Home » Category >சென்னை (Page 3)

பிளஸ்-2 : 91.1% மாணவர்கள் தேர்ச்சி

சென்னை, மே 16:12 ம் பொதுத்தேர்வில் 91.1 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். வழக்கம் போல் மாணவர்களை விட மாணவிகளே அதிக அளவில் இந்தாண்டும் தேர்ச்சி அடைந்துள்ளனர். 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை பள்ளிகல்விதுறை அமைச்சர் செங்கோட்டையன் இன்று தலைமை செயலகத்தில் வெளியிட்ட பின்னர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: 12-ம் வகுப்பு தேர்வு காலை 9.30 மணிக்கு வெளியிடப்பட்டது. அதில் தேர்வின் போது பதிவு செய்த...
மேலும்

சினிமா பாணியில் பல் டாக்டரிடம் மிரட்டல்

சென்னை. மே 16பல் டாக்டரிடம் ரூ 1லட்சம் கேட்டு சினிமா பாணியில் மிரட்டல் விடுத்த வழக்கில் தேடப்பட்டு வந்த மர்ம நபர் இரண்டு பேரை போலீசார் கைது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது குறித்து போலீசார் தரப்பில் கூறப்படுவதாவது; அண்ணா நகரை சேர்ந்தவர் பல் டாக்டர் ஹரிஷ்( வயது 36) இவர் மனைவியும் மருத்துவராக பணியாற்றி வருகிறார். ஹரிஷ் கானாத்தூர் பகுதியில் பல் மருத்துவமனை நடத்தி வருகிறார்....
மேலும்

பிளஸ் டூ : முதலிடம் பிடித்த விருதுநகர்

சென்னை, மே 16:பிளஸ்-2 தேர்வு முடிவு இன்று வெளியானது இதில் 91.1 சதவீத மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்வு முடிவில் விருதுநகர் மாவட்டம் முதலிடத்தை பிடித்துள்ளது. இரண்டாம் இடம் ஈரோடு மாவட்டம். திருப்பூர் மாவட்டம் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளது. முக்கிய பாடங்கள் மாணவ-மாணவிகளின் தேர்ச்சி விகிதம் வருமாறு: இயற்பியல் 96.4 சதவீதம்,வேதியியல் 95.0 சதவீதம், உயிரியல் 96.3 சதவீதம், கணிதம் 96.1 சதவீதம், தாவரவியல் 93.9 சதவீதம்
மேலும்

தென் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு

சென்னை, மே 14: தென் தமிழகம் மற்றும் வடதமிழகத்தின் உள்மாவட்டங்களில் இடியுடன் கூடிய கோடை மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன், தென்மேற்கு அரபிக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி மேலும் வலுப்பெற்று தாழ்வு மண்டலமாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுவதாக கூறினார். எனவே மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்....
மேலும்

காவலரின் கைவிரலை கடித்த திருடன்

சென்னை, மே 14:சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் காவலரின் கை விரலை கடித்து துண்டாக்கிய திருடனை போலீசார் கைது செய்தனர். சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் சிறுவனிடம் கைப்பையை பறித்த கொள்ளையனை பிடிக்க முயன்ற காவலரின் கை விரலை கடித்து திருடன் துண்டாக்கினான். காஞ்சிபுரம் சென்றுவிட்டு கோயம்பேடு வந்த கொளத்தூரை சேர்ந்த சிறுவன் கொண்டு வந்த பையை கொள்ளையன் ஒருவன் பறித்துக் கொண்டு ஓடினான். அப்போது பணியில்...
மேலும்

பெட்ரோல், டீசல் விலை உயர்வு

சென்னை, மே 14:கர்நாடகத் தேர்தலையொட்டி மூன்று வாரங்களாக உயர்த்தப்படாமல் இருந்த பெட்ரோல், டீசல் விலை இன்று மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளது. பெட்ரோல் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நாள்தோறும் அறிவித்து வந்தன. கர்நாடகச் சட்டமன்றத் தேர்தலில் பெட்ரோல் டீசல் விலை அறிவிப்பு பாதிப்பை ஏற்படுத்தக் கூடாது என்பதற்காகக் கடந்த 20நாட்களாக விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இந்நிலையில், லிட்டர் 69 ரூபாய் 56காசுகளாக இருந்த டீசல் விலை இன்று...
மேலும்

நேரு பூங்கா: மெட்ரோ ரெயில் சோதனை துவக்கம்

சென்னை, மே 14:நேரு பூங்கா முதல் சென்ட்ரல் ரெயில் நிலையம் வரை மெட்ரோ ரெயில் தடத்தில் பாதுகாப்பு ஆணையர் இன்று ஆய்வு நடத்தினார். நாளையும் சோதனை நடைபெறுகிறது. மெட்ரோ ரெயில் போக்குவரத்தின் முக்கிய கட்டமாக சென்ட்ரல் ரெயில் நிலையம், எழும்பூர், டி.எம்.எஸ் தேனாம்பேட்டை, நந்தனம் மற்றும் சைதாப்பேட்டை ஆகிய இடங்களில் ரெயில் நிலையங்கள் அமைக்கும் பணி நிறைவடைந்து விட்டது.இவற்றை இணைக்கும் ரெயில் பாதைகள் சிக்னல் அமைக்கும் பணிகள்...
மேலும்

‘சசிகலா என் சகோதரி அல்ல’:திவாகரன்

மன்னார்குடி, மே 14:சசிகலாவை இனி என் சகோதரி அல்ல என்றும் இனி அவ்வாறு அழைக்க மாட்டேன் என்றும் திவாகரன் ஆவேசமாக கூறினார் கடந்த ஒரு மாத காலமாக சசிகலாவின் சகோதரர் திவாகரனுக்கும் டிடிவி தினகரனுக்கும் இடையே கடும் மோதல் நிலவி வருகிறது. இதன் உச்சகட்டமாக அவர் தினகரன் தொடங்கியுள்ள அம்மா முன்னேற்ற கழகத்தில் இருந்து விலகி அவர் மீது பல்வேறு திடுக்கிடும் குற்றச்சாட்டுகளை தெரிவித்து வருகிறார். இந்நிலையில்...
மேலும்

கல்லூரி மாணவி புகாரில் திடீர் திருப்பம்

சென்னை, மே 12:  ஷேர் ஆட்டோவில் சென்ற இன்ஜினியரிங் மாணவிக்கு, 2 பேர் பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், மாணவி நாடகமாடியுள்ளது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக, 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். திருச்சியை சேர்ந்த மாணவி ஒருவர், சென்னை ஐயப்பன் தாங்கலில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி, பல்லாவரத்திலுள்ள கல்லூரியில் இன்ஜினியரிங் படித்துவருகிறார். இவர், கல்லூரி முடிந்ததும் பல்லாவரத்தில் இருந்து கிண்டிக்கு ரெயிலில் பயணம் செய்து, அங்கிருந்து...
மேலும்

இயக்குனர் அமீருக்கு முன் ஜாமின்

சென்னை, மே 11:காவல் துறைக்கு எதிராக ட்விட்டரில் கருத்து தெரிவித்த வழக்கில் இயக்குநர் அமீருக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் முன்ஜாமீன் அளித்து உத்தரவிட்டுள்ளது. சென்னை தி.நகரில் இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணியாமல் சென்ற இளைஞர் ஒருவரை அவரது தாய், சகோதரி கண் எதிரே போக்குவரத்து போலீஸார் கட்டிவைத்து அடித்தனர். அதேபோல, திருச்சியில் கணவருடன் இருசக்கர வாகனத்தில் சென்ற இளம்பெண், போக்குவரத்து ஆய்வாளர் எட்டி உதைத்ததில் பலியானார்....
மேலும்

குழந்தை கடத்தல் வதந்தி:கமிஷனர் எச்சரிக்கை

சென்னை, மே 11:குழந்தை கடத்தல் தொடர்பாக சமூக வலைதளங்களில் அவதூறு பரப்புவோர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்கப்படுவர் என்று சென்னை போலீஸ் கமிஷனர் ஏ.கே. விஸ்வநாதன் எச்சரிக்கை விடுத்துள்ளார். நிருபர்களுக்கு பேட்டியளித்த கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் கூறுகையில், திருவண்ணாமலையில் நடந்த சம்பவம் போன்று மற்றொரு சம்பவம் நடைபெற்றுள்ளதாக சமூக வலைதளங்களில் தவறான செய்திகள் பரவி வருகின்றன. இவ்வாறு குழந்தை கடத்தல் தொடர்பாக சமூக வலைதளங்களில்...
மேலும்