Home » Category >சென்னை (Page 227)

மின்சாரம் தாக்கியதில் கூலித்தொழிலாளி பலி

சென்னை,ஜூலை: 12 லாரியிலிருந்து விறகு இறக்கும்போது மின்சாரம் தாக்கி கூலி தொழிலாளி தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:- ஓட்டேரி, சாலைமான் நகர், குட்ஸ்ரோடு பகுதியில் உள்ள விறகு கடையில் கூலி தொழிலாளியாக பணியாற்றி வந்தவர் ஸ்டாலின் (வயது 60). லாரிகளில் வரும் விறகுகளை ஏற்றி இறக்குவது வழக்கம் என்று கூறப்படுகிறது. இதேபோன்று நேற்றிரவு விறகு லோடு வந்துள்ளது. அப்போது...
மேலும்

போரூர் ஏரி விஸ்தரிப்பு: தினமும் 40 லட்சம் லிட்டர் குடிநீர் சப்ளை

சென்னை, ஜூலை 11: சென்னை போரூர் ஏரியில் உள்ள நீரை சுத்திகரித்து மக்களின் தேவைக்காக தினமும் 40 லட்சம் லிட்டர் குடிநீர் வழங்கப்பட உள்ளது. தற்போது 5 கோடி கன அடியாக உள்ள ஏரியின் கொள்ளளவை விஸ்தரித்து 7 கோடி கன அடியாக மாற்றும் பணி 100 நாட்களுக்குப்பிறகு தொடங்கும் என அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறினார். சென்னை நகருக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் நீர்மட்டம் மிக குறைந்த...
மேலும்

தொகுதி வரையறை ஆணையம் அமைக்க அரசு முடிவு

சென்னை, ஜூலை 10: தமிழக சட்டபேரவையில் இன்று 2017ம் ஆண்டு தமிழ்நாடு எல்லை வரையறை ஆணைய சட்டமுன் வடிவினை அமைச்சர் எஸ்.பி வேலுமணி தாக்கல் செய்தார். அதில் கூறபட்டுள்ளதாவது: ஊராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்கள் , மாவட்ட ஊராட்சிகள், பேரூராட்சிகள், நகராட்சிகள் மற்றம் மாநகராட்சிகள் ஆகியவற்றின் நிலவரை வார்டுகளை வரையறை செய்வதற்கான எல்லை வரையறை ஆணையத்தை அமைப்பதற்காகவும், மற்றும் அதனுடன் தொடர்புடைய வற்றை வகை செய்வதற்காக சட்ட முன்வடிவு...
மேலும்

இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் கூட்டு போர் பயிற்சி

சென்னை, ஜூலை 10:இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் நாடுகளின் போர்க்கப்பல்கள் பங்கேற்கும் போர் ஒத்திகை மலபார் கடல் பகுதியில் வரும் 12-ம் தேதி முதல் நடைபெறுகிறது. உலகம் முழுவதும் பல்வேறு அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ள நிலையில் மலபார் 2017 என்ற பெயரில் 3 நாடுகளின் கப்பல் படைகளின் ஒத்திகை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இது தொடர்பாக கிழக்கு கடற்படை தலைவர் வைஸ்அட்மிரல் ஹெச்சிஎஸ் மிஸ்த் இன்று சென்னையில் செய்தியாளர்களிடம்...
மேலும்

85% இடஒதுக்கீடு: கொள்கை முடிவு: கோர்ட்டில் தமிழக அரசு தகவல்

சென்னை, ஜூலை 10: மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கையில், மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு 85% இடங்கள் உள் ஒதுக்கீடு வழங்கியது அரசின் கொள்கை முடிவு என சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் ஆகிய மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு முடிவுகள் வெளிவந்த நிலையில், தமிழ்நாட்டில், 85 சதவிகித இடங்கள் மாநில பாடத்திட்டத்தில் படித்தவர்களுக்கு ஒதுக்கப்படும் என்றும், மீதமுள்ள 15 சதவீத இடங்கள்...
மேலும்

சென்னை மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய மழை

சென்னை, ஜூலை 10: சென்னையில் நேற்றிரவு திடீரென காற்று மற்றும் இடியுடன் பலத்த மழை பெய்ததால் தண்ணீர் பிரச்சனையில் சிக்கி தவிக்கும் சென்னை வாசிகளுக்கு மகிழ்ச்சியை எற்படுத்தியது. சென்னையில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இந்நிலையில், நேற்று இரவு ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பலத்த மழை பெய்தது. அண்ணாநகர், மணலி, பல்லாவரம், திருவல்லிக்கேணி, தாம்பரம், கூடுவாஞ்சேரி என நகரின் அனைத்துப் பகுதிகளிலும்...
மேலும்

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு பணி தீவிரம்

சென்னை, ஜூலை 9:வாக்காளர் பட்டியலில் கைபேசி வாயிலாகவே திருத்தம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த முறை குறித்து அதிகாரிகளுக்கு சென்னையில் பயிற்சி அளிக்கப்பட்டது.வாக்காளர் பட்டியிலில் திருத்தம் பணியினை கைபேசியின் வாயிலாக மேற்கொள்ள மாவட்ட தேர்தல் அலுவலர் பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் தா.கார்த்திகேயன் உத்திரவின்படி 4,5,6,8 ஆகிய மண்டலங்களை சேர்ந்த வாக்கு சாவடி நிலை அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு 08.07.2017 ரிப்பன் வளாகம் அம்மா மாளிகையில் நடைபெற்றது....
மேலும்

பாடலாசிரியர் கார் கண்ணாடி உடைப்பு

சென்னை, ஜூலை 9: பாடலாசிரியர் சினேகன் கார் கண்ணாடி உடைக்கப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவது: பிரபல தமிழ் திரைப்பட பாடலாசிரியர் சினேகன். தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று வருகிறார். இவர் சென்னை விருகம்பாக்கம் வெங்கடேஷ்வரா நகரில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். சனிக்கிழமை அன்று அவர், தனது வீட்டின் முன் பகுதியில் காரை நிறுத்தியிருந்தார்.இந்நிலையில், சனிக்கிழமை நண்பகலில் சினேகனின் வீட்டுக்கு...
மேலும்

ஜிஎஸ்டி ஒரு சீர்திருத்தம்: வெங்கையா நாயுடு

சென்னை, ஜூலை 9:ஜிஎஸ்டி வரி விதிப்பால் குழப்பத் துக்கு இடமில்லையென்றும் வரி வசூலில் சீர்திருத்தம் ஏற்பட்டு ஏழைக்கு பெருமளவில் நன்மை கிடைக்கும் என்றும் மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு கூறினார்.சென்னையில் பக்கிங்ஹாம் கால்வாய் மேம்படுத்தப்பட்டு நீர்வழி போக்கு வரத்து தொடங்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார். சென்னை கலைவாணர் அரங்கில் வளர்ந்த இந்தியாவை உருவாக்குவோம், சரக்கு மற்றும் சேவை வரி குறித்த கருத்தரங்கு நடைபெற்றது. ஐசிஏஐ, தென்னிந்திய ஓட்டல்கள்,...
மேலும்

காவலருக்கு புதிய சலுகைகள்

சென்னை, ஜூலை 8: சட்டமன்றத்தில் காவலர்களுக்கு படி உயர்வு உள்ளிட்ட 54 புதிய அறிவிப்புகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்டார். மெச்சத்தக்க பணிக்காக வழங்கப்படும் வெகுமதி ரூ.10 ஆயிரத்திலிருந்து ரூ.15 ஆயிரமாகவும், முதலமைச்சரின் பதக்கத்துடன் வழங்கப்படும் தொகை ரூ.2 ஆயிரத்திலிருந்து ரூ.4 ஆயிரமாகவும் இனம் வாரியாக உயர்த்தப்பட்டு உள்ளது. சட்டமன்றத்தில் காவல் மற்றும் தீயணைப்பு மீட்பு பணிகள் மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதிலளித்து முதலமைச்சர்...
மேலும்

ரூ.6402 கோடி செலவில் மோனோ ரெயில் திட்டம்

சென்னை, ஜூலை 8: சென்னையில் புதுபோக்குவரத் தினை மேம்படுத்திட ரூ.6402 கோடி ரூபாய் செலவில் மோனோ ரெயில் திட்டம் விரைவில் செயல்படுத்தப்படஉள்ளது என்று அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.  சென்னையில் புதிய பேட்டரி பேருந்துகளை இயக்குவதற்கான சோதனை ஓட்டம் தற்போது நடைபெற்று வருவதாகவும், விரைவில் புதிய பேட்டரி பேருந்துகள் இயக்கப்படும் என்றும் சட்டப்பேரவையில் அவர் தெரிவித்தார். சட்டசபையில் இன்று போக்குவரத்துத்துறை மானியக் கோரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அமைச்சர் விஜயபாஸ்கர்...
மேலும்