w
Home » Category >சென்னை (Page 279)

சிவாஜி சிலை அகற்றம்: கமல் கருத்து

சென்னை, ஆக.4: நடிகர் தி‌லகம் சிவாஜி கணேசனின் சிலை அகற்றப்பட்டது குறித்து நடிகர் கமல்‌ஹாசன் ட்‌விட்டரில் கருத்துத் தெரிவித்துள்ளார். சென்னை மெரினாவில் இருந்து இரவோடு இரவாக நடிகர் சிவாஜி கணேசன் சிலை அகற்றப்பட்ட விவகாரம் குறித்து கமல்ஹாசன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், ரசிகர்கள் மனதிலும், நடிக்‌க நினைத்த தமிழன் மனதிலும் ‌பதிந்தவர்‌‌ சிவாஜி என்று கூறியி‌ருக்கிறார். மேலும், இனி ஒரு சிலை செய்வோம், அதை எந்த நாளும்...
மேலும்

சிவாஜி சிலை அகற்றியதில் சதி: ராமதாஸ்

சென்னை, ஆக.3: சென்னை கடற்கரை சாலையில் சிவாஜி சிலை அமைக்கப்பட்ட 7 ஆண்டுகளில் அந்த பகுதியில் எந்த விபத்துக்களும் ஏற்படாத நிலையில் சிலையை அகற்றியதில் சதி நடந்திருப்பதாக பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார். அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், சிவாஜி சிலை தொடர்பான வழக்கில் தமிழக அரசு தனது நிலையை அடிக்கடி மாற்றி இருப்பதாகவும், சரியான தகவலை அளிக்காததால் தான் நீதிமன்றமே சிலையை அகற்றும் உத்தரவை...
மேலும்

அதிமுக பலவீனத்தை திமுக பயன்படுத்த விரும்பவில்லை: ஸ்டாலின்

சென்னை, ஆக.3: அதிமுகவின் உட்கட்சி பிரச்சனையை திமுக பயன்படுத்துக் கொள்ள விரும்பவில்லை என்று அக்கட்சியின் செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார். கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் பல்வேறு பகுதியில் மு.க. ஸ்டாலின் ஆய்வுகளை மேற்கொண்டார் அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது; இங்கு பல்வேறு இடங்களில் கழிவுநீர் கல்வாய்கள் சரிவர பாரமரிக்கப்படுவது இல்லை அதற்கு நிதி ஒதுக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதே போன்று 350 கோடி செலவில்...
மேலும்

அண்ணாசாலையில் பேருந்து மோதி விபத்து: 8 பேர் படுகாயம்

சென்னை ஆக 3: சென்னை, அண்ணாசாலையில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த மாநகரப் பேருந்து சாலையோர வழிகாட்டி கம்பத்தில் மோதியதில் 6 பெண்கள் உட்பட 8 பேர் காயமடைந்தனர். மேற்கு சைதாப்பேட்டையில் இருந்து பிராட்வே நோக்கி செல்லும் தடம் எண் 18 கே மாநகரப் பேருந்து, சென்னை அண்ணா சாலையில் ஸ்பென்சர் பிளாசா அருகே விபத்துக்குள்ளானது. இரு சக்கர வாகன ஓட்டி ஒருவர் மீது மோதாமல் இருப்பதற்காக பேருந்தை...
மேலும்

சென்னையும் சிலை கலாச்சாரமும்

சிங்கார நகராக இருந்த சென்னை சிலைகள் நகரமாக மாறியது. இந்த சிலைகளுக்கு வரலாறு உண்டு, பல அரசியலும் உண்டு. இவற்றுக்கு ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் அவ்வப்போது குரல்கள் எழுந்து வருகின்றன. வரலாற்றில் சிறப்பு மிக்கவர்களை நினைவில் வைத்துக்கொள்வதற்காக தலைவர்களுக்கு சிலைகள் வைக்கப்படுகின்றன. இவர்கள் படைத்த சாதனைகளை இந்த சிலைகள் வருங்கால தலைமுறையினருக்கு சொல்வதாக அமைகின்றன.இந்த சிலைகளும், நினைவு மண்டபங்களும் போக்குவரத்திற்கு இடையூறாக இருக்கிறது என்றும் புகார்கள் கூறப்படுவதால் நீதிமன்றங்களின்...
மேலும்

அணி தாவ ரூ.5 கோடி பேரம்: எம்எல்ஏ புகார்

சென்னை, ஆக.3:ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த எம்எல்ஏக்கள் அணி தாவுவதற்காக எடப்பாடி மற்றும் தினகரண் ஆதரவாளர்கள் ரூ.5 கோடி வரை பேரம் பேசுகிறார்கள் என்று ஸ்ரீவைகுண்டம் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான சண்முகநாதன் கூறியுள்ளார். ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த இவர் இன்று தூத்துக்குடியில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது தினகரன் தரப்பில் இருந்தும், எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அணியில் இருந்தும் ஓபிஎஸ் அணி எம்எல்ஏக்களை சிலர் அணுகி வருவதாக...
மேலும்

பிக்பாஸ்: ‘இருக்கு.. ஆனா இல்லை’ குழப்பும் ஓவியா-ஆரவ்

ஆரவை தொடர்ந்து 3வது நாளாக துரத்திக்கொண்டு இருக்கிறார் ஓவியா. பிக்பாஸ் கொடுத்த டாஸ்க்கின் படி ஓவியா காதல் தோல்வியில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணாக நடிக்க வேண்டும். அதற்காக தான் ஓவியா இப்படி நடிக்கிறாரா அல்லது தனது உண்மையான உணர்ச்சிகளை வெளிப்படுத்துகிறாரா என்பது பார்வையாளர்களுக்கு குழப்பத்தை தான் ஏற்படுத்தி உள்ளது. ஓவியா ஆரவ்விடம் 5 நிமிடம் பேச வேண்டும் என்று கெஞ்சுகிறார். ஆனால் ஆரவ் தவிர்த்துக்கொண்டே இருக்கிறார். ஒருகட்டத்தில்...
மேலும்

பாலத்திலிருந்து குதித்து வாலிபர் தற்கொலை

சென்னை, ஆக.3: பல்லாவரத்தில் பாலத்தில் இருந்து குதித்து இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். சென்னை பல்லாவரம் மேம்பாலம் மீது நீண்ட நேரமாக நின்று கொண்டிருந்த இளைஞர் ஒருவர் திடீரென கீழே விழுந்தார்.இதில் உடல் சிதறி அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து பொதுமக்கள் தகவல் அளித்ததையடுத்து அங்கு வந்த குரோம்பேட்டை போலீசார், தற்கொலை செய்து கொண்டவர் யார்? எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என்பது தொடர்பாக...
மேலும்

விவசாயிகளுக்கு உதவி செய்த தனுஷ்

சென்னை, ஆக.3: வறட்சியால் உயிரிழந்த 125 விவசாயிகளின் குடும்பங்களுக்கு நடிகர் தனுஷ் தலா 50 ஆயிரம் ரூபாயை உதவித் தொகையாக வழங்கி உள்ளார். தனுஷ் சத்தமில்லாமல் பல உதவிகளை செய்து வருகின்றார். சமீபத்தில் ராஜீவ் காந்தி என்பவர் இயக்கிய ‘கொலை விளையும் நிலம்’ ஆவணப்படத்தை சுப்ரமணிய சிவா தனுஷிடம் போட்டுக்காண்பித்துள்ளார். இதைப்பார்த்த தனுஷ் மிகவும் வருத்தமடைந்து விவசாயிகளுக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.இதைத்தொடர்ந்து சுப்ரமணிய சிவாவும்...
மேலும்

எல்லை மீறுகிறாரா பிக்பாஸ்?

அனைவரும் பிக்பாஸ் பைத்தியமாக மாறிக்கொண்டு இருக்கும் நிலையில் நேற்று போட்டியாளர்களும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களாக சுற்றிக்கொண்டு இருந்தனர். இதுநாள் வரை டாஸ்க் என்ற பெயரில் பழைய விளையாட்டுகளை தூசி தட்டி விளையாடி கொண்டிருந்த பிக் பாஸ் போட்டியாளர்கள் நேற்று பிக் பாஸ் கொடுத்த தார்மீக எல்லைகளை தாண்டிய போட்டியில் கலந்துக்கொண்டனர். நேற்று ஆராய்ச்சி மையமானது பிக் பாஸ் வீடு. இதனால் போட்டியாளர்கள் மனநலம் குன்றியவர்களாக நடிக்க வேண்டும். இதில்...
மேலும்

டிடிவி தினகரனை அனுமதிக்க முடியாது

சென்னை, ஆக.2:  முதலமைச்சர் எடப்பாடி தலைமையில் நேற்று மாலை நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் சசிகலா குடும்பத்தை கட்சியில் இருந்து விலக்கியே வைப்பது என்றும், தலைமை அலுவலகத்தை டிடிவி தினகரனின் ஆதரவாளர்களை கைப்பற்றவிடாமல் பாதுகாப்பது என்றும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அலுவலக பாதுகாப்பு 5 முக்கிய மாவட்ட செயலாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டு இருப்பதாக கட்சி வட்டாரம் தெரிவித்துள்ளது.  அதிமுக இணைப்புக்கு அம்மா அணியின் துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் விதித்த...
மேலும்