தேர்வு பற்றி என்ன தெரியும்? பணத்திற்காக நடிப்பவர் மருத்துவ தேர்வு பற்றி பேசக்கூடாது என்று பிஜேபி மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் தான் டாக்டராக சமூக சேவை செய்து அரசியலுக்கு வந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு நாளிதழ் ஒன்றிற்கு பேட்டி அளித்திருந்த நடிகர் சூர்யா அனிதா மரணம் பற்றியும், நீட் தேர்வு...
மேலும்

பிஜேபி உடன் கூட்டணி:முதல்வர்

காஞ்சிபுரம்,செப்.9: பிஜேபி உடன் கூட்டணி பற்றி உள்ளாட்சி தேர்தல் வரும் போது முடிவெடுப்போம் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். மத்தியில் பிஜேபி அமைச்சரவையில் அதிமுக ஏற்கெனவே இடம் பெற்றிருந்ததை சுட்டிக் காட்டிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, வரும் உள்ளாட்சித் தேர்தலில் பிஜேபிவுடன் இணைந்து தேர்தலை சந்திப்பதில் தவறு இல்லை என்றார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு துணை முதல்வர் ஓபிஎஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் உள்ளாட்சித்...
மேலும்

அதிமுக பொதுக்குழு திட்டமிட்டபடி நடைபெறும் : அமைச்சர் ஜெயக்குமார்

சென்னை, செப்.9: தினகரன் அணியில் இருந்து ஜக்கையனை போல் மேலும் பல எம்எல்ஏக்கள் அணி மாறுவார்கள் என்றும் பொதுக்குழு கூட்டம் திட்டமிட்டபடி நடைபெறும் என்றும் அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறினார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம்  அமைச்சர் ஜெயக்குமார் பேசுகையில், சட்டப்பேரவையில் எங்களின் அறுதி பெரும்பான்மையை நிரூபிப்போம். திட்டமிட்டபடி செப்டம்பர் 12-ல் பொதுக் குழு, செயற்குழு கூட்டம் நடைபெறும். அனைவரும் கலந்து கொள்வார்கள் என்றார். மேலும், தமிழகத்தை சூறையாடி...
மேலும்

பாறை இடுக்கில் சிக்கிய மாணவனை போராடி மீட்பு

திருத்தணி செப் 8: பள்ளிக்கு போகாமல் நண்பர்களுடன் மலையேற சென்ற பிளஸ்டூ மாணவன் மலையில் உள்ள பாறையில் கால் சிக்கி போராடிய சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரக்கோணம் தாலுகா கீழாந்தூர் கிராமத்தை சேர்ந்த வெங்கடேசன் மகன் ராகேஷ் (வயது17) இவர் திருத்தணி டாக்டா ராதாகிருஷ்ணன் அரசு மேனிலைப்பள்ளியில் 12ஆம் வகுப்பு படிக்கிறார். நேற்று குறைவான ஆசிரியர்கள் வந்ததால் பள்ளிக்கு கட் அடித்து விட்டு சக...
மேலும்

கல்வியில் சிறந்த மாநிலமாக திகழ்கிறது தமிழகம்: எடப்பாடி பழனிசாமி

தூத்துக்குடி, செப்.8: தமிழகம் கல்வியிலே ஒரு சிறந்த மாநிலமாக விளங்கி கொண்டிருக்கிறது என்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.  தூத்துக்குடி சாயர்புரம் போப் தன்னாட்சி கல்லூரி துவக்க மற்றும் அறிவியல் பிரிவு விரிவாக்கக் கட்டட திறப்பு விழாவில் கல்லூரி முதல்வர் செல்வக்குமார், தேவசகாயம் வாழ்த்துரை வழங்கினர். விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொண்டு போப் கல்லூரியை தன்னாட்சி கல்லூரியாக அறிவித்த அரசு ஆணையை வெளியிட்டு, அறிவியல்...
மேலும்

நம்பிக்கையில்லா தீர்மானத்தில் பின்வாங்கும் திமுக

சென்னை, செப்.8: எடப்பாடி அரசு மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர இருந்த திமுக தற்போது அந்த முயற்சியில் இருந்து பின்வாங்குவதாக கூறப்படுகிறது. தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் உறுதியாக இருக்க மாட்டார்கள் என்ற சந்தேகமே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. கடந்த மாதம் 22-ந் தேதிதினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 22 பேர் தமிழக கவர்னரை சந்தித்து எடப்பாடி பழனிசாமி மீது நம்பிக்கை இல்லை என்று கூறி...
மேலும்

எம்ஜிஆர் நூற்றாண்டு கால்கோள் விழா

சேலம், செப்.8: சேலம் – பெரியார் பல்கலைக்கழக திடலில் நடைபெறும் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா கால்கோள் விழாவில் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன், தங்கமணி, அன்பழகன், செல்லூர் ராஜூ உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மேலும்

கும்பாபிஷேக விழாவில் 50 சவரன் திருட்டு

தூத்துக்குடி, செப்.8: தூக்குடியில் உள்ள சங்கரராமேஸ்வரர் கோயில் கும்பாபிஷேக விழாவில் பெண்களிடம் 50 சவரன் நகைகள் திருடப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. விழாவில் போலீஸ் பாதுகாப்பு சரியாக போடப்படவில்லை என்று பக்தர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
மேலும்

சிறையிலிருந்து மாணவி வளர்மதி விடுதலையானார்

சென்னை, செப்.5:ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்திய கல்லூரி மாணவி வளர்மதியை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைத்து பிறப்பித்த உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் கடந்த 5-ந் தேதி ரத்து செய்திருந்தது. இந்நிலையில் இன்று அவர் கோவை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார்.
மேலும்