Home » Category >தமிழ்நாடு

கிருஷ்ணகிரி டிஎஸ்பி விபத்தில் பலி

திருவண்ணாமலை, டிச.15: திருவண்ணாமலை அருகே கார் மீது அரசு பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில் கிருஷ்ணகிரி டிஎஸ்பி உயிரிழந்தார். கிருஷ்ணகிரியில் சமூக நீதி மனித உரிமைகள் டிஎஸ்பியாக பணியாற்றி வந்தவர் சண்முகசுந்தரம். இவர் அலுவல் காரணமாக நேற்று கிருஷ்ணகிரியில் இருந்து சென்னை வந்தார். இன்று அதிகாலை கிருஷ்ணகிரி திரும்புகையில் திருவண்ணாமலை வழியாக சென்று கொண்டிருந்தார். அரசம்பட்டு என்ற இடத்தில் கார் சென்றபோது அரசு பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. இந்த...
மேலும்

கடைகளில் தொடர் திருட்டு: வணிகர்கள் ஆர்ப்பாட்டம்

செங்குன்றம், டிச.14: புழல் பகுதிகளில் உள்ள கடைகளில் தொடர் திருட்டு காரணமாக வணிகர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். புழல் பகுதிகளான லட்சுமிபுரம், சாஸ்திரிநகர், விநாயகபுரம், புத்தகரம், சூரப்பட்டு, கடப்பா ரோடு உள்ளிட்ட பல இடங்களில் அடகு கடை, அழகு நிலையம், மளிகைகடைகளில் கடந்த ஒரு மாதமாக தொடர் திருட்டு நடந்துள்ளது. இது குறித்து புழல் போலீசில் புகார் செய்தும் இதுவரை எந்த குற்றவாளிகளும் பிடிபடவில்லை. இந்தநிலையில் நேற்று வடசென்னை...
மேலும்

மீனவ குடும்பங்களை சந்தித்த ராகுல் காந்தி

கன்னியாகுமரி,டிச.14: கன்னியாகுமரியில் மீனவ குடும்பத்தினரை சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் கூறிய ராகுல் காந்தி, தேசிய அளவில் தனி அமைச்சகத்தை ஏற்படுத்த காங்கிரஸ் வலியுறுத்தும் என்றும் கூறினார். காங்கிரஸ் தலைவராக தேர்வாகி உள்ள ராகுல் காந்தி இன்று டெல்லியிலிருந்து விமானம் மூலம் திருவனந்தபுரம் வந்தார். பின்னர் கன்னியாகுமரி மாவட்டம் தூத்தூருக்கு ஹெலிகாப்டரில் வந்தடைந்து அங்கிருந்து கார் மூலம் சின்னத்துறைக்கு வருகை புரிந்தார். அங்கு கன்னியாகுமரி மாவட்டத்தின் ஓகி புயலால்...
மேலும்

காப்பீட்டு தொகை வழங்ககோரி விவசாயிகள் சாலை மறியல்

சிதம்பரம் டிச.14: பயிர் காப்பீட்டுத்தொகை வழங்ககோரி விவசாயிகள் சாலை மறியல் செய்ததால் சிதம்பரம் பகுதியில் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சிதம்பரம் அடுத்த குமராட்சி பகுதி விவசாயிகளுக்கு இழப்பீட்டு தொகை வழங்ககோரி பலமுறை கோரிக்கை வைத்தும் நடவடிக்கை எடுக்காததால் ஆத்திரம் அடைந்த விவசாயிகள் விவசாயிகள் சங்க தலைவர் பி. விநாயகமூர்த்தி தலைமையில் விவசாயிகள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குமராட்சி கடைவீதியில் ஊர்வலமாக வந்து வேளாண்மை உதவி இயக்குநர்...
மேலும்

பல்வேறு கோரிக்கை வலியுறுத்தல் போக்குவரத்து தொழிலாளர்

சென்னை, டிச.14:  13வது ஊதிய ஒப்பந்தத்தை உடனே நிறைவேற்றுவது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு போக்குவரத்து தொழிற்சங்கத்தை சேர்ந்த500க்கும் மேற்பட்டோர் பல்லவன் இல்லம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 13வது ஊதிய ஒப்பந்தத்தை உடனே நிறைவேற்றுவது, காலி பணியிடங்களை நிரப்புதல் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக அவர்களுடன் அரசு சார்பில் பல்கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில்...
மேலும்

விசாரணை கமிஷனில் தீபக் பரபரப்பு சாட்சியம்

சென்னை, டிச.14:முதலமைச்சரும், தனது அத்தையுமான ஜெயலலிதாவின் மரணம் குறித்து தீபக் இன்று நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை கமிஷன் முன்பு ஆஜராகி பரபரப்பு சாட்சி அளித்தார். மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி தி.மு.க. மருத்துவர் அணி துணைத்தலைவர் டாக்டர் சரவணன், அதிமுக. முன்னாள் எம்.எல்.ஏ. ஆனூர் ஜெகதீசன்,...
மேலும்

பெரியபாண்டியன் உடலுக்கு முதல்வர் அஞ்சலி

சென்னை, டிச.14:ராஜஸ்தானில் கொள்ளையர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட இன்ஸ்பெக்டர் பெரிய பாண்டியன் உடல் இன்று மதியம் விமானம் மூலம் சென்னை கொண்டு வரப்பட்டது. விமான நிலையத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்கள். போலீஸ் அணிவகுப்பு மரியாதையும் நடைபெற்றது.மாலை 6 மணிக்கு பெரியபாண்டியன் உடல் விமானத்தில் மதுரை கொண்டு செல்லப்படுகிறது. அங்கிருந்து நெல்லை மாவட்டத்தில் உள்ள சொந்த ஊருக்கு வேனில்...
மேலும்

திருச்செந்தூர் மண்டபம் இடிந்து ஒருவர் பலி

திருச்செந்தூர்,டிச.14: திருச்செந்தூர் கோயில் வள்ளி மண்டபம் அருகே உள்ள பிரகார மண்டபம் இடிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்ததாகவும் மண்டப இடிபாடுகளில் பலர் சிக்கியிருக்கலாம் எனவும் அஞ்சப்படுகிறது.
மேலும்

வேலூரில் கைதி தப்பியோட்டம்

வேலூர், டிச.14:வேலூர் மத்திய சிறையில் இருந்து விசாரணை கைதி தப்பியோடிய சம்பவம் பரபரப்பை ஏற்பட்டுள்ளது. வேலூர் மாவட்டம் திருப்பத்தூரையடுத்து சின்ன கந்திலி பகுதியை சேர்ந்தவர் சகாதேவன். கொலை வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு கடந்த 10 மாதமாக வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார். இவர் இன்று காலை 6 மணி அளவில் சிறையின் பின்பக்க சுவற்றில் வேட்டியை கட்டி அதன் மூலம் தப்பியோடி உள்ளார். இது குறித்த தகவலின்...
மேலும்

போலீஸ் அதிகாரி குடும்பத்துக்கு ரூ.1 கோ நிதி:முதலமைச்சர்

சென்னை, டிச.13:ராஜஸ்தானில் கொள்ளையர்களை பிடிக்கச் சென்றபோது சுட்டுக்கொல்லப்பட்ட கொளத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பெரியபாண்டி குடும்பத்துக்கு ரூ.1 கோடி நிவாரணம் வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
மேலும்

பெரியபாண்டி கொலை: 7 பேரிடம் விசாரணை

ஜெய்ப்பூர், டிச. 13: கொளத்தூர் நகைக்கடையில் நடந்த கொள்ளை தொடர்பாக கொள்ளையர்களை பிடிக்க ராஜஸ்தான் சென்ற போது நடந்த துப்பாக்கிச் சண்டையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பெரியபாண்டி சுட்டுக்கொல்லப்பட்டார், மற்றொரு இன்ஸ்பெக்டர் முனிசேகர் படுகாயமடைந்தார். இது தொடர்பாக ராஜஸ்தானை சேர்ந்த 2 பெண்கள் உள்பட 7 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பெரியபாண்டியின் உடல் நாளை மதுரைக்கு விமானம் கொண்டு வரப்பட்டு அங்கிருந்து அவரது சொந்து ஊரில்...
மேலும்