Home » Category >சென்னை (Page 4)

திமுக தலைவருடன் காங். தலைவர் சந்திப்பு

சென்னை, நவ.10:திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை காங்கிரஸ் மேலிடப் பார்வையாளர் சஞ்சய் தத் இன்று சந்தித்துப் பேசினார். இது குறித்து திமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது: இன்று (10-11-2018) சென்னை ஆழ்வார்பேட்டையில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலினை தமிழக காங்கிரஸ் கமிட்டியின் மேலிட பொறுப்பாளர் சஞ்சய் தத் மரியாதை நிமித்தமாக சந்தித்தார். அப்போது, தி.மு.கழக முதன்மைச் செயலாளரும்...
மேலும்

டி-20 போட்டி: சேப்பாக்கத்தில் அதிரடிப்படை குவிப்பு

சென்னை, நவ.10: இந்தியா – வெ.இண்டீஸ் அணிகள் மோதும் கடைசி டி-20 போட்டி சென்னை சேப்பாக்கத்தில் நாளை நடைபெற உள்ள நிலையில், அசாம்பா விதங்களை தடுக்க மைதானத்தில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அதிவிரைவு கமாண்டோ படையினர் வரவழைக்கப்பட்டு மொத்தம் 800 போலீசார் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டுள்ளனர். போராட்டங்களை தடுக்க சிறப்பு விசாரணை குழுவும் கண்காணிக்க உள்ளது. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி விளையாடிவருகிறது....
மேலும்

ஜனவரி-4ல் தமிழக சட்டசபை கூடும்?

சென்னை, நவ.10:தமிழக சட்டசபையின் கூட்டம் வருகிற ஜனவரி 4-ந் தேதி கவர்னர் உரையுடன் கூடும் என்று எதிர்பார்க் கப்படுகிறது. மேலும் மே மாதத்தில் மக்களவை தேர்தல் வருவதால் அரசு செலவினங்களுக்கு 6 மாதத்திற்கு தேவையான நிதியை இக்கூட்டத்தில் ஒதுக்கவும் அரசு திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. தமிழக சட்டசபையின் கூட்டம் இந்த ஆண்டு ஜூலை மாதத்தில் நடைபெற்றது. மானியக் கோரிக்கை கள் மீதான விவாதங்கள் நடைபெற்று நிறைவேற்றப்பட்டது. ஜூலை...
மேலும்

வங்கக்கடலில் புயல் சின்னம் உருவாகிறது

சென்னை, நவ.10:தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதை ஒட்டியுள்ள பகுதியில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு பகுதி அடுத்த 48 மணி நேரத்தில் புயலாக மாறும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தின் வட பகுதிகளில் 14-ந் தேதி முதல் மிதமானது முதல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையத்தின்...
மேலும்

சினிமா தயாரிப்பு நிறுவனத்துக்கு ரெட் கார்டு

சென்னை, நவ.10: நடிகர்கள் விஷால், விஜய் சேதுபதி மற்றும் விக்ரம் பிரபு ஆகியோருக்கு சம்பளம் தராமல் ஏமாற்றிய மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் என்ற சினிமா தயாரிப்பு நிறுவனத்துக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் எந்த ஒத்துழைப்பும் தரப்போவதில்லை என்று அதிரடி நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது. படம் தயாரானதும் வெளியாகும் நேரத்தில் நெருக்கடியை கொடுத்து நடிகர்களின் சம்பளத்தை விட்டுக் கொடுக்கும் வகையில் இந்த நிறுவனம் செயல்பட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டு உள்ளது. இது குறித்து...
மேலும்

நடிகர் விஜய் வீட்டிற்கு பலத்த பாதுகாப்பு

சென்னை, நவ.9: சர்கார் பட சர்ச்சை தொடர்பாக பனையூரில் உள்ள விஜய் இல்லத்தில் இன்று போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. படம் மறு தணிக்கை செய்யப்பட்டது தொடர்பாக வீட்டிலேயே விஜய் ஆலோசனை நடத்தினார். ரசிகர்கள் இனி எதிர்போராட்டத்தில் ஈடுபட வேண்டாம் என்று அவர் வாய்மொழியாக கேட்டு கொண்டார். சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் பனையூரில் நடிகர் விஜய்க்கு சொந்தமான பங்களா உள்ளது. இந்த வீட்டில் இன்று காலை விஜய்...
மேலும்

பாரில் நடனமாடிய 6 பெண்கள் மீட்பு

சென்னை, நவ.9: தனியார் பாரில் அனுமதியின்றி பெண்களை வைத்து நடன நிகழ்ச்சி நடத்திவந்த 2 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர். அரும்பாக்கம் நூறடி சாலையில் தனியார் பார் ஒன்று அமைந்துள்ளது. இங்கு இரவு நேரங்களில் அனுமதியின்றி நடன நிகழ்ச்சி நடப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில், இணை கமிஷனர் விஜயகுமாரி மேற்பார்வையில், அரும்பாக்கம் இன்ஸ்பெக்டர் ஜெகதீசன் தலைமையிலான தனிப்படை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து ஆய்வு...
மேலும்

குடோனில் 10 டன் குட்கா பறிமுதல்: ஐந்து பேர் கைது

சென்னை, நவ.9: பூந்தமல்லியில் தனியார் குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.80 லட்சம் 10 டன் குட்காவை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குடோன் உரிமையாளரை தேடி வருகின்றனர். அடையாறு பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை செய்து வந்ததாக புருஷோத்தமன் என்பவரை அடையாறு துணை கமிஷனர் சேஷாங் சாயின் தனிப்படை போலீசார் கைது செய்தனர்....
மேலும்

முருகதாசை கைது செய்ய 27-ந்தேதி வரை தடை

சென்னை, நவ.9: சர்கார் பட இயக்குனர் முருகதாசை கைது செய்ய சென்னை உயர் நீதிமன்றம் வரும் 27-ந் தேதி வரை தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. முருகதாஸ் தாக்கல் செய்த முன்ஜாமீனை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் காவல்துறை விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. இலவச பொருட்களை தீயிட்டுக் கொளுத்துவது தொடர்பாக தேவராஜ் என்பவர் புகார் செய்ததன் அடிப்படையில் முருகதாஸ் முன்ஜாமீன் கோரியிருந்தார்.
மேலும்

முதலமைச்சருடன் கடம்பூர் ராஜூ ஆலோசனை

சென்னை, நவ.9: சர்கார் படம் தொடர்பாக அதிமுகவினர் பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தியுள்ள நிலையில் அடுத்தக் கட்ட நடவடிக்கை குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜுவுடன் ஆலோசனை நடத்தியுள்ளார். சர்கார் திரைப்படம் தொடர்பாக வழக்கு தொடுப்பது பற்றி நேற்று சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம், தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயணனுடன் ஆலோசனை நடத்தினார். அதற்கிடையே போராட்டங்கள் வலுப்பெற்று மறு தணிக்கை செய்ய...
மேலும்

சர்கார் பட சர்ச்சை: அரசு நடவடிக்கை பாயுமா?

சென்னை, நவ.8:தமிழக அரசை கடுமையாக விமர்சித்து எடுக்கப்பட்டுள்ள சர்கார் திரைப்படத்தை இயக்கிய முருகதாஸ், அதில் நடித்த விஜய், தயாரித்த சன் பிக்சர்ஸ் ஆகியோர் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் ஆலோசனை நடத்தி உள்ளார். மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மற்றும் அதிமுக அரசை தாக்கி பல்வேறு காட்சிகள் சர்கார் திரைப்படத்தில் இடம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு அதிமுக அமைச்சர்கள் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர். சர்ச்சைக்குரிய...
மேலும்