Home » Category >சென்னை (Page 5)

பெங்களூர் சிறைக்கு திரும்பினார் இளவரசி

சென்னை, நவ.8:கடந்த மாதம் 25-ம் தேதி பரோலில் வந்த இளவரசிக்கு, இன்று பரோல் முடிவடைய உள்ள நிலையில், இன்று மாலை பெங்களூர் சிறைக்கு செல்லவுள்ளார். பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ள இளவரசிக்கு 15 நாள் பரோல் கிடைத்துள்ளது. சொத்து குவிப்பு வழக்கில் கைதான சசிகலா மற்றும் அவரது உறவினர் இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து அவர்கள்...
மேலும்

ஸ்டாலின்-நாயுடு சந்திப்பு

சென்னை,நவ.8:பிஜேபிக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, சென்னையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை நாளை சந்தித்து ஆலோசிக்க உள்ளார். அதே போன்று மா.கம்யூ கட்சி பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரியும் வரும் 13-ம் தேதி திமுக தலைவர் ஸ்டாலினை சந்திக்க உள்ளது குறிப்பிடதக்கது. மத்திய பிஜேபி அரசுக்கு எதிராக களமிறங்கியுள்ள ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில்...
மேலும்

‘சர்கார்’ படத்துக்கு அமைச்சர்கள் கண்டனம்

சென்னை, நவ.8:விஜய் நடிப்பில் வெளியான சர்கார் படத்தில், ஜெயலலிதாவை விம்ர்சிப்பது போல் அமைக்கப்பட்டிருக்கும் காட்சிகளை நீக்கா விட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநில அமைச்சர்கள் எச்சரித்துள்ளனர். செய்தி விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ அளித்த பேட்டியில், ‘சர்கார்’ படத்தைத் தயாரித்தவர்கள், அரசியல் உள்நோக்கத்தோடு, வன்மத்தோடும் சில காட்சிகளை அமைத்திருக்கிறார்கள். இதை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். வளர்ந்துவரும் நடிகர் விஜய்க்கு இது நல்லதல்ல. சர்ச்சைக்குரிய காட்சிகள் குறித்து...
மேலும்

சசிகலா குடும்பத்தில் மோதல்

சென்னை, நவ.5:பெங்களூர் சிறையிலிருந்து வெளியே வந்த இளவரசியின் பரோல் முடிய இன்னும் 3 நாட்கள் உள்ளது. பரோலில் வந்துள்ள இளவரசியை இதுவரை டிடிவி தினகரன் சந்தித்து பேசாதது அவரது குடும்பத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட சசிகலா மற்றும் அவரது குடும்ப உறவினர்களான சுதாகரன், இளவரசி ஆகியோர் பெங்களூருவில் இருக்கும் பரப்பன அக்ரஹார சிறையில் சிறை தண்டனைப்...
மேலும்

தினகரன் ஆதரவு எம்எல்ஏவுக்கு டெங்கு

சென்னை, நவ.5:புதுக்கோட்டை மாவட்டம் அரந்தாங்கி தொகுதி அதிமுக எம்எல்ஏ., ரத்னசபாபதி. தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் இவருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. புதுக்கோட்டை தனியார் மருத்துவமனையில் இவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தமிழகம் முழவதும் பன்றி காய்ச்சல், டெங்கு காய்ச்சல் பாதிக்கப்பட்டு இறப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதே போன்று பன்றிகாய்ச்சலுக்கு நேற்று வரை 20 பலியானதாக தெரிகிறது. மதுரையில் நேற்று 1...
மேலும்

திமுகவுக்கு காங்கிரஸ் நெருக்கடி

சென்னை, நவ.5:20 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறும்போது, தங்களுக்கு 5 தொகுதிகள் வேண்டுமென்று காங்கிரஸ் கட்சி திமுகவுக்கு நெருக்கடி கொடுப்பதாக கூறப்படுகிறது. இடைத்தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை அமைக்கும் நிலை உருவானால் துணை முதலமைச்சர் உள்பட 5 அமைச்சர் பதவி வேண்டு மென்று கேட்பதாக தெரிகிறது. 20 சட்டமன்ற தொகுதிகளுக்கு விரைவில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் திமுக வெற்றி பெற்றால் ஆட்சி அமைக்கும் வாய்ப்பு கிடைக்கும்...
மேலும்

தமிழக கவர்னர், முதல்வர் தீபாவளி வாழ்த்து

சென்னை, நவ.5:தீபாவளி பண்டிகையையொட்டி கவர்னர் பன்வாரிலால் புரோகித், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தமிழக மக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து உள்ளனர். கவர்னர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது: தீபங்களின் விழாவான தீபாவளி மகிழ்ச்சியை பெருக்கும் நாளாக இந்தியாவின் அனைத்து பகுதி மக்களும் கோலாகலமாகவும், உற்சாகமாகவும் கொண்டாடப்படும் பண்டிகையாகும். இந்த நன்னாளில் தமிழக மக்களுக்கு எனது இதயங்கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். அனைத்து குடும்பங்களிலும் இந்த தீபாவளி, ஒளியையும், மகிழ்ச்சியையும்...
மேலும்

தீபாவளி பண்டு நஷ்டம்: கொரட்டூரில் தாய்-மகன் தூக்கிட்டு தற்கொலை

அம்பத்தூர், நவ.3: ஷேர் மற்றும் தீபாவளி பண்ட் கட்டி நஷ்டமடைந்ததால் மனமுடைந்த வாலிபர் தாயுடன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மேலும் அவர்கள் செல்லமாக வளர்த்த நாய்க்கும் விஷம் கொடுத்து கொன்ற சம்பவம் அந்தபகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:- கொரட்டூர் வாஞ்சிநாதன் நகர்,7வது தெருவைச்சேர்ந்தவர் ஜான்.இவரது மனைவி அமலா (வயது61). இவர்களது மகன் ஜோஷ்வா (வயது 29). ஜான் எழும்பூரில்உ ள்ள...
மேலும்

பட்டாசு வெடிக்கும் நேரம்

சென்னை, நவ.2:  தீபாவளி பண்டிகை அன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவில் 7 மணி முதல் 8 மணி வரையும் பட்டாசுகளை வெடிக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.  உச்சநீதிமன்றத்தின் உத்தரவை யடுத்து இந்த அனுமதி வழங்கப் படுவதாகவும், பொது மக்கள் குறைந்த ஒலி, குறைந்த மாசு ஏற்படுத்தும் தன்மை கொண்ட பட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண்டும் எனவும், அதிக ஒலி...
மேலும்

‘கோயம்பேட்டில் தான் எனக்கு தீபாவளி’:எம்.ஆர்.விஜயபாஸ்கர்

சென்னை, நவ.2: தீபாவளி சிறப்பு பேருந்துகள் இன்று காலை முதல்  சென்னையில் இருந்து வெளியூர் களுக்கு புறப்பட தொடங்கின.  இதனிடையே போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், கோயம்பேட்டில்தான் எனக்கு தீபாவளி என்று கரூரில் செய்தியாளர்களிடம் கூறியிருக்கிறார். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 20,567 சிறப்பு பேருந்துகளை போக்குவரத்துக்கழகம் இயக்குகிறது. நேற்று வரை 1.12 லட்சம் டிக்கெட்டுகள் ஆன்லைன் வயிலாக விற்கப் பட்டு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். கவுண்டர்கள் வாயிலாக சுமார்...
மேலும்

சர்கார்:தியேட்டர்களுக்கு ஐகோர்ட் எச்சரிக்கை

மதுரை, நவ.2: மதுரையில் சர்கார் படம் வெளியிடப்படும் தியேட்டர்களில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் அந்த தியேட்டர்களின் உரிமம் ரத்து செய்யப்படும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை எச்சரித்து உள்ளது.  ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள சர்கார் படம் தீபாவளி அன்று வெளியாகிறது. இந்த படத்திற்கான முன்பதிவு இன்று தொடங்கியுள்ளது.  இந்நிலையில் உசிலம்பட்டியை சேர்ந்த மகேந்திர பாண்டி என்பவர் உயர் நீதிமன்றத்தின் மதுரைக்கிளையில் மனு ஒன்றை தாக்கல்...
மேலும்