Home » Category >தமிழ்நாடு (Page 109)

சீட்டு மோசடி ஆசாமி மீது துப்பாக்கிச் சூடு

திருவள்ளூர், அக் 23:சீட்டு பணம் தரமறுத்தவரை துப்பாக்கியால் சுட்ட வாடிக்கையாளரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: திருவள்ளூரை சேர்ந்தவர் ரகுநந்தன் (வயது 39). இவர் பாகின்மேடு, ஐந்துவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களிடமிருந்து சீட்டு பணம் வசூலித்துவந்துள்ளார். இவரிடம், ரமேஷ் என்பவரும் பணம் கொடுத்து சந்தாதாரராக இணைந்தார். ஆனால், சீட்டு தொகையை திருப்பி தராமல் வாடிக்கையாளர்களை ஏமாற்றிவந்த...
மேலும்

தடுப்பணையில் மூழ்கி 2 வாலிபர்கள் பலி

வேலூர், அக்.23:வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே புல்லூர் தடுப்பணையில் குளிக்க சென்ற இரண்டு கல்லூரி மாணவர்கள் தண்ணீரில் அடித்துச்செல்லப்பட்டனர்.இதில் ஒருவர் உடல் கரை ஒதுங்கியது.மற்றொருவரை இருமாநில போலீசாரும் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த கனகம்மா சத்திரம் அருகே உள்ளது புல்லூர் தடுப்பணை. இந்த தடுப்பணை தமிழகம் மற்றும் ஆந்திரா மாநில எல்லைகளில் உள்ளது. மழை அதிகமாக பெய்துவருவதால்...
மேலும்

கலெக்டர் அலுவலகம் முன்பு 4 பேர் தீக்குளிப்பு

திருநெல்வேலி, அக்.23: கந்துவட்டி கொடுமையால் கலெக்டர் அலுவலகம் முன்பு திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த தம்பதி மற்றும் அவர்களது 2 குழந்தைகள் உடலில் மண்ணெண்னையை ஊற்றி தீ வைத்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருநெல்வேலி மாவட்டம் காசி தர்மத்தைச் சேர்ந்த இசக்கி முத்து சுப்புலட்சுமி தம்பதியர் தங்களின் இரண்டு குழந்தைகளுடன் இன்று நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தனர். தங்களின் கைகளில் வைத்திருந்த மண்ணெண்ணையை எடுத்து...
மேலும்

கருணாநிதிக்கு பேச்சு பயிற்சி

சென்னை, அக்.23:கட்சிக்கு ஆலோசனை வழங்க திமுக தலைவர் கருணாநிதிக்கு பேச்சு பயிற்சி கொடுக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. தி.மு.க. தலைவர் கருணாநிதி கடந்த 1 வருடமாக உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனை மற்றும் தனது கோபாலபுரம் வீட்டில் சிகிச்சை பெற்று வருகிறார்.அவரது உடல்நிலை சமீபமாக நாளுக்கு நாள் முன்னேறி வருகிறது. கடந்த வாரம் முரசொலி அலுவலகத்துக்கு அவரை அழைத்து வந்தனர். அங்கு அமைக்கப்பட்டிருந்த முரசொலி கண்காட்சியை பார்வையிட...
மேலும்

ரெயில் முன் பாய்ந்து மாணவர் தற்கொலை

திருச்சி, அக்.23: திருச்சி அண்ணாமலை நகர் அருகே கரூர் பைபாஸ் சாலை ரெயில்வே மேம்பாலத்தின் கீழ் பள்ளி மாணவன் ஒருவர் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார். போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில் அங்குள்ள பள்ளியில் 11ம் வகுப்பு பயின்று வந்தவர் என்பது தெரியவந்தது.
மேலும்

தேசிய நெடுஞ்சாலையில் வழிப்பறி:4 மாணவர் கைது

காஞ்சிபுரம், அக்.23: காஞ்சிபுரம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்களை வழிமறித்து பணம், செல்போன் ஆகியவைகளை வழிப்பறி செய்த கல்லூரி மாணவர்கள் 4 பேரை தனிப்படை போலீசார் கைது செய்து தாலுகா காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். தலைமறைவான ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர்.
மேலும்

தனுஷ் மீது போலீசில் புகார்

மதுரை, அக்.23 : நடிகர் தனுஷ் மீது மதுரை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மேலூரைச் சேர்ந்த கதிரேசன் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், மதுரை ஐகோர்ட் கிளையில் நடிகர் தனுஷ் தாக்கல் செய்த ஆவணங்கள் போலியானவை. அதனால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும்

டெங்கு பாதிப்பு குறைந்துவிட்டது:அமைச்சர் 

சென்னை, அக்.22:டெங்கு காய்ச்சல் பாதிப்பு தற்போது தமிழகத்தில் வெகுவாக குறைந்து வருவதாகவும், வெகு விரைவில் இந்தக் காய்ச்சல் நூறு சதவீதம் கட்டுப்படுத்தப்படும் என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். சென்னை எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் குழந்தைகளை நேரில் பார்வையிட்ட அமைச்சர் விஜயபாஸ்கர் அந்த மருத்துவமனையில் ஆய்வு செய்தார். அதனைத் தொடர்ந்து அவர் அளித்த பேட்டி வருமாறு: தமிழகத்தில் டெங்கு பாதிப்பு வெகுவாக குறைந்து வருகிறது....
மேலும்

அதிமுக எம்எல்ஏக்கள் பரபரப்பு பேச்சு

சென்னை, அக்.22:அதிமுகவில் பிஜேபியின் முக்கிய நபர்கள் தலையீடு இருப்பதாக எம்எல்ஏ ஏ.கே.போஸ் பேசினார். இதற்கு பதில் அளித்த எம்எல்ஏ ராஜன் செல்லப்பா இது ஏ.கே.போஸின் தனிப்பட்ட கருத்து என்றார். இந்த நிலையில் அமைச்சர் உதயகுமார், யாருடைய தலையீடும் அதிமுகவில் இல்லை என்றும், இந்த ஆட்சி 4 ஆண்டுகள் நீடிக்கும் என்றும் உறுதி அளித்துள்ளார்.மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் நேற்றிரவு நடைபெற்ற அதிமுகவின் 46வது பொதுக்கூட்டத்தில் ஏ.கே.போஸ் பேசியபோது அதிமுகவில்...
மேலும்

குடிநீர் தொட்டியில் குடியிருந்த பாம்பு

சேலம், அக்.22:சேலம் தனியார் மருத்துவமனை குடிநீர் தொட்டியில் பாம்பு இருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். டெங்கு கொசுக்களை பரப்பும் மருத்துவ கழிவுகளும் தேக்கி வைக்கப்பட்டு இருந்தன.இதையடுத்து அந்த மருத்துவ மனைக்கு ரூ.10 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. சேலம் காமராஜர் சாலையில் சண்முகா மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனை மற்றும் வளாகத்தில் மாநகராட்சி ஆணையர் சதீஷ்குமார் தலைமையில் இன்று அதிகாரிகள் டெங்கு ஒழிப்பு ஆய்வு நடத்தினார்கள். அப்போது மருத்துவமனை வளாகத்தில்...
மேலும்