w
Home » Category >தமிழ்நாடு (Page 1)

குடிநீர் தட்டுப்பாடு வராது:வேலுமணி தகவல்

சென்னை,பிப்.13:தமிழகத்தில் குடிநீர் தட்டுப்பாடுகளை போக்க மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் தலைமையில் கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் குடிநீர் பிரச்னையை போக்க தேவையான நிதி ஒதுக்கி அரசு அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது என உள்ளாட்சி துறை அமைச்சர் வேலுமணி தெரிவித்துள்ளார். சட்டசபையில் கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் பேசுகையில்: தமிழகத்தில் குடிநீர் பஞ்சம் மிக கடுமையாகும் சூழ்நிலை உருவாகியுள்ளது.சென்னை குடிநீர் வடிகால் வாரியத்தின்...
மேலும்

ரூ.2000 நிதியுதவியை எதிர்த்து வழக்கு

சென்னை, பிப்.13: தமிழகம் முழுவதும் 60 லட்சம் குடும்பங்களுக்கு தலா 2 ஆயிரம் ரூபாய் சிறப்பு நிதி உதவியாக வழங்கப்படும் என்ற தமிழக அரசின் அறிவிப்பை எதிர்த்து மனு தாக்கல் செய்யும் பட்சத்தில், நாளை வழக்கை விசாரிப்பதாக சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அரசின் சிறப்பு நிதியுதவி திட்டம் தொடர்பாக பிப்ரவரி 11ம் தேதி (திங்கட்கிழமை) தமிழக சட்டப்பேரவையில் விதி எண் 110ன் கீழ் தமிழக முதல்வர் பழனிசாமி...
மேலும்

ரூ.2000 நிதி: தேர்தலுக்கான அறிவிப்பு அல்ல

சென்னை, பிப்.12: வறுமை கோட்டிற்கு கீழ் வசிப்பவர்களுக்கு ரூ.2000 வழங்கும் திட்டம் தேர்தலுக்கானது அல்ல என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியிருக்கிறார்.  சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதத்தில் திமுக உறுப்பினர் பொன்முடி கலந்து கொண்டு பேசினார். அப்போது நடந்த காரசாரமான விவாதம் வருமாறு:- பொன்முடி: எதிர்க்கட்சி தலைவர் கூறியது போல, இது நிழல் பட்ஜெட் தான். ரூ.2 ஆயிரம் சிறப்பு நிதியுதவி திட்டத்தை பட்ஜெட்டில் அறிவிக்காமல் 110...
மேலும்

ஸ்டாலின் போடுவது ‘நோபால்’ ஆகிவிடும்: டி.ஜெயக்குமார்

ஆளுங்கட்சிக்கு எதிராக எதிர்க்கட்சித் தலைவர் போடுவது நோபால் ஆகி விடும் என்று அமைச்சர் டி.ஜெயக்குமார் சட்டசபையில் கூறிய போது பலத்த அதிர்வலை ஏற்பட்டது. நிதிநிலை அறிக்கை மீது திமுக உறுப்பினர் பொன்முடி பேசினார். பொங்கல் பரிசு ஆயிரம் ஒரு சிக்சர் என்றும், ஏழைகளுக்கு தலா இரண்டாயிரம் என்றது 2-வது சிக்சர் என்றும் அதிமுக உறுப்பினர் செம்மலை கூறியது பற்றி பொன்முடி குறிப்பிட்டார். எத்தனை சிக்சர் அடித்தாலும எதிர்க்கட்சி...
மேலும்

ரஜினி மன்ற நிர்வாகி மீது கொலை வெறி தாக்குதல்

சேலம், பிப்.12: சேலம் மாவட்ட ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி ரஜினி பழனி மீது சீமான் கட்சியினர் கொலை வெறித் தாக்குதல் நடத்தி உள்ளனர். இதில் படுகாயமடைந்த பழனி, சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். சேலம் மாவட்ட ரஜினி மக்கள் மன்றத்தை சேர்ந்தவர் ரஜினி பழனி. இவர் ரஜினிக்கு எதிராக பேசுபவர்களுக்கு சமூக வலைதளங்களில் அவ்வப்போது பதிலளித்து வருவார். சமீபத்தில் நாம் தமிழர் அமைப்பின் நிறுவனர்...
மேலும்

தடுப்பணைகளை தடுப்போம்: சட்டசபையில் முதல்வர்

சென்னை, பிப்.12: பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு தடுப்பணைகளை கட்டுவதை தடுத்து, தமிழ்நாட்டின் உரிமையை நிலைநாட்டுவதற்கு தமிழக அரசு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியிருக்கிறார். சட்டசபையில் இது குறித்து கொண்டு வரப்பட்ட கவனஈர்ப்பு தீர்மானத்திற்கு விளக்கம் அளித்து முதலமைச்சர் கூறியதாவது:- 1892-ம் ஆண்டைய மதராஸ்-மைசூர் ஒப்பந்தத்தில் குறிப்பிட்டுள்ளபடி, பன் மாநிலங்களுக்கு இடையே பாயும் நதிகளில் பாலாறும் ஒன்றாகும். இந்த ஒப்பந்தத்தின்படி, மேற்பகுதியிலுள்ள...
மேலும்

பிரதமர் குமரி வருகை தேதியில் மாற்றம்

சென்னை, பிப்.12: பிரதமர் மோடி கன்னியாகுமரிக்கு வரும் தேதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பிப்.19-ந் தேதிக்கு பதிலாக அவர் மார்ச் மாதம் 1-ல் வருவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பிஜேபியை வலுப்படுத்த பிரதமர் நரேந்திர மோடி நாட்டின் முக்கிய நகரங்களுக்கு சென்று கட்சி நிர்வாகிகளை சந்தித்து வருகிறார். இந்நிலையில், கடந்த மாதம் 27-ம் தேதி தமிழகம் வந்த மோடி, மதுரையில் நடைபெற்ற விழாவில்...
மேலும்

ஏழைகளுக்கு தலா ரூ.2000:முதலமைச்சர்

சென்னை, பிப்.11:வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ள மக்களுக்கு ரூ.2,000 வீதம் நிதியுதவி வழங்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று சட்டசபையில் அறிவித்தார். ரூ.1200 இதற்கு செலவாகும் என்றும், விவசாய தொழிலாளர்கள், நகர்ப்புற ஏழைகள், பட்டாசு தொழி லாளர்கள், மீன்பிடி தொழிலாளர்கள், கட்டுமான தொழிலாளர்கள், சலவைத் தொழிலாளர்கள் உள்பட 60 லட்சம் பயன்பெறுவார்கள் என்றும் முதலமைச்சர் தெரிவித்தார். சட்டசபையில் இன்று அவை விதி 110-ன் கீழ் முதலமைச்சர்...
மேலும்

நாகை மீனவர்கள் 7 பேர் சிறைப்பிடிப்பு

நாகை,பிப்.10:எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 7 பேரை இலங்கை கடற்படையினர் படகுடன் சிறைபிடித்தனர். கடந்த 7-ந் தேதி பைபர் படகில் நாகையில் இருந்து புறப்பட்ட அவர்கள் கோடியக்கரை கடற்கரையிலிருந்து 20 நாட்டிக்கல் மைல் தொலைவில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி அவர்களை சிறைபிடித்தனர். அவர்களிடமிருந்து 2 படகுகளையும் பறிமுதல் செய்துள்ளனர்....
மேலும்

வண்ணை மெட்ரோ ரெயில்

சென்னை, பிப்.9: மெட்ரோ ரெயிலின் முதல் கட்ட திட்டத்தின் நிறைவாக ஏஜி-டிஎம்எஸ் வண்ணாரப்பேட்டை வரையிலான ரெயில் பாதையை பிரதமர் மோடி மற்றும் முதலமைச் சர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் நாளை பிற்பகலில் திறந்து வைக்கிறார்கள்.  திருப்பூர் அருகே பெருமாநல்லூரில் நடைபெறும் இவ்விழாவை  சென்னை சென்ட்ரல் மெட்ரோ ரெயில் நிலையத்தில் காணொலி காட்சி வாயிலாக கண்டுகளிக்கலாம். இந்நிகழ்ச்சிக்கு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் மத்திய அமைச்சர்கள், மாநில அமைச்சர்கள்...
மேலும்

கமல்ஹாசனுக்கு காங்கிரஸ் அழைப்பு

சென்னை, பிப்.9: திமுக கூட்டணியில் நடிகர் கமல ஹாசன் சேர்ந்து எங்கள் கரத்தை வலுப்படுத்த வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்ற கே.எஸ்.அழகிரி கூறினார். தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவராக கே.எஸ்.அழகிரி பொறுப்பேற்கும் நிகழ்ச்சி, சென்னை சத்தியமூர்த்தி பவனில் நேற்று நடந்தது. முன்னதாக தி.நகரில் உள்ள காமராஜர் நினைவு இல்லத்துக்கு அழகிரி சென்று காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் கூறு கையில், மதச்சார்பற்ற...
மேலும்