w
Home » Category >சென்னை (Page 226)

தொண்டர்களுக்கு ஓபிஎஸ், இபிஎஸ் வேண்டுகோள்

சென்னை, அக்.3: வாக்காளர் பட்டியல் பெயர் சேர்த்தல், பிழைகளை நீக்கும் பணியில் அதிமுகவினர் தீவிரமாக ஈடுபட வேண்டும் என ஓபிஎஸ், இபிஎஸ் கூட்டாக வேண்டுகோள் விடுத்துள்ளனர். இது தொடர்பாக அதிமுக தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வமும், கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அதிமுகவினருக்கு முக்கிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளனர். அதன்படி புதிய வாக்காளர்கள் மற்றும் விடுபட்ட...
மேலும்

வீடு வீடாக நிலவேம்பு கசாயம் விநியோகம்

சென்னை, அக்.3: டெங்கு காய்ச்சலை ஒழிப்பதற்காக வீடு வீடாக சென்று நிலவேம்பு  கசாயம் கொடுக்கும் பணியை  அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று அண்ணாநகரில் துவக்கி வைத்தார். இதற்காக இங்குள்ள அறிஞர் அண்ணா மருத்துவமனையில் 2000 கிலோ எடை கொண்ட கஷாயம் தயாரிக்கப்பட்டுள்ளது. சுகாதாரத்துறை ஊழியர்கள் வேனில் சென்று வீடு வீடாக கசாயத்தை விநியோகித்து வருகிறார்கள். சென்னை அறிஞர் அண்ணா மருத்துவமனை வளாகத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையில் டெங்கு...
மேலும்

மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் சினிமா காட்சிகள் ரத்து

சென்னை, அக்.3:  மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் சினிமா டிக்கெட்டுகளுக்கு 10 சதவீதம் உள்ளாட்சி கேளிக்கை வரி விதிக்கப்பட்டதை எதிர்த்து இன்று திரையரங்குகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன. மத்திய அரசு ஜிஎஸ்டி வரியை கடந்த ஜூலை 1-ம் தேதி முதல் அமல்படுத்தியது. இதனால் சினிமா டிக்கெட்டுகளுக்கு அதிக பட்சமாக 28 சதவீதம் ஜிஎஸ்டி வரி வசூலிக்கப்பட்டு வருகிறது. மேலும் 30 சதவீதம் உள்ளாட்சி கேளிக்கை வரி விதிக்கப்படும் என மாநில அரசு அறிவித்தது....
மேலும்

சென்னையில் தனிப்படை: தினகரன் கைது?

சென்னை, அக்.3: இந்திய இறையாண்மைக்கு எதிராக துண்டுபிரசுரம் விநியோகித்த வழக்கில் தினகரன் பெயரும் சேர்க்கப்பட்டுள்ளது. இதற்கென தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில் அவர் எந்நேரத்திலும் கைது செய்யப்படுவார் என கூறப்படுகிறது. சேலத்தில் சமூகநீதி பாதுகாப்பு என தினரகன் தரப்பினர் துண்டு பிரசுரங்களை கடந்த 27ம் தேதி வழங்கினர். அதில் பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிரான வாசகங்கள் இடம்பெற்றிருந்தது. இதையடுத்து முதல்வருக்கு எதிராகவும், பொது அமைதிக்கு...
மேலும்

டெங்கு காய்ச்சலுக்கு ஒரே நாளில் 5 பேர் பலி

சென்னை, அக்.3: தமிழகத்தில் அதிகரித்து வரும் காய்ச்சல் பாதிப்புகள் பொதுமக்களை அச்சத்தில் ஆழ்த்திவரும் நிலையில், டெங்கு காய்ச்சலுக்கு ஒரே நாளில் 5 பேர் உயிரிழந்தனர். சேலம் அரசு மருத்துவமனையில் கடும் காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்த, மரவனேரி பகுதியை சேர்ந்த மாணவர் ஸ்ரீதர், நாமக்கல்லை சேர்ந்த சிறுமி அகல்யா ஆகியோர் நேற்று உயிரிழந்தனர். இந்நிலையில், டெங்கு காய்ச்சலுக்காக சிகிச்சை பெற்று வந்த ஒரு சிறுமி மற்றும் கூலித்தொழிலாளி இன்று...
மேலும்

கூவம் ஆற்றில் அழுகிய நிலையில் ஆண் சடலம் மீட்பு

சென்னை, அக்.2: பல்லவன் இல்லம் அருகே கூவம் ஆற்றில் மிதந்த ஆண்  சடலத்தை மீட்டு சிந்தாதரிப்பேட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.  இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:- சிந்தாதரிப்பேட்டை பல்லவன் இல்லம் அருகே உள்ள கூவம் ஆற்றில் அழுகிய நிலையில் ஆண்சடலம் மிதப்பதை கண்டு பொதுமக்கள் அதிர்ச்சியடைந்து போலீசாருக்கு தகவலளித்தனர்.  இதன்பேரில், சிந்தாதரிப்பேட்டை இன்ஸ்பெக்டர் சகாதேவன், மாரீஸ்வரன் எஸ்.ஐ. தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணை...
மேலும்

தனியார் நிறுவனம் மீது விசாரணை நடத்துக: உயர்நீதிமன்றம்

சென்னை, அக்.2: சூப்பர்வைசர் வேலைக்கான நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ளும்படி, உயர் நீதிமன்ற நீதிபதி வைத்தியநாதனுக்கு அழைப்பு கடிதம் அனுப்பிய தனியார் வேலைவாய்ப்பு நிறுவனங்கள் குறித்து விசாரணை செய்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  இதுதொடர்பாக, தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்த உயர் நீதிமன்றம், பணி வாங்கித் தர பணம் வசூலிக்கும் இந்த மோசடி நிறுவனங்கள் குறித்து விசாரித்து...
மேலும்

முதல்வரிடம் ஜாக்டோ ஜியோ வலியுறுத்தல்

சென்னை, அக்.2: 7-வது ஊதியக்குழு பரிந்துரையை உடனே அமல்படுத்த வேண்டும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் நேரில் வலியுறுத்தினர்.  புதிய ஊதிய விகிதம், பழைய ஓய்வூதியம் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்தனர். இதையடுத்து முதலமைச்சர் எடப்பாடி கடந்த மாதம் ஈரோட்டில் அந்த அமைப்பினரை அழைத்து பேசினார். முதலமைச்சரின் உறுதிமொழியை ஏற்று போராட்டம் கை விடப்படுவதாக அந்த அமைப்பினர் அறிவித்தாலும்...
மேலும்

சென்னையில் மெகா சுரங்க வளாகம்

சென்னை, அக். 2:சென்னை சென்ட்ரல், பூங்கா நகர் ரெயில் நிலையங்கள், மாநகராட்சி அலுவலகம், அரசு மருத்துவமனை, மருத்துவக்கல்லூரி ஆகியவற்றை இணைக்கும் வகையில் மெகா சுரங்க வளாகம் சென்ட்ரல் ரெயில் நிலையம் அருகே இறுதிக்கட்டத்தை எட்டி வருகிறது. இந்தியாவின் மிக பெரிய சுரங்க மெட்ரோ ரெயில் நிலையமாக இது அமையும். இந்த பணிகள் 2018ம் ஆண்டு இறுதியில் முழுமையாக முடிவடைந்து சேவை தொடங்கப்படும் என்று தெரிகிறது. மெட்ரோ ரெயில்...
மேலும்

சைதாப்பேட்டையில் 8 சவரன் தாலி சங்கிலி பறிப்பு

சென்னை, அக்.2: சைதாப்பேட்டையில் சாலையில் நடந்து சென்ற பெண்ணிடமிருந்து 8 சவரன் தாலி சங்கிலியை மர்மநபர்கள் பறித்துச் சென்றனர். சைதாப் பேட்டையை சேர்ந்த சசிகலா (வயது 27) என்பவர் நந்தனம் பகுதியில் நடைபெற்ற கோயில் திருவிழாவிற்கு சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார். சைதாப்பேட்டையில் சாலையில் நடந்து சென்றுக் கொண்டிருந்த சசிகலாவை, இருசக்கர வாகனத்தில் பின்தொடர்ந்த மர்மநபர்கள் அவர் அணிந்திருந்த 8 சவரன் மதிப்புள்ள தாலி சங்கிலியை கண்ணிமைக்கும்...
மேலும்

சென்ட்ரலில் 13 சவரன் நகையுடன் கைப்பை மீட்பு: உரியவரிடம் ஒப்படைப்பு

சென்னை, அக்.2: சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் கேட்பாரற்று கிடந்த 13 சவரன் நகைகளுடன் இருந்த கைப்பையை ரெயில்வே போலீசார் மீட்டு உரியவரிடம் பத்திரமாக ஒப்படைத்தனர். சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் ரெயில்வே போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, 5-வது பிளாட் பாராத்தில் கேட்பாராற்று கிடந்த கைப்பையை பிரித்து பார்த்தபோது, அதில் 13 சவரன் நகை, ஏ.டி.எம். கார்டு போன்ற விலையுயர்ந்த பொருட்கள் இருந்தது தெரியவந்தது. விசாரணையில்...
மேலும்