w
Home » Category >சென்னை (Page 225)

தொடர் கொள்ளை : 5 வாலிபர்கள் கைது

சென்னை, அக். 4: கோயம்பேடு சுற்றுவட்டார பகுதிகளில் தொடர் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டது தொடர்பாக 5 வாலிபர்களை கைது செய்த  போலீசார், அவர்களிடமிருந்து 42 சவரன் நகை, ரூ.4 லட்சம் ரொக்க பணத்தை பறிமுதல் செய்தனர். கோயம்பேடு மார்க்கெட், பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் அடிக்கடி கொள்ளை மற்றும் வழிப்பறி சம்பவங்கள் நடைபெறுவதாக போலீசாருக்கு புகார்கள் குவிந்தவண்ணம் இருந்தன. இது தொடர்பாக, அண்ணாநகர் துணை கமிஷனர் டாக்டர்....
மேலும்

ஐகோர்ட்டில் சபாநாயகர்-முதல்வர் பதில் மனு

சென்னை, அக்.4: ஆட்சி கவிழ்ப்பு சதியில் ஈடுபட்டதால் 18 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ததாக சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று சபாநாயகர் மற்றும் முதலமைச்சர் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் மதியம் வரை தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ. க்கள் வெற்றிவேல் உள்ளிட்ட 18 பேரை தகுதி நீக்கம் செய்ததை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. 18...
மேலும்

சென்னை விமான நிலையத்தில் மர்ம பை

சென்னை, அக்.4:சென்னை விமான நிலையத்தில் கேட்பாரற்று கிடந்த மர்ம பையால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. கரூரில் நடைபெறும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் பங்கேற்பதற்காக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் பாண்டியராஜன், ஜெயக்குமார் ஆகியோர் விமானம் மூலம் சென்னையிலிருந்து திருச்சி, கோவைக்கு புறப்பட்டனர். இதனிடையே, சென்னை விமான நிலையத்தின் 4-வது தளத்தில் கேட்பாரற்ற நிலையில் மர்ம பை ஒன்று கிடந்தது. உடனடியாக மத்திய...
மேலும்

சபாநாயகருக்கு நீதிமன்றம் நோட்டீஸ்

சென்னை, அக்.4: எடப்பாடி பழனிசாமி கொண்டு வந்த நம்பிக்கை தீர்மானத்தின் போது, அரசு கொறடா உத்தரவுக்கு எதிராக வாக்களித்த துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் உள்ளிட்ட 12 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கக்கோரி தாக்கல் செய்த மனுவுக்கு பதில் அளிக்கும்படி, சபாநாயகர், சட்டசபைச் செயலருக்கு நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சட்டமன்ற எதிர்கட்சியான திமுகவின் கொறடா சக்கரபாணி எம்.எல்.ஏ. சார்பில் தாக்கல்...
மேலும்

சென்னை ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு

சென்னை, அக்.4:நேற்றிரவு சென்னை மற்றும் புறநகர் பகுதியில் மிக பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக சென்னை நகருக்கு குடிநீர் சப்ளை செய்யும் ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகாரித்துள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக வடதமிழகம் மற்றும் புதுவையில் நேற்றிரவு பலத்த மழை பெய்தது. குறிப்பாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இடியுடன் மிக பலத்த மழை பெய்தது. சில இடங்களில் இடைவிடாமல் இரண்டு மணி நேரம் வரை...
மேலும்

வாரிசு சான்றிதழ் கேட்டு தீபக் மனு

சென்னை, அக்.4:மறைந்து முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாரிசு என்று தனக்கு சான்றிதழ் அளிக்க கோரி அவரது அண்ணன் மகன் தீபக், கிண்டி வட்டாட்சியரிடம் மனு தாக்கல் செய்திருக்கிறார். ஆனால் நீதிமன்றத்தை அணுகி வாரிசு சான்றிதழ் பெறுமாறு அவருக்கு அதிகாரிகள் அறிவுறுத்தியதாக தெரிகிறது.
மேலும்

இந்த மாதத்தில் இரண்டு புயல் கரையை கடக்கும்: சென்னை வானிலை

சென்னை, அக்.4: தமிழக கடலோரத்தில் அக்டோபர் 7 முதல் 20-ந் தேதிக்குள் 2 புயல் கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். இந்த இரு புயல்களினாலும் பெருமழை இருக்காது என்றும், வர்தா புயலை போலவே காற்றுதான் பலமாக இருக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு பருவமழை ஓய்ந்து விட்ட நிலையில் தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் வடகிழக்கு பருவமழை காலம் இன்னும் ஒருவார காலத்திற்குள் தொடங்கும் என...
மேலும்

நடராஜனுக்கு அறுவை சிகிச்சை நடந்தது

சென்னை, அக்.4:சசிகலாவின் கணவர் ம.நடராசனுக்கு இன்று அதிகாலை உறுப்பு மாற்று அறுவைசிகிச்சை நடைபெற்றதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 74 வயதான நடராசன், கல்லீரல் மற்றும் சிறுநீரகங்கள் செயலிழந்ததால், கடந்த ஒன்பது மாதங்களாக குளோபல் மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவருகிறார். அவரின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாகவே உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது. மேலும், அவருக்கு டயாலிசிஸ் செய்யப்பட்டும்வருகிறது. மருத்துவர்கள் அவருக்கு கல்லீரல் மற்றும் சிறுநீரக உறுப்பு மாற்று அறுவைசிகிச்சை அளிக்க முடிவுசெய்து,...
மேலும்

துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி

சென்னை, அக்.4: திமுக முதன்மை செயலாளர் துரைமுருகன் திடீர் மூச்சுத் திணறல் காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் இன்று அனுமதிக்கப்பட்டு உள்ளார். முதன்மை செயலாளர் துரைமுருகனுக்கு திடீரென சளி தொந்தரவு ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் ஆயிரம் விளக்கு பகுதியில் அமைந்துள்ள அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார். சிகிச்சை முடிந்து நலமுடன் வீடு திரும்புவார் என திமுக தரப்பில் கூறப்படகிறது.
மேலும்

சென்னை நீதிமன்றத்தில் தயாநிதிமாறன் இன்று ஆஜர்

சென்னை, அக்.3: பிஎஸ்என்எல் நவீன தொலைபேசி இணைப்பை சன்டிவிக்கு வழங்கிய ஊழல் வழக்கில் தயாநிதி மாறன் இன்று சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜரானார். இந்த வழக்கில் அடுத்த விசாரணை வரும் 23-ந் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது. பாரத் சஞ்சார் நிகாம் நிறுவனத்தின் ( பி.எஸ்.என். எல்.) அதிநவீன உயர் இணைப்புகளை சன் டிவிக்கு சட்ட விரோதமாக வழங்கியதால், அரசுக்கு ரூ. 1.78 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டதாக தொடரப்பட்ட...
மேலும்

தேர்தல் ஆணையம் மீது திமுக அவமதிப்பு வழக்கு

சென்னை, அக்.3: நீதிமன்ற உத்தரவுப்படி, உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிப்பை வெளியிடாத, மாநில தேர்தல் ஆணையம் மீது, திமுக சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது.  தமிழகத்தில் கடந்த 2016 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் உள்ளாட்சி தேர்தல் நடைபெற இருந்தது.பழங்குடி இன மக்களுக்கு உரிய இடஒதுக்கீடு வழங்கப்படாததை எதிர்த்து திமுக சார்பில் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதி கிருபாகரன் உள்ளாட்சி தேர்தல் தொடர்பான அறிவிப்பாணையை ரத்து செய்தார்....
மேலும்